Advertisement

அவர்களிடம் இவர்கள் வீட்டை ஒரு வார்த்தை கூட குறை சொல்லாமல்பிடிக்காத வாழ்க்கையை  கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது., என்னை தேடுறீங்க ன்னு தெரிஞ்சா., நான் ஒரேடியா கண்காணாத இடத்துக்கு போயிடுவேன்.,  நீங்க என்னை தேடாத வரைக்கும் நான் எங்கேயாவது நிம்மதியாக இருப்பேன்.,  என்று நினைத்துக் கொள்ளுங்கள்“., என்று முடித்திருந்தாள்.

        இறுதியில்நீங்கள் எனக்காக போட்டிருந்த நகையும்., எனக்காக வாங்கிய  துணியும் இங்கேதான் இருக்கிறது., எடுத்துக் கொண்டு செல்லுங்கள்“.,  என்று எழுதியிருந்தாள்.

          வீட்டில் நடந்தது என்னவென்று விசாரிக்கவும்., பதவியேற்புக்கு முன்பு பிரசாத் ஹேமாவிடம் பேசியதையும் அதன் பிறகு அவளது போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது., இங்கு வீட்டில் அனைவரும் விசேஷத்திற்கு சென்றிருந்தார்கள் என்பதையும்., வரும் போது அவள் இல்லாததையும் சொன்னார்கள்.

     இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் முழிக்க பாட்டிதான்போலீசுக்கு செல்லலாம்என்று சொன்னார்.

      தயாளனோஇல்லம்மா கண்டிப்பா மருமகப் பொண்ணு அவ வேலை பாக்கற இடத்திற்கு தான் போயிருப்பாங்க.,  விசாரிக்க சொல்லலாம்“., என்று சொல்லும்போதே ஆளாளுக்கு ஒவ்வொன்றாக பேச.,

       “கடைசியில் போலீஸ் அது இது என்று வேண்டாம்., இங்கே விசாரித்து தேடி பார்ப்போம்  ஆனால் தேடுவது தெரியக்கூடாது“.,  என்று அவளுக்கு தெரியாத வகையில் தேட வேண்டும் என்றும் பேசிக் கொண்டிருந்தனர்.

             பிரசாந்தின் மனம் முழுவதும் ஹேமாவின் வீட்டினர் எப்போது கிளம்புவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தது.,
         அவர்கள் பிரசாத்திடம்நாங்க என்ன செய்யனும் தம்பி., இப்ப காணாமல் போனது உங்க வொய்ப்., எங்க பொண்ணு“., என்று கேட்டனர்.

          அவள் எழுதி இருக்கா என்று சொல்லி., “அவளோட நகையோ உடையோ.,  இங்க இருந்து எடுத்துட்டு போகனும்னா., எடுத்திட்டு போங்க., என் மேல நம்பிக்கை இருந்தா விட்டுட்டு போங்க.,  ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு என் ஒயிஃப் என்னைக்கு இருந்தாலும் என்ட்ட வருவா“., என்று சொல்லிவிட்டு அமைதியானான்.

       அதற்குமேல் யாரும் பேசாமல் கிளம்பத் தொடங்கினர்., அவர்கள் கிளம்பும் வரை அமைதி காத்தான். அவர்கள் வெளியே சென்று விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தவன் சுந்தரி அம்மாவின் கணவரை சத்தமாக அழைத்தான்., “சுந்தரி அம்மாவை இங்க கூட்டிட்டு உடனே நீங்க இங்க வாங்க என்று சொன்னவன்.,

     வாட்ச்மேனிடம் சென்றுயார் வந்தாலும் உள்ளே  விடவேண்டாம்“., என்று சொல்லிவிட்டு வந்தான்.

      அடுத்த பத்து நிமிடங்களில் இருவரும் அங்கு வந்து நின்றனர்

         சுந்தரி அம்மாவையும் சுந்தரி அம்மாவின் கணவரையும் வைத்துக் கொண்டேசொல்லுங்க என்ன நடந்ததுஎன்று அவன் அம்மாவை கேள்வி கேட்டான்.

