சற்று நேரத்தில் குழந்தை பசிக்கு அழ, ராதா பசி அமர்த்தி குழந்தையை தூங்க வைத்தாள்,

   வேறு வழியில்லாமல் ஹாலில் வந்து மீண்டும் அமர்ந்திருந்தாள்.

வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு பேசியிருப்பது எல்லாம் தெரியும், தேதி காலையில் தான் குறித்து வந்திருந்தார்கள் என்பதும் கதிரவன் மூலமாக மாலை நேரம் அறிந்து கொண்டவள்.

       அதை பற்றி எதுவும் பேசவில்லை, வீட்டில் உள்ளவர்களும் எதுவும் சொல்லவில்லை, ‘இவளுக்கு தான் தகவல் போக வேண்டிய இடத்தில் இருந்து போயிருக்குமே’ என்று கிண்டல் செய்து கொண்டு தான் இருந்தனர்.

சற்று நேரம் ஹாலில் இருந்தவள், தன்னுடைய லக்கேஜ் எல்லாம் கேட்க, ராதா “உன் ரூமில் தான் இருக்கிறது” என்று சொன்னாள்.

  ராதாவின் உதவியோடு பிரித்தவள், குழந்தைக்காக வாங்கி அனைத்தையும் கொடுத்து விட்டு தனியாக ஒரு பேக்கில் சிலவற்றை வைத்திருந்தாள்.

   “அது என்ன பேக்” என்று ராதா கேட்டாள்.

“அது சஸ்பென்ஸ் பேக்” என்று சொல்லி அதை நகர்த்தி வைத்துவிட்டவள்.

பின்பு கதிரவனின் அக்கா பிள்ளைகளுக்கு என்று வாங்கியவற்றை ராதாவிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னாள்.

“நீயே கொடுத்துவிடு” என்று சொல்ல,

” நான் போக மாட்டேன்” என்று சொன்னாள்.

“அடேயப்பா எப்படினாலும் அங்க தானே போயாகணும்” என்று சொல்ல,

“நோ நோ, அவர் இங்கு வருவாரு” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஆனாலும் உனக்கு இருக்கிற கொழுப்பு இருக்கு பாரு”, என்று சொன்னவள்

   “உண்மையை சொல்லு, நீங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி தனியா பேசி இருக்கீங்க தானே” என்று கேட்டாள்.

“என்ன உண்மையை சொல்லணும், நீங்க கேட்டு நாங்க சொல்லாமலா இருக்கோம்”, என்றவள். “பேசியிருக்கோம்” என்று சொன்னாள்.

“எங்க வச்சு” என்று கேட்டாள்.

“மொட்ட மாடியில வச்சி” என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டாள்.

“வீட்டிற்கு வந்தான்” என்று சொல்வதற்கு அவளுக்கு தயக்கமாக இருந்தது. அதன் பிறகு அதைப் பற்றி பேசாவிட்டாலும், யாழினி அதை அவனுக்கு மெசேஜ் செய்து தெரிவித்து விட்டாள்.

அதைப் பார்த்து சிரித்துக்கொண்டவனோ, ‘இன்னைக்கு மொட்டை மாடிக்கு வா’ என்று மெசேஜ் அனுப்பினான்.

இவளோ “உங்களுக்கு வேலை இல்லையா” என்று மெசேஜ் செய்தாள்.

   அவனும் அவளுக்கு அழைத்து “இன்றோடு வேலை முடிந்தது, அத்தனை பேரையும் பிடித்து ஆயிற்று” என்று சொன்னவன். “10 மணிக்கு வருவேன், பத்து மணிக்கு மொட்டை மாடிக்கு வா”, என்று சொன்னான்.

    “என்னை மொட்டை மாடிக்கு 10 மணிக்கு விட மாட்டாங்க”, என்று சொன்னாள்.

   “நான் வந்து கூட்டிட்டு போறேன்” என்று சொல்லி வைத்து விட்டான்.

