“நான் உங்களை தான் விரும்புறேன், உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்”, என்றாள்.
“என்னை எதுக்காக விரும்பின” என்று கேட்டான்.
“எனக்கு புடிச்ச மாதிரி பர்சனாலிட்டி ல இருந்தீங்க., அது மட்டும் இல்லாம யூ ஆர் லுக்கிங் ஹேன்ட்சம்”, என்றாள்.
“அந்த மாதிரி இருக்கணும்னு நானும் நினைப்பேன் இல்ல”, என்றான்.
“ஏன் எனக்கு என்ன குறை” என்றாள்.
“எனக்கும் உனக்கும் செட்டாகவே ஆகாது, என்னோட இசை பக்கத்தில் கூட யாரும் வர முடியாது, தயவுசெய்து கிளம்பி போய்கிட்டே இரு, நான் உன்னை விரும்பலை ன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கேன், கிளம்பி போ”, என்று அவன் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் போது சரியாக நந்தனும் யாழினியும் வந்து சேர்ந்தனர்.
அவன் கோபமாக கத்திக் கொண்டிருப்பதை பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏனெனில் சாராவை அங்கு அவள் எதிர்பார்க்கவில்லை, சாரா சொன்ன அவளுடைய சீனியர், கதிரவன் தான் என்பதும் அவளுக்கு தெரியாது, அமைதியாக பார்த்து நின்றவள் அடுத்த நிமிடமே தன் வீட்டை நோக்கி நகர தொடங்கினாள்,
சாரா தான், “ஏய் யாழினி நீ இங்கே இருக்கிற பாரு, உன்கிட்ட நான் தூது விடனும் எவ்வளவு ட்ரை பண்ணேன், ஆனா பாரேன், நீ தான் எனக்கு போன் நம்பர் குடுக்கல, அட்ரஸ் குடுக்கல, உன் கம்பெனி நம்பருக்கு போன் பண்ணா கூட அவங்க சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல”, என்று சொன்னவள்,
உன்னை பார்க்கலாம் ன்னு நெனச்சிட்டு இருந்தேன், அதுக்குள்ள சீனியர் ஓட ஃப்ரெண்ட்ஸ பார்த்தேனா, அது தான் வந்துட்டேன், உன்கிட்ட சொன்னேன் இல்ல, நான் விரும்புறேன்னு சொல்லி, சீனியர் அது இவங்க தான்”, என்றாள்.
கதிர் “ஏய் உனக்கு அறிவு இல்ல, நீ விரும்புவதெல்லாம் விருப்பம் ஆகாது, எனக்கும் பிடிச்சா மட்டும் தான் அது விருப்பம், ரெண்டு பேரும் விரும்பினால் மட்டும் தான் அதுக்கு பேரு லவ், ஒருத்தங்க மட்டும் விரும்பி கொண்டிருந்தா அது வேற, தயவு செய்து வெளியே போ ன்னு சொல்லிட்டு இருந்தேன்”, என்று அவன் பதிலுக்கு கத்த தொடங்கும் போதே யாழினி கையை பிடித்து சாரா வீட்டுக்குள் இழுக்க போக,
அவள் நந்தனின் கையை எட்டி பிடித்தாள், புரிந்து கொண்ட நந்தன் யாழினி தன்னோடு சேர்த்து அழைத்துக் கொண்டே சென்றான்.
யாழினி ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து நகரவும்,
சாராவோ “யாழினி உன்கிட்ட பேசணும்”, என்று சொன்னாள்.
அவளோ பதில் சொல்லாமல் நந்தன் கையை இறுக்கி பிடித்து வாசல் வரை சென்றவள்,
வீட்டில் அனைவரும் வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே யாழினி வீட்டிற்குள் சென்று விட்டாள்.
அங்கு கதிரவனும் நண்பர்களிடம் “எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க, கூட்டிட்டு கிளம்புங்க”, என்று சொல்ல,
அவளோ “நான் உன் வீட்டு வாசல்ல உக்காந்து தர்ணா பண்ணுவேன், என்ன பண்ணுவ சீனியர்”, என்றவள்,
“மரியாதை எல்லாம் அவ்வளவு தான், என்னோட விருப்பம் நிறைவேறனும் என்பதற்காக எந்த லெவலுக்கு வேணாலும் இறங்குவேன்”, என்று சொன்னாள்.
