Advertisement

     தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தவள், “யார் நீங்க என்ன வேணும்” என்று கேட்டாள்.

    அவனும் “காபி குடிக்கல” என்று கேட்டான்.

    இதோ குடிக்க போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

     அவன் அருகே குனிவது தெரிந்தவுடன் கையில் இருந்த பாட்டிலை வைத்து அவன் மண்டையில் ஓங்கி அடித்தாள்.

    அவன் அதிர்ச்சியோடு விலக, “யாரு மேன் நீ” என்று கேட்டாள்.

    பாட்டிலும் லேசாக உடைந்திருந்தது,  நந்தன் அங்கிருந்து கதிரவனுக்கு கமெண்டரி கொடுத்துக் கொண்டே இருந்தவன், அவள் அடித்துவிட்டாள் என்று சொல்லிக் கொண்டே “நான் போறேன்” என்றான்.

     “அவ கிட்ட போயிடாதீங்க, தள்ளியே நில்லுங்க, அப்பதான் அவளுக்கு பாதுகாப்பு”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனும் நின்று பார்க்க,

       அடுத்தவன் முதலில் சென்றவன், தலையில் அடி வாங்கி ரத்தத்தோடு இருப்பதை பார்த்தவன் வேகமாக ஓடி வர,

    மீண்டும் உடைந்த பாட்டில் வைத்தே அவன் மண்டையில் ஒரு அடி அடித்தவள், “தள்ளி போங்கடா” என்று சொல்லி உடைந்த பாட்டிலை வைத்தே மிரட்டிக் கொண்டிருந்தாள்.

      “நீ பின்னாடி வர்றதை பார்த்துட்டு தான், இந்த கடைக்கு வந்து உட்கார்ந்தேன், எவ்வளவு தைரியம் இருந்தா பின்னாடி வருவ”, என்று சொல்லி பாட்டிலை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தாள்.

     மிரட்டிக்கொண்டே அப்படியே டிராலியை  தள்ளி விட்டு நகர்ந்தவள், கையில் கிடைத்த இன்னொரு பாட்டிலையும்  எடுத்துக்கொண்டாள்.

அதேநேரம் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே சொல்லி இருந்ததால், போலீஸ் வந்து விட அவள் நகர போகும் போது,  கீழே இருந்த கண்ணாடியை எடுத்து அவள் மேல் ஒருவன் குத்த வந்தான்.

    அவள் கையை வைத்து தடுக்க பார்க்க, குத்தி விடுவானோ என்ற பயத்தில் வேகமாக காலை தூக்கி அவனை ஒரு மிதி மிதிக்கவும் செய்தாள்,

      அவன் கீழே விழும் போது இவள் கையையும் சேர்த்து முறுக்கிப் பிடித்து விட,  கையில் அவளுக்கு லேசாக வலி வந்தது போல தோன்றியது.

போலீஸ் வந்து விட, அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள், என்று இருக்க,  அதே நேரம் கதிரவனும் வந்து சேர்ந்தான்.

   நந்தன் வேகமாக வந்து கீழே விழும் முன் அவளை பிடித்துக் கொண்டான்,

    ஒருவன் அவள் கையைப் பிடித்து இருந்தது மட்டுமே பார்த்த நந்தனுக்கு,  கையைப் பிடித்தது மட்டுமே தெரிந்திருந்தது, ஆனால் மற்றொருவன் கண்ணாடியை வைத்து அவள் கையில் கீறிவிட்டதை கவனிக்கவில்லை,

   அதில் ரத்தம் சொட்டவும் பார்த்தவன் கதிரவனிடம், “யாழினி கையில் ரத்தம் வருது” என்று சத்தமாக சொன்னான்.

    “துணி போட்டு கட்டுங்க” என்று சொன்னான்.

    கர்சிப்பை வைத்து அவள் கையை அழுத்தமாக கட்டி ரத்தத்தை நிறுத்த முயற்சி செய்தான்.

    அதற்குள் கடைக்குள் இருந்தவர்கள்,ஐஸ் கொண்டு வந்து கொடுக்க அழுத்தி பிடிக்கும் போது தான், அவள் கை வீங்க தொடங்கி இருப்பதை கவனித்தனர்.

அவளுக்கும் ரத்தம் ஒரு பக்கம் வடிய, கை வீக்கம் ஒரு பக்கம் வலியை கொடுக்க, அவள் அறியாமல் கண் சொருகுவது போல இருந்தது.

அதே நேரம் அவள் கதிரவனை தான் பார்த்தாள். கதிரவன் கையில் கிடைத்த இருவரையும் அடி நொறுக்கி இருந்தான்,

     பின்பு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில்  வந்தவர்களிடம் இருவரையும் அரஸ்ட் செய்து கொண்டு செல்லும் படி சொன்னான்.

