Advertisement

11

உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும்
திருப்தியுடன் செய்யுங்கள்.
அதுவே உங்கள் வாழ்வை
அர்த்தம் உள்ளதாக மாற்றும்.
புத்தர்

          நித்யானந்தனும் கலாவும் அவன் அம்மாவோடு திருமணம் முடிந்த கையோடு கிளம்பி வந்தனர்.

      அவர்கள் வரும்போது இரவு வெகு நேரமானதால் அவரவர் அறையில் சென்று அடங்கினார்.,

       அன்று விருந்து முடிந்து இரவு கிளம்ப வேண்டும் என்று பிரசாத் அவசரப்படுத்தினான்., 

        தயாளன் தான்அப்படி உடனே போக முடியாதுடா முதன்முதலில் ஜெயிச்சு இருக்கோம்., நாளைக்கு காலைல தலைவரை பார்த்து ஒரு வார்த்தை பேசிட்டு அதுக்கப்புறம் இங்க இருந்து காலை ஃபிளைட்டில் கிளம்பி போகலாம்.

        இப்ப என்ன அங்க தூங்குறது இங்க தூங்க போறோம்., காலையில சீக்கிரமா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சு., முதல் ஆளா போய் பார்த்துட்டு. பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பி போகலாம்., அவசரப்படாத“., என்று பேசிக் கொண்டிருந்தார்.

      இவனுக்கோ மனது கிடந்து அடித்துக் கொண்டிருந்தது., போன் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.,  இதுவரை அவள் இரவு நேரங்களில் கூட ஆப் செய்து வைத்தது கிடையாது என்பது அவனுக்கு தெரியும்.,

          அவன் வீட்டிற்கு போன் செய்தால் சரியான பதில்இல்லை., சிலநேரங்களில் எடுப்பதே இல்லை.,  அவளுடைய வீட்டிற்கு போன் செய்யலாம் என்றால்.,  அங்கு இல்லை என்றால் என்ன செய்வது.,  அவர்கள் வீட்டினரும் இவனிடம் பேசியிருந்தனர்.

        அவன் பதவியேற்றவுடன் அவன் அண்ணன் போன் செய்து வாழ்த்து சொல்லி இருந்தான்., மறுநாள் காலையில் மாப்பிள்ள எப்ப வருவீங்க என்று வேறு போன் செய்து விசாரித்து இருந்ததால்.,

         அப்படியே அவள் அங்கு சென்று இருந்தாலோ., இல்லை வேறு ஏதேனும் பிரச்சினை என்றாலும் நிச்சயம் தெரியப்படுத்தி இருப்பார்கள்., என்ற எண்ணத்தோடு சரி ஒருவேளை போனை ஏதும் உடைத்து விட்டாளோ என்னவோ என்று நினைத்துக்கொண்டான்.

        காலையில் தலைவரை பார்த்து விட்டு அவசர அவசரமாக கிளம்பி கோயம்புத்தூர் வந்து இறங்கியவர்கள் வீடு வந்து சேர்ந்தனர்.

       அவன் கண்ணெல்லாம் ஹேமாவை தேடியது., மனமோ அவளை இப்பொழுதே பார்க்கவேண்டும் என்று ஏங்கியது.,  கலா தான் ஆரத்தி எடுக்க வந்தார்., சிரித்த முகமாக அழைத்தவளுக்கு அவனும் பதில் சிரிப்பை உதிர்த்துவிட்டு வீட்டிற்குள் வந்தான்.,

       வீட்டில் முக்கிய உறவினர்கள் சிலரும்., கட்சியின் முக்கிய உறுப்பினர்களும்  வந்திருந்தனர்., முதலில் கட்சி ஆள்களிடம் சுமுகமாக பேசி அனுப்பிவிட்டு உறவினர்களிடம் பேச வந்தான்.

       கலாவிடம் ஹேமா எங்கே என்று கேட்க முடியவில்லை., அவனும் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை எல்லாம் வீட்டின் ஹாலையும்., ஹாலிலிருந்து தெரியும் டைனிங் ஹாலிலும் இருந்தது.,

       ‘அவள் ஹாலில் ஆட்களாக இருந்ததால் டைனிங் ஹாலில் இருப்பாலோ என்று நினைத்தவனுக்கு ஒருவேளை அலுவலக வேலை அதிகமோ., அதனால் அறையில் இருக்கிறாளா‘., என்று நினைத்துக் கொண்டான்.

       மெதுவாக எழுந்துஇதோ வந்துடறேன்“., என்று சொல்லி விட்டு டைனிங் ஹாலுக்கு நுழைய.,

      பின்னாடியே வந்த கலாவிடம்அண்ணி ஹேமா எங்கே“., என்று கேட்டான்.

