Advertisement

13

    மறுநாள் காலை அவன் சீக்கிரமாகவே கிளம்பி சென்று விட, இவள் அவன் சொல்லியது போல ஏழு மணிக்கு கிளம்பினாள்.

     தற்செயலாக எதிர் வீட்டு ஆன்ட்டி பார்க்க, அவளை என்னம்மா சீக்கிரம் கிளம்பிட்ட என்று சொல்லி கேட்டுக் கொண்டிருக்கும் போதே,  கதிரவனின் அம்மாவும் வந்து விட்டார்.

     இவளோ “ஆன்ட்டி பிரண்ட் ஊர்ல இருந்து வர்றா, அவளுக்கு இங்க கொஞ்சம் ஒர்க் இருக்கு, இங்கே நிறைய இடம் அவளுக்கு தெரியாது,  சோ போய் அவளை ஸ்டேஷன்ல ரிசீவ் பண்ணிட்டு, அப்படியே எங்களோட இன்னொரு பிரிண்ட் தங்கியிருக்க ஹாஸ்டல் போக போறோம்,

அங்க போயிட்டு,  அங்க இருந்து அவ ரெடியான பிறகு கிளம்பி,  நாங்க பிரண்ட்ஸ் மூணு பேரும் சேர்ந்து அவளோட ஒர்க்க முடிச்சிட்டு,  அவளை ஈவினிங் விட்டுட்டு தான் நான் வருவேன்”, என்று சொன்னாள்.

   “சரி மா, போய்ட்டு வா, பார்த்து போயிட்டு வா”, என்று சொன்னவர், ” நந்தனுக்கும் ராதாக்கும் சொல்லிட்டியா”, என்று கேட்டார்.

   “அவங்க கிட்ட அன்னைக்கே சொல்லிட்டேன், ஆன்ட்டி” என்று சொல்லி விட்டு சிரித்த முகத்த உடனே கிளம்பினாள்.

   இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கதிரவனின் அம்மாவோ, “இந்த காலத்து பிள்ளைகளை நம்ம என்ன சொல்ல முடியுது, எல்லாம் அதுங்க இஷ்டத்துக்கு தான் போகுது, இஷ்டத்துக்கு தான் வருதுங்க, வீட்ல யாரும் கண்ட்ரோல் பண்ண முடியல, ஒரு பொம்பள புள்ள காலங்காத்தால ப்ரண்ட பாக்க போறேன், கூட்டிட்டு வெளியே போயிட்டு வேலையெல்லாம் முடிச்சு அனுப்பி விட்டு வருவேன்னு சொல்லும் போது என்ன சொல்ல முடியும்”, என்றார். எதிர் வீட்டு ஆன்டியை பார்த்து

        அவரோ “இப்போ உள்ள பிள்ளைகள் எல்லார்க்கும் நல்லது கெட்டது அவங்களுக்கு எல்லாமே தெரியும்,  பாதுகாப்பா இருக்கிறது எப்படின்னு தெரியும், எப்படி ஜாக்கிரதையா மத்தவங்க கிட்ட நடந்துக்கணும்னு தெரியும்”, என்று சொன்னார்.

“அதுவும் சரிதான்” என்று சொல்லி விட்டு அவர் வீட்டிற்குள் சென்றார்.

    ஆன்டியும் அவர் வீட்டிற்கு சென்றார்,  இவளோ லிப்டில் இருந்து இறங்கி வெளியே சென்றவள்.  புக் செய்து இருந்த ஆட்டோவில் அவன் சொன்னது போலவே ரயில்வே ஸ்டேஷன்  சென்றாள்,

பின்பு அங்கிருந்து சற்று தூரம் நடந்தவுடன், அவன் இவளுக்காக காத்திருந்தான்.

  யூனிஃபார்மிலும், டிராக் டீ சார்ட் லுமே பார்த்தவளுக்கு இன்று பார்மல் உடையில் அவனை பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.,

   லேசாக  ஹெல்மெட்டை கலட்டி அவளை பார்த்து வா என்று சொல்லவும், அருகே சென்று ஏறி அமர்ந்தாள், அவளும் ஹெல்மட் மாட்டிய உடன் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்,  சற்று தூரம் சிட்டிக்குள்ளே வண்டி சென்றது,

    இவளோ “எங்க போறோம்” என்று அவனிடம் கேட்டபடி வந்தாள்.

    ஹெல்மெட் போட்டிருந்ததால் அவன் அருகே சென்று தான் பேச வேண்டியதாக இருந்தது.,

அவனும் “கொஞ்சம் பொறு” என்று சொல்லி விட்டு, சிட்டியை விட்டு வெளியே வந்து வண்டியை போக்குவரத்து இல்லாத சாலையோரம் நிறுத்தினான்.

  ஹெல்மெட் கழட்டியவன் “பிடிச்சிட்டு உட்கார மாட்டீயா” என்றவன், லேசாக திரும்பி அவள் கையை பிடித்து தன் இடுப்பை சுற்றி கோர்க்க போக, அவளோ இல்ல “நான் உங்க தோளைப் பிடிச்சிக்குவேன்”, என்றாள்.

சிறிய சிரிப்போடு “உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா” என்றான்.

“லைசன்ஸ் வச்சிருக்கேன்” என்றாள்.

“ஸ்கூட்டி ஓட்டிருப்ப, இந்த வண்டி” என்றான்.

“ஒரு நாள் கத்துகிட்டா ஓட்டிடலாம்” என்றாள்.