அதை அவள் ராதாவிடம் சொல்ல,  ராதாவோ “உங்க ரெண்டு பேருக்கும் லூசாடி பிடிச்சிருக்கு, நைட் 10 மணிக்கு போய் மொட்டை மாடியில் பேச போறீங்க”, என்று கேட்டாள்.

“நான் எதுவும் சொல்லல, அவருதான் கூப்பிட்டாரு” என்று சொன்னாள்.

   “நோ நோ மொட்டை மாடிக்கு எல்லாம் போகக்கூடாது” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

   அவளோ “எனக்கு போயே ஆகணும்”,என்று சொன்னாள்.

      “என்ன ஒரு பிடிவாதம், வேற வழி நான் இன்னைக்கு இங்க தங்குகிறேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    நந்தனிடம் ஏதோ சாக்கு போக்கு சொல்லி குழந்தையோடு அன்று அங்கே தங்கிவிட, பெரியவர்கள் எல்லாம் தூங்க சென்ற பின் இவள் குழந்தையை தூங்க வைத்துவிட்டு “சீக்கிரம் வந்து விடு போ” என்று பத்து மணிக்கு அனுப்பி விட்டாள்.

    ராதாவோ “கதவை வெளியே இருந்து சாவியை வைத்து பூட்டி விட்டு போ”, என்றாள்.

   “சரி,  நீ போய் தூங்கு நான் வந்து படுத்துக் கொள்வேன்” என்று சொல்லி விட்டு பத்து மணிக்கு மொட்டை மாடியில் நின்றாள் யாழினி,

    அவனும் வந்து விட “கை எப்படி இருக்கு, டேப்லெட் போட்டியா” என்று கேட்டவனிடம்,

  “எல்லாம் போட்டாச்சு, ஆனா இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கீங்க, ராதா சத்தம் போடுறா, எனக்காக தான் இன்னைக்கு இங்க தங்கிட்டா”, என்று சொன்னாள்.

    “நீ இப்ப எப்படி வந்த” என்றான்.

    சாவியை காட்டியவள், “வெளியே  பூட்டி வச்சுட்டு வந்து இருக்கேன், இப்போ சீக்கிரம் கீழ போகணும், அவ கண்டிப்பா தூங்க மாட்டா, முழிச்சிட்டு பாத்துட்டே இருப்பா”, என்று சொன்னாள்.

“12 மணி வரை எல்லாம் பேச வேண்டாம், அதுக்கு முன்னாடியே போயிடலாம்” என்றான்.

இவ்ளோ அவனைப் பார்த்து முறைக்க, அவனும் அந்த நிலா வெளிச்சத்தில் அவளை தன்னருகே இழுத்துக் கொண்டவன், “இப்ப பேசுடி, நேத்து சொன்னதெல்லாம் இப்ப சொல்லு”, என்றான்.

“நேத்து என்ன சொன்னேன்” என்றாள்.

    “நேத்து ஏதோ சொன்னியே, அப்புறம் ஏதோ குடுத்தியே”, என்றான்.

      இவளோ “அதான் நான் பஸ்ட் சொல்லிட்டேன்ல, நான் தானே சொல்லி இருக்கேன், நீங்க இன்னும் என்கிட்ட சொல்லவே இல்ல”, என்றாள்.

    “அம்மாடி உன் கிட்ட சொல்ல வந்து அடி வாங்குனது பத்தாதா, அதுவே சொன்னதுக்கு சமம் தான், நீ அந்த நாளில் சொன்னதா நினைச்சுட்டு தானே”, என்று சொல்லும் முன் அவன் வாயை பொத்தியவள்,

   “எப்பப்பார்த்தாலும் எதையாவது பேசிட்டு இருக்காதீங்க”, என்று சொன்னவள், “நீங்க இப்ப என்ன சொல்ல வந்தீங்க” என்று கேட்டாள்.