இவனோ “யார்கிட்ட வந்து மிரட்டுற ன்னு தெரியுமா”, என்று கேட்டான்,
“நீ யாரா வேணா இருந்துட்டு போ, நீ எந்த போஸ்டிங்கில் வேண்டுமானாலும் இரு, ஆனா எனக்கு வேணும்னு முடிவு பண்ணுனா, உன் மேலேயே கம்ப்ளைன்ட் பண்ண கூட தயங்க மாட்டேன்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே போலீசார் இருவர் வந்து நின்றனர்.
இவன் அவர்களை கேள்வியாக பார்க்க, “சார் பைலில் சைன் வாங்குவதற்காக வந்தோம்”, என்று சொன்னவர்கள்.
அவளை ஒரு பார்வை பார்க்க, அவனும் “வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு,
அவளிடம் “நானும் கம்ப்ளைன்ட் பண்ண முடியும், என் வீட்டு முன்னாடி வந்து நியூசன்ஸ் பண்ணிட்டு இருக்கு ஒரு பொண்ணுன்னு, சொல்லி கம்ப்ளைன்ட் பண்ண எனக்கு ரொம்ப நேரம் ஆகாது,
நான் ஏற்கனவே ஒரு பொண்ண விரும்புறேன்னு எங்க வீட்ல எல்லார்ட்டையும் சொல்லிட்டேன், கிட்டத்தட்ட ஆறு வருஷமா அவள விரும்பிகிட்டு இருக்கேன், அது எல்லாருக்கும் தெரியும், நான் என்னுடைய இசையை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது சரியா”, என்றவன்
“இடத்தை காலி பண்ணு, இல்லா னா இவங்கட்ட நான் கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்க சொல்ல வேண்டியது வரும், எப்படி வசதி”, என்று கேட்கும் போது கதிரவன் தன் அக்காவை அழைத்து “வெளியே பேக் பண்ணி எல்லாத்தையும் அனுப்பு” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
“அவ்வளவு சீக்கிரம் வெளியே அனுப்பிடுவ நீ, உன் இசை எங்க இருக்கான்னு தெரியாது இல்ல, நான் அவளை லவ் பண்றேன், அவளை லவ் பண்றேன்னு, சொல்லிட்டேயே தவிர, அவளை இதுவரைக்கும் உன் ஃபிரண்ட்ஸ் கூட நேர்ல பார்த்ததில்லை, அவ எங்க இருக்கான்னு கூட தெரியாது சும்மா கதவுடாதே”, என்றாள்.
வந்த போலீஸ்களுக்கோ சற்று அதிர்ச்சி தான், “எஸ் பி சார் லவ் பண்றாரா” என்று இருவரும் அவர்களுக்குள் முனங்கிக் கொள்ள,
பைலை கையெழுத்து போட எடுத்தவன் அவர்களைப் பார்த்துவிட்டு, “ஏன் நான் லவ் பண்ண கூடாதா, நான் லவ் பண்ண கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன”, என்று கேட்டான்.
“ஐயோ சார், அப்படி சொல்லல சார்”, என்று சொன்னவர்கள், “சார் அப்ப இந்த பொண்ணு” என்று கேட்டனர்
“யாருன்னு எனக்கு தெரியாது, காலேஜ்ல இருந்து டார்ச்சர் பண்ற டார்ச்சர் கேஸ் இது”, என்று சொன்னான்.
அவன் அக்காவோ அவன் நண்பர்களிடம் “கூட்டிட்டு போங்கடா, இல்லாட்டி அவன் டென்ஷன் ஆகி உங்ககிட்டையும் முகம் காமிச்சிடுவான்”, என்று சொன்னாள்.
நண்பர்களோ “சாரா கிளம்பு” என்றனர்.
