Advertisement

13

உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில்
சரியான உதவிகளை செய்பவன் தான்.
அந்த நட்பை விட்டு விடக் கூடாது.
புத்தர்

           மறுநாள் காலையில் எதுவும் நடவாதது போல எழுந்து நடமாடியவனை பார்க்கும் போது நண்பனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.,

       நண்பனோ அவனிடம்ஏண்டா ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியில் சொன்னா., எல்லாம் விசாரிச்சு கண்டுபிடித்து விடுவார்களே“., என்று சொன்னான்.

           அவனைப் பார்த்து சிரித்தவன்இன்னுமா விசாரிக்காமல் இருப்பேன்னு நினைக்கிற., அவங்க கம்பெனில வேலையை ரிசைன் பண்ணி இருக்கா., மெயில் மூலமா தான் பண்ணி இருக்கா., அவ பெங்களூரில் இருந்து மெயில் பண்ணியிருக்கா.,  பெங்களூர்ல எங்க இருக்கான்னு கண்டுபிடிக்க முடியல., ஐபி அட்ரஸ் பெங்களூர் ரயில்வே ஸ்டேஷனல இருக்குற வொய் பை காட்டுது., அதுக்கு மேல எந்த டீடெயில்ஸ் ம் கரெக்டா கிடைக்கல.,

       அவளோட போன் டிராக் பண்ணலாம்னு பாத்தா பழைய சிம்  தூரப் போட்டுட்டா போல.,  அது கோயம்புத்தூர்ல தான் லாஸ்ட் சிக்னல் காட்டுது., அதுக்கப்புறம் புது நம்பர் எதுவும் வாங்கி இருக்காளா ன்னு தெரியலை., பிரண்ட்ஸ் ட்ட பேசி இருக்காளா ன்னு இவ பிரண்ட்ஸோட போன் எல்லாம் சர்ச் பண்ணா எந்த இடத்திலுமே இவளோட பிரண்ட்ஸ் க்கு பெங்களூரிலிருந்து இல்ல.,  வேற எந்த ஊர்களிலிருந்தும் போன் எதுவும் வந்த மாதிரி தெரியல.,

        என்ன பண்றதுன்னு தெரியல., நான் அந்த அளவு கூட விசாரிக்காமல் இருப்பேனா., எல்லாம் விசாரித்து விட்டேன்., பெங்களூர் க்கு எதுக்கு போனா., அங்க யாரும் ப்ரண்ட்ஸ் இருக்காங்களா., எதுவும் தெரியலை“., என்றான் பெருமூச்சுடன்.

         “சரி டா.,  வேற ஏதாவது ஏற்பாடு பண்ணலாமே., இப்ப நீ அரசியல்ல இருக்கபோலீசார் யாரையாவது வச்சு இன்னும் கொஞ்சம் விசாரிச்சா என்ன., வேற ஏதாவது பெரிய டிடெக்டிவ் ஏஜென்சி காண்டாக்ட் பண்ணலாமே“., என்று அவன் நண்பன் கேட்டான்.

         அவனும்அவ எப்படிடா என் அன்பை சந்தேகப்படலாம்., நான் அவ மேல வச்சிருந்த அன்பை கடமைக்காக நினைச்சாளா.,  இல்ல ஜோசிய பலனுக்காக கல்யாணம் பண்ணினேன்.,  பதவிக்காக கல்யாணம் பண்ணினேன்.,  நெனச்சுட்டா இல்லையாடா.,

       அந்த லூசு பய தான் போன்ல உளரி இருக்கானே“., என்று சொல்லி போனில் பேசித் தள்ளிய தன் நண்பனை சொல்லிக் காட்டினான்.,

          ஆனா எங்க அம்மா மேல தப்பு டா.,  எங்க அம்மா சூசைட் பண்ணிக்குவேன் சொன்னா., இவ ஒன்னு அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கணும்., இல்லை எனக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும்., ஏண்டா பண்ணலவீட்டை விட்டு வெளியே போ ன்னு சொன்னா., ஒன்னு போ முடியாது ன்னு சொல்லியிருக்கனும்., 

           என்ட்ட ஒரு வார்த்தை போன்ல சொல்லி இருந்தா நான் சென்னையில இவளுக்காக  இருந்து இருப்பேன் னடா.,  அவள சென்னைக்கு வர வச்சிருப்பேன்., அவ  இங்க தானே ஒர்க் பண்ணினா., இங்க இருந்து வேலையை பாரு ன்னு சொல்லிட்டு., நான் அவளோட இருந்திருக்க மாட்டேனா., 

         ஏன் இப்படி பண்ணினா.,  எனக்கு அது ஒன்னு தான் வருத்தம்., அப்ப என்ன அவ நம்பலை இல்ல.,  என்னை நம்பி அவளுக்கு சொல்லணும் தோணலை இல்லை“., என்று வருத்தமாக பேசியவன் பின்பு தன்னை நிதானப்படுத்திக் கொண்டுசரி வேலை இருக்குடா., நான் கிளம்புறேன்“.,  என்று சொன்னான்.

