Advertisement

                     “வெளியே போடா..” என்று இறுதியில் துருவன் கத்த, அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் அந்த அறையின் வாசலில் சென்று நின்றான் அறிவன். அவர்களின் இந்த உரையாடல்களில் பெரிதும் பயந்து நின்றது ராகவி தான். அவளுக்கு துருவன் கேட்பதும் புரியவில்லை. அவன் கோபமும் எதற்காக என்று புலப்படவில்லை.

                        துருவனை பற்றிய செய்திகளில் ஏற்கனவே துவண்டு போயிருந்தவள் அவனின் இந்த உக்கிரத்தை தாங்க முடியாமல் தவித்து நின்றிருந்தாள். ஆனால், அதெல்லாம் எதிரில் இருந்தவனுக்கு தெரியவே இல்லை. அவன் ஒரே குறியாகநேத்து நைட் என்ன கொடுத்த எனக்கு…” என்று அவளை நெருங்கி நின்று கர்ஜிக்க 

                          “சார் நீங்கதானே காஃபி கேட்டிங்க.. நானும் காஃபிதா..” என்று கூறும் முன்னமே அவளை ஓங்கி அறைந்து இருந்தான் துருவன். அவன் அடித்த ஒரே அடியில் நிற்க முடியாமல் தள்ளாடி அவனின் கி போர்ட் மீது விழுந்து கீழே சரிந்திருந்தாள் ராகவி.

                          அவன் அடித்துவிட்டதில் அவள் உடல் நடுக்கம் கொள்ள, கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்து விட்டது. பயந்த குழந்தையைப் போல் பேந்த விழித்தவள் அவன் முகம் காண, கைகள் இன்னும் கன்னத்தில் தான். அறிவன் சத்தம் கேட்டு உள்ளே ஓடி வந்தவன் கண்டது கீழே விழுந்து கிடந்த ராகவியைத் தான்.

                        “துருவா.. என்னடா பண்ணிட்டு இருக்க நீ..” என்று அவனை அதட்டியவன்எழுந்துக்கோங்க ராகவி..” என்று கைகொடுத்து அவளை எழுப்பி நிறுத்தினான். எழுந்து நின்றாலும் கூட, தலை சுற்றுவது போலவே இருக்க, அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றாள் அவள்.

                       கண்கள் துருவனையே பார்க்க, துருவன் இவளுக்கு மறுபுறம் திரும்பி நின்றிருந்தான். அவன் முதுகு மட்டுமே காட்சியானது அவளுக்கு. அருகில் நின்றிருந்த அறிவனை நிமிர்ந்து பார்த்தவள்எனக்கு இவர் என்ன கேட்கிறார் ன்னு புரியல சார். நான் வெறும் காஃபி மட்டும் மட்டும் தான் கொடுத்தேன். சத்தியமா எனக்கு வேற எதுவும் தெரியாது..” என்று மருண்ட விழிகளுடன் அவள் கூற 

                     துருவன் அவள் பக்கம் திரும்பியவன்இதை நம்ப சொல்றியா என்னை..” என்று மீண்டும் முறைதான் அவளை

                   “நீங்க நம்பாம போனாலும் அதுதான் நிஜம் சார். நான் காஃபி மட்டும் தான் கொடுத்தேன்…” என்று அழுத்தமாக அவள் உரைக்க 

                    இப்போது மீண்டும் கையை ஓங்கினான் அவன். அவன் கையை உயர்த்தியபோதே, கன்னத்தில் இருந்த கையை இன்னும் அழுத்திக் கொண்டு சுவரோடு ஒண்டிக் கொண்டாள். இதற்கும் கண்களை வேறு இறுக்கமாக மூடிக் கொள்ள, அதற்குமேல் அவளை அடிக்க முடியாமல் போனது துருவனுக்கு.

                          அவன் கோபத்தோடு அவளுக்கு அருகில் சுவற்றில் தன் கையை முஷ்டியாக்கி ஒரு குத்துவிட, அந்த சப்தத்தில் கண்களை திறந்து பார்த்தாள் அவள். அவனின் ரௌத்திர முகம் பயம் கொடுத்தாலும், தன்னை அவன் சந்தேகிப்பதை தாங்கி கொள்ளவே முடியவில்லை அவளால்.

                            கண்களை மெல்ல துடைத்துக் கொண்டவள்எதுக்காக என்னை அடிச்சீங்க சார். உங்ககிட்ட சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன் நான். வாங்குற சம்பளத்துக்கு நீங்க சொல்ற வேலையை செய்றவ தான். அதுக்காக அடிப்பீங்களா…. என்னை அடிக்கிற உரிமையை யார் கொடுத்தா உங்களுக்கு..??” என்றவளுக்கு கண்களை மீறி கண்ணீர் வழிய, அதோடு அவளின் கண் மையும் சேர்ந்து  கரைந்தது.

