Advertisement

 .  தலைவலி ஜலதோஷம் என்று சொல்லும் போதே எதிர் வீட்டு ஆன்ட்டி தான், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு, பத்திரமாக இருங்கள் என்று சொல்லி இருந்தார்.

   அதையே அவளும் நினைத்து, மாத்திரை கொடுத்து வைத்திருந்தாள். அதுவே நல்லதாக போயிற்று, இரவு லேசான காய்ச்சல் இருக்க, அந்த மாத்திரை எடுத்துக் கொண்டார்கள்.

காலையில் அவளிடம் சொல்ல, “டாக்டர் யாரும் இருக்காங்களான்னு விசாரிக்கிறேன்” என்று சொன்னாள்.

   கதிரவனின் அம்மா தான், “அதெல்லாம் வேண்டாமா சரியா போயிரும், இந்த மழை குளிரு இதெல்லாம் ஒத்துக்கல, வேற ஒன்னும் இல்ல”, என்று சொன்னார்.

    “நீங்க ரெஸ்ட் எடுங்க ஆன்ட்டி, நான் உங்களுக்கு  மத்தியானம் கஞ்சி வைத்து தரேன்”, என்று சொன்னாள்.

   “இல்ல மா, நான் பார்த்துக் கொள்கிறேன்”என்றார்.

     “இல்ல ரெஸ்ட் எடுங்க, செஞ்சு தாரேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

கதிரவன் மட்டும் வேலை வேலை என்று முடிந்து வீட்டிற்கு வந்து சேரும்போது நான்கு நாட்கள் கடந்து இருந்தது, மழையும் குறைந்து சிறு தூரல் மட்டும் அவ்வப்போது போட்டது.

      கதிரவன் வரும் போதும் அவன் அம்மாவிற்கு காய்ச்சல் இருந்ததால்,  கேப் புக் செய்து விட்டு டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கியவன்,  அந்த மருத்துவமனைக்கு அருகில் இருந்த ஒரு போலீஸ்காரருக்கு போன் செய்து கேட்டான்,

    அவரும் “நான் பார்த்துக் கொள்கிறேன் சார்”, என்று சொன்னார்.

    “அவங்க முடிச்சிட்டு, அங்க இருந்து கிளம்பும் போது, இதே மாதிரி கேப் புக் பண்ணி அனுப்பி விடுங்க, நான் பாத்துக்குறேன், அங்க இருந்து கிளம்பும் போது எனக்கு போன் பண்ணுங்க”, என்று சொன்னான்.

     “சரி” என்று அவர் சொல்லவும் இவர்களை கிளப்பி அனுப்பி விட்டே யாழினிக்கு போன் செய்தான்.

    “இவங்களுக்கு ஃபீவர் என்று எனக்கு தெரியாது” என்று சொல்லவும்,

      “இரண்டு நாளா ஃபீவர் தான், உங்களை போன்ல பிடிக்க முடியல”, என்று சொன்னாள்.

       “வொர்க் டைட் இசை”, என்று சொன்னவன்,

      “சாப்பாடு என்ன பண்ணின” என்று கேட்டான்.

    “மதியம் ரைஸ், ரசம் , பருப்பு, அப்பளம் தான், இப்போ தோசை தான்” என்றாள்.

         “ரைஸ் இருக்கா , எனக்கு ரைஸ் தான் வேணும்” என்றான்,

      “ரைஸ் சூடா வைக்கிறேன், மற்றதெல்லாம் இருக்கு, நீங்க பிரஷ் ஆயிட்டு வாங்க”, என்று சொன்னவள்,  “உங்க அம்மா அப்பா எப்போ வருவாங்க” என்றாள்.

“அவங்க அங்கே இருந்து கிளம்பும் போது போன் வரும்” என்றான்.

சாப்பிட்டு விட்டு அவளோடு சற்று நேரம் பேசிவிட்டே கிளம்பினான்.

    எப்போதும் அவளை ஹக் செய்து, முத்தம் கொடுப்பவன் இன்று தள்ளி நின்றே அவளிடம் சொன்னான்.

