Advertisement

யாழினியின் அம்மா தான் நந்தனிடம் “நல்ல இடம் டா நந்தா, எனக்கு உண்மையிலேயே வருத்தமா இருக்கு இந்த புள்ளையால,

பாரேன் இவ மட்டும் சரின்னு சொன்னனா பேசியே முடிச்சிடலாம், பையன் ஆஸ்திரேலியாவுல இருக்காப்ல, பையனோட அக்கா தான் இங்க இருக்கு, அவங்க அம்மா அப்பா ஊர்ல இருக்காங்க, பாரு அந்த பையன கல்யாணம் பண்ணிட்டு அங்கே போயிறலாம், எல்லாரும் பாரின் போறதுக்கு ஆசைப்படுவாங்க, நம்ம வீட்டுக்குள்ள என்னன்னா எங்கேயும் போக மாட்டேன், நான் இங்கதான் இருப்பேன்னு சொல்லி குதிச்சிட்டு சுத்துது, வர மாப்பிள்ளை எல்லாம் ஏதாவது ரீசன் சொல்லி தட்டி கழிச்சுட்டே இருக்கா, இவள என்னடா பண்ண”, என்று புலம்பினார்.

“அம்மா வேண்டாம் காலையில விட்டத மறுபடியும் தொடங்கி வைக்காதீங்க, பேசாம இருங்க, காலையில தானே அவ்வளவு பேசி சரின்னு சொன்னீங்க, இப்ப என்ன மறுபடி ஆரம்பிக்கிறீங்க” என்று கேட்டாள் யாழினி.

“ஏம்மா உன்கிட்ட எதுவுமே பேசல, நான் நந்தன் கிட்ட தான் சொல்லிட்டு இருந்தேன்., உனக்கு வேற யாரும் அலையன்ஸ் பாக்குறவங்க இருந்தா சொல்லுடா, பேசாம கல்யாணத்துக்கு அலையன்ஸ் துப்பு சொல்லலாம்”., என்று சொல்லவும் சத்தமாக சிரித்தவள்.,

“எப்பம்மா கல்யாண புரோக்கர் வேலையும் சேர்த்து பார்க்க ஆரம்பித்தீங்க” என்று கேட்டாள்.

“உன்னை பெத்ததுக்கு எல்லா வேலையும் பார்த்து தான் ஆகணும்” என்று சொன்னார்.

“நான் என்ன உங்க கிட்ட என்னை கேக்காம வர சொல்லுங்க னா சொன்னேன்”, என்று வாய் அடிக்க தொடங்கவுமே

ராதாவோ “பேசாம இருடி” என்றாள்.

“ஓய் என்ன” என்றாள்.

“உனக்கு கால் இப்படி இருக்குறதால, ஆபீஸ்க்கு வர வேண்டாம் ஒரு வாரம் வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுத்துட்டே, வொர்க் ஃப்ரம் ஹோம் பாரு, டீம் லீட் க்கு மெஸேஜ் போடு, உன் டீம் லீடர் கொடுப்பாரு” என்று சொன்னாள்.

“அப்படிங்கற” என்று சொல்லி ஆமா என் டீம் லீட் க்கு தான் தலையில் கொம்பு முளைச்சிருமே, ஆபீஸ் போனா” என்றாள்.

“கொம்பு முளைக்காது”, என்றாள் ராதா,

நந்தன் நான் அவளுடைய டீம் லீடு அதற்காகவே கலாய்த்து கொண்டிருந்தாள்.

“என் டீம் லிட் சரின்னு சொன்னாலும், உன் புருஷன் சம்மதிக்க விட மாட்டேனடி” என்று சொன்னாள்.

“மவள வாய மூடிட்டு இருக்கியா இல்லையா” என்று அவளோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் ராதா.

ஓஹோ என்னைய ஒர்க் ஃப்ரம் ஹோம் ன்னு வீட்டுல உட்கார வைத்துட்டு, நீ உன் புருஷன் கூட ஜாலியா ஊர் சுத்த கிளம்புற, அப்படித்தானே” என்றாள்.

