Advertisement

அண்ணி கொஞ்சம் தேங்கா எண்ணெய் எடுத்து வரீங்களா“.,என்று கேட்டான்.,

        “என்ன ஆச்சு தம்பி“., என்று கேட்டாள்.

   ” எடுத்துட்டு வாங்க“., என்று சொன்னவன்.,  எடுத்துட்டு வந்து கொடுத்ததும் கையை நீட்டி அதை வாங்கியவன்., சட்டையில்  இரண்டு பட்டன் விலக்கி விட்டு இடது புற மார்பு பகுதியில் சட்டையை விலக்கி விட்டு வேண்டுமென்றே அனைவரும் பார்க்கும்படி கையில் இருந்த எண்ணெயை தன் நெஞ்சில் பச்சை குத்தியிருந்த ஹேமா என்ற பெயரில் தடவி விட்டான்.,

          அதை பார்த்ததும் நித்தியானந்தன்ஏன்டா இப்படி., சின்ன பையன் மாதிரி இப்படி டாட்டூ  போட்டுருக்க., நீ  எம்எல்ஏ ங்கிறத மறந்துடாத“., என்று சொன்னான்.

           “நான் என்ன கேம் விளையாடிட்டு இருக்கேன்., என்னோட சரி பாதியான பொண்டாட்டி பேர் எழுதி இருக்கேன்., இதுல என்ன இருக்கு“., என்று சத்தமாக சொன்னான்.

         “ஏன்டா அவ பேர“., என்று சொல்ல வந்தவரைப் பார்த்ததும்  “உங்களுக்கு இவ்வளவு தான் மரியாதை., வீட்ல ஆள் இருக்காங்க ன்னு எல்லாம் நான் அமைதியா இருக்க மாட்டேன்., வேற ஏதாவது பேசினீங்க.,  ஒரு வார்த்தை பேசினாலும்., என்னோட இன்னொரு முகத்தை நீங்க பார்க்க வேண்டியது வந்துரும்., ஒழுங்கு மரியாதையா வாய மூடிட்டு இருங்க“., என்று சொன்னான்.

       அவன் சட்டையை விலக்கி பார்த்த  நித்தியானந்தன்என்னடா இப்படி இருக்கு., புண்ணா இருக்க மாதிரி இருக்கு“., என்று கேட்டான்.

         “ரெண்டு நாள் தான் ஆச்சு குத்தி.,  அதனால அப்படித்தான் இருக்கும்.,  இன்னும் ரெண்டு நாள் கழிச்சி சரியாயிடும்“., என்று சொன்னான்.

        “ஐயோ வலிக்குமேஎன்று கலா அவன் முகத்தை பார்த்துக் கொண்டே சொன்னாள்.

        அவனோஅவ பக்கத்துல இல்லாததை விட இந்த வலி ஒன்றும் பெரிய வலி இல்ல அண்ணி“., என்று சொல்லிவிட்டு மெதுவாக நடந்து மாடிக்கு ஏறியவனை பார்த்த கலாவின் கண்கள் கலங்கி இருந்தது.,

       கலாவும் இப்பொழுதெல்லாம் சொர்ணத்திடம் சரியாக பேசுவதில்லை.,  என்பதை விட அவரிடம் சற்று கோபமாக பேசவும் தொடங்கியிருந்தாள்.

       இரண்டு நாட்களுக்கு முன்பு கலா கத்திய கத்தலில் சொர்ணம் தான் பயந்து வாயை மூடும் அளவிற்கு ஆயிற்று., சுந்தரி அம்மாவும் மனதிற்குள்நல்ல வேணும் இந்த அம்மாவுக்கு.,   இவ்வளவு அமைதியான புள்ளையவே கோபப்பட வச்சிடுச்சுஎன்று மனதிற்குள் நினைக்கும்படி தான் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தது.

     அன்று ஒரு மாலை நேரம் நித்யானந்தனுக்கு  டீயைக் கலந்து கொடுத்தவள்., தயாளன் காபி கேட்க அவருக்கும் கலந்து கொடுத்து விட்டு பிள்ளைகளுக்கு தேவையானவற்றை கவனிக்க தொடங்கியிருந்தாள்.

       சுந்தரி அம்மா எல்லாம் செய்தாலும் அன்று வெளியே வேலையாக சென்றிருந்த காரணத்தினால் செய்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.,

            சொர்ணம் அங்கு இருந்தவளிடம்எனக்கு காபி கொண்டு வாஎன்று சொன்னார்.

