அதுவும் கைய காலை ஆட்டிக்கொள்ள, இவளோ “சமத்து குட்டி, நான் உன்னை வந்து டெய்லி பார்ப்பனாம்” என்று சொல்லி குழந்தையை கொஞ்சி விட்டே, வீட்டிற்கு

போனாள்.

  குழந்தையோடு ஒரு செல்பி எடுத்து இருந்தவள், அதை பரிதிக்கு அனுப்பி வைத்தாள்.

  அவன் ஒரு நிமிடம் நேரம் கிடைத்தாலும் இவளோடு பேசினான், நேரமே இல்லாமல் வேலையில் பிஸியாக இருந்தாலும், ஒரு மெசேஜாவது போட்டு விடுவான்,  இவளும் அவன் வேலை நேரத்தை புரிந்து அதற்கு தந்தார் போல் நடந்து கொள்ள தொடங்கியிருந்தாள்.

   அந்த போதை பொருள் கும்பலில் சிலரை கைது செய்து இருக்க, இன்னும் அவசர கதியில் அவர்களை பிடிக்கும் பொறுப்பை மேலிடம் அறிவுறுத்திக் கொண்டிருக்க, மற்றவர்களையும் பிடிக்கும் பொருட்டு அலைய வேண்டியது இருந்ததால்,

    அவனால் தினமும் வீட்டுக்கு வர முடியும் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் வீட்டிற்கு வந்து தனக்கு தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு செல்ல வந்திருந்தவன்.

அதை வீட்டிலும் சொல்லி விட்டு கிளம்ப போகும் போது தான் வீட்டில் உள்ளே இருந்தே போன் செய்து,  “இசை கொஞ்சம் வெளியே வா” என்றான்.

அதைக்கேட்ட கதிரவனின் அக்கா “டேய் என்ன நடக்குது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

     “சொல்லிட்டு போறதுக்கு தான்” என்று சொன்னவன் வெளியே வர, அவளும் வெளியே வந்தாள்.

     அதே நேரம் நந்தனும் யாரோடோ பேசிக் கொண்டிருந்தவன், இவர்களையே பார்க்க, கதிரவனின் அக்காவும் வெளியே வந்து நின்றார்.

   வெளிய வந்த யாழினியிடம் “இசை எனக்கு ஒர்க் கொஞ்சம் டைட், டெய்லி நான் வீட்டுக்கு வர மாட்டேன், போன்ல டைம் கிடைச்சுச்சுன்னா, இப்ப இருந்த மாதிரியே ஒரு நிமிஷம் கிடைச்சாலும், உன் கிட்ட பேசிடறேன், இல்லன்னா மெசேஜ் பண்ணுவேன் சரியா, பயந்துக்காதே  ஓகே”, என்று சொன்னவன்,

     யூனிஃபார்ம்மோடு இருந்தாலும் அருகில் வந்து அவள் தோளில் கை போட்டு சேர்த்து பிடித்தவன், அவள் தோள் தட்டியவாறு “பார்த்துக்கொள், உனக்கு எல்லார் நம்பரும் மெசேஜ் பண்ணி இருக்கேன்” என்று சொன்னான்.

நந்தனும், கதிரவனின் அக்காவும் ஒன்று போல அவனை ஏறிட்டு பார்க்க,  அவனும் “பயப்படாதீங்க என்னோட சேஃப்டிக்கு, நான் அவளுக்கு சொல்றத சொல்ல தான் செய்வேன், நீங்க சீக்கிரம் பேசி முடிங்க”, என்று சொல்லிவிட்டு செல்ல தொடங்கினான்.

      பின்பு அவள் அருகில் மீண்டும் வந்தவன், “டேக் கேர் இசை”, என்று சொன்னான்.

இவளும் அவனிடம் “நீங்களும் பார்த்து, எது செஞ்சாலும் கேர் ஃபுல்லா செய்ங்க”, அமைதியாக பேசினாள்.

     நந்தனும் ‘இது நம்ம யாழினி தானா’ என்று உத்துப் பார்த்தான்.

