Advertisement

10

நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை
என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.
நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.
புத்தர்

         நாட்கள் ஓடிக் கொண்டிருப்பது போலத்தான் தோன்றியது இன்றோடு பிரசாத்திற்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது., கிட்டத்தட்ட திருமணமாகி 30 நாட்களுக்கு மேல் கடந்து இருந்தது.

   இருவரின் வாழ்க்கையும் சுமுகமாக சென்றுகொண்டிருந்தது., இதையெல்லாம் யோசித்தபடி தன்னுடைய மாற்றங்களை நினைத்து சிரித்துக் கொண்டவள்., அவர்கள் அறையின் பால்கனியில் இருந்து பின்புற தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் ஹேமா.

  அறைக்குள் விளக்கு எரிந்தாலும்.,  அவள் நிற்கும் பால்கனியில் எப்பொழுதும் விளக்கு போடுவது கிடையாது. மாடியிலிருந்து கீழே பார்த்துக் கொண்டிருக்கும் போதே  சொர்ணம் போனில் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.,  பார்த்தும் பார்க்காதது போல அங்கிருந்த செடிகளை பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றுகொண்டாள்.,

         இத்தனை நாட்களில் எத்தனையோ முறை சொர்ணம் ஹேமாவிடம் முகம் காட்டி இருந்தாலும்., ஹேமா அதையெல்லாம் தாண்டி வர கற்றுக்கொண்டாள்.

   வீட்டில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி யோசித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க., திடீரென பின்னிருந்து அணைக்கவும் சற்று பதறினாலும் ., அந்த அணைப்பு யாருடையது என்று புரிந்து கொண்டவள் அமைதியாக நின்றாள்.

      அவனோ அவள் அமைதியையே அவனுக்கு தந்த சம்மதமாக நினைத்து இன்னும் இருக்கமாக அணைத்துக் கொண்டான்.,

         அவளிடம்இன்னையோட பிரச்சாரம் முடியுது., எலக்சனுக்கு இரண்டு நாள் தான் இருக்கு.,  நீ எனக்கு தானே ஓட்டு போடுவ“., என்று கேட்டான்.

         அவன் அணைப்பில் இருந்த படியே., முகத்தை மட்டும் திருப்பி அவனை பார்க்க முற்பட., அவனோ அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன்., உதட்டை அவள் கன்னத்தில் இருந்து எடுக்காமலேயேபதில் சொல்லுஎன்று சொன்னான்.

         அவளோ அவன் முகத்தை தள்ளி விட்டு., கையணைப்பிலேயே  திரும்பி நின்று அவனை பார்த்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

        “உண்மைய சொல்லனும்னா“., என்று சொல்லி தான் ஓட்டு போட்ட கதைகளை சொல்லிக் கொண்டிருந்தவள்.,  “இப்ப வரைக்கும் ஸ்டேட் எலக்சனுக்கு நான் ஓட்டு போட்டது இல்லை., இதுதான் பர்ஸ்ட் டைம்“., என்று சொன்னாள்.

          “சும்மா தானே சொல்ற“., என்று கேட்டான்.

        “அய்யோடா., நிஜமா தான் சொல்றேன்“., என்று சொன்னவள் அவனையே பார்த்தபடி இருக்க அவன் சிரிப்பை பார்த்து கொண்டு இருந்தவள்.,
என்ன ஆச்சு., ரெப்பிரஷ்  பண்ணலையா.,  நான் காபி எடுத்துட்டு வரவா“., என்று கேட்டாள்.

          “காபி வேண்டாம்., வெளியே குடிச்சாச்சி., ரெப்பிரஷ் அப்புறமா பண்ணிக்கலாம்“., என்று சொன்னவன்ஏன் நான் அழகா இல்லையா., இல்ல என் மேல எதுவும் ஸ்மல் வருதா“., என்று கேட்டான்.

       அவளோ அவனை இன்னும் நெருங்கிநான் எப்ப அப்படி சொன்னேன்“., என்று கேட்டாள்.

      அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்., “ஹேம் இதுதான், இதுதான் உன் ட்ட எனக்கு பிடிச்சது., நீ இந்த நிமிஷம் வரைக்கும் என்னை ஒரு வார்த்தை கூட குறை சொன்னது கிடையாது.,  உன்னோட இந்த ஹேபிட் எனக்கு ரொம்ப பிடிக்கும்., நீ நீயா இருக்கஎன்ன அப்படியே நான் நானா இருக்கிற மாதிரியே ஏற்றுக்கிட்ட“.,  என்றான்.

            சிரித்தபடி  அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்பிரச்சாரம் முடிஞ்சிடுச்சு., அப்புறம் எலக்சன்ல  ஜெயிச்சாச்சுன்னா ரொம்ப பிசியான ஆளா ஆகிருவீங்க.,  அப்புறம் உங்களை நான் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம் ஆயிரும்என்று சொன்னாள்.

