Advertisement

ராதாவும் சிரித்துக் கொண்டே “ஏண்டி இப்பவாவது நீ ஐஸ்க்ரீம் ஸ்வீட்டை நேரில் கேளேன்” என்று சொன்னாள்.

“அதெல்லாம் கேட்க முடியாது, எனக்கு ஐஸ்கிரீம் ஸ்வீட் வாங்கி தர சொல்லு” என்று ராதாவிடம் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இப்ப என் புருஷன் சம்பாத்தியம் பரவாயில்லையா” என்று கேட்டாள்.

“பரவால்ல பரவால்ல ஹேப்பி நியூஸ் கொண்டாடும் போது எதை வாங்கி கொடுத்தாலும் சாப்பிடணும், ஆனா ஐஸ்கிரீம் எனக்கு பெரிய டப்பா வேணும்” என்று அவள் சொல்வதை பார்த்தவுடன்

நந்தன் தான் ராதாவை பார்த்து “என்ன” என்று கேட்டான் .

“அது மட்டும் இல்லாமல் ஆஸ்பத்திரியில் உட்கார்ந்து இருக்கிறீர்கள், யாருக்கு என்ன”, என்று கேட்டவன் ராதாவை பார்க்க,

அவர்கள் இருவரும் தனியாக பேசட்டும் என்று நகர்ந்து விட்டால் யாழினி,

அது மட்டும் இல்லாமல் போகும் போதே “அந்த பக்கம் இருக்க ஐஸ்கிரீம் ஷாப் போறேன்., ஒழுங்கா வந்து பில் பே பண்ணிடு., இல்லாட்டி கொலை பண்ணிடுவேன் உன்னை”, என்று மிரட்டிக்கொண்டே சென்றாள்.

ராதா என்று சொல்லாமல் பொதுவாக சொல்லிவிட்டு செல்ல, நந்தனும் “இவ இருக்காலே” என்று சொல்லிவிட்டு “எதுக்கு போறா” என்று கேட்டான்.

அதன் பிறகு அவர்களுக்கான நேரமாக மாறிப்போனது. தாங்கள் இருப்பது மருத்துவமனை என்று நினைவில் வந்து இருவரும் கையை பிடித்தப்படி நடக்க, நந்தனும் அவள் சொன்னதை தான் சொல்லிக் கொண்டிருந்தான்.

“உன்னை எப்படி விட்டுட்டு நான் எப்படி ஜெர்மன் போறது” என்றான்.

“இதில் மட்டும் அண்ணன் தங்கச்சி கரெக்டா ஒன்னா யோசிங்க”., என்று சொன்னாள்.

“ஏன் யாழினி இதே தான் சொன்னாளா” என்று கேட்டான்.

“ஆமா அவளும் உன்னை விட்டு அவன் எதுக்கு அங்க வரணும்” என்று கேட்டுக் கொண்டிருந்தாள், என்பதை தெரியப்படுத்த சிரித்துக் கொண்டவன்,

“இதில் எல்லாம் பெரிய மனுஷி மாதிரி தான் பேசுவா, மத்ததெல்லாம் சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்கறது” என்று சிரித்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் அவர்கள் ஐஸ்கிரீம் பார்லர் போக, இவள் வாங்கி வைத்திருந்ததை பார்த்தவள், “அடியே நீ இன்னும் பத்து நாள்ல ஜெர்மன் கிளம்பனும், இந்த நேரத்துல இவ்வளவு ஐஸ்கிரீம் வாங்கி வச்சிருக்க., பத்து நாள் எல்லாத்தையும் சாப்பிட்டா ஜெர்மனியில் போய் காய்ச்சல் ல தான் படுக்கணும்” என்று சொல்லி

அவள் எப்போதும் விரும்பும் ஒரு ஐஸ்க்ரீம் பிளேவர் மட்டும், அவள் ஆசைப்பட்டபடி கொஞ்சம் பெரிய டப்பாவாக வாங்கி கையில் கொடுத்தான்.

இவளோ ராதாவை பார்த்து முகத்தை சுளிக்க,

“சின்ன பிள்ளை மாதிரி பண்ணாத” என்று சொன்னவள், நீ போய்ட்டு வா, ஜெர்மன் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் உனக்கு நீ கேட்கிற எல்லாத்தையும் வாங்கி தரேன்” என்றாள்.

“பேச்சு மாறமாட்டியே” என்று வாக்குறுதி கேட்டுக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் ராதாவை பார்த்து “முதலில் கிளம்புங்க” என்று சொல்லி இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

மறுநாளே அலுவலகத்தில் விஷயத்தை தெரியப்படுத்தி, “என்னுடைய சூழல் இப்போது செல்ல முடியாது” என்பதை சொன்னான்.