            “நான் என்ன உங்களுக்கு வச்ச வேலைக்காரியா.., வேணும்னா போட்டு குடிங்க.,  உங்க வீடு ன்னு பெருமை பேச தெரியுது இல்ல., என் வீடு என் வீட்டை விட்டு வெளியே போ ன்னு மத்தவங்கள விரட்ட தெரியுது இல்ல.,  அப்ப பொங்கித் திங்கவும் தெரியணும்.,  வந்துட்டாங்க வாய் பேச.,என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றாள்.,

       தயாளனாலோ.,  இல்லை நித்தியானந்தன் னாலோ பதில் பேச முடியவில்லை.,

     அது மட்டுமில்லாமல் நித்யானந்தனும்கலா என்ன பேசுற“., என்று கேட்டான்.

            “நான் பேசும் போது வாய மூடிட்டு இருங்க., அப்படி ஒழுங்கா இருந்தீங்கன்னா., நான் இங்க இருப்பேன் இல்ல.,  உங்க அம்மாக்கு சப்போர்ட் பண்ணுவேன்., உங்க அம்மா பேசுறதுக்கு நான் பதில் பேசக்கூடாது ன்னு நீங்க நினைச்சீங்கன்னா.,  ஹேமா எங்க போயிருக்கான்னு தெரியாது.,

         ஆனால்  நான் எங்க போறேன்னு ஊரைக் கூட்டி சொல்லிட்டு தான் போவேன்., சொந்தக்காரங்க அத்தனை பேரையும்  கூப்பிட்டு உங்க அம்மா செய்த  காரியம் அனைத்தையும் சொல்லிட்டு.,  அதுக்கப்புறம் நான் எங்கம்மா வீட்டுக்கு புள்ளைய கூட்டிட்டு போயிருவேன்., நான் இங்க பிள்ளைகளோட இருக்கணுமா., இல்லை எங்க அம்மா வீட்டுக்கு போணுமா ன்னு  நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..,  உங்க அம்மாகிட்ட நான் அப்படித்தான் பேசுவேன்.,

      உங்கம்மா செய்ததை என்னால மறக்கவே முடியல., இந்த மூணு மாசத்துல நானும் எவ்வளவோ அவங்கள மதிக்கிற மாதிரி தான் நடந்துகனும் ன்னு நினைக்கிறேன்..,  என்னால முடியவே இல்லை., அந்த பொண்ணு போனதுக்கப்புறம்.,  சத்தியமா என்னால அவங்கள ஒரு மனுசபிறவியா பார்க்க கூட முடியல.,

          எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து இருக்காங்க., நானா இருந்தா கூட கொஞ்சம் டீசல் வாங்கி நானே கொழுத்திப் போட்டுட்டு போய் இருப்பேன்.., என்ன ஒரு புத்தி இந்த பொம்பளைக்கு“., என்று சொன்னவள்.

            “பத்தாதற்கு உங்க தங்கச்சி.,  இன்னொரு தடவை இங்க வரட்டும்., நானே நாக்கை புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்குறேன்., அவ புத்திக்கு தான் கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகியும் குழந்தை இல்லை., அன்னைக்கு பிரசாத் சொல்லும் போது கூட நான் கூட வருத்தப்பட்டேன்., ஆனா இப்ப தான் தோணுது., இதுக்கு தான்.,  ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா ஏறி இறங்கிட்டு இருக்கா.,  வேணா பாருங்க இன்னும் ஏறி இறங்குவா“.,  என்று கோபமாக கத்தி விட்டு சென்றாள்.

       தயாளன் தான் வாயடைத்துப் போய் இருந்தார்., அதன்பிறகு நித்தியானந்தன்  “சாரிப்பா என்னால ஒண்ணும் பண்ண முடியாது., தம்பி இப்ப எல்லாம் இங்கு வரதே இல்ல.,  மாசத்துல அஞ்சு நாள் வந்தாலேபெரிய விஷயம் மாதிரி இருக்கு..,  ஆனா அவன் தொகுதி மக்களுக்கு கரெக்டா செஞ்சுகிட்டு இருக்கான்., அந்த விஷயத்தில் உண்மையிலே பெருமையா இருக்கு., நான் வாயே திறக்க மாட்டேன் பா.,  ஒருவேளை அவ அம்மாவ பேசுறதாலளையோ., இல்ல வேற ஏதும் பிரச்சினை வரும் ன்னு நீங்க நினைச்சா., நான் வேணா தனியா போயிர்றேன்., அதுக்காக நான் அவ வந்து அம்மாவை பேசுனது சரி  இல்லன்னு.,