           அவன் அம்மாவோ., “என்னை எதுக்கு கேள்வி கேட்க., நான் என்ன பண்ணினேன்“., என்று சொன்னார்.

        இருக்கையில் இருந்து எழுந்து தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவன்., “இப்போ நீங்க உண்மையை சொன்னீங்கன்னா., நான் இந்த வீட்ல இருப்பேன்., இல்ல இல்லன்னு திரும்பத் திரும்ப பொய் சொன்னீங்கன்னா.,  இந்த நிமிஷம் நான் வீட்டை விட்டு வெளியே போயிருவேன்.,  உண்மையை சொல்றீங்களா என்ன“.,  என்று கேட்டான்.

        “என்னடா ரொம்ப மிரட்டுற., அவ தான் ஓடிப் போனதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவையோ“., என்றார்.,

        அவரை கூர்ந்து பார்த்தவன்என்னது ஓடிப்போனாளா., நீங்க விரட்டி விட்டுட்டீங்க ன்னு சொல்லுங்கள்., அவ ஓடிப்போய் இருந்தால் இந்நேரம் நீங்க அவங்க வீட்டு ஆட்களிடம்., பொண்ண சரியா வளர்க்கணும்னு அட்வைஸ் பண்ணி நக்கல் பண்ணியிருப்பீங்க.

         நான் சொன்ன அந்த நிமிஷத்தில் இருந்து உங்க முகத்துல மட்டும் துளிகூட பதட்டமும் படபடப்பும் பயமும் எதுவும் இல்லை., ரொம்ப நிதானமா இருக்கீங்க., நான் வந்து அவள காணோம் சொன்ன நிமிஷத்துல இருந்து எல்லாத்தையும் நோட் பண்ணிட்டு தான் இருக்கிறேன்.,

        சுந்தரி அம்மாவும் அந்த நிமிஷம் வீட்டை விட்டு வெளியேறி போனவங்க தான்.,  இப்போ அதனால தான் அவங்களை கூட்டிட்டு வர சொன்னேன்.,  இப்ப எனக்கு உண்மைய சொல்லனும்“., என்று நிதானமாகவும்., அதே நேரத்தில் அழுத்தமாகவும் கேட்டான்.

         “ஆமா டா என்னால தான் வெளியே போனா., அதுக்கு என்ன டா., நீ  ரொம்ப மாறிட்ட உன் பொண்டாட்டி அந்த அளவுக்கு முக்கியமா போயிட்டாளா“.,  என்று கேட்டார்.,

         “ஆமாம்மா எனக்கு அவதான் முக்கியம்., இப்ப சொல்லுங்க“., என்று சுந்தரி அம்மாவை பார்த்து கேட்டான்.

          “சுந்தரி வாயை திறக்காமல் இங்கே இருந்து போஎன்று  கத்த தொடங்கவும்.,

          சுந்தரி அம்மாவை திரும்பி பார்த்தவன். “இப்ப நீங்க உண்மையை சொல்லனும்., இல்ல னா  நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்., வீட்ல யாருமே இல்லாத நேரம் என் வொய்ஃப் காணாமல் எப்படி எங்க போனா ன்னு கேட்பேன்., எங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுறதா நினைச்சி நீங்களும் அவமான படாதீங்க., சொல்லுங்க., தப்பா நினைச்சுக்காதீங்க சுந்தரி அம்மா உங்களை எந்த அளவுக்கு நம்பினோம் ன்னு உங்களுக்கு தெரியும்“.,  என்றான்.

          சுந்தரி அம்மா கண்கலங்கஎன்னை மன்னிச்சிடுங்க பெரியம்மா“., என்று சொன்னவர்., பதவியேற்பு தினம்  அன்று நடந்த விஷயங்களை பேச தொடங்கினார்.

