Advertisement

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 24

                       ஜெய் ஸ்ரீகாவிடம் பேச சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்க, அவள் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளின் இடைவேளை நேரங்கள் மெக்கானிக்கல் பிரிவில் கழிந்தால், காலை, மாலை வேலைகள் சிவில் பிரிவில் கழிந்தது.

                      இரண்டு நாட்களாக அவன் பேச வருவதும், பின் இவர்களின் கூட்டணியைக் கண்டு ஒதுங்கி செல்வதுமாக இருக்க, மூன்றாம் நாள் மாலை சர்வாவிற்கு அவன் பிரிவில் ஸ்பெஷல் கிளாஸ் இருக்க, அவனுக்காக அவன் வகுப்புக்கு முன்னால் இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீகா.

                      ஜெய் வகுப்புகள் முடிந்து வெளியே வந்தவன் ஸ்ரீகா தனியாக அமர்ந்திருப்பதைக் காணவும், அவளை நெருங்கினான். ஸ்ரீகா கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்து ஏதோ குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்க, ஜெய் வந்து நின்றதை கவனிக்கவே இல்லை முதலில்.

                        தனக்கு முன்னால் விழுந்த நிழலைக் கண்டு தான் நிமிர்ந்தாள் அவள். அந்த நேரத்தில் ஜெய்ய்யய் அவள் எதிர்பார்க்கவில்லை. எதற்காக வந்திருக்கிறான்??? தன்னிடமா வந்து நிற்கிறான்?? என்று ஏகப்பட்ட கேள்விகள். அவளே கேள்விக் கேட்டு அவளே பதில் கொடுத்து அமர்ந்திருக்க, எதிரில் இருந்தவனை கணக்கில் கொள்ளவே இல்லை அவள்.

                          ஜெய் பொறுத்துப் பார்த்தவன்உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. இப்போ பேசலாமா??” என்று கேட்க, “என்னவாம்..” என்று நக்கலாக கேட்டது மனது. “முடியாது ன்னு சொன்னா போய்டுவானோ..” என்று குறுக்குப்புத்தி ஒருபுறம் வேலை செய்ய, ஒரு நிமிடம் யோசித்தாள்

                        பின், விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டுசொல்லுங்க…” என்று விட, ஜெய் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்து நிற்க, மீண்டும் ஸ்ரீகாவேஎன்ன..” என்றாள்.

                        “கேன்டீன் போவோமாஇங்கே யாராவது வந்துட்டு,போயிட்டு இருப்பாங்க..” என்று அவன் உரைக்க 

 

                      “கேன்டீன் எல்லாம் வர முடியாது. எனக்கு வெட்டி அரட்டைக்கெல்லாம் டைம் கிடையாது. படிக்கணும்.” என்றுவிட்டாள். ஜெய்யின் முகம் கன்றிப்போக, “அன்று எங்களை சொல்லும்போது தெரியவில்லையா..” என்று தான் வந்தது ஸ்ரீகாவுக்கு.

                       ஆனால், அவனின் கன்றி சிவந்துவிட்ட முகம் லேசான வலி கொடுக்க, அதற்குமேல் பேச வாய் வரவில்லை. தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு எழுந்தவள்வாங்க..” என்று முன்னே நடக்க, சற்று இறுக்கமாகவே அவள் பின்னால் நடந்தான் ஜெய்.