   “சீக்கிரமாக வீட்டில் பேசப்போகிறேன், இதற்கு மேல் என்னால் உன்னிடம் இருந்து தள்ளி நிற்க முடியாது” என்று சொன்னவன்,  ஒரு பறக்கும் முத்தத்தை தந்துவிட்டு எப்போதும் போல அந்த பக்கம் சென்று கதவை பூட்டி விட்டான்.

நான்கு நாட்கள் கழித்தே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த பிறகே இருவருக்குமே மனம் நிம்மதி அடைந்தது.

      ராதா அம்மா வீட்டில் இருந்து வந்து பத்து நாட்கள் ஆயிற்று,  ஒன்பதாவது மாதம் தொடக்கத்திலேயே வளைகாப்பு செய்திருந்ததால்

டாக்டர் கொடுத்திருந்த தேதிக்கு இன்னும் 15 நாட்கள் இருந்தது.

    விடுப்பில் வீட்டில் இருந்தவளுக்கு போரடிக்க யாழினிக்கு போன் செய்து அழைத்தாள்.

   “எப்ப வீட்டுக்கு வருவ” என்று கேட்டாள்.

     “எப்பவும் உள்ள டைம் தான், ஏன் என்னாச்சு”, என்று கேட்டாள்.

    “போர் அடிக்குதுடி  அப்படியே மெதுவா பொடி நடையா உன் வீட்டுக்கு வரலாமான்னு யோசிச்சேன்”, என்று சொன்னாள்.

    “சரி, நான் உன் புருஷன் கிட்ட கேட்டு சீக்கிரம் கிளம்புறேன், அப்படின்னா நான் கிளம்பி வீட்டு பக்கத்துல வரும் போது போன் பண்றேன், நீ வந்துரு”, என்று சொன்னாள்.

       “சரி” என்று சொன்னாள்.

       யாழினி சொன்னது போலவே  சீக்கிரமாக கிளம்பி வீட்டிற்கு வந்தவள்,  இவளுக்கு போன் செய்து சொன்னாள்.

  ராதா வருவதைப் பார்த்து அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

   வீட்டுக்கு வந்தவளுக்கு சிற்றுண்டி போல செய்து கொடுத்தவள், தனக்கும் காபி கலந்து எடுத்தவள், அவளுக்கு பாலை ஆற்றி கையில் கொடுத்து விட்டு அவளோடு அமர்ந்து பேசத் தொடங்கியிருந்தாள்.

அப்போது தான் இன்னும் இரண்டு நாளில் நந்தன் அம்மாவும், யாழினி அம்மாவும் வருவதை பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

    யாழினியோ “எதுக்கு இந்த அம்மாஸ் ரெண்டு பேரும் அவசரமா வராங்க, டெலிவரி டைம்ல வந்து இருக்க வேண்டியது தானே” என்று சொன்னாள்.

     “இல்லடி பெயின் எப்ப வரும் ன்னு தெரியாது, அதனால ரெண்டு பேரும் பயப்படுறாங்க, அது மட்டும் இல்ல, எங்க அம்மாவையும் சேர்த்து வர சொல்லி இருக்காங்க, சோ இப்ப யோசிச்சு பாரு மூணு அம்மாஸ்” என்று சொன்னாள்.

    “மூன்று பேரையும் இங்கு அனுப்பி விடு, நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

      அவளோ “அதெல்லாம் இல்ல, நீ சொன்னா கூட இங்க வர மாட்டாங்க, எல்லாம் அங்க வந்து தான் உட்கார்ந்து இருப்பாங்க”, என்று சொன்னாள்.

    “அப்போ ஒன்னு பண்ணு, அவங்க மூணு பேரையும் அங்க விட்டுட்டு நீயும் உன் புருஷனும் பெட்டிய கட்டிட்டு இங்க வந்துருங்க” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்.

   அவர்கள் சொன்னது போலவே, இரண்டு நாளில் அம்மாஸ் எல்லாரும் வந்து சேர்ந்து இருக்க, நந்தன் வீடு களைகட்டி இருந்தது.

     இவள் தான் பரிதியிடம் பேசும் போது, “நான் இனிமேல் ஆபீஸ் விட்டு நேரா வீட்டுக்கு வரமாட்டேன், நேரா அங்க போகனும்,  அம்மா எல்லாம் அங்க இருக்காங்க, அவங்கள பாத்துட்டு பேசிட்டு அதுக்கப்புறம் தான் வீட்டுக்கு வருவேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

   அவனும் “அப்ப என்ன பார்க்க நேரம் இல்ல இல்ல உனக்கு”, என்று கேட்டான்.