      என்னால சொல்ல முடியாது.,  அவளுக்கு  கண்டிப்பா கோபம் இருக்கும் அந்த பொண்ணு  இந்த வீட்டிலேயே ரொம்ப க்ளோசா பழகினது  இவ கிட்ட மட்டும் தான்., அப்படி இருக்கும் போது எல்லாருக்கும் இருக்குற ஒரு கோபம் இருக்கத்தான் செய்யும்., நார்மலா அவள் அந்த வீட்டு மருமகள் னா., இவளும் இந்த வீட்டு மருமகள் தான்., அம்மா பண்ணினது பெரிய தப்பு தான்.,  என்னால இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது பா.., அதுக்கு மேல பேசுறதா இருந்தா சொல்லுங்க., நான் தனியாக போகிறேன்“., என்று சொல்லி விட்டு அவனும் எழுந்து சென்றான்.

            சொர்ணம் தான் விக்கித்து அமர்ந்திருந்தார்., ஏனெனில் கலா இதுவரைக்கும் தயாளன் வழி உறவு என்றாலும்., ஒரு நாளும் சொர்ணத்தை வெளியே குறைத்து பேசியது கிடையாது.,  ஆனால் இன்று கொடுத்த கொடுப்பில் சொர்ணம் வாயடைத்து அமர்ந்திருந்தார்.

           தயாளன் தான்இதெல்லாம் தேவையா., பேசாமல் இருந்திருந்தால் இந்த மாதிரி எந்த பிரச்சனையும் வந்திருக்காது., உனக்கு என்ன அப்படி ஒரு  ஈகோ., உன் முடிவு தான் பெருசுன்னு நினைச்சுட்டு பேசின இல்ல.,  இப்ப தெரியுதா எவ்வளவு அசிங்கமா திட்டு வாங்கற., எல்லார்ட்டையும் இருந்த மரியாதை போச்சு., வீட்டில் உன்ன மதிப்பாங்க நினச்சிட்டு இருக்கியா., எல்லாரும் மனசுக்குள்ள உன்ன திட்டிட்டு தான் இருப்பாங்க.,  எனக்கே உன்கிட்ட பேச பிடிக்கல தான்., ஆனா என்ன பண்ண நான் தாலி கட்டிட்டேன் என்கிற ஒரே காரணத்துக்காக., உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.,

     உனக்கு நம்ம பையன் வாழ்க்கையை விட உனக்கு கௌரவம் பெருசுனா.,  இனி வெளியே போய் இருக்கணும்.,  உங்க அப்பா வீட்டுக்கு போயிருக்க வேண்டியது தானே., நீயும் இந்த வீட்டுக்கு மருமகளா தான் வந்த., அதை மறந்தறாத., 

        எனக்கு என் பையனோட வாழ்க்கை மட்டும் தான் முக்கியம் நினைச்சேன்.,  அவனுடைய எதிர்காலம் மட்டும் தான் முக்கியம் நினைச்சேன்., அதனால தான் ஜாதகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பொண்ண கல்யாணம் பண்ணினேன்.

           சும்மா ஒன்னும் கல்யாணம் பண்ணல., பொண்ண பத்தி எல்லாம் விசாரிச்சுட்டு.,  பொண்ணோட குடும்பத்தை பத்தி எல்லாம் விசாரிச்சு தான் கல்யாணம் பண்ணி வச்சேன்“., என்று சொன்னார்.

        அவர் இரண்டு நாட்களுக்கு முன் சொர்ணத்திடம் பேசி இருந்ததால் கொஞ்சமாவது யோசித்து இருப்பார் என்று நினைத்திருந்தார்.

       இன்று இப்படி யாரும் நினைக்கவில்லை., ஆனால் நித்யானந்தனுக்கு கலா சொல்லிவிட.,  அவனும் பிரசாத்திடம் சொன்னதால்.,

            அவன் அதைக் கேள்விப்பட்ட பிறகு தான்., ‘அவள் இருக்கும் இடத்தில் யாரையும் நினைக்கக் கூட மாட்டேன்.,  என்பது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும்‘.,  என்ற எண்ணத்தோடு தான் ஹேமா என்ற பெயரை தன் இடதுபுற நெஞ்சில் டாட்டூ குத்தி வைத்திருந்தான்.