ஏனெனில் அவள் குரல் அவ்வளவு மெல்லிதாக இருந்தது.,  அவனிடம் பேசும் போது.

அவன் லிஃப்ட் ஏறி லிப்ட் கதவு மூடும் வரை இருவரும் பார்த்த படியே நிற்க, நந்தனும் கதிரவனின் அக்கா தான், “சீக்கிரம் பேசி முடிப்பதற்கு ரெடி பண்ணுங்க” என்று சொன்னார்,

அவனும் “ரெண்டு நாள்ல அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவாங்க, வந்ததுக்கு அப்புறம் பங்ஷன் எல்லாம் முடிச்சுட்டு நம்ம பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

   அவர்கள் பேசுவது எதையும் பொருட்படுத்தாமல் இவளும் வீட்டிற்கு சென்றாள்,

    இரண்டு நாளில் ராதாவும் குழந்தையோடு அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்க,  வீட்டில் பெரியவர்கள்  அங்கும் இங்குமாக இருந்தனர்,  இவளுக்கு துணைக்காக பெரியம்மாவும் அவளுடைய அம்மாவும் இங்கிருக்க, ராதாவின் அம்மாவும் நந்தனும் ராதாவை பார்த்துக் கொண்டனர்.

பெரியவர்கள் இருவரும் இவள் வேலைக்கு சென்ற போது, ராதா வீட்டுக்கு சென்று விடுவார்கள், பின்பு இவள் வேலை விட்டு வரும் நேரம்,  அங்கு சென்று குழந்தையை பார்த்து விட்டு தான் வருவாள், அப்போது அவளோடு சேர்ந்து வீடு வந்து சேர்வார்கள்.

இவளும் அவர்களை கண்டு கொள்வதே இல்லை, அப்போது தான் இவள் ஏற்கனவே சென்ற ப்ராஜெக்ட் விஷயமாக ஜெர்மனியில் இருந்து அழைப்பு வந்தது.

ஒரு சிறிய வேலை இருப்பதாகவும், வந்தால் பத்து நாளில் திரும்பிவிடலாம் என்பதாகவும் இருக்க, நந்தன் செல்லலாம் என்றாள்,

   “குழந்தை பிறந்து இருக்கிறது, நீ போக வேண்டாம், ராதாவையும் குழந்தையும் பாரு” என்று இவளே சொல்லி விட்டாள்.

இவளே ஜெர்மன் போவதாக முடிவானது.

     ’10 நாள் வேலை விஷயமாக ஜெர்மன் போவதாக’ பரிதிக்கு மெசேஜ் அனுப்ப, அவனும் ‘தேவையானவற்றை சரியாக பேக் செய்து கொண்டு போ, நான் உன்னை அனுப்ப ஏர்போர்ட்க்கு வருகிறேன்’ என்று மட்டுமே சொல்லி இருந்தான்.

    வீட்டில் எல்லோரும் “அப்பாடா, அங்குட்டும் இங்குட்டும் அலைய வேண்டாம், நம்ம போய் ராதா வீட்டிலேயே இருந்திடலாம்” என்று பேசிக் கொண்டிருந்தனர்.

    இவளோ அவர்களைப் பார்த்து முறைத்த படி “இப்ப யாரு உங்களை இங்க இருக்க சொன்னா, நானா இருக்க சொன்னேன்,  நீங்க தான் பயந்து போய் காவல் காத்துகிட்டு இருக்கீங்க, அப்படி ஓடிப்போகிறதா இருந்தால், எனக்கு எப்பவோ ஓடிப்போ தெரியும், இப்படி நீங்க காவல் காத்துக் கொண்டிருக்கிறதுனால நான் ஒன்னும் பயந்து போய் எல்லாம் இருக்கல, போங்க போய் ராதா கூட இருங்க”, என்று சொல்லி விட்டு ஜெர்மன் கிளம்புவதற்கு தயாரானாள்.