       “ஹலோ அது தான் தினம் வீடியோ கால்ல பார்க்கிறோம், போன்ல பேசுறோம், அப்புறம் என்ன”, என்றாள்.

       “நீ சீக்கிரமாக வா,  இன்னைக்கு நைட்டு எங்க அம்மா அப்பாவும் தூங்கின பிறகு நான் உன்ன பார்க்க  வாறேன்” என்றான்.

    இவளோ “உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான், திடீர்னு எங்க அம்மாவோ இல்ல, பெரியம்மாவோ என் கூட வந்து இருந்தாங்கன்னா, என்ன பண்ணுவீங்க, வீட்டுக்கு வர்ற ஆளை பாரு”, என்று திட்டிக் கொண்டிருந்தாள்.

    “அப்ப எப்ப தான் உன்னை பார்க்குறது” என்று கேட்டான்.

    “அதெல்லாம் ராதா டெலிவரி முடிகிற வரைக்கும் சமத்துப்பில்லையா, அடக்க ஒடுக்கமா இருங்க, டெலிவரி முடிஞ்சதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் இவங்க எல்லாரும் அவளை நல்ல கவனிச்சுட்டு தான் அங்க ஊருக்கு கிளம்பி போவாங்க, அவங்க அவங்க வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் சொல்றேன், அதுக்கப்புறம் நாம பார்க்கலாம்” என்றாள்.

      “இது என்ன அநியாயமா இருக்கு, எல்லாரும் அவங்கவங்க வீட்ல இருந்து கிளம்பி வந்துட்டு, என்னைய என்  பொண்டாட்டிய பார்க்க விடாம பண்றாங்க”, என்று சொன்னான்.

   சிரித்துக் கொண்டே “அதுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கனும்,  நாம இன்னும் லவ் மட்டும் தான் பண்ணிட்டு இருக்கோம்”, என்று சொன்னாள்.

    “கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் வரட்டும்”, என்றான்.

   “வந்தா” இன்று இவள் ஓங்கி கேக்கவும்.

    “வந்தா என்ன பண்ணுவேன், பொண்டாட்டி பேமிலிய ஐஸ் வைப்பதற்கு என்ன வழி உண்டோ அதை செய்வேன்”, என்று சொல்லவும்,

இங்கு சிரித்தவள் “இருந்தாலும் உங்களுக்கு வாய் ரொம்ப கூடுது”, என்று சொன்னாள்.

    அவனும் “முதல்ல அவங்கள என் ட்ட  நார்மலா பேச சொல்லு, அதுக்கப்புறம் பார்ப்போம், யாருமே என்கிட்ட நார்மலா பேச மாட்டாங்க தெரியுமா, அதுவும் இந்த யூனிஃபார்ம்ல கிளம்பும் போது, எங்க அப்பா கூட பேசக்கூட மாட்டாங்க, அதுதான் பிரச்சினையே”, என்று சொல்லி தன் மனதை பகிர்ந்து கொண்டிருந்தான்.

    இவளும் “சரி நான் அப்புறம் ஆபீஸ் விட்டு வந்து போய் ராதாவை பார்த்துட்டு எங்க அம்மாஸ்க்கு எல்லாம் ஒரு ஹாய் சொல்லிட்டு, கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு, அப்புறம் கிளம்பி வாறேன், வரும் போது உங்களுக்கு போன்ல மெசேஜ் பண்றேன் ஓகேவா”,  என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

    இதுவே தொடர்கதையாகி இருக்க,  ஒரு நாள் ராதா தான் “ஏய் அம்மாஸ் எல்லாம் இன்னைக்கு உன் வீட்டுக்கு வராங்களாம், நாங்க எல்லாம் முன்னாடி போறோம்”, என்று சொன்னாள்.

   “சரி உன்னிடம் தான் ஒரு சாவி இருக்குல்ல போ” என்று சொன்னவள், “நான் வந்துடறேன்” என்று சொன்னாள்.

Advertisement