    இது அங்கு செய்தியாக பரவத் தொடங்கி இருந்தது.,  “ஹாஸ்பிடல் போவோம்” என்று சொல்லி விட்டு “காரை எடுங்க” என்று சொல்லும் போதே அவள் மயங்க தொடங்குவதை பார்த்தவன்.

    தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான், “இசை உனக்கு ஒன்னும் இல்ல, யூ ஆர் சேஃப்” என்று சொன்னான்.

  “கை வலிக்குது” என்று மட்டும் சொன்னவள் அப்படியே அவன் மேல் சாய்ந்தாள்.

ஐஸ் வைக்க ரத்தம் ஓரளவுக்கு நின்றிருந்தது,  மீண்டும் கடையில் உள்ளவர்கள் ஒரு துணியை போட்டு அவள் கையை கட்டி இருந்தனர்.

     அப்போது தான் அவனோடு பின்னே வந்திருந்த அவனுடைய டீமில் உள்ளவர்களிடம் “அந்த கப் காஃபியை அப்படியே டெஸ்ட் க்கு எடுங்க”, என்று  சொல்லிக் கொண்டிருந்தான்.

அவர்களும் அந்த காபியை எடுத்துக் கொள்ள, இவன் அவளை பத்திரமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பொறுப்பை ஏற்று, அவளை மருத்துவமனையில் சேர்த்து இருந்தான்.

     ஒருவன் கையை அழுத்தமாக பிடித்து அழுத்தியது மட்டுமில்லாமல் அவள் கையில் இருந்த பாட்டிலை கீழே போட வைக்கும் பொருட்டு கையை முறுக்கி இருந்ததால் கை  மணிக்கட்டு பகுதியில் எலும்பில் சிறு முறிவு இருந்ததாக சொல்லப்பட்டது.

வலது கை கட்டு போடப்பட்டிருந்தது,  அதே நேரம் கையில் அவன் கண்ணாடியை வைத்து கிழித்தது சதைப்பகுதியில் லேசாக தான் கிழித்திருந்தது,

    இவள் கையை நகர்த்தி விட்டதால் ஆழமாக கிழிக்கப்படவில்லை, அதனால் லேசான இரத்த காயத்தோடு நின்று விட்டது.,  அவள் மருத்துவமனையில் இருக்க,  அதற்குள் வீட்டினர் அனைவரும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.

   இவளுடைய லக்கேஜ் அனைத்தையும் போலீஸ் எடுத்து கதிரவனிடம் ஒப்படைத்து இருந்தது.

   டாக்டரும் “இரண்டு நாள் இருந்து பார்த்துவிட்டு செல்லலாம்”, என்று சொன்னார்.

பரிசோதனைக்கு சென்ற இடத்தில் காபியில் போதைப்பொருள் கலக்கப்பட்டு இருப்பது தெரிந்தது, அது சற்று அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டிருந்ததும், அந்த காபியை அவள் குடித்திருந்தால், கிட்டத்தட்ட 15 – 20 நாள் அரை மயக்க நிலையில் இருந்திருப்பாள் என்றும் சொல்லப்பட்டது.

    கதிரவன் அதிகமாக டென்ஷன் ஆனான், ‘இவளை பற்றி அவர்களுக்கு எப்படி தெரியும்’ என்று யோசனையில் ஆழ்ந்திருந்தவன், ‘எப்படியோ மோப்பம் பிடிச்சுட்டானுங்க’ என்று சொல்லி மீதி ஆள்களையும் பிடிக்க அவசரப் படுத்திக் கொண்டிருந்தான்.

    அன்று கதிரவன் வீட்டு ஆட்களும் அங்கு தான் மருத்துவமனையில் அவளை பார்க்க வந்திருந்தனர்.

இவளோ தூக்கம் மருந்தின் வீரியத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அடிபட்ட அன்று இரவுக்குள் இவை அனைத்தும் தெரிந்திருக்க, கதிரவனோ வேலையில் இருந்து அவளை பார்க்க வந்து சேர்ந்தான்.

    யூனிஃபார்மிலே வந்திருந்தான், வந்தவன் வீட்டு ஆட்களை பார்த்தவன்,   “அவளுக்கு என்ன சொன்னாங்க” என்று நந்தனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்,

    அவள் அருகில் சென்று அவள் கையைப் பிடித்த படியே அமர்ந்திருந்தான்.

   பின்பு யாரைப் பற்றியும் யோசிக்காமல் தூக்கத்தில் இருந்தவளுக்கு தலையை கோதி விட்டு நெற்றியில் முத்தம் வைத்தான்.