                           துருவன் முறைப்புடனே நிற்க, “எந்த ஆதாரத்தை வச்சு என்மேல பழி போடறீங்க சார். என்ன ஆதாரம் இருக்கு உங்ககிட்ட.. எப்படி நான் தப்பு செஞ்சேன் ன்ற முடிவுக்கு வந்திங்க.” என்று என்று அவள் வாதாட 

                          அறிவன்கேட்கிறாங்க இல்ல.. பதில் சொல்லுடா..” என்று அதட்டினான் துருவனை.

                          “கடைசியா நான் குடிச்சது நீ கொடுத்த காஃபியை மட்டும்தான். அதுக்குப்பிறகு தான் எல்லாமே நடந்து இருக்கு. நிச்சயமா இதுல உன் பங்கும் இருக்கு..” என்று அவன் கூற, அவன் குரலில் இருந்த நம்பிக்கையின்மையை சகிக்கவே முடியவில்லை அவளால்.

                         அவள் விரும்பிய அவளின் ஆதர்ஷ நாயகன். எட்டாத உயரம் என்று அவளுக்கு அவளே எடுத்து சொல்லி கொண்டு எட்டி நின்று அவனை ரசிப்பவள் அவள். இன்று மனம் விரும்பியவனே அவளை குற்றம் சாட்ட, கொதிநீராய் கொதித்தது உள்ளம்.

                         தன் அன்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த நம்பிக்கையின்மையோ என்றோ எண்ணியவளுக்கு சிரிப்பு வர, மொத்தமாக ஓய்ந்து போனாள் அவள். பணக்கார வர்க்கம் அல்லவாபணத்தை வைத்து தான் மதிப்பீடும் இருக்கும் போல.. ஏழை தானே நீ.. அதனால் தான் எளிதாக கைநீட்டிவிட்டான் என்று மனசாட்சி குறை படிக்க, அதற்குமேல் அங்கே நிற்கவே பிடிக்கவில்லை அவளுக்கு.

                        மீண்டும் ஒருமுறைநான் எந்த தப்பும் செய்யல சார். இவர் என்கிட்ட காஃபி கேட்டார். நான் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தேன். பொருள் எல்லாம்  அங்கே இருந்தது தான். நான் வேறெதையும் கொடுக்கல. இதுக்குமேல என்ன சொல்றது தெரியல எனக்குநீங்க நம்பினாலும், நம்பாம போனாலும் எனக்கு தெரிஞ்சுது இவ்ளோதான்..” என்று தீர்மானமாக அவள் உரைக்க 

              “வழக்கமா ஏழு மணிக்கு கிளம்புற நீ, நேத்து மட்டும் நைட் ஒன்பது மணி வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த இங்கேநேத்து உங்களைத் தேடி வந்திருந்த டைரக்டர்ஸ் நாலுபேர் ரிஸப்ஷன்ல தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்களை அப்படியே விட்டு போக முடியாம தான், நானும் வெய்ட் பண்ணேன்.”

                  “நீங்க அவங்களை கூப்பிடவும், நான் கிளம்ப தான் நினைச்சேன். அப்பா கால் பண்ணி இருந்தாங்க, அவர் வேலையை முடிச்சுட்டு கிளம்பிட்டதாகவும், நானே வந்து அழைச்சுட்டு போறேன் ன்னும் சொன்னாங்க. அதனால தான் வெய்ட் பண்ணேன். உங்களுக்கு தேவையா இருந்தா, அப்பாக்கு கூப்பிட்டு கேட்டுக்கோங்க…” என்றாள் நிமிர்வாக 

                    ஆனால், துருவனுக்கு இன்னும் வெளிச்சம் கிடைக்கவில்லையே. தனது நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்தவன் ஒரு நிமிடத்திற்கு பிறகு, எதையோ யோசித்தவனாக அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

                     அவனது ஓய்வறைக்கு சென்றவன் அங்கிருந்த அவனது மடிக்கணினியை எடுத்து அதில் நேற்றைய CCTV பதிவுகளை ஓடவிட, ரிசப்ஷனுக்கு அருகில் இருந்த அறையின் பதிவுகளை மட்டும் சற்றே பெரிதாக்கி ஓடவிட்டான். நேற்றைய இரவு நேரத்தை தோராயமாக கணக்கிட்டு அவன் ஓடவிட, ராகவி அந்த அறைக்குள் நுழைந்தது முதல் அனைத்துமே பதிவாகி இருந்தது.