                கேன்டீனில் வந்து அமர்ந்து விட்ட பிறகும் கூட, ஜெய் ஏதும் பேசாமல் மௌனம் காக்க, ஸ்ரீகாவின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்து கொண்டிருந்தது

                   முடிவாகஎன்ன பேசணும்.. சீக்கிரம் சொல்றிங்களா.” என்று ஸ்ரீகா கேட்க

                    ஜெய் அதே இறுக்கமான முகத்துடன்அன்னைக்கு உன்கிட்ட பேசின விதம் கொஞ்சம் சரியில்ல தான். அதுக்காக நீ தீக்ஷியோட பேசாம இருக்கணும் ன்னு அவசியம் இல்ல..” என்றான் மிதப்பாக 

                     ஸ்ரீகாவுக்கு அவன் தோரணையும், தேர்ந்தெடுத்த அவன் வார்த்தைகளும் சிரிப்பை கொடுக்க, “என்ன ஈஸியா சொல்றான்..” என்று தான் நினைத்தாள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

                      அவன் முடிக்கவும், “அவ்ளோதானா கிளம்பட்டுமா..” என்று அவள் எழுந்து கொள்ள, ஜெய் அவளைத்தான் பார்த்திருந்தான். ஸ்ரீகா அவன் பார்வையை மீறி செல்ல முடியாமல் ஒரு நொடி தேங்கியவள்அன்னைக்கு நீங்க பேசிய விதம் கொஞ்சம்தான் சரியில்ல இல்லையா.” என்று கேட்டுவிட 

                      “கொஞ்சம் தப்பும் கூட..” என்று அவளை வியக்க வைத்தான் ஜெய்.

                       

                       ஸ்ரீகா இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நிற்க, “மன்னிப்பு கேட்கணுமா..” என்றான் அவன் மீண்டும். அவன் குணம் அதுதான். தவறென்று தெரிந்தால் அலட்டிக் கொள்ளாமல் மன்னிப்பு கேட்டு விடுவான்

                        ஸ்ரீகா அவனது இந்த வார்த்தைகளில் கொஞ்சமாக குளிர, “உங்க தங்கச்சி பஜாரி ஆகிட்டா, பரவாயில்லையா…” என்றாள் நக்கலாக 

                         “அதைப் பற்றியும் தான் பேசணும். ப்ளீஸ்.” என்று இருக்கையை காட்டினான் ஜெய்.

                          ஸ்ரீகா அமரவும், “தீக்ஷியை பற்றி பேசத்தான் முக்கியமா வந்ததே. ஆக்சுவலா, உனக்கு நன்றி சொல்லணும் நான். இதுவரைக்கும் அவளுக்கு சரியானது எது ன்னு தன் பார்த்திருக்கோம். அவளுக்கு பிடிக்குதா இல்லையா ன்னு யோசிக்கவே இல்லையோ ண்ணு தோணுது இப்போ.”

                         “எப்பவுமே அவ கொஞ்சம் அமைதிதான். அதனால பெருசா எதற்காகவும் வாதம் பண்ணமாட்டா. அதுவும் நான் ஏதாவது சொன்னா, அதை மறுத்துப் பேசறது எல்லாம் நடந்ததே இல்லை.”

                       “பட். அவ விருப்பம் என்னன்னு தெரிஞ்சு பேசி இருக்கணும் ன்னு இப்போ புரியுது. தேங்க்ஸ்..” என்றான் தீக்ஷிக்கு அண்ணனாக.

                         ஸ்ரீகாவிற்கு அவனின் வார்த்தைகள்.. அதில் இருந்த புரிதலில் கொஞ்சமாக நிம்மதி வந்தது. இனி தீக்ஷி ஒடுங்கிப் போகமாட்டாள் என்று அவன் பேச்சில் இருந்தே புரிய, கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தாள் அவள்.

                        ஜெய்யின் மாற்றத்தை தெளிவு படுத்திக் கொள்ளும் விதத்தில், “நான் தீக்ஷியோடப் பேசினா, என்கூட இருப்பவர்களும் அவளோட பேச வேண்டி வரும். ஆனா, நீங்க அன்னிக்கு பேசியது போல திரும்ப பேசினால் நிச்சயம் நான் பார்த்திட்டு இருக்கமாட்டேன்.” என்று கடுமையாக ஸ்ரீகா எச்சரிக்கை செய்ய, அவளின் பாவனையில் சிரிப்பு வந்தது ஜெய்க்கு.

