Advertisement

தமக்கையின் கண்களுக்குள் பார்த்தவன், “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் நேரடியா பிருந்தாகிட்டயே கேட்டுகிறேன்.’’ என்றான். நீண்ட பெருமூச்சை வெளியேற்றிய மித்ரா, “அண்ணா அந்தப் பொண்ணு நம்மகிட்ட ஒரு டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றா. அதை தாண்டி நம்மாள அவ பக்கத்துல நெருங்க முடியாது. நடக்க ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்து அவளோட எல்லா நீட்சும் அவளே புல் பில் செஞ்சிகிட்டா. என்னை அசிஸ் பண்ண கூட அலவ் செய்யல. அவங்க அம்மாவை விட அண்ணாகிட்ட மட்டும் தான் ஓபன் அப் ஆகுறா. அதனால நீ கேக்குற கேள்விக்கு எல்லாம் அவ பதில் சொல்றது கஷ்டம்.’’ என்றாள்.

“ஓ…’’ என்றவன், “ஆனா அவ அண்ணன் உன்கிட்ட எப்படி எல்லா டீடைல்ஸ்சும் சொல்லுவான்..?” என்றான் கார்த்திக். ‘என்கிட்ட சொல்லாம…’ என்று மனதிற்குள் நினைத்தவள், “கேட்டு பாக்குறேன். சொன்னா உனக்கு இன்பர்மேசன் பாஸ் பண்றேன்.’’ என்றவள்எழுந்து நிற்க, “எங்க போற…?’’ என்றான் கார்த்திக்.

அவனைப் பார்த்து சிரித்தவள், “உன் வைப் பத்தி டீடைல்ஸ் கலெக்ட் செய்ய. எனக்கே இப்போ ரொம்ப கியூரியாசிட்டியா இருக்கு.’’ என்றவள், உணவகம் நோக்கி நடக்க, அவள் யாரிடம் தகவல் சேகரிக்க போகிறாள் என்பதை உணர்ந்த கார்த்திக்கின் உடல் இறுகியது.

மித்து சென்ற சில நிமிடங்களில், திரு உணவம் நோக்கி செல்வதை கண்டவன், ‘இது என்ன புதுப் பிரச்சனை’ என்பதை போல அவன் சென்ற திசையை வெறித்துக் கொண்டிருந்தான். ‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். ஹாஸ்பிடல் கேண்டீன் வர முடியுமா…?’ என்று மித்து புலனத்தில் செய்தி அனுப்பியிருக்க, அடுத்த இரண்டாம் நொடி திரு அவளின் முன் நின்றான்.

இருவருக்கும் இரு கோப்பை தேநீர் வரவழைத்தவள், முதலில் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்துவிட்டு, அதன் பின் பிருந்தாவை பார்க்க, கவர்னர் ஏன் வருகிறார் என்ற கேள்வியை மிக சாதரணமாக கேட்பதை போல கேட்டு வைத்தாள்.

இந்த கேள்வியின் பிண்ணனியில் யார் இருப்பார் என்பதை உணர்ந்தாலும், கேட்பது மித்ரா என்பதால், திரு முகம் மாறமல் ஆளுநர் வரும் காரணத்தை ஆதி முதல் அந்தம் வரை அவளிடம் ஒப்புவித்தான்.

அவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும், ஆச்சர்யமாய் விரிந்து கொண்டே சென்ற பெரிய விழிகளை பார்த்து கொண்டே மொத்த காரண காரியங்களையும் விளக்கி முடித்தவன், தான் அருந்திய தேநீருக்கு மட்டும் பணத்தை எடுத்து வைத்து விட்டு, அழகாய் ஒரு மென்னகையை அவளை நோக்கி செலுத்தியவன், “நீங்க அத்தான்னு கூப்பிடுறது எனக்கு கொஞ்சம் அன் கம்பர்டபிள்ளா இருக்கு. ப்ளீஸ் என்னை நீங்க திருன்னே கூப்பிடலாம்.’’ என்றுவிட்டு, அவளின் வருகைக்காக காத்திருக்காமல் அங்கிருந்து வெளியேறினான்.

அவன் உதிர்த்து சென்ற வார்த்தைகளை கேட்க மித்ரா, அப்படியே சிலை போல உறைந்து போனாள். பக்கத்து மேஜையில் இருந்து உருண்டு விழுந்த கண்ணாடி கோப்பை மீண்டும் அவளை நடப்பிற்கு திருப்பியது.