        அதன் காரணமாகவே காய்ச்சலும் அதோடு தொகுதிக்கான வேலைகளையும் அமைச்சர்களிடம் பேசி இரண்டு நாளில் முடித்து விட்டு வந்திருந்ததால்.,  இன்னும் சற்று சோர்வும் காய்ச்சலும் இருக்க அறைக்கு சென்று படுத்தவன்., அவளது புடவையை எடுத்து முகத்தில் மூடியபடி படுத்து இருந்தான்., ஏதோ அவளே தன் அருகில் இருப்பது போன்ற உணர்வோடு.

          கீழே வந்த உறவினர்கள் எதற்காக வந்தார்களோ அது நடக்காது என்பதை புரிந்து கொண்டவர்கள் அமைதியாக வெளியேறினர்.,

      சொர்ணமும் தன் எண்ணங்கள் நிறைவேறாது என்ற எண்ணத்தோடு கோபமாக ஹாலில் அமர்ந்து இருந்தார்.

         தயாளன்ஏற்கனவே உன் மருமக மதிக்க மாட்ட., இப்போ இன்னும் சுத்தம்.,  வச்சி வாங்கப் போறா வாங்கு“., என்று சொன்னார்.

           “ஏற்கனவே அவ ரொம்ப நல்ல மதிக்கா., நீங்களும் கூட சொல்லி கொடுங்க“., என்று சொர்ணம் சொன்னார்.

     ” உன்னை இனிமேல் யாரும் மதிக்க மாட்டாங்க., அதை மட்டும் தெரிஞ்சுக்கோ., ஏன் இந்த ஐடியாவ  சொல்லி கொடுத்த மக பேச்சை கேட்டால்., நீயும் அவ வீட்ல தான் போய் உட்காரனும்., அதை நியாபகம் வச்சுக்க.,  ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் படிச்சு படிச்சு சொல்லி இருக்கேன்.,  மறுபடியும் தேவையில்லாத வேலை பார்க்காத., என்னைக்கும் ஒன்று போல இருக்காது., அதை மட்டும் தெரிஞ்சுக்கோ“.,  என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

              அதன்பிறகு சற்று ஓய்வெடுத்து விட்டு வந்த பிரசாத்.,  தன் தந்தையோடு சேர்ந்து தங்கள் அரசியல் வேலைகளுக்காக அதெற்கென்று இருந்த அலுவலகம்  ஒன்று வைத்திருக்க..,

      அங்கு சென்று விட்டு தன் தொகுதி மக்களை பார்க்க சென்றான்., அவர்கள் கேட்ட உதவிகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு வரும் போது இரவு மணி பதினொன்று கடந்திருந்திருந்தது.

     ” சாப்பிடுறீங்களா தம்பி“., என்று கலா கேட்டாள்.,

     “இல்ல அண்ணி.,  வெளியே முடிச்சிட்டேன்என்று சொல்லிவிட்டு மாடி ஏற போனவனை.,

     நித்யானந்தனோஏன்டா மாசத்துல அஞ்சு நாள் தான் வீட்டுக்கு வரணுமா“.,  என்று கேட்டான்.

        இவனோ அஞ்சு நாள் வந்தாலும் அதே  தான்., மாசம் ஃபுல்லா இருந்தாலும் அதையே தான் செய்யுறேன்., அங்க இருந்தாலாவது ஏதாவது வேலை இருந்துட்டே இருக்கும்.,  நேரம் போகும்., இங்க இருந்தேன்னா.,  என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது., அதனால தான் அங்க இருக்கேன்“., என்று சொன்னவன்.

         சிரித்துக்கொண்டே தன் வலிகளை வீட்டிற்காக மறக்க  அல்ல மறைக்கத் தொடங்கியிருந்தான்., மனதில் தன் மனைவியை சுமந்தபடி.

      நீ அருகில் இல்லாத வலிகளை
       சிறு புன்னகை  சுமந்தபடி.,
      என்  வேதனைகளை
     மறைத்துக் கொண்டு
       அலைகிறேன்.,

      உறவுகளுக்காக சிரித்துக்
      கொண்டிருக்கிறேன்.,
      உன் உறவு மட்டும்
      இருந்தால் போதும்.,
     இத்தனை வேதனைகளும்
      மாயமாய் மறைந்து போகும்.,
      சீக்கிரம் வந்துவிடு.,

Advertisement