“ஓகே ரிட்டன் வரும் போது நீ தான் ஓட்டுற, நான் சொல்லி தரேன்” என்றான்.

ஈ சி ஆர் ரோட்டில் வண்டியை வேகம் எடுக்கத் தொடங்கினான். அவளோ “மெதுவா போங்க” என்று அவனை தட்டி சொல்லிக் கொண்டிருந்தாள்.

  பின்பு அமைந்த பைக் பயணம் இருவருக்கும் மறக்க முடியாததாகவும், இனிமையாகவும் அமைந்தது.

      நேராக பாண்டிச்சேரி சென்றவன்,  முதலில் மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைத்து சென்றான், பார்ப்பதற்கு இருவரும் இளம் ஜோடிகள் என்றே மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு தான் இருவரும் இருந்தனர்,

இவளும் காலர் டைப்பில் சுடிதார் போட்டிருக்க, கழுத்தில் தாலி இருக்கிறதா ஒன்றும் போடவில்லையா என்பது வெளியே தெரியவில்லை,

   கோவில் பிரகாரத்தில் அமர்ந்த போது “என்ன வேண்டின” என்று கேட்டான்.

“நீங்க என்ன வேண்டினீங்களோ அதே தான்”, என்றாள்.

அவளை பார்த்து ஒரு வித்தியாசமாக சிரித்தவன், “கல்யாணம் சீக்கிரம் நடக்கனும் ன்னு சாமிட்ட கேட்டேன், அதோட”, என்றவன்.

“அதோட”, என்றாள்.

  “ஆறு பேபி வேணும் ன்னு கேட்டேன்”, என்றான்.

    அதிர்வோடு அவனை பார்த்தவள், “யூ யூ என்னைய பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது, பேபி பேக்டரி மாதிரியா, நோ நோ, ஒன் ஆர் டூ தான்”, என்றாள்.

அதற்கும் எப்போதும் போல சத்தம் வராத சிரிப்பை சிரித்தவன், உன் டீல் க்கு ஓகே தான், ஆனா உடனே வேணும்”, என்றான்.

  அப்போதும் திரு திரு என்று முழித்தவள், அவனிடம் பதில் சொல்லும் முன் சற்று முன்பு அவர்கள் அருகில் அமர்ந்திருந்த வயதான தம்பதியரில் அந்த வயதான பெண்மணி,

    “என்னமா பதில் சொல்லாம இருக்க, கல்யாணம் முடிஞ்ச உடனே ஒரு பிள்ளைய பெத்துக்கனும் மா”, என்றவர்,”கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆகுது” என்றார்,

  அவள் ஏதோ சொல்ல வருவதற்கு முன் அவன் தான் “இரண்டு மாதம் ஆகுது” என்றான்,

    “சீக்கிரமே பிள்ளை கிடைக்கும்”, என்று ஆசிர்வாதம் போல சொல்லி விட்டு அவர்கள் கிளம்ப,

    அவர்கள் போன உடன், அவன் கையில் கிள்ளி வைத்தாள்.

     “இப்ப தான் உன் வீட்டுக்குள் அதிரடியா பேசின மாதிரி இருக்கு, அதுக்குள்ள இரண்டு மாதம் ஆகிருச்சி இல்ல” என்றான்.

    அவனை பார்த்துக் கொண்டே இருந்தவள், “மெதுவாக சொன்னாள், இரண்டு வீட்டிலும் சம்மதம் சொல்லட்டும்”, என்றாள்.

   “எல்லாம் நல்ல முறையில் நடக்கும் நம்பு” என்றான்.

  பின்பு அன்னை ஆஸ்திரமத்திற்கு அழைத்து சென்றவன், அவளோடு கைகோர்த்தபடி அன்னை ஆசிரமத்தை நடந்து வந்தான்.

அங்கங்கே செல்பி எடுத்துக்கொண்டு, அவளுக்கும் அனுப்பி வைத்துக்கொண்டு இருந்தவன், “போட்டோ எல்லாம் என்ன பண்ற” என்றான்.

“மறைச்சிட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    “லேப்டாப் ல ஏத்திட்டீயா” என்று கேட்டான்.

இவளோ “ம்ஹும், லேப்டாப் ராதா கைக்கு அடிக்கடி போகும்”, என்ற படி அந்த போல்டரை ஓபன் பண்ணி காட்டினான்.

    அவனும் தான் தனியாக போட்டு இருந்ததை ஓபன் செய்து காட்டினான்,

    ஏனெனில் இருவருமே அந்த போல்டருக்கு மட்டும் லாக் செய்து வைத்திருந்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள, இவளோ அவனைப் பார்த்து “உங்க கூட சேர்ந்ததிலிருந்து இல்லாத கேடித்தனம் எல்லாம் நானும் பண்ண ஆரம்பிச்சிருக்கேன், என்ன பண்ண”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

   அவனும் “காதல்னு வந்துட்டா, எல்லா கேடித்தனமும் வந்துரும், எல்லா திருட்டுத்தனமும் தெரியும், எப்படி பண்ணுனா மாட்ட மாட்டோம் ங்குற அளவுக்கு யோசிக்க ஆரம்பிப்போம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

காலை உணவை அங்கே முடித்து விட்டு பின்பு ஒரு தனியார் பீச் பக்கம் சென்றவர்கள், அங்கேயே பீச் சைடு அமர்ந்து விட்டனர்.

   அதற்கு அங்கே போவதற்கு இவன் பெர்மிஷன் வாங்கி இருந்ததால் அங்கே யாரும் இவர்களை கேட்கவில்லை,

Advertisement