Advertisement

ஜெயிச்சாலும் தோத்தாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை என்று வாய் வார்த்தையாக சொன்னாலும் மனமோ தோற்றுவிட்டால் அதன்பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காது என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு அதிகம் இருந்தது.

     இப்படியே இரண்டு நாட்கள் கழிய ஓட்டு எண்ணிக்கை நாளும் வந்தது., காலையில் எழுந்து குளித்து கிளம்பி ஓட்டு என்னும் இடத்திற்கு சென்றாலும்.,  அவன் முகம் படபடப்பை தத்தெடுத்து இருந்தது.,

          ஓரளவு முன்னணியில் பிரசாத் இருப்பதாக தெரிந்தாலும் ஜெயித்து விடுவான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

     குடும்பத்தினர் அனைவரும் அவன் ஜெயித்து விடுவான் என்று நினைத்தாலும்., அவனின் எண்ணம் மட்டும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து நிற்க வேண்டும்., என்ற எண்ணமும் அவனுக்கு வந்திருந்தது. ஜெயித்தால் போதும் என்று நினைக்காமல்., நிச்சயமாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தால் தான் இன்னும் பெருமையாகவும் இருக்கும்., என்று நம்பிக்கையோடு காத்திருந்தான்.

       அதுபோல மாலை ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு முன்பே அதிக ஓட்டு வித்தியாசத்தில் இன்னும்  ஒரு சுற்று மட்டுமே ஓட்டு எண்ணிக்கை இருக்க..,   70 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றிருந்தான்,

       ஒரு சுற்று வாக்கு எண்ணுவதற்கு முன்பே தெரிவித்து விட்டனர்., அந்த சுற்றை எண்ணினாலும்., அதில் வாக்குகள் அதிகமாக எதிர்க்கட்சிக்கு சென்றாலும்., இவனுடைய வாக்குகள் அருகில் கூட வர முடியாது.,  மிஞ்சிப் போனால் 10 சதவீத வாக்குகள் அவன் வெற்றி வாய்ப்பில் கம்மியாகுமே தவிர வெற்றி அவனுக்கு தான் என்பது உறுதியானது.,

      அதன் பிறகு முழு வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன்.,  தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

        வீட்டிற்கு வரவும் கலா தான் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தாள்., மிகவும் சந்தோஷமாக வந்தாலும்., அனைவரிடமும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டே இருந்தாலும்.,  அவனது பார்வை அவ்வப்போது ஹேமாவின் பின்னேயே சென்றது.,

        அதை உணர்ந்து கொண்டவள் பிள்ளைகளோடு விளையாடுவது போல தள்ளி அமர்ந்து இருந்தாள்., இரவு உணவை முடித்து விட்டு அறைக்கு சென்றவன்  உடை கூட மாற்றாமல்.,  ஹேமாவை இழுத்து அணைத்தவன்.,  அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி சற்று நேரம் அமைதியாக நின்றான்.

     அவனின் படபடப்பு காலையிலிருந்து எப்படி இருந்திருக்கும் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.,  அவற்றைப் போக்கும் விதமாக தான்., தன் சந்தோஷத்தையும்., படப்படப்பையும் சேர்ந்து  தணிக்கும் பொருட்டு அவளிடம் ஆறுதல் தேடி தோல் சாய்ந்தது போல தோளில் சாய்ந்து இருந்தான்.,

            இவளும் அவனை சேர்த்து அணைத்தபடி., அவன் முதுகை தட்டிவிட்டு கொண்டே., “ஜெயிப்பீங்க ன்னு சொன்னேன் இல்ல“., என்று சொல்லிக் கொண்டே இருக்க.,

         மெதுவாக அவள் கழுத்து வளைவில் தலை ஆடிக்கொண்டிருந்தவன்.

          மெதுவாக கழுத்தில் முத்தமிட்டு அப்படியே மேலே ஏறி கன்னம்., நெற்றி., மூக்கு., கண்., உதடு என்று அவனுடைய மகிழ்ச்சியை அவளோடு கொண்டாட தொடங்கியிருந்தான்.