           “நான் மட்டும் போகாம., என்ன பண்ண போறேன்., எனக்கு வேலை  இருக்கு., விட்டா உன் வீட்டுக்கு காவல் காக்க சொல்லுவ போல., பூட்டிட்டு போ.,  சாந்தரம் தண்ணி அடிச்ச உனக்கு இருக்கு பாத்துக்கோ“., என்று சொன்னான்.

       “நிச்சயமா இனிமேல் குடிக்க மாட்டேன் டா விடு.,  என் மனசுக்குள் ஒரு தெளிவு இருக்கு., நான் பார்த்துக்கிறேன்“.,  என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினான்.

       கோயம்புத்தூரிலிருந்து அவனுக்காக ஒரு கார் இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்க அதில் தன் சட்டமன்ற கூட்டத் தொடருக்காக சென்றுகொண்டிருந்தான். பிரசாத்

           சென்னையில் முக்கால்வாசி நாட்களை கழிக்க தொடங்கியிருந்தான் பிரசாத்., அவ்வப்போது தன் தொகுதி மக்களை பார்க்க வேண்டும் என்பதற்காக மாதத்தில் ஒரு நான்கைந்து நாட்கள் மட்டும் கோயம்புத்தூர் சென்று தொகுதிக்கு தேவையான வேலைகள் அனைத்தையும் பார்த்து விட்டு வருவான்., அங்கு இருக்கும் கட்சி ஆட்கள் மூலமாகவும் நண்பர்கள் மூலமாகவும் தேவையானவற்றை செய்து கொண்டே இருந்தான்.

     எந்தவிதத்திலும் தொகுதி மக்களுக்கு தன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இல்லை., அதற்காக அரசியலில் தான் இருப்பது தற்சமயம் எதிர்க்கட்சி என்றும் பார்க்காமல் பேசி மக்களுக்கு தேவையானதை செய்து கொண்டு தான் இருந்தான்.,

      அந்த விதத்தில் அரசியலில் வந்து சில மாதங்களிலேயே பிரசாத் அரசியல் தலைவர்களை திரும்பிப்பார்க்க வைத்திருந்தான்.

     அன்றும் அப்படி தான் தன் தொகுதி மக்களுக்காக ஆளுங்கட்சி அமைச்சர்களிடம் பேசி மக்களுக்கு தேவையான நலன்களை வாங்கிவிட்டே போயிருந்தான்.,

     அனைத்து சட்டமன்ற கூட்டத்திலும் அவரது உரை மிகவும் சிறப்பாக பேசப்பட்டது., அவனிருக்கும் கட்சியிலுள்ள தலைவர் மிகவும் பெருமையாக அவனை பார்த்தார்., அந்த பார்வையிலேயே அவரின் மகிழ்வே உணர்ந்து கொண்டவன்., சந்தோஷமாக சிரித்தபடி அமர்ந்தான்.

     அன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்  தன் தொகுதி மக்களுக்கு இந்த நலத்திட்டங்களை அறிவித்து இருந்ததாகவும்., அதை தங்கள் இப்போது வரை நிறைவேற்ற வில்லை என்பதையும் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை ஆளுங்கட்சி அரசு உடனே செய்யும்படி பேசினான்.

       அதற்கான விவாதங்கள் நடைபெற துவங்கியது.,  சரியான புள்ளிகளோடு மற்ற விபரங்களை அவன் எடுத்துக் கூற வேறு வழியின்றி தற்சமயம்  முதலமைச்சர் பதவியில் இருக்கும் தலைவரே  சம்மதம் தெரிவிக்கும் படி இருந்தது.,

    அது மட்டுமல்லாமல் அன்று சட்டமன்ற கூட்டத்தொடர் முடியவும்.,  ஆளும் கட்சியினரே கூப்பிட்டு பாராட்டும் அளவிற்கு அவன் நடவடிக்கைகள் இருப்பதைப் பார்த்து அரசியல் வட்டாரம் அவனை சற்று திரும்பி தான் பார்த்தது.,

     இவ்வளவு சிறிய வயதில் மக்களுக்கு நல்லதை செய்யும்., ஒரு நல்ல அரசியல்வாதி என்று மறுநாள் பேப்பர்களில் வந்திருந்தது.

        அதைப் பார்த்தவன் மானசீகமாக ஹேமாவிடம்உனக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கிவிட்டேன்., நீ என் அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உன்னிடம் சொன்னபடி நல்ல அரசியல்வாதியாக தான் இருப்பேன்., எனக்கு அந்த நிம்மதியாவது கிடைக்கட்டும்‘., என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவன்.

            கண்ணாடி முன் நின்று தன் இடதுபக்க நெஞ்சை வலது கையால் வேகமாக தட்டிக்கொண்டுநீ எங்கே இருக்கிற வரைக்கும் தான்டி நானும் இருப்பேன்.,  உன்னை தேடிட்டு இருக்கேன்., நீ எந்த இடத்திலும் இல்ல அப்படின்னு தெரிஞ்சா அதுக்கப்புறம் நான் இருக்க மாட்டேன்“., என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

       அதே நேரம் நித்யானந்தாவிடம் இருந்து அழைப்பு வர எடுத்து காதில் வைத்தவன்., “என்ன“., என்று கேட்டான்.

