18

   வேலைகளை துரித கதியில் முடுக்கி விட்டிருந்தான்.

       ஓரளவு நெருங்கி விட்ட நிலையில் கும்பலில் ஒரு சிலரை தவிர மீதி பேர் பிடிபட்டிருந்தனர். அவர்கள் கையில் இருந்த போதைப் பொருட்களும் பிடிபட்டிருக்க மற்றவர்களை பிடிப்பதில் துரித நடவடிக்கை இரவு பகல் பாராமல் எடுத்துக் கொண்டிருந்தான்.

   மாலை நேரம் அவளை மருத்துவமனையில் வந்து பார்க்க வந்திருந்தான், அப்போது இரு வீட்டிலும் ஆட்கள் இருக்க,  இவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவள் சாய்ந்து உட்கார்ந்து இருந்த கட்டிலிலே வந்து, அவள் முகம் பார்க்கும் படி அமர்ந்து கொண்டவன். மெதுவாக அவளிடம் பேச தொடங்கி இருந்தான்.

   “ரொம்ப பயந்துட்டியோ” என்று கேட்டான்.

   “பயப்படறது எல்லாம் இல்ல, ஆனா எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியல, என்ன விஷயம் ன்னு முழுசா தெரிஞ்சா கூட, கொஞ்சம் ஹேண்டில் பண்ண ஈசியா இருந்திருக்கும்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆனால் இருவரும் மெதுவாக பேசுவது மற்றவர்கள் யாருக்கும்,  அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது புரியவில்லை.

    அதே நேரம் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டபடி இருந்தார்கள்.

இவளோ சுற்றும் முற்றும் மற்றவர்களை லேசாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, அவனிடம் மெதுவாக “எனக்கு உங்க கூட கொஞ்ச நேரம் தனியா இருக்கணும், சுத்தி இருக்க எல்லா டிக்கெட்டையும் விரட்டி விட முடியுமா”, என்று கேட்டாள்.

அவனும் அப்படியே சுற்றிலும் யார் இருக்கா என்று பார்க்க,  கதிரவனின் அக்கா, யாழினி அம்மா, கதிரவனின் அம்மா, யாழினி பெரியம்மா, நந்தன் ஐவரும் இருந்தனர்.

   இவனோ மெதுவாக பார்த்துவிட்டு “என்ன விஷயம்”, என்று கேட்டான்.

   “எனக்கு உங்க கூட கொஞ்ச நேரம் தனியா இருக்கணும், விரட்ட முடிஞ்சா விரட்டுங்க”, என்று சொன்னாள்.

அவன் யோசனையோடு அமர்ந்திருப்பதை பார்த்தவள்,  “ஏன் உங்களுக்கு இப்ப எதுவும் அபிஷியல் ஒர்க் இருக்கா, போகனுமா” என்று மெதுவாக கேட்டாள்.

     “போய்க்கலாம், ஓரளவுக்கு வேலை முடிஞ்சிடுச்சு, நான் வீட்டுக்கு போய்ட்டு குளிச்சி டிரஸ் மாத்திட்டு, நைட் டின்னர் முடிச்சிட்டு தான் கிளம்புறதா இருந்தேன், இப்ப என்ன  எப்படியும் யூனிபார்ம் ஓட இருக்கும் போது நீ என்கிட்ட வேற எதுவும் பேச மாட்ட, வீட்டுக்கு போயிட்டு வரேன், வந்து நைட் டின்னர் உன்னோட சாப்பிட்டு அப்புறமா கிளம்புறேன், ஓகேவா, அதுக்குள்ள டாக்டர் வந்துட்டு போயிருவாங்க இல்ல”, என்று சொல்ல,

   அமைதியாக தலையாட்டினாள், இவள் தலையாட்டுவதை மற்றவர்கள் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

யாழினி அம்மாவோ,  யாழினி பெரியம்மாவிடம் இந்த புள்ளையை பாருங்களேன், அந்த பையன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு  இருக்கு,  நாம எதுவும் சொன்னா,  எவ்வளவு பேசும்”, என்று சொன்னார்.

    அருகில் இருந்த நந்தனோ “வீட்ல எவ்வளவு சத்தமா பேசுவா, இங்க சத்தம் கேட்குதா, முதல்ல அதை நோட் பண்ணுங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

     கதிரவனின் அக்காவிடம் அவன் அம்மா, “சீக்கிரம் தேதி பார்க்க சொல்லுடி, எனக்கு என்னமோ சரியா படல”, என்றார்.

      “சும்மா இருங்கம்மா, அவன் ஏதோ பேசிட்டு இருக்கான், அந்த பொண்ணு தலையாட்டிட்டு இருக்கு, இதுல என்ன இருக்கு”, என்று சொன்னாள்.

   “எப்படியோ போ, அவ தான் வீட்டு மருமக ன்னு ஆகிப்போச்சு, இனிமேல் தேதி பார்க்கிறத ஏன் தள்ளி போடனும்”, என்று சொன்னார்.

    “அவன் தான் நேத்தே சொல்லிட்டானேமா, அவ கை சரி ஆகணும், அவனுக்கு வேலை முடியனும், அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் ன்னு சொல்லிட்டான் இல்ல விடுங்க, அவளுக்கும் கை சரியா ஆகட்டும்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

       அப்போது எழுந்து அவர்களிடம் பேசத் தொடங்கியவன்,  “நான் வீட்டுக்கு போய்ட்டு குளிச்சிட்டு கிளம்பி வர்றேன், நீங்க அதுவரைக்கும் இருங்க, நான் வந்ததுக்கு அப்புறம் நீங்க எல்லாம் கிளம்புங்க, நைட் டின்னர் இசைக்கு இன்னைக்கு நான் வாங்கிட்டு வந்துருவேன், நீங்க வீட்டுக்கு போயிட்டு நைட் அவ கூட இங்க தங்குறது யாரோ, அவங்க மட்டும் நைட்டு ஒன்பது மணிக்கு மேல வாங்க,நான் ஒன்பது மணி வரை  அவ கூட இருக்கிறேன்”, என்று சொன்னான்.