      அவனுடைய சந்தோஷத்தை சொல்லி அவளிடம் மட்டுமே அதிகமாக கொஞ்சிக் கொண்டிருந்தான்., கீழே அவன் சந்தோஷத்தை சொல்லியதை விட இங்கு வந்து சொல்லும் போது அவன் முகத்தில் சந்தோஷம் வெளிப்படையாகத் தெரிந்தது., அவளிடம்தேங்க்ஸ் ஹேமா., தேங்க்யூ தேங்க்யூ சோ மச்“.,என்று மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

      அவளோநான் என்ன பண்ணேன்., எனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க“.,  என்று கேட்டாள்.

            அவனும் சிரித்துக் கொண்டேஒன்னுமில்ல., லவ் யூ சோ மச்“., என்று பிதற்றிக் கொண்டிருந்தான்.

          இவளோ சிரித்துக்கொண்டே அவனிடமிருந்து விலகி போய்., “டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க., கொண்டு வந்த பால் ஆறி இருக்கும்“., என்று சொன்னாள்.

      “பரவாயில்லை“., என்று சொல்லிவிட்டு தன்னை ரெப்பிரஷ் செய்து கொண்டு வந்தவன்., அவளோடு இழைய தொடங்கியிருந்தான்.

    தன் சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரு மனிதன்., தன் வாழ்க்கை துணையிடம் மட்டுமே அதிகமாக காட்ட முடியும். மற்றவரிடம் அளவோடுதான் நிறுத்திக்கொள்ள முடியும்., தன் சந்தோஷங்களையும்.,  துக்கங்களையும் உரிமையுடையவரிடம் மட்டும் தானே அதிகமாக வெளியிட முடியும்., அந்த வகையில் தான் வாழ்க்கைத்துணையின் அவசியமும் அத்தியாவசியமும் புரியும்.

      மறுநாள் காலை இன்னும் இரண்டு நாளில் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்று தயாளன் சொல்லிக் கொண்டிருந்தார். அவனோ மெதுவாக ஹேமாவை திரும்பி பார்த்தான்.,

        அவளோ அதை கண்டும் காணாதது போல ஒதுங்கி செல்வதைக் கண்டதும் இவளிடம் இன்று எப்படியும் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.,

     அதேநேரம் கலாவின் உறவின் வழியில் ஒரு திருமணம் இருக்க., அதற்கு கலாவும் நித்யானந்தனும் கிளம்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்., போயிட்டு இரண்டு நாளில் அவர்கள் திரும்புவதாக பேச்சு இருந்தது.,

              அது போல அன்று பதவி ஏற்க தயாளனும்., பிரசாத் ம் செல்லலாம் என்று சொல்லும் போது.,  பிரசாத் தான்ஹேமா நீ கூட வரியாஎன்று கேட்டான்.

      அவளோஇல்லை இதெல்லாம் எனக்கு பழக்கம் கிடையாது., நீங்க போயிட்டு வாங்க“., என்று சொல்லி விட்டு அமைதியாகி கொண்டாள்.

    அவனும்சரி உன் இஷ்டம்“., என்று சொன்னான்.

     தயாளனும் சரி நம்ம 2பேர் மட்டும் போயிட்டு வரலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

         சொர்ணமும்நானும் கலா வீட்டில அந்த கல்யாணத்துக்கு வாரேன்னு சொல்லி இருந்தேன்.,  அதனால கலா முன்னாடி தம்பியோட போ., நான் கரெக்டா கல்யாணத்துக்கு காலைல வந்துட்டு., சாயந்திரம் வீட்டுக்கு நாமெல்லாம் சேர்ந்து வர்ற மாதிரி வச்சுக்கலாம்“., என்று சொன்னார்.

      சரி என்று தலையாட்டி கொண்டாள்.,  ‘ஆனால் எப்போதும் தன் வழி சொந்தங்களுக்கு அவர் வர விரும்புவதில்லை‘., என்பது அவளுக்கு தெரியும். ‘ஏன் திடீரென்று தானாக வருகிறேன்‘., என்று சொல்கிறார் என்ற எண்ணம் தோன்றினாலும் எதுவும் கண்டுகொள்ளாமல் சரி என்று சொல்லி வைத்தாள்.,

      அதன் பிறகு அவர்கள் யோசித்தபடி வேகவேகமாக வேலைகள் நடக்கத் தொடங்கியிருந்தது., கலா நித்யானந்தனோடு திருமணத்திற்கு கிளம்பி இருந்தாள்.,

       பிரசாத்தும் பதவியேற்புக்காக சென்னை கிளம்பினான். பதவி ஏற்பு முடிந்த மறுநாள் அங்கு விருந்து இருக்கும்.,  அதனால் அதை எல்லாம் முடித்து விட்டு மறுநாள் தான் அங்கிருந்து இங்கு கிளம்புவதாக இருக்கிறது அதையும் சொல்லி விட்டே சென்றனர்.