‘அண்ணனும், தங்கச்சியும் சரியான ஈகோ பிடிச்ச மண்டைங்க.’ என மனதிற்குள் அர்ச்சித்து முடித்தவள், தன் தமையனை காண விரைந்தாள். செல்லும் போது இயல்பாக இருந்தவள், தற்சமயம் இறுக்கமாய் இருப்பதை உணர்ந்து, “என்ன மித்து..’’ என்றான்.

அண்ணனை விழி அகலாது பார்த்த மித்து, “அஞ்சி வருசத்துக்கு முன்னாடி நீட்ல அச்சீவ் செய்ய முடியாம அனிதான்னு ஒரு பொண்ணு சூசைட் செஞ்சி இறந்து போனாளே… அப்போ அதே பொண்ணு பேரை வச்சி ஒரு ப்ளஸ் டூ ஸ்டூடன்ட் ஏர் பொல்யூசன் மெசர் செய்ய ஒரு மினி சாட்டிலைட் லான்ச் செஞ்சாளே… அந்த கவர்மென்ட் ஸ்கூல் ப்ளஸ் டூ பொண்ணு வேற யாரும் இல்ல… அது பிருந்தா தான்.’’ என்றதும் கார்த்திக்கின் கண்கள் ஆச்சர்யத்தில் பெரிதாய் விரிந்தது.

அந்த நேரம் தான் கார்த்திக் இந்திய கிரிக்கெட்டில் நுழைந்திருந்தான். அவர்களின் வீடே அந்த கொண்டாட்டத்தில் திளைத்திருந்தது. அந்த நேரம் திரு தன் தங்கை அறிவியலில்  இளம் விஞ்ஞானி பரிசு பெறப் போவதாக இனிப்பு பெட்டிகளுடன் வீட்டிற்கு வந்ததும், மகனை நெஞ்சில் தூக்கி கொண்டாடிக் கொண்டிருந்த பால்கியும், மதுராவும் அதை பெரிதாக கவனத்தில் கொள்ளாததும் புகை படிமமாய் நினைவிற்கு வந்தது.

மேலே சொல் என்பதை போல கார்த்திக் பார்க்க, “ப்ளஸ் டூ முடிக்கும் போது ஜே.ஈ.ஈ எக்ஸாம்ல நேசனல் லெவல் தெர்ட் ரேங்க் ஹோல்டர். மத்த பொண்ணுங்க மாதிரி ஐ.ஐ.டி சூஸ் பண்ணாம, ஐ.எஸ்.டி.டி ( இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்) சூஸ் செஞ்சி அதுலயும் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்ல எம்.டெக் சேர்த்து ஆபர் பண்ற பைவ் இயர் கோர்ஸ்ல சேர்ந்து அதையும் சக்சஸ் புல்லா கம்ப்ளீட் செஞ்சி இருக்காங்க. இவங்க படிக்கும் போது செஞ்ச  ப்ராஜக்ட் இன்டர் நேசனல் லெவல் ஸ்பேஸ் சயின்ஸ் ஜர்னல்ல பப்ளிஷ் ஆகி, அதை பார்த்து இன்ஸ்பையர் ஆன நாசா இவங்களை கெஸ்ட் ஸ்பீக்கரா அவங்க சொந்த செலவுல அமெரிக்காவுக்கு கூப்பிட்டு இவங்களை கௌரவப்படுத்தி இருக்காங்க.’’ என்றதும் கார்த்திக் இமைக்க மறந்து தங்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆனா… இப்போ பிருந்தாவை பார்க்க கவர்னர் ஏன் வறார்..?’’ என்றான். “ஐ.எஸ்டி.டில படிக்கிறவங்களுக்கு மேக்சிமம் இஸ்ரோல ஜாப் கிடைச்சிரும். பிருந்தா அங்க டாப்பர். இந்தியா 2040 மிசன் டூ மூன்னு ஒரு ப்ராஜக்ட் ஸ்டார்ட் செஞ்சி இருக்காங்களாம். அந்த ப்ராஜக்ட்டோட அசிஸ்டன்ட் டைரக்டரா பிருந்தா செலக்ட் ஆகி இருக்காங்க. அதோட இவங்களை தான் ரொம்ப யங் பர்சன் அப்படிங்கிறதால மூனுக்கு ட்ராவல் செய்யவும் இவங்களை சூஸ் செய்ய வாய்ப்பு இருக்குன்னு திரு சொன்னார்.’’ என்றவள் தன் கைப்பையில் இருந்த தண்ணீரை எடுத்து தாகம் தீர்த்து கொண்டாள்.