  நந்தன் தான் எப்போதும் போல அட்வைஸ் செய்து “வேலையை பாரு” என்று சொன்னான்.

இவள் ஜெர்மன் போகிறாள் என்று தெரிந்த உடனே, கதிரவன் தன் நண்பர்களுக்கு அழைத்து “அந்த பிசாசு இங்க இருக்கா, ஜெர்மன் போய்விட்டதா” என்று கேட்டான்.

  “இல்ல இங்க தான் இருக்கா” என்று சொல்லி அவர்கள் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை பற்றியும் சொல்லி இருந்தார்கள்.

‘அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், கல்யாணம் முடித்த பிறகு தான் அவள் ஜெர்மன் போவாள்’ என்பது பற்றியும் சொல்லி இருந்தார்கள்.

‘சரி’ என்று கேட்டுக் கொண்டான்.

அவனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

இவள் அங்கு போகும் நேரம், அவள் அங்கிருந்தால் ஏதும் பிரச்சினை செய்வாளோ, என்று யோசித்தவன் தான் இதை விசாரித்து இருந்தான்.

நந்தன் ஏர்போர்ட்டுக்கு அவளை அனுப்ப வந்திருக்க,

   இவளோ அவனிடம் சற்று நேரம் பேசாமல் இருந்தவள், பின்பு “ராதாவை ஒழுங்கா பாத்துக்கோ, குழந்தை பத்திரமா பாத்துக்கோ, முதல்ல இந்த அம்மாஸ் எல்லாம் பேக் பண்ணி அனுப்புற வழியை பாரு, இது ரெண்டு தொல்லையும் தாங்க முடியல”, என்று சொன்னாள்.

    அவனும் “பின்ன ராதாவை யார் கவனிப்பா”, என்று கேட்டான்.

     “அது ராதா அம்மா இருக்கட்டும், இந்த அம்மா இரண்டையும் சொன்னேன்”, என்றாள்.

     “இரு இரு அவங்க பேசிட்டு தான் போவாங்க” என்று சொன்னான்.

“பேசுனாங்க ,பேசினாங்க, நல்லா பேசினாங்க”, என்று  சொல்லிக்கொண்டிருக்க,

   அதே நேரம் காக்கி பேண்டும் ஒயிட் ஷாட் ம் ஆக வந்து நின்றான் கதிரவன்.

   அவனைப் பார்த்த உடனே சிரித்தபடி எழுந்தவள், யோசனையோடு அருகில் வர, “யூனிஃபார்ம் இல்லம்மா வா”, என்று சொல்லி அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான்.

நந்தன் தான் “ஹலோ உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல”, என்று சொன்னான்.

    “அதை நாங்க சொல்லணும், நீங்க சொல்லக்கூடாது”, என்று கதிரவன் சொன்னான்.

  “என்ன எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டீங்களா”, என்று கேட்டான்.

    “சேச்ச மனசளவுல, எங்களுக்கு என்னைக்கோ கல்யாணம் ஆயிருச்சு, எங்களுக்கு இன்னும் முறைப்படி நீங்க கல்யாணம் பண்ணி வைக்கணும் அவ்வளவுதான்”, என்று சொல்லி விட்டு அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன்,

“பத்திரமா போயிட்டு வரணும், சேஃபா இருக்கணும்”, என்றான்.

“பத்து நாள் தானே வந்துருவேன்”, என்றாள்.

   “அதே பத்து நாளைக்குள்ள எனக்கும் இங்க ஒர்க் முடிஞ்சிடும், டேக் கேர்”, என்று சொல்லி அவளை அனுப்பி வைக்க,

    இவளும் அவனிடம் சிரித்தபடி விடைபெற்றாள்.

   அவள் உள்ளே செல்லும் வரை வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், பின்பு நந்தன் கிளம்பும் போது அவனும் நந்தனிடம் பேசிவிட்டே கிளம்பினான்.

“சீக்கிரம் பேசி முடிங்க” என்று சொல்லி இருந்தான்.