Advertisement

                      தீக்ஷி சற்று தெளிய, ஸ்ரீகாஎன்ன அமுல்பேபி.. நார்மல் ஆகிட்டியா..” என்று கேட்க 

                       “அண்ணா.. உனக்கு வாய் அதிகம் ன்னு சொல்றது தப்பே இல்ல. எவ்ளோ அசால்ட்டா சொல்ற நீ. கொஞ்சம் கூட பயமே இல்லையடி உனக்கு.” என்று விழிவிரித்தாள் தீக்ஷி.

                        “வாவ்.. இந்த முட்டைக்கண்ணு இப்படி பெருசா விரியும்போது எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா.. நான் மட்டும் பையனா இருந்தேன்.. அப்படியே கிஸ் பண்ணிட்டு தான் மறுவேலை.” என்று கண்சிமிட்டினாள் ஸ்ரீகா..

                       “அடிப்பாவி.. என்னையும் விட்டு வைக்க மாட்டியா..” என்று தீக்ஷி அலற, அதில் சத்தமாக சிரித்தாள் ஸ்ரீகா. அவளின் சிரிப்பில் தீக்ஷியும் கலந்து கொள்ள, மீண்டும் பழையபடி இவர்களின் கூட்டணி தொடர்ந்தது. சர்வா, ஸ்ரீகாவிடம் விசாரித்தபோது, ஜெய் தன்னிடம் பேசியது மொத்தத்தையும் அவனிடம் கூறி அவனை சமாதானப்படுத்தி இருந்தாள்.

                       இவர்களின் நட்பு அழகாக தொடர, ஜெய் ,அபிநந்தனின் கல்லூரி படிப்பு முடியும் தருவாயை நெருங்கி கொண்டிருந்தது. அவர்கள் இறுதித் தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்த சமயம் அது.

                        அன்று காதலர் தினமாக இருக்க, கல்லூரி வழக்கத்தை விட சற்று உற்சாகமாகவே காணப்பட்டது. ஸ்ரீகா தான் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்று அவளுக்கே புரியாமல் சுற்றிக் கொண்டிருந்த நேரம் அது. காதலர் தினம் என்றதுமே, “ஜாலியா இருக்கும்.. நிறைய ப்ரபோசல் சீன்ஸ் இருக்கும்..” என்று ஒரு ஆர்வத்தில் தான் அவள் கல்லூரி வந்தது.

                     கல்லூரியில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு தடை இருந்தாலும், அதையும் மீறி ஆங்காங்கே கிரீட்டிங் கார்டுகளும், பூக்களும் கண்ணில்பட்டுக் கொண்டு தான் இருந்தது. ஸ்ரீகா தீக்ஷியை உடன் வைத்துக் கொண்டு கல்லூரியை சுற்றி வர, அவர்கள் நூலகத்தை நெருங்கும்போது தான் கவனித்தாள் அந்தப் பெண்ணை.

                   கால்களில் லேசான தடுமாற்றம்.. கையில் ஒரு கிரீட்டிங் கார்டு அதனுள் ஒரு ஒற்றை ரோஜா. பார்த்ததுமே தெரிந்தது அவள் இவர்களை விட பெரியவள் என்று. ஸ்ரீகா அவளின் தடுமாற்றத்தை ரசித்துக் கொண்டு விளையாட்டு தனமான மனநிலையில் தான் வேடிக்கைப் பார்த்திருந்தாள்.

                   ஆனால், அந்தப்பெண்ணின் பார்வை சற்று தூரமாக இருந்த ஜெய்யின் மீது விழ, அப்போதுதான் லேசாக திணறினாள் பெண். அவள் ஜெய்யை நெருங்க இங்கே இவள் நடுக்கம் கொண்டாள். ஜெய் அவன் நண்பர்களுடன் அமர்ந்து இருக்க, இந்தப்பெண் அவனை நெருங்கிய நிமிடம் அவன் நண்பர்கள் குழு களைந்து சென்றிருந்தது.