“இவங்க ப்ரோடோகால் படி முந்தா நேத்து டூட்டில ஜாயின் செஞ்சி இருக்கனுமாம். செய்ய முடியாததால திரு அபிசியலா இஸ்ரோவுக்கு மெயில் செஞ்சி இருக்கார். நேத்து தான் பிரதமர் தலைமையில ப்ராஜக்ட் ஸ்டார்ட் ஆனதாம். இவங்களை அவருக்கு நல்லா தெரிஞ்சி இருக்கும் போல. ஏன் அசிஸ்டன்ட் டைரக்டர் இல்லைன்னு கேட்டதும், டீம் டைரக்டர் இவங்களுக்கு நடந்த ஆக்சிடன்ட் பத்தி சொல்லி இருப்பாங்க போல. உடனே நம்ம ஆளுனரை கூப்பிட்டு நேர்ல போய் விசாரிச்சிட்டு வர சொல்லி அனுப்பி வச்சி இருக்கார். அதோட நேத்து மதியம் அவரே பிருந்தாவை போன்ல கூப்பிட்டு நலம் விசாரிச்சு இருக்கார்.’’ என்றாள்.

கார்த்திக் முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாது தங்கை சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவன், கருப்பு நிற உடை அணிந்த காவலாளி ஒருவன் வந்து, “சலோ… சல்..’’ என்று அவர்களை அங்கிருந்து அகற்ற முயல, எழுந்து நின்றவன், “ஐயம் பிருந்தா ஹஸ்பன்ட்…’’ எனவும் அந்த காவலாளி என்ன சொல்வது எனப் புரியாமல் நிற்கும் போதே, கார்த்திக் விறு விறுவென பிருந்தாவின் அறை நோக்கி நடந்திருந்தான்.

பிருந்தாவின் அறை வாயிலில் பாதுகாப்பு படை நின்றிருக்க, தடுக்க வந்தவர்களிடம் எல்லாம், “ஐயம் ஹெர் ஹஸ்பன்ட்” என்றுவிட்டு, அறைக்குள் நுழைந்திருந்தான். அறைக்கு வெளியே மித்ரா தடுக்கப்பட்டிருந்தாள்.

ஆளுநர் வரும் நேரம் சரியாக உள்ளே நுழைந்ததால், திருவால் கார்த்திக்கை வெளியேற்ற முடியவில்லை. அறைக்குள் நுழைந்தவர், பிருந்தாவிடம் நலம் விசாரித்து முடித்ததும், அவரிடம் தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டான் கார்த்திக்.

அவனை அடையாளம் கண்டு கொண்டவர், “மிஸ்டர் கார்த்திக்… நீங்க இங்க என்ன செய்றீங்க…?’’ என ஆங்கிலத்தில் வினவ, “இவள் என் மனைவி. எங்களுடையது திட்டம் இல்லாத அவசரக் கல்யாணம்.’’ என வசீகர புன்னகையோடு அறிவித்தான்.

திரு ஆத்திரத்தை அடக்க முடியாது பற்களை நறநறக்க, பிருந்தா இது என்ன புதுக்கதை என்பதை போல கார்த்திக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் அவனிடம் கைகுலுக்கிய ஆளுநர், ‘திருமண வாழ்த்துக்களை’ தெரிவிக்க, தலை ஆட்டி அதை ஏற்றுக் கொண்டவன், விழி விரித்து அதிர்ந்து போய் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த பிருந்தாவை நோக்கி இடது கண்ணை சிமிட்டி காட்டினான்.

இனி நடப்பவைக்கு நான் பொறுப்பல்ல என காலம் போர்வைக்குள் மறைந்து கொள்ள, மொட்டவிழப் போகும் காதல் மெல்ல மெல்ல தன் கூட்டுப் புழு பருவம் உதிர்க்க காத்திருந்தது.

பால்வீதி வளரும்.

Advertisement