    “அதை நினைத்துக் கொண்டே தானே என்னை நினைச்சிட்டே இருந்த அப்படின்னு சொல்ல வந்தேன்”, என்று சொல்லி சிரித்தவன்,

      பின்பு அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில், அவன் அன்று எந்த பாடலை பாடினானோ, அந்தப் பாடலை முழுவதுமாக பாடி, அவளை சீண்டிக் கொண்டிருந்தான்.

அதற்கு அர்த்தத்தை வேறு அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.

   அவனையே பார்த்து இருந்தவள், “பி ஜி படிக்கும் போதே இந்த பாட்டை யோசிச்ச உங்கள என்ன செய்ய”, என்றாள்.

“நானாவது பிஜி படிக்கும் போது யோசிச்சேன், இப்போ உள்ள பிள்ளை எல்லாம் எல்கேஜி படிக்கும் போதே யோசிக்குது, நீ வேற என்ன கடுப்ப கிளப்பாதே”, என்று சொன்னவன்,

    நேற்று மருத்துவமனையில் அவள் கொடுத்த முத்தத்திற்கு பதிலாக இன்று அவளுக்கு  எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதாக சொன்னவன், அழுத்தமாக ஒன்றை கொடுத்தான்,

அவனை தள்ளி விட்டு இவள் நகரந்து  செல்ல முயற்சி செய்ய, அவளை பிடித்த படியே அவளிடம் இருந்து முகத்தை மட்டும் விளக்கியவன்,

“உனக்கு ஒழுங்காவே கொடுக்க தெரியல, நேத்து ஹாஸ்பிடல்ல வச்சு சொல்லிக் கொடுக்கணும்னு தான் நினைச்சேன், ஆனா அங்க வச்சு சொல்லிக் கொடுக்க வேண்டாம் ன்னு தான் இங்க வச்சு சொல்லிக் கொடுக்கிறேன்., குட் ஸ்டூடண்டா வண்டி ஓட்ட கத்துக்கிட்ட மாதிரி, எங்க இதையும் கத்துக்க”, என்றவன்.

     “ஒழுங்கா ஒன்னு கொடு நான் பார்க்கட்டும்”, என்று சொன்னான்.

   “ஒன்றும் வேண்டாம்” என்று சொல்லி அவனிடம் இருந்து நழுவ பார்த்தவளை பிடித்து மீண்டும் ஒன்றை கொடுத்தான், அதன் பிறகு தன் கையணைவில் அவளை வைத்து கொண்டு பேசத் தொடங்கும் போது,

அவளோ “நீங்க பேட் பாய்” என்றாள்.

அவனும் சிரித்துக் கொண்டே,  “உன்னிடம் பேட் பாயா இருப்பதில் தப்பில்ல”, என்றான்.

   அதன் பிறகு கொஞ்ச நேரம் பேசி விட்டு கீழே  அவளுடன் வந்தவன், அவள் கதவை திறந்து உள்ளே சென்ற உடனே, அவன் வீட்டிற்குள் சென்றான்.

பின்பு போனில் “எல்லாரும்  தூங்கிட்டாங்களா”, என்று கேட்டான்.

“ஆமா” என்றவள். “இனிமேல் மொட்டை மாடிக்கு வரமாட்டேன்”, என்று தடை உத்தரவு போட,

     அவனோ “அதற்கு அவசியமே இல்லை, இன்னும்  15 நாளைக்கு அப்புறம் நீ என் கூட தானே இருப்ப என்றவன், அதுக்கப்புறம் எதுக்கு மொட்டை மாடிக்கு போகனும், அது தான் நம்ம ரூம் இருக்கே” என்றான்.

இவளோ குரலே வெளி வராதவளாக”குட் நைட்” என்று போனை வைத்து விட்டாள்.

   ஆனால் இருவரின் முகமும் சிரிப்போடே இருந்தது.