“முடியாது, எனக்கு ஒரு முடிவு தெரியாமல், இந்த இடத்தை விட்டு நான் கிளம்ப மாட்டேன்”, என்று கத்திக் கொண்டிருக்கும் போதே,
அவனும் “முடிவு தானே இப்ப தெரியும்”, என்று சொன்னவன் வேகமாக உள்ளே சென்று அதுவரை யூனிபார்மில் இருந்தவன் அவசரமாக யூனிபார்மை மாற்றி, வேறு உடை போட்டு கொண்டு வெளியே வந்தான்.
“ஏண்டா, எங்க போற, இப்ப எதுக்கு டிரஸ் மாத்துற”, என்று நண்பர்கள் கேட்டனர்.
“ஏன்னா, என் இசை இந்த யூனிபார்முக்குன்னு தனி மரியாதை வச்சிருக்கா, அந்த யூனிஃபார்ம்மோட இருக்கும் போது அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, அப்ப நீங்க அந்த போஸ்டிங் கான மரியாதையோடு இருக்கணும், அப்படின்னு சொல்றவ, இந்த மாதிரி என்னை அசிங்கப்படுத்தவும் மாட்டா, என்ன கேள்வி கேட்க மாட்டா,
அவளை பொறுத்த வரைக்கும் அந்த யூனிபார்மில் நான் இருக்கும் போது, எனக்கான மரியாதையுடன் நான் இருக்கணும்னு நினைப்பா, இப்போ யூனிபார்ம் இல்லாம நான் போனால் தான் அவ ட்ட நெருங்கியே பேச முடியும்”, என்று சொன்னவன்,
அப்படியே இருங்க எல்லாரும் என்று சொல்லி விட்டு நகர்ந்து செல்லும் முன்,
“தம்பி நீ எதுக்கு எக்ஸ்பிளைன் பண்ணணும், அந்த பொண்ணு போ சொல்லு, நாங்க சாட்சி சொல்றோம், இந்தா போலீஸ் நிக்கிறாங்க, இதைவிட என்ன வேணும், அனுப்பிவிடு”, என்று எதிர் வீட்டு ஆன்ட்டி சொன்னார்.
“இல்ல ஆன்ட்டி எல்லாருக்கும் ஒரு டவுட் இருக்கும், அவ இப்ப சொன்னதை வைத்து எங்க அம்மாக்கு கூட சந்தேகம் வந்திருக்கும், நான் எங்க அம்மா கிட்ட சொல்லி கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆகுது, நான் லவ் பண்ற விஷயத்தை சொன்னேன், ஆனால் எங்க அம்மாக்கு நம்பிக்கை இல்ல, இப்போ இவ சொன்ன உடனே, ஆறு வருஷம் பாக்கல இப்பவும் பார்த்திருக்க மாட்டான், சும்மா கதை சொல்றான்னு, அந்த மாதிரி தான் யோசிச்சு இருப்பாங்க, ஆனா அது கிடையாது பொறுங்க”, என்றான்.
எல்லோரும் இவன் எங்கே போகிறான் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவன் வேகமாக யாழினி வீட்டிற்குள் நுழைய ஒரு நிமிடம் அனைவரும் ஷாக்காகி நின்றனர்.
அவனும் இசை என்று அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றான்.
அத்தனை பேரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, ராதாவோ நந்தனின் கையை அழுத்தமாக பிடித்தபடி “அப்போ அன்னைக்கு உங்க தங்கச்சி சொன்னது உண்மையா”, என்று கேட்டாள்.
நந்தனும் சிறிது நேரம் அதிர்ச்சியில் இருந்தவன், அவளை “நீ உள்ள போய் உட்காரு” என்று சொன்னான்.
“இல்ல கொஞ்சம் பொறுங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே
கதிரவன் யாழினி கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தான், கதிரின் குடும்பமும் வெளியே வந்திருக்க, நண்பர்கள் மற்றும் யாழினி குடும்பம், எதிர் வீட்டினர் என்று அத்தனை பேருமே வெளியே நின்றனர்.
யாழினியை அழைத்துக் கொண்டு வந்து முன்னால் நிறுத்தியவன், “இதோ என்னுடைய இசை”, என்றான்.
அதே நேரம் எதிர் வீட்டு ஆன்ட்டி தான், ” உங்க வீடு கிரஹ பிரவேசம் அப்போ இவ மயங்கி விழுந்தது உங்கள பாத்து தானா”, என்று கேட்டார்.