                    ஸ்ரீகாஇதென்ன உணர்வு.” என்று குழம்பி நிற்க, ஏனோ மனம் அந்த பெண்ணின் காதலை ஜெய் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேண்டுதல் வைத்தது. அவளுக்கு ஜெய்யை பிடிக்குமா..?? என்ற கேள்விக்கே இதுவரை பதில் தெரியாத போது அவள் எங்கே அவனை காதலிப்பது. அப்படி காதல் இல்லையென்றால் அவனுக்கு யார் காதல் சொன்னால் உனக்கென்ன?? என்று மனம் அவளை அதட்ட, அவளிடம் பதிலே இல்லை.

                      இவள் தன் போராட்டத்தில் தீவிரமாக இருந்த நேரம், அங்கே அந்தப்பெண் ஜெய்யின் முன் நின்றிருந்தாள். அவள் அந்தப்பூவை நீட்டி அவனிடம் எதுவோ பேச முற்பட, அவள் பேசுவதை கையை உயர்த்தி நிறுத்தியவன் தன் கைகளை கட்டிக் கொண்டான்.

                     முகமும் இறுக்கமாகவே இருக்க, அந்தப்பெண்ணிடம் அவன் பேசிய ஐந்து நிமிடங்களின் முடிவில் கண்களை துடைத்துக் கொண்டு அந்தப்பெண் செல்வது மட்டுமே தெரிந்தது ஸ்ரீகாவுக்கு. கோபமாக எதுவோ பேசிவிட்டான் என்பது மட்டும் புரிய, அவள் விலகிச் சென்றதே போதுமாக இருந்தது இவளுக்கு.

                     ஒரு நெடுமூச்சை விடுவித்து அவள் இயல்பாக, அவளையே கையை கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்திருந்தாள் தீக்ஷி. தீக்ஷியின் பார்வையை உணர்ந்தாலும், ஏதும் அறியாதவள் போல் அவளை கடந்து விட ஸ்ரீகா முயற்சிக்க, “நீ ஜெய் அண்ணாவை லவ் பண்றியா ஸ்ரீ..” என்று அழுத்தமாக கேட்டு நின்றாள் தீக்ஷி.

                          ஸ்ரீகாஹேய் லூசா நீ.. நம்ம சீனியர் என்ன ரியாக்ஷன் கொடுக்கிறார் ன்னு பார்த்துட்டு இருந்தேன். அவ்ளோதான். அதற்கு நான் சீனியரை லவ் பண்றேனா..” என்று சமாளித்தாள் அவள்.

                         தீக்ஷி அவள் பேச்சை நம்பாதவளாக தலையசைத்து மறுக்க, “நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல தீக்ஷி.” என்றாள் ஸ்ரீகா. அவள் குரல் எப்போதும் போல இல்லாமல் சிறியதாக ஒரு தயக்கத்தை சுமந்து இருந்தது

                         “நான் என்ன நினைக்கிறேன் ஸ்ரீகா..” என்று தீக்ஷி அவளிடமே கேட்க, ஸ்ரீகா இப்போது விழித்தாள்

                       “என்னைப் பொறுத்த வரைக்கும் என் ஜெய் அண்ணா ரொம்ப நல்லவன். அவனுக்கு ஸ்ரீகா மாதிரி ஒரு வாழ்க்கைத்துணை கிடைத்தால் அவன் நல்லா இருப்பான். சந்தோஷமா இருப்பான் ஸ்ரீ. நான் பார்த்த வரைக்கும் உன் கண்கள்ல எனக்கு காதல் தான் தெரியுது. என் ஸ்ரீகாவுக்கு எதையும் தைரியமா செஞ்சுதான் பழக்கம். “

                       “உனக்கு அண்ணாவை பிடிச்சு இருந்தா, நேரடியா அவன்கிட்ட சொல்லிடு. இப்படி கஷ்டப்படாதடாஇவளை அவன் திட்டி அனுப்பிட்டான் ஓகே. ஆனா, இன்னொருத்தி ப்ரபோஸ் பண்ணா, அப்போ என்ன செய்வ..”என்று தீக்ஷி விளக்க, ஸ்ரீகாவின் பார்வையில் மெல்லிய பதட்டம்.