        அன்று அவனின் பதவியேற்பு என்று போனில் அவன் பேசிவிட்டு வைக்கவும் சந்தோஷமாக டிவியில் அமர்ந்து அவன் பதவி ஏற்பை பார்த்துக்கொண்டிருந்தாள்.,

      அப்போதுதான் பானுவும் வந்து இறங்கி இருக்க.,  சொர்ணமும் சேர்ந்து அவளை வெறுப்பேற்ற தொடங்கினர்.

       ஆனால் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.,  “அவர்கள் திட்டியதற்கும் சரி.,  நீ வசதி இல்லாதவள் என்று அவர்கள் சொல்லி காட்டும் போது கூட ஹேமா  மா வாயே திறக்கவில்லை“., என்று சுந்தரி அம்மா சொன்னார்.

        சற்றே அமைதிக்கு பின் பானு  அம்மாவும்., சேர்ந்தே  திட்டினாங்க., “நீ வசதி இல்லாத வீட்டு பொண்ணு., எங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு கிடையாது., எங்க குடும்ப கௌரவமே உன்னால போச்சி“., அப்படி ன்னு சொல்லும் போதும் அமைதியா தான் இருந்தாங்க.., ஆனா அதுக்கப்புறம் தான் நீங்க ஜோசியம் பார்த்ததையும்., அதனால தான் அவங்களை கல்யாணம் பண்ணுனீங்க அப்படின்னு சொன்னாங்க., 

      உடனே கொஞ்சம் கொஞ்சமா முகம் மாறிட்டு.,  அதை வச்சுட்டு திரும்ப திரும்ப பேச ஆரம்பிச்சுட்டாங்க., அதுமட்டுமில்லாம தம்பிக்கு வசதி குறைந்தவங்களை கண்டாலே பிடிக்காது அப்படிங்கிறத சொல்லி., அதை நம்ப வைப்பதற்காக தம்பியோட பிரண்டுக்கு சாதாரணமாக பேசுற மாதிரி பேசினாங்க..,

     பேசும்போதுஎப்படிடா உன் பிரண்டு இப்படி கல்யாணம் பண்ணிட்டு இருக்கான்“., ன்னு கேட்டாங்க.,

        அதுக்கு தம்பி ப்ரண்ட்  “நீங்க அஜெஸ்ட் பண்ணி வாழ்ந்துருவேன்னு சொன்னதா சொல்லிட்டு., நீங்க எதுக்கு பீல் பண்றீங்க.,

      படிக்கிற காலத்துல மட்டும் இல்லாமல்., ஏன் இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் அவனுக்கு நம்ம தகுதியை விட குறைந்தவங்க யாரையுமே கொஞ்சம் கூட மதித்தது கிடையாது“., என்று சொல்லவும் ஹேமா  மாவோட கண்ணு  கலங்குச்சி.,  இதெல்லாம் கேட்டுகிட்டு இருந்தவங்களுக்கு தாங்க முடியல.,

         அதுக்கு அப்புறம் கண்ணு கலங்கினாலும்  கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தாங்க.,  அதே நேரத்துல  தம்பியோட பிரண்டு பேசினாங்க., மறுபடியும் சொன்னாங்க.,  “அதுக்கு என்ன ம்மா.,  நீங்க ஏன் வருத்தப் படுறீங்க.,  இப்ப அந்த பொண்ண அவனுக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு., அப்படி பார்க்கிறான்னு“., என்று சொல்லவும் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு அமைதியா இருந்தாங்க.,

       ஆனா பெரியம்மா  போனை கட் பண்ணிட்டுநீ என் மகன் வாழ்க்கையை விட்டு போகலைனா., நான் சூசைட் பண்ணி செத்துருவேன்.,  நான் செத்ததுக்கு அப்புறம் என் மகன் கூட நீ சந்தோஷமாக வாழ்ந்துட்டு போ“.,  அப்படின்னு கத்த தொடங்கிட்டாங்க.,

