Advertisement

மூவருமே பிஇ முடித்த பெண்கள்.,  மூவரும் வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது., ஒரே கம்பெனியில் வேலை பார்க்கின்றனர்.

       ஹேமா மட்டும் வேலையில் சேர்ந்த புதிதில் இருந்து மாலை நேர கல்லூரியில் எம்பிஏ சேர்ந்து படிக்க தொடங்கியிருந்தாள்., தற்சமயம் அவளது படிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது.

         கல்லூரி தினங்களில் அவள் வேலை அதிகம் இருந்தால் அன்று வகுப்புக்கு பெர்மிஷன் சொல்லி விடுவாள்., அதற்கு தகுந்தார் போல் மற்ற நாட்களில் அமர்ந்து படித்து விடுவாள்., அங்கு படிக்கும் தெரிந்தவர்களிடம்  நோட்ஸ் வாங்கிக்கொள்வாள்.,

    எப்படியோ மேற்படிப்பு படிக்க வேண்டும்என்ற ஆசையை மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்து முடித்திருந்தாள்.

     மற்றவர்களையும் அவள் சேரும் போது அழைக்க., அவர்கள் இருவரும்இத படிச்சதே கஷ்டப்பட்டு படித்த மாதிரி படித்திருக்கிறோம்., மறுபடியும் படிக்க கூப்பிடுவியா போடி., வேற வேலை இல்ல.,   இந்தப் படிப்புக்கு இந்த வேலை கிடைச்சிடுச்சு., அது போதும்“., என்று அவர்கள் நிறுத்திக்கொண்டனர்.

           இவளோ மேற்கொண்டு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு படித்தாள்., தற்சமயம் அதற்குரிய ஊதிய உயர்வோடு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.,

        தோழிகள் அது எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.,  தோழியர்களோஉனக்கு பிடிச்சிருக்கு படிக்கிற.,  எங்களுக்கு தொல்லையை தூக்கி தோளில் போட்டுக்க ஆசை இல்லை., படிக்கிறதில் உள்ள கஷ்டம் தெரியாம உள்ளே போய் விழ நாங்க ஒன்னும்  சின்ன பிள்ளைங்க இல்லை“., என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள்.

                    அன்று மதியம் உணவு இடைவேளையில் அனைவரும் சென்று உணவு உண்ண அமரும் போது அவர்களோடு வேலை பார்க்கும் சில நண்பர்களும் சேர்ந்து வந்து அவர்களோடு அமர்ந்தனர்.,

                  அப்போது அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹேமா உங்க ஊர் தானே என்று சொல்லி ஊரை சொல்லி கேட்டனர்.,

            “ஆமா“.,  என்றவள்ஏன் என்ன மட்டும் சொல்லுறீங்க.,  இவளும் தான் கோயம்புத்தூர்“., என்றாள்.

             “அவ கோயம்புத்தூர் ஆனாலும் கோயம்புத்தூர் உள்ள இருக்குற வேற சின்ன ஊரு.,  நீ அப்படி இல்ல மெயின் கோயம்புத்தூர் தானே.., இந்த ஏரியா தானே“., என்று ஏரியாவை சொல்லி கேட்டனர்.

          “ஆமா“., என்று சொன்னாள்.

        “உங்க ஏரியால இந்த தடவை புதுசா.,  ஒரு எம்எல்ஏவை இந்த கட்சி சார்பா நிறுத்த போறாங்க“., என்றனர்.

     “இருக்குமா இருக்கும்., அது நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது., இதுவரைக்கும் அந்த ஏரியா எம்.எல்.  யாரு ன்னு கூட தெரியாது“., என்றாள்.

         “அப்படி இல்ல அந்த புதுசா சொல்லுற கேன்டிடேட்., நான் சொல்லுற இந்தக் கட்சியுடைய கூட்டணி கட்சில  எம்பி பையனாம்.,  அவரும் உங்க ஏரியா எம்பி தானமே., இப்ப மத்தியில் இருக்குற இடத்துல பயங்கர செல்வாக்கான ஆளாமே“.,  என்று சொன்னவர்கள் அவரது பெயரையும் குறிப்பிட்டு சொன்னார்கள்.,

         இவளோசரி அதுக்கு என்ன.., அதுக்கு எதுக்கு என்கிட்ட கேட்கிற“., என்று சொன்னாள்.

         “இல்ல அவங்க குணநலன்கள் எப்படி., இந்த தடவை உங்க ஊர்ல இந்த கட்சி ஜெயிப்பதற்கான வாய்ப்பு இருக்கா“.,  என்று கேட்டனர்.