                       “நீ சைட் அடிக்கிறேன் ன்னு சொல்லும்போதே எனக்கு கொஞ்சமா டவுட் தான். இப்போ முழுசா க்ளீயர் ஆகிடுச்சு. போ.. போய் சொல்லிடு.” என்று அவள் தைரியம் கொடுக்க, “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாதே..” என்று தவித்துப் போனாள் ஸ்ரீகா.

                        அவளுக்கு ஜெய் என்ன நினைப்பானோ, என்ன மறுமொழி சொல்வானோ என்று ஒரு அச்சம் வந்தது இயல்பாக. அவன் மறுத்தால் பொறுத்துக் கொள்ள முடியும் அவளால். ஆனால், அதைத் தவிர்த்து தேவையற்ற எதையும் பேசிவிட்டால், தாங்கி கொள்ளவே முடியாது. அதற்கான தைரியம் இல்லாமல் அவனை சந்திக்கும் நொடிகளை தள்ளிப் போட்டது பெண்.

                        தீக்ஷியிடமும்எனக்கு நம்பிக்கை இருக்கு தீக்ஷி. பார்க்கலாம். இப்போதைக்கு என் காதல் என்னோடவே இருக்கட்டும். எனக்கு தோணும்போது நான் சொல்றேன்.” என்றதோடு முடித்துக் கொண்டாள்.

அன்றைய இரவின் தனிமையில் யோசித்தவளுக்கு புரிந்ததெல்லாம் ஒன்றுதான். ஜெய்யின் மீதான அவள் அன்பு இன்று நேற்று என்று அல்ல. அவனைப் பார்த்த கணமே ஏதோ ஒரு விதத்தில் தன்னை ஈர்த்துக் கொண்டான் திருடன் என்று புரிந்தது புத்திக்கு.

                        அப்படியொன்றும் அவன் சிரித்து சீண்டி அவளை மயக்கிவிட்டான் என்றும் கூறிட முடியாது. கண்ணியமானவன் தான் இன்று வரையிலும். தீக்ஷியின் விஷயத்தில் சமாதானமாகி விட்ட பின்பும் கூட நிறைய முறை முட்டிக் கொள்ளும் இருவருக்குள்ளும்

                         தீக்ஷியை சந்திக்க வரும் நேரங்களில் அளவான அவன் புன்னகையுடன் ஓரிரு வார்த்தைகள். சின்ன சின்ன கிண்டல்கள், சிரிப்புகள் என்று அதற்குமேல் எல்லை மீறியதே இல்லை ஜெயராம். அவனின் எல்லைக்குள் தான் இருந்திருக்கிறான் எப்போதும்.

                        ஆனால், இது எப்படி சாத்தியம் என்று ஸ்ரீகா தனக்குள் புலம்பித் தவிக்க, அவனின் புன்னகை முகம் தான் கண்ணில் தோன்றியது. அவனைக் குறித்து சிந்திக்க சிந்திக்க அவன் மீது கொண்ட காதல் அதிகமாவது போல் ஒரு பிரம்மை தோன்ற, அவன் நினைவுகளை விரட்டி அடித்தவள் கண்களை மூடி உறங்க முற்பட, வேண்டாமென சொல்ல சொல்லத்தான், வேண்டும் என்று அவளை விரட்டியது அவள் காதல்.

                         இரவு வெகு நேரத்திற்கு பிறகு, எப்படியோ ஒருவழியாக அவள் உறங்கிப் போக, காலையில் எப்போதும் போல் கல்லூரிக்கு கிளம்பி இருந்தாள். அவன் கண்ணிலேயே படக்கூடாது என்ற எண்ணத்துடன் அவள் கல்லுரிக்கு வர, அவள் வகுப்பின் முன்னே அவளுக்காக காத்திருந்தான் ஜெய்.