     கிளம்பும் முன் அவளை அணைத்தபடி அறையில் நின்றவன்., “ஹேம் ஏனோ தெரியல., மனசெல்லாம் பாரமா இருக்கு.,  ஏனோ நீ என்கூட இருந்தா இன்னும் நல்லா இருக்கும் அப்படின்னு ஒரு பீல் ஆகுது.., கூட வாயேன்“., என்று அழைத்தான்.

       இவளோஅதெல்லாம் ஒன்னும் இல்ல., உங்களுக்கு டென்ஷன் அதுதான் மனசு ஒரு மாதிரி இருக்குது., ரிலாக்ஸா இருங்க., ரிலாக்ஸா பீல் பண்ணுங்க.,  இப்பவும் தமிழ்நாட்டிலேயே சின்னவயசு எம் எல்   நீங்கதான் அதை மட்டும் யோசிங்க., என்ன உங்க கட்சி ஜெயிக்க ., என்ன நெக்ஸ்ட் கட்சி தான் ஜெயிக்கும் அந்த நம்பிக்கையோடு போயிட்டு வாங்க“.,  என்று சொன்னாள்.

      அவனும் அவள் நெற்றியில் முத்தமிட்டுபத்திரமா இருப்பியா“.,என்று கேட்டான்.

      “நான் என்ன சிறு பிள்ளையா பத்திரமா இருப்பேன்.,  கீழ சுந்தரி அம்மா இருக்காங்க., ஏன் அத்தை என் கூட பேசாம இருந்தாலும்., கீழே அத்தை இருக்காங்க அதுக்கு மேல என்ன வேணும்., வீட்டை சுத்தி ஆள் இருக்காங்க., அப்படி என்ன ஆயிரும் ன்னு பயப்படுறீங்க“., என்று கேட்டாள்.

        அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மீண்டும் அவளை இழுத்து அணைத்து தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டவன்., நெற்றியில் முத்தம் வைத்துமனசு என்னவோ சரியில்லாத மாதிரியே இருக்கு“., என்று சொல்லும் போது அவன் குரல் கரக்கரக்க.,

        இவள்தான்அதெல்லாம் ஒன்னும் இல்ல., தைரியமா போயிட்டு வாங்க“., என்று சொல்லி அவன் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தம் வைத்தவள்.,

         அவன் கேட்காமலேயே அவன் உதட்டிலும் முத்தம் வைத்து அனுப்பினாள்.,  அவளுக்கு தெரியவில்லை இதுதான் அவள் அவனுக்கு கொடுக்கும் கடைசி முத்தம் என்பது.

         கலா நித்யானந்தன் கிளம்பிய பின்.,  இவர்களும் கிளம்பிவிட வீடு வெறிச்சோடி இருந்தது., மாடியில் தன் அறைக்கு வந்தவள் தன் பின்னேயே சுற்றிக் கொண்டிருக்கும் தன்னவன் அருகில் இல்லாததை நினைத்து சிரித்துக் கொண்டாள்.

       யாராவது கல்யாணத்துக்கு முன்பு இப்படி நீ அவனை தேடுவாய் என்று சொல்லியிருந்தால் அவர்களை கல்லால் அடித்து இருப்பாள்., ஆனால் இன்றோ அவனைத் தவிர வேறு எண்ணம் இல்லாமல் தான் இருப்பதை நினைத்து சிரித்துக் கொண்டாள்.,

           லீவு முடிந்த பிறகும் இப்பொழுதெல்லாம் வேலைகளை வொர்க்ப்ரம் ஹோம்மில் செய்து கொண்டிருந்தாள்., அது அவனுக்கும் தெரியும் அதை பற்றி அவனும் பேசவில்லை., அவளும் அவனிடம் கேட்கவில்லை., அலுவலகத்தில் மட்டும் பெர்மிஷன் கேட்டு வைத்திருந்தால் சற்று நாள் கொடுங்கள் என்று.