“ஆமா நான் ஊர் சுத்த போறேன், ஆபீஸ்ல எவ்ளோ வேலை இருக்குன்னு உனக்கு தெரியாது இல்ல” என்று கேட்டாள்.

“சரி சரி பிழைத்து போ, ஒரு வாரத்துக்கு ஜாலியா சுத்து, அப்புறமா வாரேன்” என்று இவளும் சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள்.

மறுநாளே யாழினியின் பெற்றோர்கள் கிளம்பி விட இவர்களுடைய வாழ்க்கை எப்போதும் போல செல்ல தொடங்கியது.

மாலை அலுவலகத்தில் இருந்து வரும் போது ராதாவும் நந்தனும் இவளை வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கமாய் இருந்தது.

வீட்டில் இருப்பதால் ஒரு வாரமாக வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு தன் வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி,

  அந்த வார இறுதி நாட்கள் அதற்கான வேகத்தோடு சென்றுவிட மறுநாள் அலுவலகம் செல்வதற்காக கிளம்பி வந்தவளை ராதா தன்னோடு அழைத்துக் கொண்டு, அலுவலக கேபில் சென்றாள்.

வேலைகள் தன் போக்கில் இருந்து கொண்டிருந்தது., நாட்கள் அழகாகவே நகர தொடங்கியது,

அந்த சூழ்நிலையில் நந்தனும் , யாழினியும் அவர்கள் டீம் ல் இருந்து ஜெர்மன் செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இதைக் கேள்விப்பட்ட ராதாவும் “அப்பாடா ஒரு வழியா இரண்டு பேரும் சேர்ந்து போறீங்களா, சூப்பர் சூப்பர் இப்போ என்ன செய்வ”, என்றாள்.

“லூசா நீனு, இவன் கூட போய் மனுசன் இருப்பானா” என்றாள்.

அருகில் இருந்த நந்தனோ மண்டையில் அடித்து “வாய் வாய் எத்தனை அடி வாங்கினாலும் அடங்குதால பாரு” என்றான்.

“ராது பாரு உன் புருஷன் எப்ப பாத்தாலும் என்னை மண்டையில அடிச்சிட்டு இருக்கான், உன் பிள்ளைக்கு தலையில் கொட்டு விழப் போறது கன்பார்ம்”, என்று ராதாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் யாழினி,

“அது என்ன எப்ப பார்த்தாலும் மண்டையில் தட்டுவது, இந்த லட்சணத்துல இவன் கூட ஜெர்மன் போகனுமாம், அதெல்லாம் போக முடியாது, நான் வரல” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் போக வேண்டிய கட்டாயம் சூழ்நிலையில் இருக்க வேறு வழி இன்றி அலுவலகத்தில் கேட்ட சான்றிதழ்களில் கையெழுத்திட்டு கொடுத்தாள்.

ஆனாலும் மனது கேட்காமல் ராதாவிடம் “ஏன் நீ போனா என்ன, நான் பேசி பார்க்கட்டுமா, நீங்க ரெண்டும் பேரும் போய்ட்டு வந்தீங்கன்னா, அப்படியே ஒரு ட்ரிப் போன மாதிரி இருக்கும், வேலையும் முடிச்ச மாதிரி இருக்கும்ல”,என்றாள்.

“அடியே நீங்க செய்ற ப்ராஜெக்ட் வேற, நான் இருக்கிற ப்ராஜெக்ட் வேற அறிவு கெட்ட தனமா பேசிட்டு இருக்க”, என்று திட்டினாள்.

“அவன் கூட நான் போக மாட்டேன்” என்று சொல்லவும்.

“சரி ரெண்டு பேரும் தனித்தனியா பிளைட்ல போங்க, தனித்தனி இடத்துல இருந்துக்கோங்க”, என்று சொன்னாள்.

“பின்ன இவன் கூட போய் யார் இருப்பா”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

நாட்கள் வேகமாக செல்ல ஜெர்மன் செல்வதற்கான ஏற்பாடுகளும் வேகவேகமாக நடந்து கொண்டிருந்தது.