                         “என்ன.. இங்கே ஏன் நிற்கிறான்….இந்த தீக்ஷி  எதுவும் உளறிட்டாளோ.” என்று ஸ்ரீகா பதட்டத்துடன் அவனை நெருங்க, அவள் நெருங்கிய நிமிடம் 

                        “ஹேய் என்ன ஸ்ரீ.. ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க.. என்னாச்சு..” என்று அவனும் பதட்டமாகவே விசாரிக்க, மெல்ல கையை உயர்த்தி நெற்றியை துடைத்துக் கொண்டாள் பெண்.

                         “ஒண்ணுமில்ல சீனியர்.. நீங்க ஏன் இங்கே நிற்கிறீங்க..” என்று இயல்பாக அவள் கேட்க

                       “பெருசா ஒரு விஷயமும் இல்ல. தீக்ஷியை கூட்டிட்டு வந்தேன். உன்னைப் பார்த்தும் ஒரு வாரம் ஆகிடுச்சே.. அதான் பார்த்துட்டுப் போகலாம் ன்னு வெய்ட் பண்ணேன்..” என்றான் புன்னகையுடன்.

                        “பாவி.. பாவி.. ஏண்டா இப்படி சிரிச்சு வைக்கிற..” என்று பதறியது அவள் உள்ளம்ஜெய்ராம் அவளின் அமைதியில்ஏய் வாலு.. என்ன.. காலையிலேயே இப்படி தூங்கி வழியுற. என்னம்மா..” என்று ஆதரவாக கேட்க, ஏதோ சிறுபிள்ளையிடம் பேசுவது போல் இருந்தது அவன் பாவனை.

                        அவனிடம் மறுப்பாக தலையசைத்தவள்ஒண்ணுமில்ல சீனியர். கொஞ்சம் தலைவலி. அவ்ளோதான்..” என்று பொய்யுரைத்து, தனது வகுப்புக்குள் நுழைந்து கொண்டாள்.

                         அவன் பேசிய விதம் ஏனோ இம்சித்தது அவளை. “நானென்ன சிறுபிள்ளையா..” என்று அவள் மனம் துள்ள, இல்லை இதை அனுமதிக்க கூடாது கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் ஸ்ரீகா. நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலையை முயன்று தருவித்துக் கொண்டவள் அன்று மதியமே அவனை சந்திக்க வந்தாள்.

                     அன்று பார்த்து அபி விடுப்பு எடுத்திருக்க, அதுவும் ஸ்ரீகாவுக்கு சாதகமாக அமைந்து விட்டிருந்தது. ஜெய் வகுப்பிற்கே வந்து நின்றவளைக் கண்டு அதிர்ந்தாலும், காலையில் தலைவலி என்றாளே என்று ஒரு பதட்டத்துடன் தான் எழுந்து வெளியே வந்தான்.

                      வந்த நிமிடம்என்ன ஸ்ரீ.. உடம்பு எதுவும் முடியலையா..”என்று கேட்க 

                     “நான் கொஞ்சம் பேசணும் சீனியர்.. என்னோட வர முடியுமா..” என்றாள் தெளிவாக.

                     அவளின் தெளிவில் அவளுக்கு எதுவுமில்லை என்று நிம்மதியடைந்தவனுக்கு அப்போது தெரியாது, இன்னும் சில நிமிடங்களில் அவள் தன் நிம்மதியை மொத்தமாக எடுத்துக் கொள்ளப் போகிறாள் என்று.

ஜெய் ஸ்ரீகாவை அழைத்துக் கொண்டு கல்லூரி மைதானத்திற்கு வர, அங்கே இருந்த படிகளில் அமர்ந்து கொண்டாள் ஸ்ரீகா.