         அதோட நிக்காம பின்னாடி ஜெனரேட்டர் க்கு  ஊற்ற வாங்கி வைத்திருந்த டீசலை எடுத்து ஊத்திக்கிட்டாங்க., அப்ப தான் ஹேமா மா ரொம்ப பயந்துட்டாங்க.,

       அதுமட்டுமில்லாமல்என் சாம்பல் அதான் நீ வாழனும் எழுதி இருக்கு போல.,  நல்ல நிம்மதியா உன் புருஷன் கூட சந்தோஷமா இருன்னு சொல்லி கொஞ்சம் அசிங்க அசிங்கமா பேசிட்டாங்க.,

       அதைக் கேட்ட ஹேமா  மா., அழ ஆரம்பிச்சுட்டாங்க., “அசிங்கமா பேசாதீங்க அத்தை., நான் அப்படிபட்ட பொண்ணு கிடையாது“., என்று சொன்னாங்க.,

       “உன் வாயால அத்தை ன்னு கூப்பிடாதேன்னு கத்தினாங்க.,

         அத்தோடு பேசுறதை நிறுத்திக் கொண்ட ஹேமா மா அதன்பிறகுதயவுசெய்து தண்ணி ஊத்துங்கன்னு என்ட்ட தான் சொன்னாங்க.,

        தண்ணீர் ஊற்ற போகும் போதுநீ வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொல்லு“., என்று சத்தியம் கேட்டாங்க.,

   ” வீட்டை விட்டு வெளியே போயிருவேன் சொல்லு., அப்பதான் நான் நம்புவேன்“.,  அப்படி இப்படின்னு ரொம்ப பேசவும் தான்.

        “கண்டிப்பா நான் வீட்டை விட்டு வெளியே போறேன்னு“., சொன்ன  அப்புறம் தான் அம்மா குளித்து கிளம்பி ஊருக்குப் போகும் போது என்ன இந்த டீசல்  ஸ்மல் வராத அளவுக்கு எல்லாத்தையும் சுத்தம் செய்ய சொல்லிட்டு..,   சொன்னாங்க  வீட்ல நடந்தது எதுவும் தெரிய கூடாதுன்னு சொன்னாங்க“.,

        அதான் போன்ல கூட உன் கிட்ட ரூம்ல இருக்காங்க ன்னு சொன்னேன்.,

     ஆனா அதுக்கு அப்புறம் ஹேமா மா ரூம்மை விட்டு வெளியே வரலை.,   அப்புறம்  வீட்ல சாப்பிடவும் இல்லை.,  சாப்பிடுங்க ன்னு சொன்னா.,  வேண்டாம் னாங்க., கடையில ஆர்டர் பண்ணி இருந்தாங்க போல., கிளம்பும் போது தான் கடையில் இருந்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டாங்க.,  இந்த வீட்ல உள்ள தண்ணீ கூட குடிக்கல.,

          நேத்து சாயங்காலம் தான் வீட்டை விட்டு வெளியே போனாங்க., நான் தான் ஆட்டோ பிடிச்சிட்டு வந்தேன்.,  எங்க போறீங்க ன்னு கேட்டதுக்கு., கண்டிப்பா சாகமாட்டேன்..,  எனக்கு அந்தளவுக்கு தைரியம் கிடையாது.,  கண்டிப்பா பழைய இடத்துக்கு போக மாட்டேன்., நான் எங்க இருக்கேன்னு யாருக்குமே தெரியக் கூடாது., அப்படி இடத்துல தான் இருப்பேன் ன்னு., சொல்லிட்டு போனாங்க..,  அவ்வளவுதான் எனக்கு தெரியும்“., என்று  சொல்லிக் கொண்டே அழுதார் சுந்தரி அம்மா.,

    அதைக் கேட்ட சுந்தரியின் கணவனும் அமைதியாக நின்றார்.