அவர்களோ “இல்ல கண்டிப்பா நீங்க போய் தான் ஆகணும்” என்று சொல்லும் போது,

அவனுடைய வேலையை வேறு யாரிடமாக ஒப்படைத்து வேறு யாரையாவது அவளுடன் அனுப்பலாம் என்று முடிவுக்கு வந்த போது, டீம் ல் சற்று வேலை அதிகம் இருந்ததால் ஆட்கள் இல்லை, ஏற்கனவே வேலை அதிகமாக இருப்பதால் யாரையும் மாற்றி அனுப்ப முடியாது என்ற சூழ்நிலையில் அலுவலக அதிகாரிகள் யாழினியை அழைத்தனர்,

“உங்க பிரதரால இப்ப ஜெர்மன் வர முடியாதுன்னு சொல்லிட்டு இருக்காரு, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போனீங்கன்னா, அந்த வேலை இரண்டு மாதத்தில் முடிந்துவிடும், ஒர்க் முடிச்சிட்டு வந்துடலாம், இப்ப நீங்க தனியா போறதா இருந்தா, கூட ரெண்டு மாசம் மூணு மாசம் ஆகலாம், என்ன சொல்றீங்க”. என்று கேட்டனர்.

அவளோ நந்தனை திரும்பி பார்த்த படியே “நான் தனியா போகிறேன், நான் முடிச்சிட்டு வரேன்” என்று சொன்னாள்.

“ஓகே உங்களுக்கு காண்பிடெண்ட் இருக்கா, முடித்துவிடலாமா, இல்ல தனியா போறதுனால என்னால முடிக்க முடியாது, அந்த மாதிரி எதுவும் யோசிக்கிறீங்களா”, என்று கேட்டனர்.

“இல்ல இல்ல முடிச்சுட்டு வந்துருவேன், தனியா போய்க்கிறேன், ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொன்னாள்.

இவளுக்கு அங்கு தங்குவதற்கான ஏற்பாடு மட்டும் அலுவலகத்தின் உதவியோடு நந்தன் செய்து கொண்டிருந்தான்.

தற்செயலாக அன்று வீட்டில் இருந்த கதிரவன் நண்பர்கள் கான்ஃபரன்ஸ் காலில் அழைக்க, “ஹாய் டா சொல்லுங்க என்ன விஷயம், திடீர்னு கூப்பிட்டு இருக்கீங்க” என்று கேட்டான்.

“ஆமா நீ என்னடா இவ்ளோ ரிலாக்ஸா பேசுற, எப்பவும் டென்ஷனாவே சுத்துவ”, என்று கேட்டனர்.

“இன்னைக்கு ஆபீஸ் போகல, இனிமேல் தான் கிளம்பனும், சொல்லு என்ன விஷயம்”, என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

நண்பர்களுக்கு உரிய படி கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் போதே, ‘சென்னையில் ஒரு வீடு பார்க்க வேண்டும், அப்பா அம்மாவ கொண்டு வந்து சென்னையில செட்டில் பண்ணனும்’ என்று பேசிக் கொண்டிருந்தான்.

அவனே தொடர்ந்து சொன்னான். “நல்ல வீடா பாரு, நல்ல கம்யூனிட்டி வில்லாவா இருந்தாலும் சரி, கம்யூனிட்டி அப்பார்ட்மெண்டாக இருந்தாலும் சரி, பாரு உள்ளே எல்லாம் இருக்கனும், அம்மா அப்பாவ இனிமேல் தனியாக விட முடியாது, அக்கா வீட்டில் இருப்பது அம்மாவுக்கும் அப்பாக்கும் சேஃப், ஆனாலும் அம்மா அப்பாவும் ஊருக்கு போறேன்னு தான் சொல்றாங்க, இல்லாட்டி என் கூட வரணுங்கறாங்க., இப்போதைக்கு அவங்களுக்கு இங்கு ஒரு வீடு பார்த்து வச்சா, நானும் கோட்டர்ஸ் விட்டுட்டு அம்மா அப்பா கூட போய் கொஞ்ச நாள் இருந்துக்குவேன். அப்புறம் அடுத்த தடவை டிரான்ஸ்பர் ஆகும் போது நான் எங்க கிடைக்குதோ அங்க போயிடுவேன், அம்மா அப்பா இங்கே இருக்கட்டும்”, என்று சொல்வதைக் கேட்டவுடன்

நண்பர்களும் ஆளாளுக்கு “சரிடா சூப்பரா வீடு,  நீ சொல்ற மாதிரி கம்யூனிட்டி வில்லா அல்லது அப்பார்ட்மெண்ட் பார்ப்போம்” என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

அங்கு யாழினி கிளம்பும் நாளும் வந்து இருக்க, நந்தன் தான் ராதாவை அருகில் வைத்துக் கொண்டு அவளுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தான்.

“அங்கே போயி வளவளவென்று வாய் அடிக்காம, பிரச்சனை பண்ணாம இருக்கணும், ஆபீஸ் வேலையை கரெக்டா முடிச்சுடனும். எந்த டவுட்னாலும் போன் பண்ணு, பேசமாட்டேன் அப்படின்னு சொல்லி, இந்த இவளை நடுவில் வைத்து தூது விட்டாலும் சரி, ஒழுங்கா கூப்பிடு” என்று சொன்னான்.