யாழினி அம்மாவோ “நந்தன் போறான் அதனால பிரச்சனை இல்ல, ஆனா அவனை தான் இவ என்ன பாடுபடுத்த போறாளோ ன்னு தெரியலை” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அதே நேரம் ராதா தனியாக இருக்க வேண்டாம் என்று ராதாவின் அம்மாவை ராதாவோடு தங்கி இருக்க வரும்படி சொல்லி இருந்தனர்.

ஜெர்மன் கொண்டு செல்வதற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இருந்தாள் யாழினி, அவளோடு ராதாவும் ஷாப்பிங் சென்றிருக்க, திடீரென ராதாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பது போல சொன்னாள்.

உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றபோது தான் ராதா கருவுற்று இருப்பது தெரிய வந்தது, அதைக் கேட்டவுடன் யாழினி சந்தோசத்தில் குதித்தாள், ராதாவை கட்டிக் கொண்டவள், “நான் தலையில் கொட்ட ஆள் வருதே”., என்று சொன்னாள்.

“அடியே அப்பவும் தலையில் கொட்டுவேன்னு சொல்ற” என்றாள் யாழினியின் மகிழ்வை பார்த்துக்கொண்டே.,

அதே நேரம் “உன் புருஷனுக்கு போன் போட்டு சொல்லு, அதெல்லாம் அவங்க வைஃப் தான் சொல்லனுமாம், நான் நிறைய படிச்சிருக்கேன்” என்று சொன்னாள்.

“உன் அறிவை கண்டு நான் வியக்கிறேன்” என்று சொல்லி ராதா சிரித்துக்கொண்டே நந்தனுக்கு அழைத்து தங்கள் இருக்கும் இடம் வர சொன்னாள்.

அவனோ மீண்டும் யாழினி தான் ஏதோ ஒன்று செய்து விட்டாள் என்று நினைத்துக் கொண்டே, “ஏன் எங்க போய் விழுந்து எழுந்தா”, என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

“உங்கள வரத்தானே சொன்னேன், நீங்களே ஏன் கற்பனை பண்ணிக்கிறீங்க, யாழினி தான் எதாவது பண்ணி இருப்பா ன்னு” என்று சொல்லிக்கொண்டே “சீக்கிரம் வந்து சேருங்கள்”. என்று தங்கள் இருக்கும் இடத்தை பற்றி சொன்னாள்.

“பாத்தியா இப்பவும் உன் புருஷன், நான் எதுவும் பண்ணிருக்கேன்னு தான் கேள்வி கேட்குறான் பாரு, இவன் கூட ஜெர்மன் போகவா, நான் பாவம் இல்ல” என்றாள்.

“இல்ல நீ பாவம் இல்ல, உன்னைய சமாளித்து கூட்டிட்டு வர்ற வரைக்கும் என் புருஷன் தான் பாவம்”, என்றாள்.

“எப்ப சொல்லுவாங்க, பொண்ணா பையனா ன்னு” என்றாள்.

“அடியே இப்போ ஒண்ணுமே தெரியாது” என்று சொல்ல

“ஆமா இல்ல தெரியாது., என்றவள் ஏதோ யோசனைக்கு செல்லவும்

“என்னாச்சு” என்று ராதா கேட்கும் போது

“அவன் எதுக்கு அங்க வரணும், அவன் உன் கூட தான் இருக்கணும்”, என்று சொன்னாள்,

ராதாவும் “பார்த்துக்கலாம்” என்று சொல்ல,

“ஆனா அவன் இருக்கணும் ன்னு உன் மனசுல ஆசை இருக்கும் தானே, எப்படி ப்ரோக்ராம் முடிய ரெண்டு மாசம் ஆகிரும்., உன்னைய தனியா எல்லாம் விட முடியாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சற்று நேரத்தில் நந்தன் வந்துவிட்டான்.

இவள் ராதாவின் கையை பற்றி பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன், வேகமாக அவளிடம் வர “என்ன ஆச்சு ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க” என்று பொதுவாகவே கேட்டான்.

யாழினியோ “பாரு உன் புருஷன் வெறுங்கையோட வந்தாச்சு, போய் ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்லு, எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர சொல்லு”., என்று அப்போதும் ராதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

Advertisement