    “ஒரு வார்த்தை சொல்ல கூடாதா“., என்று கலா கேட்டாள்.

         “அம்மா செத்துப் போயிருவேன்னு சொல்லி டீசலை ஊற்றிட்டு நிற்கும் போது நான் என்ன பண்ணமுடியும்., ஏதும் பண்ணிக்கிட்டாங்க னா., அந்த பொண்ணும் பாவம் இல்லையா“., என்று சொன்னார்.

வீட்டினர் அமைதியாக இருக்க.,  அங்கிருந்து எழுந்த பிரசாத் தாயை பார்த்துக்கொண்டேசூப்பர் காரியம் பண்ணி இருக்கீங்க., உங்கள மாதிரி ஒரு அம்மாவ  எங்கையும் பார்க்க முடியாது..,  எதற்காக இத்தனை கஷ்டப்பட்டீங்களோ., அது உங்க வாழ்க்கைல இனிமேல் கிடையவே கிடையாது“.,  என்று சொன்னவன்.,

       தன் அப்பாவை பார்த்து ரொம்ப நல்ல வொய்ப் ப்பா  உங்களுக்கு., நீங்க ரொம்ப குடுத்து வச்சவரு., இந்த மாதிரி ஒய்ப் கிடைக்கிறதுக்கு எல்லாம் ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும் போல..,  நல்லவேளை நான் அந்த மாதிரி புண்ணியம் எல்லாம் பண்ணல“.,  என்று சொல்லி நக்கலாக சிரித்தவன்.,

          சென்னைக்கு அழைத்து அவள்  அலுவலகத்தில் விசாரிக்க சொல்ல.,  அங்கு பதில் சுவற்றில் அடித்த பந்து போல திரும்பி வந்தது., சென்னைக்கு அவள் வரவில்லை என்று., எங்கே போனாள் என்று தெரியாமல் தவிக்க தொடங்கினர் குடும்பத்தினர்.,

       அதே நேரம் ஹேமாவின் வீட்டினரும் தேட., அவள் சென்னைக்கு வரவில்லை என்ற செய்தி ஹேமாவின் வீட்டினருக்கும் தெரியவந்தது.,

      அதேநேரம் பிரசாத்தும் வினோத்துக்கு போன் அடித்துஅவளை விசாரியுங்கள் சென்னையில் இல்லையாம்என்று சொன்னான்.,

        அவனும்ஆமா சென்னையில் இல்லையாம்.,  நீங்களும் விசாரிங்க., நானும் விசாரிக்கிறேன்என்றான்.

    அதற்குள் இரு வீட்டினரும் பேசிஅவள்  எங்கிருந்தாலும் கொஞ்ச நாளைக்கு நிம்மதியாக  இருக்கட்டும்., நிச்சயமாக திரும்பி வருவாள்“., என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டிருந்தனர்.,

          அவர்களாக தேடாமல் அவள் திரும்பி வரப்போவதில்லை.,  என்பது அவர்களுக்கு தெரியாமல் தான் போயிற்று., எப்போது அவளை தேடுவார்களோ.,

உன் வாசம் சுமந்த
உன் புடவை.,

உன் தலையில்
சூடிய பூவின் வாசத்தை
எல்லாம் மொத்த குத்தகைக்கு
எடுத்து வைத்த
உன் தலையணை.,

இவற்றில்
முகம்புதைத்து தூங்கத்தான் முயற்சிக்கிறேன்.,

ஏனோ உன்னின் மென்மைகளை

அவற்றில் காண முடியவில்லை.,


சீக்கிரம் வந்து விடு.,
நான் கண்ணுறங்கி
காலங்கள் பல கடந்து விட்டது.,

நித்தம் நித்தம்
உன் நினைவுகளோடு
இரவின் கழுத்தைப் பிடித்து
தள்ளி கொண்டிருக்கிறேன்.,

நான் கண்ணயர்வது
எப்போது கண்மணியே.,

Advertisement