        கீழே உணவுக்கு செல்லும் போதும் சரி., வீட்டில் அவள் நடமாட்டம் இருக்கும் போதும் சரி., சொர்ணம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.

           சுந்தரி அம்மாவுடன் இவள் எப்பொழுதும் போல சகஜமாக பழக.,  அவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார்., ஆனால் அன்று பானு வந்த பிறகு எல்லாம் தலைகீழாக மாறிக்கொண்டிருந்தது.

       பதவியேற்பு அன்று காலையிலேயே ஹேமாவிற்கு போன் செய்தவன்.,அதிக நேரம் பேசி இருந்து விட்டு அவளுக்கு போனிலேயே தன் அன்பை தெரியப்படுத்தி விட்டே போனை வைத்திருந்தான்.

       பதவி ஏற்பு நிகழ்வை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் வீட்டில் எல்லாம் தலைகீழாக மாறத் தொடங்கியிருந்தது., அன்று மாலை திருமணத்திற்கு கிளம்புவதாக சொல்லி சுந்தரி அம்மாவிடம் சொர்ணம் சொல்லிவிட்டு கிளம்பினார்.,

      சுந்தரி அம்மாள் இன்று பகலில் நடந்த கலவரங்களை நினைத்து வாய்மூடி மௌனமாய் இருந்தார்., மாடிக்கு சென்றவளோ போனை அணைத்து வைத்து விட்டு காலையில் தானிருந்த மனநிலை என்ன., இப்போது இருக்கும் மனநிலை என்ன., என்று ஒப்பிட்டு பார்த்துக் கொண்டவள்., தன் வாழ்க்கையை நினைத்துக் கொண்டாள்.

      அவ்வளவு தானா எல்லாம் அவ்வளவு தானா என்று நினைத்தவள்., முக்கியமான முடிவை எதைப்பற்றியும் யோசிக்காமல்., குடும்பம் கௌரவம் என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் அவசரமாக முடிவெடுத்து விட்டாள்.,

     முதல் வேலையாக தன் போனை ஆப் செய்தாள்., போனை மொத்தமாக அனைத்து போடும் முன் ஒரே ஒரு அலைபேசி அழைப்பு மட்டும் எடுத்துப் பேசிவிட்டு மொத்தமாக அணைத்து விட்டாள்.,

       பதவி ஏற்பு விழா முடிந்து வந்தவனும் அவளது போனுக்கு முயற்சி செய்து விட்டு.,  வீட்டிற்கு அழைக்க வீட்டிலும் சுந்தரி அம்மாள்அனைவரும் திருமணத்திற்கு சென்று விட்டனர்.,  ஹேமா அறையில் இருக்கிறாள் என்பதை மட்டும் சொன்ன பின்பு., நான் பிறகு அழைக்க சொல்கிறேன்“., என்று சொல்லிவிட்டு சுந்தரி அம்மா வைத்துவிட்டார்.

       அம்மாவிற்கு அழைத்து பேசநான் திருமணத்தில் இருக்கிறேன்., எனக்கு என்ன தெரியும்“., என்று சொல்லிவிட்டார்.

       மறுநாளும் இதுபோல போன் சுவிட்ச் ஆப் இல் இருக்க., அவனால் அங்கு நடந்த வெற்றி விருந்தில் கொண்டாட முடியாமல் சற்று திணறி தான் போனான்., எப்போது வீட்டிற்குப் போவோம் என்ற எண்ணத்தோடு திணறி போய் இருந்தான்.,

         அதற்குள் இங்கு ஒருத்தி தன் மொத்த உறவுகளையும் முடித்துவிட்டு தன் பயணத்தைத் தொடங்கியிருந்தாள்.


   முத்தத்தின் ஈரம் காயும் முன்
   மொத்தமாய் மறைந்து
    போனாயோ.,
    எங்கே என்று உனை
     நான் தேடுவேன்., 
    எங்கிருந்தாலும் வந்து விடு
     உன் முத்தத்தின் ஈரம்
     காயும் போதே.,
     என் மொத்த உயிரும்
      காய்ந்து போனதடி.

    மீண்டும் வந்து
     உயிர் முத்தம் தந்து
    என்னை மீட்டெடு.,
     எனை  மீட்டெடுக்கும்
      சக்தியடி நீ.,

Advertisement