Advertisement

   ‘ஒருவேளை ரெக்கார்ட் மோட்ல இருக்குமோ’, என்று யோசனையோடு பார்க்க போன் சார்ஜரில் கிடந்தது,

     எடுத்து பார்க்கும் போதே,  “ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு டா, சந்தேகப்படாதே”, என்று சொன்னாள்.

      செல்லை  அவன் பார்க்க அக்காவோ புடுங்கி கொண்டு சென்றார்.

இவனோ  சிரித்துக்கொண்டே இருந்தான்,  பின்பு அவர்கள் சென்ற பிறகு ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்க, நந்தனின் கார் செல்வதை பார்த்த பிறகு,  அவள் அறையின் கதவை பூட்டி விட்டு அவள் அருகே இடது பக்கமாக வந்து நெருக்கமாக அமர்ந்தான்.

      “சொல்லு என்ன விஷயம்” என்று கேட்டான்.

    அவளும் அவன் மேல் சாய்ந்து கொண்டே, தனது அடிபட்ட கையை அவன் தோளில் வைத்து, அவனை எந்த அளவு இறுக்கமாக அணைக்க முடியுமோ அந்த அளவு அணைத்துக் கொண்டாள்.

  சற்று நேரம் அமைதியாக இருக்கவும், இவன் மெதுவாக தன் கையை எடுத்து அவளை அணைத்த படி பிடித்துக் கொண்டான், “என்ன ஆச்சுடா இசை” என்று கேட்டான்.

     எதுவுமே சொல்லாமல் சற்று நேரம் அவன் மேலே சாய்ந்து அமர்ந்திருந்தவள்.

     பின்பு மெதுவாக எழுந்து அவனைப் பார்த்து “எழுந்துக்கோங்க, இறங்கி நில்லுங்க” என்று சொன்னாள்.

அவனும் அவள் சொன்னதை எல்லாம் செய்ய,

   இவளும் கட்டிலில் இருந்து மெதுவாக இறங்கியவள், அவனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

   அவனும் தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான்,  “என்ன ஆச்சு என் இசைக்கு, பக்கத்திலேயே வர விட மாட்டீங்க மேடம், இன்னைக்கு என்ன” என்று கேட்டான்.

     அவளோ இடது கையால் அவன் கழுத்தை கோர்த்து, வலது கையில் அழுத்தம் கொடுக்காத படி அவனைப் பிடித்துக் கொண்டவள்,

    அவன் கண்ணையே பார்த்தபடி, அவனிடம் “ஐ லவ் யூ” என்று சொன்னாள்.

சொன்னதோடு மட்டுமல்லாமல் இதழில் அழுத்தமே இல்லாமல் லேசாக முத்தம் வைத்து எடுக்க,

  அவளையே பார்த்து இருந்தவன் “இசை என்னால நம்பவே முடியல” என்று சொன்னான்.

அவன் கழுத்தை இழுத்து வளைத்து பிடித்து இருந்தவள், அவன் முடியை பிடித்து இழுத்து ஆட்டி காட்டி, “இப்போ கனவில்லை தெரிஞ்சுச்சா, நிஜம் தான் ன்னு புரிஞ்சிச்சா”, என்று சொன்னவள், அவனோடு மேலும் ஒட்டிக்கொண்டாள்.

     அவனோ அப்படியே அவளை தன் மேல் சாய்த்த படியே மீண்டும் கட்டிலில் அமர்ந்து சாய்ந்து கொண்டவன், அவளை தூக்கி தன் மேலேயே சாய்த்துக் கொண்டான்.

    “சரி சொல்லுங்க மேடம், பிராமிஸ்ன்னு ஒன்னு வாங்கினீங்களே, அது என்ன ஆச்சு”, என்று அவன் கேட்க,

அவளோ “உங்ககிட்ட தான் ப்ராமிஸ் வாங்குனேன், நான் ஒன்னும் உங்களுக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுக்கலையே” என்று சொல்லிவிட்டாள்.

அவனும் “இப்படி எல்லாம் லேசான முத்தத்தோடு நிப்பாட்டினா சரி வராது” என்று சொன்னான்.

அவளோ “நோ நீங்க ப்ராமிஸ் பண்ணி இருக்கீங்க, ப்ராமிஸ் மீறக் கூடாது” என்று சொல்லி விட்டு மீண்டும் அவன் நெஞ்சிலேயே தலை சாய்த்துக் கொண்டாள்.

அவனோ “நீ என்னை டெம்ப் பண்ணிட்டு இருக்கிற, சரியில்ல”, என்று சொன்னான்.

அதன்பிறகு அவர்கள் பேசியதெல்லாம் திருமணத்தைப் பற்றி மட்டுமே.

அதன் பிறகு நேரமாவதை உணர்ந்து அவளுக்கு உணவை ஊட்டி விட்டவன், அதன் பிறகு அவனுக்கான உணவையும் எடுத்துக் கொண்டான்.

  சரியாக அந்த நேரத்திற்குள் நந்தன் வர, நந்தன் வரும் போது அவன் பார்த்ததெல்லாம் இவளுக்கு மாத்திரை கொடுத்துக் கொண்டிருந்த கதிரவனை தான்.