                      அவனுக்கான கப்பை எடுத்து வைத்தவள் அதில் தயாராக இருந்த பால் சர்க்கரை, காஃபி டிகாஷன் என்று அனைத்தையும் கலந்து ஸ்பூன் வைத்து கலக்க, அதில் லேசாக அவள் மீதும் தெறித்தது போல. அருகில் இருந்த துணியில் கைகளை துடைத்துக் கொண்டவள் காஃபியை அங்கேயே வைத்துவிட்டு அந்த அறையில் இருந்த கழிவறைக்குள் நுழைந்து இருந்தாள்.

                      துருவனின் கண்கள் இமைக்காமல் அந்த பதிவை அலசிக் கொண்டிருக்க, ராகவி கழிவறைக்குள் நுழைந்த மறுநிமிடம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே,அந்த அறைக்குள் நுழைந்தான் பழனி. அந்த வளாகத்தின் காவலாளி. அவன் உடல்மொழி சற்றே வித்யாசமாக இருக்க, சற்று கூர்மையாக அவனை கவனித்தான் துருவன்.

                     வந்தவன் தன் சட்டைப்பையில் இருந்த மடித்த காகித பொட்டலத்தில் இருந்து எதையோ, அந்த காஃபி கப்பில் கொட்டி இருந்தான். அருகில் ராகவி வைத்திருந்த ஸ்பூனால் ஒரு கலக்கு கலக்கி முன்பு போலவே வைத்துவிட்டு அவன் வெளியேற, அவன் வெளியேறியதும் தான் கழிவறையில் இருந்து வெளியே வந்தாள் ராகவி.

                      அந்த காஃபியை எடுத்துக் கொண்டு அவள் அந்த அறையை விட்டு வெளியேற, தன் மொத்தக் கோபத்தையும் காட்டி, மடிக்கணினியை தட்டென்று மூடினான் துருவன். அறையை விட்டும் வெளியேற, அறிவன் தந்தைக்கு அழைத்துவிட்டான்.

                       துருவன் பழனியை அடித்து துவைத்து காய வைக்க, பழனி அடுத்தவனை கைகாட்டினான். அறிவன்  அவனிடமிருந்து போராடி ஒரு வழியாக பழனியை மீட்டவன் அங்கே இருந்த ஒரு அறையில் அவனை அடைத்து விட்டு, துருவனின் மேனேஜரை அழைத்து அவனை கண்காணிக்குமாறு கூறி வெளியே வந்தான்.

                     அவனும் நேற்று வரை விடுப்பில் சென்று இருந்தவன் காலையில் தான் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்திருந்தான். தன் எஜமானனின் பெயரைக் கெடுத்தவன் மேல் இருந்த கடுப்பில், தன் பங்கிற்கு நாலு போட்டவன் அடுத்த உத்தரவுக்காக காத்திருந்தான்.

                      இங்கே துருவன் அதே கோப முகத்தோடு தன் அறைக்கு வர, இன்னமும் அங்கேயே நின்றிருந்தாள் ராகவி. அவளை கண்ட பிறகும் எதுவும் பேசாமல் அவன் அமைதியாக இருக்கையில் அமர்ந்துவிட, அறிவன் தான் ஆம் சாரி ராகவி. இதுல உங்களோட தப்பு எதுவும் இல்ல..” என்று கூற 

                     “இட்ஸ் ஓகே சார்…” என்றவள்நான் கிளம்பட்டுமா..” என்றாள். ஜீவனில்லாமல் ஓய்ந்தே ஒலித்தது அவள் குரல். துளிகூட மகிழ்வு இல்லை.

                     “உங்கமேல தப்பு இல்ல ன்னு சொல்றேன்.. அப்பவும் இப்படி சோகமாகவே இருக்கணுமா…. விட்டுடுங்களேன்..” என்று அவன் லேசான கெஞ்சல் குரலில் கூற 

                     “என்மேல தப்பு இல்ல ன்னு எனக்கே தெரியும் சார். அதை நீங்க உறுதி பண்ணதுல நிச்சயம் சந்தோஷம் தான். ரொம்ப நன்றி சார்.” என்று அறிவனை கையெடுத்துக் கும்பிட்டவள்நான் நாளையில் இருந்து இங்கே வேலைக்கு வரமாட்டேன் சார். நான் கிளம்புறேன்…” என்று கூறிவிட்டு வேகமாக நடந்து விட்டாள்.

                       அறிவன் துருவனை முறைக்க, “போறா விடுடாயூஸ்லெஸ்..” என்று அப்போதும் திட்டினான் அவன்.

 

                       

                   

                      

                            

Advertisement