      அவனோ  “அப்படியெல்லாம் இல்ல, உனக்கு அப்புறம்தான் மற்ற எல்லாம்“., என்றவன்., ஆமா அந்த பேச்சை அப்படியே விட்டுட்டோம்., இந்த தடவை  எனக்கு தானே ஓட்டு போடுவ“., என்று கேட்டான்.

       “நான் கஷ்டப்படுறவங்களுக்கு யார் நல்லது  செய்வாங்களா அவங்களுக்கு தான் போடுவேன்“.,  என்றாள்.

      “ஏன் என்னை பார்த்தால் நல்லது செய்ற மாதிரி இல்லையா“., என்று அவன் கேட்டான்.

      இவளோநல்லது செய்வீங்க.,  ஆனா எப்பவும் நல்லது செய்யணும்., பதவிக்கு வந்த உடனே சும்மா பேருக்காக கொஞ்சமா நல்லது செஞ்சுட்டு சுயநலமான  நீங்க லாபம் பண்றதுக்கு இது பிசினஸ் இல்ல.,  அரசியல் மக்களுக்கு சேவை செய்வதற்கு.,  மக்களின் தேவையை அரசுக்கு தெரியப்படுத்தி நிவர்த்தி செய்வதற்காக தான் இந்த பதவிக்கு நீங்கள் வர்றீங்க., உங்களுக்கு அதற்கான சம்பளத்தை கவர்மெண்ட் கொடுக்குது.,  சோ நீங்க மக்களுக்கு முடிந்த அளவு நல்லது செய்ய பாருங்க., எல்லாருமே அவங்கவங்க சுயநலத்தோடு கொஞ்சம் அவங்களுக்காக சேர்த்து வைக்க பார்ப்பாங்க., உங்க வீட்டை பொறுத்தவரை அந்த பிரச்சினை இல்லை.,  இல்லையா அதனால நல்லது செய்யுங்க“., என்று சொன்னாள்.

        அவளையே பார்த்தவன்., “கண்டிப்பா  எல்லாருக்கும் நல்லது செய்கிறேன்., நீ  ஒன்று சொல்லி இத கூட செய்யலனா எப்படி., நல்லது செய்வேன் நம்பு“., என்று சொன்னவன்., “ஜெயிச்சிருவேன் இல்ல“., என்று சந்தேகமாக கேட்டான்.

        “நீங்க கண்டிப்பா ஜெயிப்பிங்க.,  நல்லது செய்யும் நினைச்சாலே கண்டிப்பா ஜெயிப்போம்“., என்று சொன்னாள்.,

             “அப்ப ஓட்டு போடுவ இல்லைஎன்றான்.

         சிரித்தபடி அவனையே பார்த்தவள்.,  “நான் ஓட்டு போட்டா தான் ஜெயிப்பீங்களா“., என்று கேட்டாள்.

    “கண்டிப்பா நீ ஓட்டு போட்டா ஜெயித்து விடுவேன்“., என்று சொன்னான்.

           சிரித்தபடியே அவன் தோளில் தலைசாய்த்து கொண்டவள்., “கண்டிப்பா போடுறேன்., ஆனால் என்னோட ஓட்டர் ஐடி அம்மா வீட்டிலேயே இருக்கு“., என்று சொன்னாள்.

        “அது நாளைக்கு நம்ம போய் எடுத்துக்கலாம்“., என்று சொன்னவன் அதன் பிறகு அவளிடம் பேசிக் கொண்டிருக்க அவளும் பதிலுக்கு பதில் அவனோடு இப்பொழுதெல்லாம் நிறையவே பேச தொடங்கியிருந்தாள்.

         அதன் பிறகு தேர்தலுக்கு முன்பு இரண்டு நாட்கள் இருக்க., அந்த இரண்டு நாட்களும் முழுவதும் அவளோடு இருக்கும்படி பார்த்துக் கொண்டான்.

         ஒருநாள் அவளின் அம்மா வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு சென்று வந்தவன்., அவளிடம் எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் உன்னோடு தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்.,  ஜெயிச்சா டைம் கிடைக்கும் போது டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன்., ஜெயிக்கலை னா முழுக்க முழுக்க உன்கூட மட்டும் தான் டைம் ஸ்பென்ட் பண்ண போறேன்“., என்று சொன்னான்.

         அவள் வாய் விட்டு சிரித்த படிகண்டிப்பா ஜெயிச்சிருவீங்க., ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க“.,  என்று கேட்டாள்.

           அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்., “ஜெயிச்சா ஓகேஎன்று சொன்னான்.

              “உங்களுக்கு என் கம்பெனியில் எவ்வளவு பெரிய ஃபேன் இருக்கான்னு தெரியுமா“., என்று சொல்லி தன் உடன் வேலை பார்க்கும் நண்பனை பற்றியும் அதன் பிறகு அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளை பற்றியும் அவனோடு பகிர்ந்து கொண்டாள்.

            அவனும் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தவன்., “எதனால அப்படி ஒரு தீவிரமான ரசிகன்“., என்று கேட்டான்.