          அப்போது ஹேமாவோ., “எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது., ஆனால் ஊர்ல கேட்டால் தெரியும்., இவங்கள கேள்விப்பட்டு இருக்கேன்.,

       ஆனால் இவங்க எல்லாம் பரம்பரையாவே வசதியான பரம்பரை., பிசினஸ் நல்ல பேர் வச்சிருக்காங்க., சோ ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்., பணம் கொடுத்தா தான் ஜெயிக்கிறார்களே“., என்று சொன்னாள்.

       “பணம் குடுத்து ஜெயிக்கிறது எல்லாம் வேற.,  அதெல்லாம் அந்தக் காலம் இப்போது பணம் கொடுத்தாலும் நேர்மையானவர்களாகவும்.,  மக்களுக்கு செய்யறவங்களா  அவங்க இருந்தால் தான் ஜெயிக்க முடியும்“., என்று அவளிடம் கேட்ட நண்பன் பதில் சொன்னான்.


        “மே பி செய்வாங்களா இருக்கும்.,  எனக்கு தெரியல.,  நான் வேணா கேட்டு சொல்றேன்“., என்று சொல்லிக் கொண்டிருந்தவள்.,  “ஏன் அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே“., என்று கேட்டாள்.

         “இல்லை  சின்ன வயசு ஆளை எம்எல்ஏ எலக்சன் நிக்க வைக்கிறது.,  பெரிய விஷயம் இல்ல..,  அவருக்கு முப்பது வயசு கூட ஆகல., ஆனா அவர எம்எல்ஏ எலக்சன் நிற்க வைக்கப் போறதா பேசிக்கிறாங்க., சீட் கிடைச்சி நின்னுட்டாருனா.,  நம்ம ஊரிலேயே அவர் தான் சின்ன வயசு எம்எல்ஏ பாரு“.,  என்று சொல்லி அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

           அவளும் சிரித்துக் கொண்டாள்.,  “இருக்கட்டுமே இப்ப என்ன“., என்று கேட்டாள்.

          “இல்ல இந்த மாதிரி ஒருத்தங்க உதாரணமா வந்துட்டா., அவங்களை பார்த்து மத்தவங்களும் மாறுவாங்க இல்ல., அது மட்டும் இல்லை., எல்லாம் உங்க ஊரு சைடு வழியா நல்லது வருதுல.,  அவங்க பேப்பர்ல  போட்டது எல்லாம் வைத்து பார்க்கும் போது உங்க இனமா கூட இருக்கலாமே“., என்றான் அந்த நண்பன்.

         “இருந்தா இருந்துட்டு போகட்டும்.,  நமக்கு எதுக்கு தேவையில்லாத விஷயம்., அவங்க எல்லாம்  பெரிய ஆளுங்க கூட தான் பழக்கம் வச்சுக்குவாங்க.,  எனக்கு தெரிஞ்சு இவங்களெல்லாம் வெளியே அவங்கள விட வசதி குறைஞ்சவங்க ட்ட இறங்கி பழக மாட்டாங்க., அப்படிங்கற மாதிரி தான் சொல்லுவாங்க..,  ஆனா எலக்சன் அரசியல் அப்படி ன்னு எல்லாம் வரும் போது.,  மத்தவங்களுக்கு செய்யறது செய்வாங்களா இருக்கும்..,  ஆனால் மக்கள்ட்ட  எப்படி பழகுவாங்க.,  அந்த மாதிரி எதுவும் நமக்கு தெரியாது..,  செய்யலாம்., செய்யாமலும் இருக்கலாம்.,  அப்படி தான் யோசிக்கணும்“., என்று அவள் சொன்னதும்.,

           “அவர்களும் அதுதானே அதை சொல்லு“., என்று பேசிக் கொண்டிருந்தனர்., மற்றபடி அவர்கள் அரசியல் பேச இவளோ அவள் உணவு உண்ணுவதில் கவனத்தை செலுத்த தொடங்கினாள்.