       “என்ன டா இது” என்று யாழினி அம்மா கேட்டார்.

நந்தனோ “சித்தி இது ஆஸ்பத்திரி” என்றான்.

   யாரும் அவனிடம் சரி என்று கூட சொல்லவில்லை, ஆனால் அவன் அதை பற்றி கவலை படவில்லை, “சரி நான் ஒரு 7 ஆர் 7.30 வந்துருவேன் அதுவரைக்கும் இருங்க”, என்றான்.

    கதிரவனின் அம்மாவோ “என்னடி இது, அவன் என்ன இப்படி சொல்லிட்டு போறான்”, என்று அவன் அக்காவிடம் கேட்டார்.

அவன் அக்காவோ “இத உங்களால அவன் கிட்ட ஏன் ன்னு கேட்க முடியுமா”, என்றார்.

  “எங்க கேக்க, அவனிடம் திரும்பி பேசக்கூட முடியல, நான் ன்னு இல்ல யாராலையும் இப்ப ஏன் எதுக்குன்னு எதுவும் கேட்க முடியாது”, என்றார்.

“அப்போ பேசாம அவன் வரும் வரைக்கும் உட்கார்ந்து இருங்க”, என்று சொன்னாள்.

     நந்தன் ஆர்டர் செய்துவிட்டு வந்திருந்த ஜூஸ் வந்து சேர, அதை எடுத்து அவள் கையில் கொடுத்தவன், “நைட் சாப்பாடு ஸ்பெஷலா வருதாம்மா, இப்ப ஜூஸ குடி” என்று நந்தன் சொல்லிக் கொண்டே கொடுத்தான்.

அவளோ ஜூஸை வாங்கியவள், “உனக்கு பொறாமை”, என்று நந்தனிடம் சொன்னாள்.

     “இப்ப நீ தான் பேசினியா”, என்றான் நந்தன்,

       “நானே தான்” என்று சொன்னாள்.

   “இவ்வளவு நேரம் அவர்கிட்ட பேசும் போது, இந்த சத்தம்  வெளியே கேட்கல, இப்ப சத்தம் பெருசா வருது”, என்றான்.

  “உங்க கிட்ட இப்படித்தான் பேசுவேன்”, என்று சொன்னாள்.

       “சரிதான்” என்று சொல்ல, அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.,

      யாரும் எதுவும் சொல்லவில்லை, சரி இது தான் அவர்களுக்கான வாழ்க்கை என்று முடிவான பின்பு, தலையிட நாம் யார் என்ற எண்ணத்தோடு நின்று கொண்டனர்.

     அவன் சொன்னது போலவே சரியாக 7.40க்கு வந்து சேர்ந்திருந்தான்.

    கையில் இரவு உணவு பாக்கெட்டோடு அப்போது தான் அவள் கையில் கட்டை பார்த்தான், அதில் ஏதோ எழுதி இருக்க டாக்டர் எழுதி இருப்பது புரிந்தது.

  கையில் ரத்த காயத்திற்கும் கட்டு மாற்றப்பட்டு இருப்பதை பார்த்தவுடன், “டாக்டர் ரவுண்ட்ஸ் வந்துட்டு போயிட்டாங்களா”, என்று நந்தனிடம் கேட்டவன் “என்ன சொன்னாங்க” என்பதை கேட்டுக் கொண்டிருந்தான்.

    அதன் பின்பு அதைப்பற்றி பேசாமல், “சரி நீங்க கிளம்புங்க, நந்தன் நீங்க தானே நைட்டு தங்க போறீங்க”, என்று கேட்டான்.

    “ஆமா” என்று சொல்ல,

    “நீங்க  ஒன்பது மணிக்கு மேல வாங்க” என்று சொல்லி அனைவரையும் கிளப்பி அனுப்பி வைத்தான்.

    அவர்கள் சென்ற பிறகு கதவு திறந்தே இருந்தது.

   அவனும் அமைதியாக  அருகில் வந்து அமர்ந்தவன் “என்ன விஷயம்”, என்று கேட்டான்.

    “எனக்கு உங்க கூட கொஞ்ச நேரம் இருக்கணும் அவ்வளவுதான்”, என்று சொன்னாள்.

அவனும் “சரி இருக்கலாம்” என்று சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

     “ஆமா கதவை ஏன் முழுசா திறந்து வச்சிருக்கீங்க”, என்று கேட்டாள்.

    “அங்க பாரு, பேக் வச்சிட்டு போயிருக்காங்க, இப்போ உங்க வீட்ல உள்ள ஆள், அல்லது எங்க வீட்டில் உள்ள ஆள் யாராவது வருவாங்க அதுக்கு தான்”, என்று சொன்ன படி எழுந்து அருகில் இருந்த சேர் ல் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவன் சொன்னது போலவே கதிரவனின் அக்காவும், நந்தனும், வந்தனர்.

      இவன் “என்ன விஷயம், வாங்க” என்று கேட்டான்.

       அவர்களோ “இல்ல பேக் வச்சிட்டு போயிட்டாங்க”,என்றனர்.

     “ஒரு பேக் வச்சிட்டு போனதுக்கு, ரெண்டு பேரு வந்து இருக்கீங்க”, என்று கேட்டான்.

  “இல்ல டா  என்னோட செல்லும் இங்க தான் இருக்கு” என்றாள்.