அவன் ப்ரீஜ் ஐ திறந்து இவள் வைத்திருக்கும் பாத்திரங்களை பார்த்தான்.
காய்கறி வெட்டி அழகான டப்பாக்களில் போட்டு வைத்திருந்தாள்.
பின்பு மாலை காய்ச்சிய பால், பாத்திரத்தில் இருக்க, அதை எடுத்தவன் அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்தான்.
“காபி வேணுமா உங்களுக்கு”, என்றான்.
“இல்லை அதை நான் பார்த்துக்கிறேன், நீ பேசாம இரு”, என்று சொல்லிவிட்டு அவள் என்ன வைத்திருக்கிறாள் என்று ஒவ்வொரு பாக்ஸாக திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
இவளோ அவன் செய்கையே பார்த்துக் கொண்டிருந்தவள்,
பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டு “என்ன வேணும் சொன்னீங்கன்னா, எடுத்து தருவேன்” என்று சொன்னாள்.
“ஹார்லிக்ஸ் இருக்கா” என்று கேட்டான்.
“இல்ல பூஸ்ட் தான் ஒரு பாக்ஸ்ல இருக்கும்” என்று சொல்லி அதை எடுத்து கொடுத்தாள்.
“ஓகே” என்று சொல்லிவிட்டு வாங்கி வைத்தவன், பால் நல்ல சூட்டுக்கு வந்தவுடன்., அதை போட்டு கலந்து, எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.
இவள் மீண்டும் பாலை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு கிச்சனை தட்டி விட்டு விட்டு விளக்கு அணைத்து ஹாலுக்கு வந்து அவனைப் பார்க்க, கால்நீட்டி தரையில் அமர்ந்திருந்தான்.
அவளையும் தன்னருகில் அமர சொன்னவன், அவள் அமர்ந்தவுடன் அவள் கையில் பாலை திணித்து “குடிச்சு முடி” என்று சொன்னான்.
இவளோ “இல்ல” என்று ஏதோ சொல்ல வர,
“இங்க பார், இப்ப நீ குடிக்கலன்னு வை, இன்னைக்கு இங்க செட்டில் ஆயிருவேன், எப்படி வசதின்னு முடிவு பண்ணு”, என்று சொன்னான்.
அவனை முறைத்து பார்த்தவள் கொஞ்சமாக குடிக்கும் போது, அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவன், அவளை தோளில் கையை போட்டு தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டு, “என்ன பிரச்சனை சொல்லு” என்று கேட்டான்.
“உன் முகம் இவ்வளவு டல்லா நான் பார்த்ததே இல்லை, என்ன ன்னு சொல்லு”, என்று கேட்டான்.
எதுவும் சொல்லாமல் அமைதியாக குனிந்து இருந்தவள், அவனை நிமிர்ந்து பார்த்தபடி “நீங்க வேற யாரையும் கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தா, என்ன செய்வீங்க”, என்று கேட்டாள்.
அவனும் சிரித்துக்கொண்டே “அப்படி ஒரு சூழ்நிலை என்னைக்குமே எனக்கு வராது, என்ன மீறி எதுவும் நடக்காது”, என்று சொன்னான்.
மீண்டும் எதுவும் சொல்லாமல் பாலை குடிக்க தொடங்கவும்., “இது எதுக்கு கேட்ட, என்ன விஷயம்”, என்றான்.
பால் டம்ளரை கையில் வைத்துக் கொண்டு அதில் பார்வையை பதித்த படி, “உங்க வீட்ல, உங்க அம்மா உங்களுக்கு பொண்ணு பார்க்க போயிருக்காங்க, உங்க கிட்ட சொல்லக்கூடாது ன்னு நினைத்தேன், ஆனா நீங்க என்ன பிரச்சனை, என்ன பிரச்சனை ன்னு அழுத்தி கேட்கும் போது சொல்ல வேண்டியது ஆயிடுச்சு”, என்றாள்.