           அதேநேரம் மீண்டும் அவளை அழைத்துப் பேசத் தொடங்கியது நண்பர்கள் குழு.,

          “ஆனா இந்த தடவை இந்த கட்சி ஆட்சிக்கு வராது., நம்ம ஊர் கதை  தெரிந்தது தானே., ஒரு தடவை இவங்க ஆட்சி பண்ணா.,  ஒரு தடவை அவங்க பண்ணுவாங்க., அந்த மாதிரி இந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை.., ஆனால் அவர் ஜெயிச்சா சின்ன வயசிலேயே ஜெயிச்சிட்டாரு அப்படிங்கற பேரோட வந்துருவாரு“., என்றனர்.,

   “ம்ம்ம்., இருக்கும்என்று சொல்லிக் கொண்டே தன் உணவை எடுத்துக் கொண்டிருந்தவளிடம்.,

         “ஆமா உனக்கு ஓட்டர் ஐடி எங்க இருக்கு.,  நீ எங்க ஓட்டு போடுவ“.,  என்று கேட்டனர்.

      “நான் எங்க ஊர்ல தான் போடுவேன்“., என்று சொன்னாள்.

           “இந்த தடவை இவருக்கு சீட் கிடைச்சா., இவருக்கே ஓட்டுப் போடுகிறாயா.,  கட்சி சார்பாக ஊர்ல ஒருத்தர் ஜெயித்து நல்லது செஞ்சா நல்லது தானே., நீயும் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்., எங்க ஊரு ஆளு அப்படின்னு.,  எப்படியும் ஓட்டு போடுவ இல்லை“., என்று கேட்டான்.

      இவ்வளவு சிரித்தபடிஆமா போடுறாங்க போடுறாங்க.., நமக்கெல்லாம் யார் நல்லது செய்கிறார்களோ., அதைத் தான் பார்த்துப் போடணும்., ஆனா நான் இதுவரைக்கும் இப்படி எல்லாம் கட்சி பார்த்து ஓட்டு போட்டது எல்லாம் இல்ல.., அங்க பேசிப்பாங்க இல்ல., இவங்க நல்லவங்க.,  அவங்க நல்லவங்க., அப்படி பேசுகிறது வச்சு நம்ம மனசுல அந்த நேரம் என்ன தோணுதோ.,  அதை போட்டுட்டு ஓடிவந்துறது“., என்று சொன்னாள்.

       “உனக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுத்தது வேஸ்ட்“., என்று நண்பர்கள் திட்டினர்.

    “அட போங்கடாஎன்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

         அப்போது தான் குழலிஅவளுக்கு அரசியலே பிடிக்காது., இவ அரசியல் பற்றி பேசினதே ஆச்சரியம் தான்.,  இவ
முதல் தடவையா ஸ்டேட் எலெக்ஷன் ஓட்டு போட போறா.., முன்னாடி நடந்த சென்ட்ரல் எலக்சன்ல ஓட்டு போட்டா., என்றாள்.

             அவன் நண்பனும் ” 23 முடிந்து 24 பிறக்கப்போவது.,  18 வயதிலிருந்து இடையில ஒரு எம்பி எலெக்சன் வந்திருக்கும்., 18 வயசுல ஒரு எலக்சன் ஓட்டு போட்டு இருந்திருக்கலாமே., இப்ப இன்னொரு எலக்சன் ஓட்டு போட்டு இருக்கலாமே., ஆனால் நீ இது தான் முதல் தடவை ன்னு சொல்லுற“., என்று கேட்டான்

              “அவளுக்கு பதினெட்டு வயசுக்கு முடியுற நேரம் ஒரு எலக்சன் வந்துச்சா.,  அப்ப ஓட்டு போடலை., இடையில் வந்த எம்பி எலெக்சன் ஓட்டு போட்டா.,  இப்போ இந்த வருஷம் தான் அவளுக்கு கரெக்டா முதல் தடவையா அரசியல் தெரிஞ்சு ஓட்டு போடுவா ன்னு நினைக்கிறேன்“., என்று சொன்னாள்.

          நண்பர்களோ., “நாங்க அரசியல்கட்சிகள் பற்றி தினமும் சொல்லுறோம்., நல்ல கத்துக்கோ., ஒழுங்கா இந்த தடவை நீ அவருக்கு தான் போடுற“.,என்று சொன்னார்கள்.

         “நான் போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பேன்“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      விதி வலியது நடப்பது நடந்தே தீரும்.. ஓட்டு போடக்கூடாது என்று இவள் மனதில் வைத்திருக்க., ஆனால் அவள் அவனுக்கு தான் ஓட்டு போடுவாள்., என்று விதி அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

     நீர் இல்லா மேகம்
     இல்லை.,
     நினைவுகளில் உறையா
     உறவுகளும் இல்லை.,
     ஏதோவொரு நிமிடம்
      நினைக்க மறந்தாலும்
      இதயம் துடிக்க
      மறந்து விடும்.,


    
  

       

Advertisement