“ஓகே டீம் லிட்” என்று சொன்னாள்.

“கொழுப்பு பாத்தியா”, என்று மண்டையில் கொட்ட, “இங்க பாரு உன் புருஷன் மண்டையிலே கொட்டிக்கிட்டு இருக்கான், எனக்கு இன்னும் எட்டு மாசம் டைம் இருக்குடி., வயித்துக்குள்ள இருந்து உன் பிள்ளை வெளியே வரட்டும்”, என்று சொன்னாள்.

இவளும் “எப்ப பார்த்தாலும் அவளை அடிக்காதீங்க, சும்மா இருக்கீங்களா”, என்று அவனிடம் சொன்னாள்.

” நீயும் சேர்ந்து செல்லக்கூடாது, போற இடத்துல தனியா சமாளிக்க தெரியணும், நான் கூட போற தைரியத்துல தான் இருந்தாங்க, இப்போ இன்னைக்கு கிளம்பி வருவாங்க என்ன சொல்ல, இவ இப்படி இருந்தா என்ன பண்ண, அங்கேயும் போய் விளையாடுவா”., என்று ராதாவிடம் பேசினான்.

ராதாவும் “அதெல்லாம் அவள் இருக்கிற இடத்துக்கு தகுந்த போல இருந்துப்பா”, என்றாள்.

அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவள், ‘அஞ்சு மாசம் ஆகுமே, ரிட்டன் வருவதற்கு’ என்று யோசித்துக் கொண்டிருந்தவள்.

ராதாவிடம் “எனக்கு ஒரு டவுட், நான் அஞ்சு மாசம் கழிச்சு வரும் போது உன் வயிறு நல்ல பெருசா இருக்கும் இல்ல” என்று கேட்டாள்.

அவளோ “அடியே நான் உனக்காக சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்கேன் உனக்கு எவ்வளவு பெரிய கவலை அஞ்சு மாசம் கழிச்சு நீ வரும் போது வயிறு பெருசா இருக்குமா இப்படியே இருக்குமானு ஒரு டவுட்டு., என்று அதட்டினாள்.

“உடம்பு பத்திரமா பாத்துக்கோ, உள்ள இருக்குற பிள்ளையை நல்லா பாத்துக்கோ”., என்று சொன்னாள்.

அவளும் “இவ இப்படி பேசுற ஆள் கிடையாதே” என்று அதையே கேட்கவும்.

“நான் தலையில் கொட்டனும் இல்ல, அதுக்கு தான் சொல்றேன்”, என்று மீண்டும் சொன்னாள்.

“உன்ன” என்று சொல்லி கையைப் பிடித்துக் கொண்டு ராதா அவளை இரண்டு அடி போட , அவளும் சிரித்துக் கொண்டே “நல்ல ஹெல்த் பாத்துக்கோ, பத்திரமா பாத்துக்கோ” என்று யாழியும் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

நந்தன் தான் “இவள் சமாளித்து விடுவாளா” என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

கிளம்பும் நாளில் அவளை அனுப்பி வைக்க ஏர்போர்ட் வரை யாழினி அம்மா அப்பாவோடு நந்தனும் ராதாவும் வந்தனர்.

அம்மா அப்பாவின் அறிவுரையோடு தலையை தலையை ஆட்டிக் கொண்டவள்., ராதாவை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள், ஏனெனில் அவள் தான் “இன்னைக்கு எல்லாரும் சொல்றத அமைதியா கேக்கணும், வாயை திறக்க கூடாது, பதிலுக்கு பதில் வாய் அடிக்க கூடாது”என்று சொல்லிக் கூட்டி வந்திருந்தாள்.

அவளை முறைத்து பார்த்தபடியே அனைவர் சொன்னதுக்கும் தலையாட்டினாள்.

இதை ஏற்கனவே கேட்டிருந்ததால், வீட்டில் உள்ளவர்கள் யாரும் எதற்கு அவர் பேசாமல் இருக்கிறாள் என்று கேட்கவில்லை., அதே நேரம் நந்தன் அருகில் வந்தவன் அவளுக்கு எல்லா டீடெயில்ஸ் ம் சொல்லிவிட்டு, மற்றவை அனைத்தும் கையில் கொடுத்தவன்,

அவளை தோளோடு சேர்த்துக் கொண்டு “பார்த்து போயிட்டு வரணும்டா, எதுனாலும் போன் பண்ணு, எப்பனாலும் போன் பண்ணு” என்று சொல்லவும்

யாழினிக்கு லேசாக கண் கலங்குவது போல இருந்தாலும், யாரிடமும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் சென்னையில் இருந்து ஜெர்மன் நோக்கி கிளம்பி இருந்தாள்.

Advertisement