                          “சும்மா இருக்காம என்ன செய்வ. அதான் ஆள் வச்சு மிரட்டிட்டு இருக்கியே…” என்று அவன் விரிந்து சிரிக்க, “இந்த சிரிப்பு நல்லாருக்கே..” என்றுதான் எண்ணம் போனது ஸ்ரீகாவுக்கு.

                          தலையை உலுக்கிக் கொண்டு, “நான் யாரை வச்சு மிரட்டினேன்..” என்று அவள் முறைக்க

                            சர்வா தன்னிடம் பேசியது அவளுக்கு தெரியாது என்று புரிந்தது ஜெய்க்கு. சிறு சிரிப்புடன் நிறுத்திக் கொண்டவன்உன் அண்ணனுங்க இருக்கானுங்க இல்லையா.. அதைச் சொன்னேன்..” என்று மழுப்பி விட்டான்.

                            அவன் பேச்சை நம்பியவள்ஓகே சீனியர்.. நான் கிளம்புறேன்..” என்று எழுந்து கொள்ள

                          “ஏதாவது சாப்பிடுகிறாயா..” என்றான் அவசரமாக 

                           “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க.. எனக்காக சர்வா வெய்ட் பண்ணுவான். போகும்போது அவனோட சாப்பிட்டுப்பேன்..பை.” என்றதோடு கிளம்பிவிட்டாள் அவள். செல்லும் அவளை தனது ட்ரேட்மார்க் புன்னகையுடன் நோக்கி கொண்டு அமர்ந்திருந்தான் ஜெய்.

                       ஏனோ அந்த சிறுபெண்ணை பிடித்திருந்தது அவனுக்கு. அப்படி ஒன்றும் சிறியவள் கிடையாது தான்மிஞ்சிப்போனால் மூணு அல்லது நான்கு வயது இருக்கலாம். ஆனால், எப்போதும் தங்கையுடன் சுற்றுவதால் சிறுபெண் என்ற எண்ணம் தான் ஜெய்க்கு. ஏனோ அதற்குமேல் யோசிக்க தயாராக இல்லை அவன். தன் தங்கையின் தோழி என்ற காரணமோ அல்லது தன் நந்தனின் தங்கை என்ற காரணமோ அவன் மனம் மட்டுமே அறியும்.

ஜெய்யின் இந்தப் பரிணாமம் பிடித்திருந்தது ஸ்ரீகாவுக்கு. அவன் மன்னிப்பு கேட்ட விதமும், அவன் தங்கையைப் பற்றிய அவன் தவறை உணர்ந்து கொண்டதும் பிடித்திருந்தது ஸ்ரீகாவுக்கு. அவன் உணர்ந்து கொண்டதை அவனே திருத்திக் கொண்டிருந்தாலே போதுமே. அதற்காக நன்றி சொல்ல வேண்டிய அவசியம் என்ன. தன்னை தேடி வந்து மன்னிப்பு கேட்டானே என்று மனதின் ஓர் ஓரம் மெல்லிய சாரல்.

                  ஆனால், அப்போதும் மனம் அவன் துர்வாச முனிவரின் சீடன். எந்த நேரம் நிறம் மாறுவான். எந்த நேரம் கடித்துக் குதறுவான் என்று கணிக்க முடியாது உன்னால்.. விலகியே இரு.” என்று எச்சரித்தது அவளை. அப்போதைக்கு அதன் பேச்சைக் கேட்பது போல் நடித்து, மனதை ஏமாற்றியவள் அன்று உற்ச்சாகமாகவே காணப்பட்டாள்.

                 அடுத்தநாள் வகுப்புக்கு வர, தீக்ஷியை பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் நேற்று தான் அமர்ந்திருந்த இருக்கைக்கே அவள் செல்ல, அவளது கையை பிடித்து தடுத்திருந்தாள் தீக்ஷி. ஸ்ரீகா திரும்பி தோழியை முறைக்கசாரிடி..” என்றாள் புன்னகையுடன்.