இதை கேட்டவுடன் அவளை இன்னும் அழுத்தமாக தன்னோடு சேர்த்து பிடித்தவன், “லூசா நீனு, அவங்க பொண்ணு பாக்க போனாங்கன்னா, அது அவங்க விஷயம், நான் போனேனா, நான் பொண்ண பாக்க போறேன்னு சொன்னா தான், நீ இப்படி மூஞ்சியை தூக்கிட்டு இருக்கணும், சரியா”, என்றான்.
“ஓஹோ அப்படி பொண்ணு பாக்க போற ஐடியா வேற இருக்கா”, என்று கேட்டாள்.
“உங்க வீட்ல ஓகே சொன்னாங்கன்னா, உன்ன பொண்ணு பாக்க வரேன்”, என்று அவன் சொன்னான்.
இவ்ளோ அவனை நிமிர்ந்து பார்த்தாள்., அவன் “என்ன ஆச்சு, உன் அலெக்சா ஒரே சோகப் பாட்டா பாடுது, ஆப் பண்ணு அலெக்சாவ”, என்று சொல்லி விட்டு அவள் கையோடு கைகோர்த்தவன்.
“ஆமா எதிர் வீட்ல ரெண்டு பேமிலி எங்க போயிருக்கு”, என்றான்.
“அவங்க கோயிலுக்கு போயிருக்காங்க” என்று சொன்னாள்.
” ஓ அப்ப இந்த ஃப்ளோர்ல நம்ம ரெண்டு பேர் மட்டும் தானா” என்று கேட்க,
அதுவும் சிரித்தபடி கேட்க, இவளோ “ஆமா ரெண்டு பேரு தான், இப்ப என்ன” என்றாள்.
“சரி அப்ப நான் இன்னைக்கு இங்கே செட்டில் ஆயிடுறேன்”, என்றான்.
“கொன்னுடுவேன், மண்டையில் ஒரு தழும்பு பத்தாதா”, என்றாள்.
அவனும் சிரித்தபடி “நாளைக்கு நான் மெதுவா போனா போதும், நாம இன்னைக்கு கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்”, என்று சொன்னாள்.
“ஆனால் காலையில் எழுந்து சமைச்சு, நான் கிளம்ப முடியாது”, என்று சொன்னாள்.
அதெல்லாம் “நான் சமையலுக்கு ஹெல்ப் பண்றேன், ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்” என்று சொன்னவன், அவள் விரலோடு விரல் கோர்த்து அழுத்தமாக பிடித்தபடி அமர்ந்திருந்தான்,
சற்று நேரத்தில் அவள் கையை விடுத்து எழுந்தவன், ஹாலில் இருந்த லைட்டை எல்லாம் ஆப் செய்து விட்டு நைட் லேம் வெளிச்சத்தில் அவள் அருகே வந்து அமர்ந்தான்,
” இப்ப பேசலாம்” என்று சொன்னான்.
இவளோ “என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்றாள்.
“ஒன்னுமில்ல லைட் இருந்தா தான் முழிச்சிருக்கோம்ன்னு தெரியும், லைட் எரியலனா, தூங்கிட்டோம் ன்னு நெனச்சிடுவாங்க, அதனால தான் நான் எங்க வீட்ல ஆப் பண்ணி வச்சிட்டு வந்தேன், அந்த ஆன்ட்டி அங்கிள் எல்லாம் எப்போ வருவாங்க”, என்றான்.
“நாளைக்கு வருவாங்க”என்றாள்.
இவள் இருட்டுக்கு தன் கண்களை பழகிவிட்டு, அவனை திரும்பி பார்த்தவள், “ஆனாலும் நீங்க கேடி போலீஸ் தெரியுமா”, என்றாள்.