ஆஸ்பத்திரியின் அறையில் இருந்தவர்கள் அனைவரும் வாயை திறந்தபடி அவர்களையே பார்த்திருந்தனர்,  அவளுடைய தலையை தடவுவதும், நெற்றியில் முத்தமிடுவதையும் உணர்ந்தவள், “பரிதி” என்று அந்த அரை தூக்க நிலையிலும் அழைத்தாள்.

அருகில் இருந்த ராதாவும் நந்தனும் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மற்றவர்களுக்கு கேட்டதா என்று தெரியாது, ஆனால் ராதாவிற்கும் நந்தனுக்கும் நன்றாகவே கேட்டது, அதை கவனித்த மற்றொரு நபர் கதிரவனின் அக்கா, அவரோ கன்னத்தில் கையை வைத்த படி ராதாவையும் நந்தனையும் பார்க்க,

அவர்களும் அப்போது தான் அவரும் கேட்டதை உணர்ந்தனர்.

  ஒருவருக்கொருவர் சிரித்தபடி சீக்கிரம் “கல்யாண தேதிய ஃபிக்ஸ் பண்ணுங்கப்பா” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

   அவனும் அரை தூக்கத்திலும் அவள் அழைத்ததை நினைத்து, “நான் தாண்டா, ஒன்னு இல்ல டூ டேஸ் ஹாஸ்பிடல இருந்துட்டு வீட்டுக்கு போயிறலாம்” என்று சொன்னான்.

     “கை ரொம்ப பெயினா இருக்கு” என்று கண்ணை திறக்காமலேயே அவனிடம் சொன்னாள்.

      அவனும் சரியா ஆகிரும் என்று அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

    அப்போது தான் வீட்டில் உள்ளவர்கள், அவன் பேசுவது எதுவும் அவர்கள் யாருக்கும் கேட்காமல் நின்றனர்.

    கதிரவனின் அக்கா தான், “கல்யாண தேதி வைக்க ரெடி பண்ணுங்க, எப்போ பேசி முடிக்க போறீங்க நீங்க எல்லாம் சேர்ந்து” என்று கேட்டார்.

“பேசி முடிக்க வேண்டியது தான், இனிமேல் என்ன செய்ய முடியும்”, என்று நந்தனின் அம்மா சொன்னார்.

  அவள் மீண்டும் தூக்கத்திற்கு சென்று விட அதன் பிறகு பெரியவர்களிடம் வந்தவன்,

   “ஏன் இத்தனை பேர் இங்கு இருக்கீங்க, கிளம்ப வேண்டியது தானே”, என்று கேட்டான்.

     நந்தன் தான், “இல்ல எல்லாரும் இப்ப தான் பார்க்க வந்தாங்க, கிளம்பிடுவாங்க, நான் தான் இங்க இருக்க போறேன்”, என்று சொன்னவன்.

“சரி, பார்த்துக்கோங்க” என்று சொன்னவன், அங்கிருந்து கிளம்பும் போது கதிரவனின் அப்பா தான் “எப்பா யாழினி க்கு கை சரியான உடனே தேதிக் குறிக்கலாம்னு இருக்கோம், நீ என்ன சொல்ற”, என்று கேட்டார்,

     அவனும் “ஒரு பத்து நாள் பொறுங்க, அதுக்கப்புறம் நானே சொல்றேன்”, என்று சொன்னான்.

    “ஏன்” என்று கேட்டார்.

    “பத்து நாள் வேலை டைட்டா இருக்கும் , அதுக்குள்ள எல்லாரையும் பிடிச்சிருவோம், பிடிச்சதுக்கு அப்புறம் மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணலாம்”, என்றவன், நந்தனிடம் திரும்பி “அவளுக்கு ஒரு வாரத்துக்கு கொஞ்சம் லீவு சொல்லிருங்க” என்று சொல்லிவிட்டு அவன் வேலையை பார்க்க சென்றான்.

      கதிரவனின் அம்மாவோ “எல்லாம் அவன் இஷ்டம் தான், அவ எத்தனை நாள் ரெஸ்ட் எடுக்கணும் ன்னு, இவன் என்ன முடிவு பண்றது, அவ கூட ரெண்டு நாள் கூட எடுப்பா, இவனுக்கு என்ன வந்துச்சு, இருந்தாலும் கொஞ்சம் ஓவரா தான் போறான்”, என்று  கதிரவனின் அக்காவிடம் சொன்னார்.

   அவள் வீட்டு பெரியவர்களும் அதைத் தான் நினைத்துக் கொண்டிருந்தனர்.

  என்று எதிர்த்தார்களோ, அன்றே முடிவு அனைத்தும் அவன் கைக்கு போய்விட்டது என்பதை அவர்கள் அறியவில்லை.

Advertisement