                  “யாருக்கு வேணும் உன் சாரி. உன் அண்ணன் சொன்னதும் எதுவுமே பேசாம நின்னுட்டு இருந்த இல்ல. இப்போ எதுக்காக என்கிட்டே பேசற.” என்று மிரட்டினாள் தீக்ஷியை.

                    தீக்ஷிஅண்ணா கோபமா இருந்தாங்க ஸ்ரீ. பயமா இருந்தது…. அதனால தான் அமைதியா இருந்தேன். நேத்து அவங்களே வந்து பேசினாங்க. உன்கிட்டேயும் பேசினதா சொன்னாங்களே.” என்று அப்பாவியாக கேட்க 

                    “ஏண்டி இப்படி இருக்க.. நீயா யோசிக்கவே மாட்டியா. ரெண்டு நாளா என்கிட்டே பேசணும்ன்னு தோணவே இல்லையா உனக்கு.” என்று ஸ்ரீகா கொதித்தாள்.

                   “நான் உன்கிட்ட பேசி, அண்ணா திரும்பவும் உன்னை எதுவும் சொல்லிடுவாங்களோ ன்னு பயமா இருந்தது ஸ்ரீகா. அதனால தான் பேச ட்ரை பண்ணல. பட் இப்போ பிரச்சனை இல்ல. அண்ணா இனி கோபப்படமாட்டாங்க..” என்று கூறினாள் ஜெய்யின் தங்கை.

                     “உனக்கு நிறைய கிளாஸ் எடுக்கணும் போல.” என்று சலித்துக் கொண்ட ஸ்ரீகா, “உனக்கு அவன் பரவால்ல.” என்று சிரிப்புடன் அவள் அருகில் அமர

                       “யாரை சொல்ற.” என்று கேட்டாள் தீக்ஷி.

                       “வேற யாரு.. உன் அண்ணன் தான். ஜெய்ராம் கிருஷ்ணா.. அந்த வெண்ணையை தான் சொல்றேன்.” என்றாள் நக்கலாக 

                        “ஹேய்.. அண்ணாவை அவன் இவன் ன்னு சொல்ற.நான் அபின்னாவை அண்ணா ன்னு தானே கூப்பிடுறேன். நீயும் மரியாதையா பேசலாம் இல்ல.” என்று தீக்ஷி வருத்தப்பட 

                         “ஹேய்என்ன மரியாதை கேட்கிற நீ.. உன் அண்ணன் என்னல்லாம் பேசினான் என்னை. அவனை அண்ணா ன்னு வேற கூப்பிட்டு பாசமலரை வளர்க்கணுமா நான். கொன்னுடுவேன் உன்னை. அபியை அண்ணா ன்னு கூப்பிட சொல்லி நான் சொன்னேனா உன்கிட்ட..” என்று கண்களை உருட்டி மிரட்டினாள் ஸ்ரீகா.

                             தீக்ஷி அவள் முகத்தை வருத்தத்துடன் பார்க்க, “அடியேய்.. உன் அண்ணன் கொஞ்சமே கொஞ்சம் சைட் அடிக்கிற லட்சணத்தோட இருக்காண்டி.. நல்லா பாட்டு பாடறான். கொஞ்சம் நல்ல பையனா இருக்கான்காலேஜ் முடியுற வரைக்கும் எனக்கு கனவுக் கண்ணனா இருந்துட்டு போகட்டுமே.”

                         “ஏன் அண்ணன் ன்னு கூப்பிட சொல்லி என் கனவுல மண்ணெண்ணையை ஊத்தி கொளுத்தற…” என்று அலுத்துக் கொண்டாள் ஸ்ரீகா. தீக்ஷி திறந்த வாய் மூடாமல் அவளை பார்த்து இருக்க, அவளின் அதிர்ச்சியைக் கண்டு சிரித்துக் கொண்டவள் தன் கையை வைத்து அவள் வாயை மூடி விட்டாள்.

Advertisement