                     அவள் பேசுவாள் என்று ஜெய் அவள் அருகில் அமர்ந்து அவள் முகம் பார்க்க, சட்டென வார்த்தைகள் மௌனமாகிப் போனது ஸ்ரீகாவுக்கு. தொண்டைக்குழியில் அடைத்துக் கொண்ட வார்த்தைகள் அதைத் தாண்டி வெளியே வருவேனா என்று சண்டித்தனம் செய்தது.

                     தொண்டை அடைத்துக் கொண்டதில் கண்கள் கலங்கிப் போக, இப்போது ஜெய் பதறிப் போனான். ‘ஸ்ரீ…. என்ன செய்யுது உனக்கு.. ஏன் அழறம்மா..” என்று அவன் கேட்க,அவன் வலது கை அவள் தலையில் இருந்தது.

                    ஸ்ரீகா அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து நின்று கொண்டாள் அடுத்த நிமிடம். கண்களையும் அழுத்தமாக அவள் துடைத்துக் கொள்ள அவளது செயல்களை புரியாமல் பார்த்திருந்தான் ஜெய். ஏதோ புரிவது போலவும் இருக்க, புரிந்து கொண்டது சரிதானா என்று ஒரு சந்தேகமும் எழுந்தது அவனுள்.

                    ஸ்ரீகா தன்னை திடப்படுத்திக் கொண்டு அவனை நோக்கி நிமிர, அவளைக் கண்டிப்புடன் பார்த்து  நின்றான் ஜெய். அவனுக்கு அவளின் இந்த முன்னுக்கு பின் முரணான நடவடிக்கைகள் ஓரளவிற்கு பிடிபட்டு விட்டதுஅதனை கொண்டே இந்த கோபமும், கண்டிப்பும்.

                    ஸ்ரீக்கும் இது மேலாகத் தோன்றியது. அவனது சிறுபிள்ளை பார்வைக்கு இந்தப் பார்வை பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு

                    அவனது கண்டிப்பாய் கண்டு கொள்ளாமல் நின்றவள்பிடிச்சுட்டிங்க சீனியர்.” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.

                    ஜெய் அவளை சந்தேகமாக ஏறிட, ” நான் என்ன சொல்லப் போறேன் ன்னு தெரியும் உங்களுக்கு. நீங்களே பதில் சொல்லிடுங்க.” என்றாள் அவளுக்கே உரிய துடுக்குத்தனத்துடன்.

                     ஜெய்க்கே அவளின் இந்த பேச்சில் சிரிப்பு வர பார்க்க, “என்ன புரியுது எனக்கு.. என்ன பதில் சொல்லணும் நான்..” என்றான் கடுகடுப்பாக 

                      “எனக்கு உங்களை பிடிச்சுருக்கு சீனியர். சீனியர், தீக்ஷி அண்ணன், அபிண்ணா பிரெண்ட் இதையெல்லாம் தாண்டி உங்களை பிடிக்குது எனக்கு. தப்பு சரி இதெல்லாம் தெரியல. ஆனா, பிடிச்சிருக்கு. என் வாழ்க்கையை உங்களோட பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பிடிச்சிருக்கு சீனியர்…”

                     “நீங்க ஒத்துப்பிங்களா இல்ல மறுத்து அவமானப்படுத்துவீங்களா எதுவும் தெரியல எனக்கு. இந்த நிமிஷம் அதைப்பற்றி கவலையும் இல்ல. ஆனா, எனக்கு உங்ககிட்ட சொல்லாம மூச்சடைக்கிற மாதிரி இருக்கு. இப்படி இருந்ததே இல்லை நான். பிடிக்கவே இல்லை. அதுதான் சம்பந்தப்பட்ட உங்ககிட்ட சொல்லிட்டேன்.. இனி நீங்கதான் சொல்லணும்.” என்று மிடுக்குடன் காதல் உரைத்து நின்றாள் ஸ்ரீகா.

                     அவளின் பேச்சிலும், தோரணையிலும்இவ லவ் சொல்றாளா இல்ல, மிரட்டிட்டு இருக்காளா..” என்று தான் எண்ணமிட்டான் ஜெய்

Advertisement