அவனும் சிரித்தபடி “கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம், அப்புறமா நீ தூங்கு போ”, என்று சொல்லி விட்டு அவள் கையை மீண்டும் அழுத்தமாக கோர்த்து பிடித்தவன்,
“ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ இசை, என்னோட விருப்பம் இல்லாம யாரும் என்கிட்ட எதையும் சாதிக்க முடியாது, அது என்னோட பேரன்ஸா இருந்தாலும் சரி, என்னோட சிஸ்டரா இருந்தாலும் சரி, முக்கியமா உன்னை ஏன் கிட்ட இருந்து பிரிக்கிற எந்த விஷயத்தையும் நான் பக்கத்துல கூட சேர்க்க மாட்டேன் சரியா, இது ஆறு வருஷம் காத்திருப்பு, உனக்கு புரியாது இந்த ஆறு வருஷத்துல எத்தனை நாள் நான் ஏங்கி இருப்பேன் தெரியுமா, அதுவும் இந்த வேலையில் சேர்ந்து புதுசுல அடிக்கடி யோசித்துட்டே இருப்பேன், ஆனாலும் எனக்கு ஏதோ ஒரு விதத்துல ஒரு சின்ன நம்பிக்கை, எப்படியும் உன்னை என்னைக்காவது ஒரு நாள் பார்த்து விடுவேன் என்கிற எண்ணம், அப்பப்போ வர்ற பயம் எல்லாத்தையும் தாண்டி., இன்னைக்கு இப்போ இந்த நிமிஷம் உன் கைய புடிச்சிருக்கேன் அது மட்டும் தான் நிஜம், அதை என்னிக்குமே நான் மிஸ் பண்ண மாட்டேன்,
எக்ஸாம் முடிச்சி ட்ரைனிங் முடிச்சு நான் போஸ்டிங்க்கு வந்து நாலு வருஷம் ஆகுது, நாலு வருஷத்துல இந்த பிரமோஷன் உடனே என்னால வாங்க முடிஞ்சுச்சுன்னா, என்னால உன்னை மறக்க முடியாமல் நான் ஃபுல் கான்சன்ட்ரேஷன் ஓட வேலையில மட்டும் தான் கவனம் செலுத்தினேன்,
ஆனா இனிமேல் எனக்கு ப்ரமோஷன் பத்தி எல்லாம் யோசிக்கிறது கூட டைம் இருக்காதுன்னு தோணுது,
ஏன்னா நான் லவ் பண்ணனும்”, என்று சொன்னான்.
பட் என்று சிரித்தவள், நீங்க “அப்பப்போ காலேஜ் பையன் மாதிரி ஆயிடுறீங்க தெரியுமா”, என்றாள்.
அவனும் அவள் கையை அழுத்தமாக பிடித்து தன் இரு கைகளுக்குள் அடக்கியவன், “நான் என் பிரண்ட்ஸ் கிட்ட அடிக்கடி சொல்லுவேன், நான் யார் என்கிறது, ஏன் என்னையே மறக்க வைக்கிற ஒரு ஆளு, என் பக்கத்துல இருக்கணும் அப்படின்னு, பிரண்ட்ஸ் எல்லாம் கூட, நான் உன்னை மறந்துட்டேன்னு நினைச்சாங்க, இப்பவும் அவங்க கிட்ட நான் உன்னை மீட் பண்ணதை சொல்லவே இல்ல, சொல்லணும், பார்க்கலாம், மெதுவா சொல்லலாம்” என்று சொல்லிக் கொண்டவன்.
“என்னை நானா உணர வைக்கிறது, நீ மட்டும் தான், மத்தபடி எல்லாரும் என்ன பார்க்கிறது, என்னோட வேலை, அதில் உள்ள மதிப்பு இதை வச்சு மட்டும் தான் பார்ப்பாங்க, நீ மட்டும் தான் அதே கதிரவனா, உன்னோட பரிதியா பார்க்கிற, எனக்கு இதுதான் வேணும், இது இருந்தா போதும்”, என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தான்,
சற்று நேரம் இருவரும் அமைதியாக தனிமையை ரசித்து கொண்டு இருந்தனர்.
“ஆமா என் கூட பைக் ரைட் வர்றது உண்மை தானே”, என்று கேட்டான்.