      “தெரியல தம்பி., நானும் நேத்து நைட்டு லேட்டா தான் வந்தேன்., அவ மாடியிலிருந்து இன்னும் கீழே வரலைனு நினைக்கிறேன்., நான் நைட் லேட்டா வந்ததால காலையில லேட்டாத்தான் எந்திரிச்சேன்., அதுக்குள்ள வீட்டுக்குக் எல்லாம் வர ஆரம்பித்தவுடன் படபடன்னு கெளம்பி., எல்லாம் ரெடி பண்ணி அவங்களுக்கு காபி கொடுத்து இந்த வேலைய தான் பாத்துட்டு இருக்கேன்.,  அத்தை கிட்ட கேட்டதுக்கு., அத்தை தான் சுந்தரி  போவா.,  சாப்பாடு  பற்றி நீ பாரு ன்னு சொல்லிட்டாங்க., ஒருவேளை நிறைய வொர்க் இருந்தா சில நேரத்துல கீழே வர மாட்டாளே., அந்த மாதிரி எதுவும் இருக்கும் போல., நான் வேணா போய் கூட்டிட்டு வரவா“., என்று கேட்டாள்.

      “இல்ல அண்ணி நான் பார்த்துக்கிறேன்“., என்று சொல்லி விட்டு உறவினர்களை பேசி எப்படியோ அனுப்பிவிட்டு மாடி அறைக்கு சென்றுவனுக்கு வெற்று அறையே அவனை வரவேற்றது.,

     எங்கே சென்றிருப்பாள்., ஒருவேளை பாத்ரூமில் இருக்கிறாளோ என்று கதவை தட்ட அங்கு இருந்து எந்த சத்தமும் வரவில்லை.,  என்றான பிறகு  அவள் அங்கு இல்லை என்பதை அறிவுக்கு சுட்டியது.,  அவசரமாக திரும்பி அறையை நோட்டமிட்டவனுக்கு ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த கவர்கள் கண்ணில் பட்டது.

             வேகமாக சென்று எடுக்க., அதில் அவள் வீட்டினருக்கு தனியாக ஒரு கவர்.,  இவன் வீட்டினருக்கு பொதுவாக ஒரு கவர்., அதுமட்டுமல்லாமல் பிரசாத் பெயரை போட்டு ப்யூர்லி பர்சனல் என்று எழுதிய  ஒரு கவர் இருந்தது.

            அவனுக்கு சற்று நேரம் என்ன செய்வது என்றே தெரியவில்லை., ‘இல்லை அவள் அப்படி எதுவும் செய்யவில்லை.,  ஏன் எங்கு போனால்என்ற பதட்டம் அதிகரித்தாலும் அந்த கடிதத்தை பிரித்து படிக்க அவனுக்கு கை நடுங்கியது.,

       அவனுடைய ஹேமா என்ற  அலறல்  வீடு முழுவதும் எதிரொலிக்க., வீட்டில் இருந்தவர்கள் அவசரமாக மாடிக்கு ஓடி வந்தனர்.

      தனியாக கட்டிலில் அமர்ந்திருந்தவன் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க கவரை வெறித்து பார்த்தபடி இருந்தவனை நித்யானந்தன் வந்து கலைத்தவன்., “என்னாச்சு டா., ஏன் கத்தின., அந்த பொண்ணுட்ட சண்டை போட்டியா., எங்கே அந்த பொண்ணுஎன்றான்.,

        கவரை காட்டியபடிஏன்., எதுக்கு., எங்க போனான்னு தெரியலை., இந்த கவர் மட்டும் தான் இருக்கு., ரெண்டு நாள் தானே விட்டுட்டு போனேன்., இப்படி மிஸ் பண்ணுவேன் ன்னு நினைக்கலையே“.,  என்று புலம்பலாக சொன்னான்.

             வீட்டினர்  பெயர்கள் தெளிவாக போட்டிருந்ததால் கவரை பார்த்தவன்.,  எதுவும் சொல்லாமல்அதுல என்ன எழுதி இருக்கு ன்னு பாரு தெரியும்., அப்படி எல்லாம் வீட்டை விட்டு வெளியே போக வாய்ப்பே இல்ல.,  நம்ம வீட்ல நமக்கு தெரியாமல் எப்படி போயிருக்க முடியும்., வீட்ல எப்பவும் ஆட்கள் இருந்தாங்க.,  அம்மா முதல் நாள் நைட்டு தான் கல்யாணத்துக்கு கிளம்பி வந்து இருக்காங்க., மறுநாள் நைட் எல்லாரும் சேர்ந்து வீட்டுக்கு வந்தாச்சு.,  சுந்தரி அம்மா வீட்டிலேயே தான் இருக்காங்க“.,  என்றான்.