         அவளோஇப்போ உள்ளவங்க எல்லாருக்குமே ஒரு நம்பிக்கை., சின்ன வயசுகாரங்க., படிச்சவங்க வந்தா ஏதாவது நல்லது செய்யமாட்டாங்களா.,  நம்ம மக்களுக்கு நல்லது நடக்காதா., அரசு சலுகை எல்லாம் கிடைச்சிடாதா.,  அப்படிங்கிற நம்பிக்கை தான்., வேற என்ன யோசிக்கப் போறாங்க.,  அது மட்டும் இல்லாமல் ஒருத்தங்க  அது மாதிரி வந்தா., அந்த தொகுதியில் உள்ள மக்களுக்கு நல்லது நடந்தால்., அதைப் பார்த்து அடுத்த தடவை எலக்சன்ல எல்லா தொகுதியிலும் சின்ன வயசுல உள்ளவங்கள நிறுத்திற மாட்டாங்களா., நம்ம மக்களுக்கு நல்லது நடந்துறாதா.,  அப்படிங்கிற ஒரு எண்ணம் தான் வேற ஒன்னும் இல்ல“., என்று சொன்னாள்.

     ” பரவாயில்லையே இது நல்ல ஐடியாவா இருக்கே“., என்று சொன்னவன் ஹேம் ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ.,  கண்டிப்பா நான் தப்பான அரசியல்வாதி என்கிற பெயர் வாங்க மாட்டேன்.,  என்னால முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா நல்லது செய்வேன்., அதுக்காக நான் ரொம்ப யோக்கியம் அப்படின்னு நான் சொல்லல., ஆனா நிச்சயமா நான் நல்லது தான் செய்வேன்., எங்க அப்பா  பாதி நல்லது செஞ்சாரு.,   ஆனாலும் அவர் லாபம் சம்பாதிக்க தான் பார்த்தாரு., இல்லன்னு சொல்லல., ஆனா நான் அப்படி இருக்க மாட்டேன்.,  நீ நிச்சயமாக நம்பலாம்“., என்று சொல்லி அவள் கையை தன் கையோடு சேர்த்து பிடித்தவன்.,  “இப்போ நான் சொல்லுறதை ப்ராமிஸ் ன்னு நினைச்சா கூட நினைச்சுக்கோ., கண்டிப்பா நான் நல்லது தான் செய்வேன்“., என்று சொல்லி நம்பிக்கை கொடுத்தான்.

      “எனக்கு உங்க மேல நம்பிக்கைஇருக்குஎன்றாள். அந்த நம்பிக்கை இன்னும் சில நாட்களில் அவளை விட்டு அவள் போகப் போவது தெரியாமல்.

         இதோ அதோ என்று எலக்சன் நாளும் வந்துவிட அன்று காலையிலேயே வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஓட்டுப்போட கிளம்பும் போது அவளையும் தன்னோடு கிளப்பி இழுத்துக் கொண்டே வந்தான்.,

           முதல் ஆளாக கூட்டிக் கொண்டு சென்றான்., தனது மாநிலத்திற்கான ஓட்டுரிமையை  முதல் முறையாக தனது ஓட்டு மூலம் பதிவு செய்தாள்., தன்னவன் ஜெயிக்க வேண்டும் என்று மனதார நினைத்துக்கொண்டே.,

         அமைதியான முறையில் தேர்தல் நடந்து கொண்டிருந்தாலும்., அவ்வப்போது வீட்டில் கட்சி ஆட்கள் வந்து பேசி செல்வதும் வருவதும் போவதுமாக இருந்ததால்., தயாளனும் பிரசாத்தும் அவர்களுக்கான தேர்தல் அலுவலகத்திற்கு சென்று விட்டனர்.,  வருபவர்கள் அங்கே வரட்டும் என்று.,

       வெற்றிகரமாக அன்று மாலையில் அவன் தொகுதியில் 80 சதவீத ஓட்டு பதிவாகி இருந்ததாக செய்திகள் தெரிவிக்க.., அவன் படபடப்பு சற்று அதிகமாகத்தான் இருந்தது.

         ஓட்டுப் பெட்டிகள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக சொன்ன பிறகும் அவனுக்கு சற்று படபடப்பு இருந்து கொண்டே தான் இருந்தது.,

     இன்னும் இரண்டு நாள்களில் எலக்சன் ரிசல்ட் வந்துவிடும் என்னும் போதே அந்த படபடப்பு அவனுக்கு சற்று அதிகரிப்பது போல தான் இருந்தது., மற்றவர்கள் முன் சாதாரணமாக காட்டிக்கொண்டாலும் அவனுடைய படபடப்பை அவன் உறவுகள் தெரிந்து தான் வைத்து இருந்தது.,  ஆனாலும் யாரும் எதுவும் சொல்ல முடியவில்லை., ஆறுதல் சொல்லிவிட்டு அமைதியாக இருந்து கொண்டனர்.

     

Advertisement