நந்தன் தான், “நான் தான் வந்துவிடுவேனே,  நான் பார்த்திருப்பேன் நீங்க எதுக்கு” என்று சொல்ல வர,

  “இதில் என்ன இருக்கு, பரவால்ல இனி நீங்க பாத்துக்கோங்க, மேக்சிமம் எங்களுக்கு இன்னைக்கு நைட் ஒர்க் முடிஞ்சிடும் ன்னு எதிர்பார்க்கிறோம், முடிஞ்சிருச்சுன்னா காலையில இங்க டைரக்டா வருவேன், முடியலன்னா ஒர்க் முடிச்சிட்டு நாளைக்கு தான் வருவேன், அவளுக்கு டிஸ்சார்ஜ் பண்றதுக்கான ப்ரொசீஜர் என்னன்னு கேளுங்க, என்னைக்கு போலாம் சொல்லி இருக்காங்க”, என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

   அதற்கு நந்தன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

    “முடிந்தளவு நாளை மாலை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று நந்தன் சொல்லிக் கொண்டிருந்தான்.

இவனும் “சரி பாருங்க” என்று சொல்லி விட்டு போகும் போது நந்தன் இருப்பதை பற்றி எல்லாம் யோசிக்காமல்,

“நான் மெசேஜ் பண்றேன்”, என்று சொல்லிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று சொல்லிட்டு செல்ல,

    இவ்ளோ “ஓகே ஒர்க் பார்த்து முடிங்க, டேக் கேர் பய்” என்று சொல்லி அனுப்பினாள்.

    அவன் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் யாழினி உறங்கிவிட அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு, ஏசியை சரியான அளவில் வைத்த நந்தன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு ராதாவுக்கு அழைத்து குழந்தை என்ன செய்கிறது என்று கேட்டுவிட்டு, அவள் தூங்குவதை பார்த்து விட்டு சற்று தள்ளி அமர்ந்து ராதாவிடம் பேச தொடங்கினான்.

“நான் யாழினியை இப்படி பார்த்ததே இல்லை, துரு துரு ன்னு சேட்டை எல்லாம் இருக்கும், ஆனா இப்ப அவர்கிட்ட மட்டும் அப்படியே அவ்வளோ அமைதி, அவ்வளவு சாஃப்ட், அவர் பேசுறதுக்கெல்லாம் தலையாட்டுறது, இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

    ராதாவும் “அவளுக்கு அவரை அந்த அளவு புடிச்சி இருக்கும் போல” என்று சொல்லி விட்டு “அவரையும் அப்படி ஒன்னும் குறை சொல்ல முடியாது இல்ல,  அன்னைக்கு சண்டை நடக்கும் போது பார்த்தீங்க தானே, எவ்வளவு கத்தி எப்படி எல்லாம் பேசினாரு, ஆனா யாழினியை பிடிச்சிருக்கும் போது, எப்படி புடிச்சி இருந்தாரு பாத்தீங்களா, அவர் கைக்குள்ள மொத்தமா அடக்கி, யாரும் அவளை எதுவும் பண்ணிறக்கூடாது அப்படிங்கறதுல,கவனமா இருந்தாரு, ஏன் சின்ன அத்தை போய் கையை புடிச்சதுக்கு கூட, எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க, அப்படின்னு சொன்னாரு, அவளை அவங்க கிட்ட பேசவே விடல”, என்று ராதா சொன்னாள்.

    இவனும் அப்போது தான் வரும் போது அவன் மாத்திரை கொடுத்துக் கொண்டிருந்ததை சொல்ல,

    “அப்ப சாப்பாடு எப்படி சாப்பிட்டு இருப்பா” என்று கேட்கும் போது தான் நந்தனுக்கு புரிந்தது,

     “ஆமா இல்ல, வலது கையில் தானே அடிபட்டு இருக்கு” என்று கேட்கும் போது,

ராதா சொல்லி கொண்டிருந்தாள். “கண்டிப்பா அவர் தான் ஊட்டி விட்டுருப்பாரு, அதெல்லாம் உங்க தங்கச்சியை நல்லா பாத்துக்குவாரு, முதல்ல வீட்ல பேசி தேதி குறிங்க, இவளுக்கும் அதுக்குள்ள கை சரியாயிடும், நம்ம மத்த வேலையெல்லாம் பார்ப்பதற்க்கு சரியா இருக்கும்”, என்று சொல்லி இருவரும் சீக்கிரம் பெற்றோர்களிடம் பேச வேண்டும் என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டனர்.

  சற்று நேரம் யாழினியை பார்த்தவன், சிரித்தபடியே தூங்கச் சென்றான்.

    அவனுக்கு மனம் எல்லாம் சிறிய வயதாக இருந்த யாழினியும், சேட்டை பிடித்த யாழினியும், கண் முன் வந்து சென்றனர்.

   இன்னும் சற்று நாளில் இன்னொருவருக்கு சொந்தமாக, ஒரு குடும்பத்தை பொறுப்பெடுத்து நடத்தும் பெண்ணாக இருக்கப் போகிறாள், என்பதை நினைத்தவனுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், ஒருபுறம் சற்று மகிழ்வாகவும் இருந்தது.

நந்தன் சொன்னது போலவே, மறுநாள் மாலை யாழினியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

   அவள் ராதாவிடம் குழந்தையை கேட்டாள்.

    யாழினியின் அம்மாவோ “முதல்ல குளிச்சிட்டு வா” என்று சொன்னார்.

இந்த கையை வைத்துட்டு எப்படி குளிப்பாள் என்று ராதா யோசித்தவள், தான் உதவ வருவதாக சொன்னாள்.

ராதாவை “உதவ வர வேண்டாம்” என்று சொன்னவள் தானே குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வந்து பெட்ரூமில் அமர்ந்து கொண்டாள்.

     ராதா தான் குழந்தையை கொண்டு வந்து அவள் அருகில் போட்டாள்.

இவளோ குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

Advertisement