        அதற்குள் கலா வீட்டினருக்கு பொதுவாக வைத்திருந்த லெட்டரை வாங்கி பிரித்து படிக்க தொடங்கி இருந்தாள்.

           அதில் யாரையும் எதுவும் குறை சொல்லாமல்., “என்னிடம் ஏன் அனைத்தையும் மறைத்தீர்கள்“., என்று  எழுதி இருந்தவள்., “நான் வேண்டாம் என்று தானே சொன்னேன்., ஆனால் யாரும் கேட்கலை., பட் இது என்னோட வாழ்க்கை., என்னோட வாழ்க்கையை நான் தான் வாழ்ந்தாக வேண்டும்., நான் யார் மேலேயும்  இதுக்கு காரணம் இவங்க தான்னு சொல்லி குற்றம் சாட்ட தயாராக இல்லை., இது என்னோட விதி.,  இப்படித்தான் நடக்கணும் எழுதி இருந்தால் அதை மாற்ற யாராலும் முடியாது., மே பி என்னோட தலையெழுத்து இப்படித்தான் இருந்து இருக்கும்.,  என்னோட வாழ்க்கை இப்படித்தான் ஆகணும்னு எழுதி இருந்திருக்கலாம்., அதனால தான் இப்படியோ என்னவோ.,  நான் யாரையும் குறை சொல்ல விரும்பல., ஆனால் எதுவா இருந்தாலும் நீங்களும் யோசிச்சி செஞ்சிருக்கணும்., அப்படிங்கறது எனக்குள்ள இருக்கிற எண்ணம்.,

     பெரியவங்களா நீங்க யாரும் எதையும் யோசிக்கலையோ அப்படின்னு தோணுது.,  வீட்ல ஒரு வீட்டுக்கு புதுசா வர்ற பொண்ணு வேரோடு புடுங்கி வைக்கிற மரம் மாதிரி அதை  அரவணைத்துக் கொண்டு போனால் தான் அந்த மரம் அந்த இடத்தில் நிலையாக நிற்க முடியும்.,  அப்பதான் வேர் உன்ற தொடங்கி இருக்கிற மரத்த வேண்டாம் ன்னு  தள்ளிவிட தொடங்கினாலும்., மொத்தமா சரிஞ்சி தான் போகும்., அப்படித்தான் என்னோட வாழ்க்கையும் சரிஞ்சு போயிட்டு என்று நினைக்கிறேன்.,  இதையே தான் எங்கம்மா அப்பாக்கும் எழுதி இருக்கேன்.,  என்ன தேடாதீங்க.., நான் நிச்சயமா சாகுற அளவுக்கு தைரியசாலி கிடையாது.,  அதுக்கெல்லாம் தனி தைரியம் வேண்டும்.., அதனால என்ன மன்னிச்சிடுங்க..,நான் யார்கிட்டயும் சொல்லாமல் இந்த வீட்டை விட்டு வெளியே போவது பெரிய தப்பு தான்.,  அது எனக்கே தெரியும்., ஆனா அந்த தப்ப நான் செய்யலைன்னா என்னென்ன நடக்கும் ன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.., சோ மன்னிச்சிடுங்க“., என்று பொதுவாக எழுதி இருந்தவள்

        கலாவிற்க்கு அடியில் 4வரிகள் சேர்த்து எழுதி இருந்தாள்., “எனக்கு கூடப் பிறந்த பொண்ணுங்க யாரும் கிடையாது. ஆனால் ஒரு அக்கா இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்., அப்படிங்கிற ஒரு உண்மையான ஆத்மார்த்தமான அன்பை உங்ககிட்ட நான் உணர்ந்தேன்., அதை அந்த அன்பை  நான் மறுக்க தயாரா இல்லை., ஒருவேளை வீட்ல மத்தவங்க எப்படி நினைத்தார்களோ என்னவோ தெரியாது., நான் உங்களோட அன்பில் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.,

      உண்மையிலேயே இப்ப குழந்தைகளை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்., நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க என் சார்பா ரெண்டு பேருக்கும் ஒரு முத்தம் கொடுத்துடுங்க.,  தேங்க்ஸ் அக்கா“., என்று எழுதியிருந்தாள்.

        “மாமா உங்களோட ஜோசிய நம்பிக்கையை குறைங்க., அது எல்லார் வாழ்க்கையும் சேர்த்து பாலாக்குது., அது உங்களுக்கு தெரியலையா“., என்று எழுதி இருந்தாள்.

         கூடவே வெறும் பேப்பரில் கையெழுத்து போட்டு வைத்திருக்கிறேன். அதில் எந்த காரணம் வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்., அந்த கையெழுத்து பிரசாத் அவரின் இரண்டாவது திருமணத்திற்கு நான் கொடுக்கும் சம்மதம்.