             அவனோஅம்மாவின் சொந்தக்காரர்கள் ஏதோ விஷயமாக  இரண்டு நாள் கழித்து வருகிறார்களாம்., எதுவும் சரியாக படவில்லை., அம்மாவின் பேச்சும் நடவடிக்கையும் வித்தியாசமாக இருப்பதாக கலா சொல்கிறாள்., நீ  எப்ப வர்ற“., என்று கேட்டான்.

             “ஆமா இன்னைக்கு தான் பேசி தொகுதிக்கான விஷயங்களை முடிச்சிருக்கேன்.,அதுக்கான வேலை கொஞ்சம் இருக்கு., நானும் இரண்டு நாள் கழித்து தான் வருவேன்என்று சொன்னான்.

            “சரி பார்த்துக்கோ., அம்மாவின் நடவடிக்கை பற்றி உன் கிட்ட சொல்லனும் தான் உன்னை கூப்பிட்டேன்., இனி நீ பார்த்துக்கோ“.,  என்று சொல்லிவிட்டு அலைபேசியை வைத்தான்.

          இவனுக்கோஇந்த மூன்று மாதங்களில் பதுங்கி இருந்த தன் தாயின் புத்தி., மீண்டும் தலை தூக்குவதை அறிந்தவன் இதற்கெல்லாம் சேர்த்து ஒரு முடிவு கட்டுகிறேன்என்ற எண்ணத்தோடு தான் ஏற்கனவே கேட்டு வைத்திருந்த ஒரு விஷயமாக ஒருவருக்கு அழைத்து பேசினான்.

         அவரும் நிச்சயமாக இன்று மாலைக்குள் உங்களுக்கு செய்து விடுகிறேன் என்று சொல்லியிருந்தார்.

         அதன்படி மாலை நேரம் அவரை சந்தித்து தனக்கான அந்த வேலையை முடித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான்.

         வந்தவனுக்கு தான் செய்த காரியத்தின் விளைவாக வலியின் அளவு அப்போது தான் அதிகமாக தெரிந்தது., அவர் சொல்லியிருந்தது போல காய்ச்சலுக்கான மாத்திரையை போட்டு விட்டு படுத்து விட்டான்.

           அவள் அருகில் இல்லாத வலியை விட இந்த வலி குறைவு என்ற எண்ணத்தோடு மறுநாள் இருந்த வேலைகளை முடிக்கத் தொடங்கியிருந்தான்., 

         டிடெக்டிவ் ஏஜன்சியில் வேறு ஏதேனும் தகவல் கிடைத்ததா என்று விசாரித்ததோடு., அவள் தோழிகளிடமும் விசாரித்தான்., திக்கு தெரியாத காட்டில் அலைந்தது போல உணர்ந்தான்.

            இரண்டு நாள் அவன் கோயம்புத்தூர் வந்து இறங்கும் போது மாலை 3 மணி அளவில் ஆகியிருந்தது., இரண்டு நாள் அலைச்சல்., ஏற்கனவே மனவலியோடு சேர்த்து இப்போது உடல்வலியும் என்ற நிலையில் வரும் போதே நல்ல காய்ச்சலோடு தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

       வீட்டிற்கு வந்தவனின் முகத்தைப் பார்த்தே நித்தியானந்தனும்., கலாவும்என்ன ஆச்சு உடம்பு முடியலையா“., என்று கேட்டனர்.

         தயாளன் அவசரமாக எழுந்து வந்துஎன்னடா செய்து“.,  என்று கேட்டார்.

       “ஒன்றும் இல்லை சரியாயிடும்“.,  என்று சொல்லி விட்டு மாடி ஏறப் போனவனை அவன் தாய் வேண்டும் என்றே சத்தமாக அழைத்தார்.

              அவரிடம் இதுவரை பேசவில்லை என்றாலும்.,  உறவினர்களின் முன் வீட்டுப் பிரச்சனையே காட்டக்கூடாது என்ற காரணத்திற்காக அமைதியாக நின்றான்., அவரை ஏறெடுத்துப் பார்க்க..,

      “வீட்டுக்கு வந்தவர்களை வாங்க ன்னு கேக்க மாட்டியா“., என்று சொன்னார்.

          இவனும் வேண்டும் என்று சம்பிரதாயத்துக்காக வாங்க என்று சொன்னான்.

    கலா பிரசாத்தை பார்த்தபடி நிற்க.,  கலாவின் பார்வைக்கான அர்த்தம் புரியவில்லை என்றால் அரசியலில் பாராட்டு வாங்க தொடங்கியதற்கு அர்த்தம் இல்லை அல்லவா.,  பிரசாத் க்கு  ஏற்கனவே நித்யானந்தம் சொல்லி இருந்ததால்., அம்மாவின் புத்தியையும் அறிந்தவன் என்பதாலும் எதுவும் பேசாமல் தளர்வாக சோபாவில் அமர்ந்தான்.

       

Advertisement