             அதற்கு மேல் யாருக்கும் எதுவும் எழுதவில்லை., அவள் வீட்டிற்கான லெட்டர் இருந்ததுஅவனுக்கான லெட்டர் எடுத்தால்., அதிலும் சில வரிகள் சத்தமாக வாசிக்கவில்லை., அது அவனின் மேல் அவள் கொண்ட நேசத்தையும்.,

         அவனின் நேசத்தை நிஜம் என்றே உணர்ந்ததாகவே எழுதியிருந்தாள்.,  ஆனால் இப்போது அத்தனையும் உண்மையா பொய்யா என்று தெரியாமல் இனி என்னால் இங்கு இருக்க முடியும் என்று தோன்றவில்லை., அதனால் தான் சொல்கிறேன்.

         எப்போதும் மனதிற்குள் ஒரு சிறு சந்தேகத்துடன் வாழ முடியாது.,  சின்ன சந்தேகம் உங்கள் மேல் எனக்கு வந்து விட்டாலும்.., அதன் பிறகு நம் வாழ்க்கை நரகமாகி விடும்., அதனால் தான் இப்போது இங்கிருந்து நான் வெளியே செல்கிறேன்., என்றாவது உங்கள் அன்பு எனக்கு உண்மை என்று தோன்றினால்., உங்களை தேடி வருகிறேன்.,

       அந்தஸ்து பார்த்து தான் நட்பு கூட வைத்து கொள்வீர்கள் என்று கேள்வி பட்டேன்.,  வெறும் ஜாதகத்தை நம்பி எப்படி நீங்கள் நட்பு பாராட்டவே தயங்கும் மீடில் க்ளாஸ் பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று நினைக்கும் போது சற்று வருத்தமாக இருக்கிறது.,

           ம்ஹீம் இது ஏன் உண்மையான அன்பாக  இல்லாமல் போய்விட்டது., என்று சில நேரங்களில் தோன்றத் தொடங்கிவிட்டது..,

          இப்போதே இப்படி தோன்றினால்.,  இன்னும் இருக்கும் காலங்களில் அந்த சந்தேகம் சில நேரங்களில் தோன்றினால் தான் நமக்கான வாழ்க்கை நரகமாகிவிடும்., எனவே என்னைத் தேட வேண்டாம்“., என்று எழுதியிருந்தாள்.,

கடைசியில் முடிக்கும் போதுஎன்னால் உங்களுக்கு அன்பு முத்தம் என்று கூட முடிக்க முடியவில்லை., ஏனெனில் என் மனதில் நீங்கள் என்னோடு பழகிய நாட்களை நிஜமான வாழ்க்கையாகவே நான் வாழ தொடங்கி விட்டேன்., உங்களை நான் முழுமையாக நேசிக்க தொடங்கி இருக்கிறேன், என்று நினைக்கிறேன்.., ஆனால் இப்போது அது நடக்குமா நடக்காதா என்ற எண்ணத்தோடு தடுமாறுவதை விட நான் விலகி விடுவது தான் நல்லது என்று தோன்றுகிறது., என்னுடைய உடையோ நகையோ எதையுமே நான் எடுத்து செல்லவில்லை.,  அது எல்லாம் இங்கே தான் இருக்கிறது.

        அதை என் அம்மா வீட்டில் ஒப்படைத்து விடுங்கள்., உங்களுக்கும் எனக்கும் இனி எதுவும் இருக்கப் போவதில்லை., என்பது எனக்கு தெரியும் என்று அவன் கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே அதில் ஆங்காங்கே கண்ணீர் கரை பட்டு எழுத்துக்கள் கலைந்திருந்ததை உணர்ந்தவன்., பேப்பரில் வித்தியாசத்தையும் உணர்ந்தவன் அவள் இதை அழுதுகொண்டே எழுதியிருக்கிறாள்  என்பதை  மட்டும் உணர்ந்து கொண்டான்.,

மேற்கொண்டு அமைதியாக படித்து விட்டு அதை அப்படியே மடித்து பாக்கெட்டில் வைத்தவன்., அவள் வீட்டிற்கு அழைத்து சொன்னான்.,

    “எல்லாரும்   வீட்டுக்கு கொஞ்சம் வந்துட்டு போங்க“., என்று சொன்னான்.

         ஹேமாவின் பெற்றவர்களும்.,  பாட்டியும் அண்ணனும் வர அவர்களுக்கு எழுதி வைத்திருந்த லெட்டரை கொடுத்தவன்., வேறு எதுவும் பேசவில்லை அதிலும் பொதுவாக அனைவருக்கும் எழுதியது போலவே குறிப்பிட்டு எழுதியிருந்தாள்.,

       

Advertisement