Advertisement

  சற்று நேரம் எந்த சத்தமும் இல்லாமல் போக,   அவள் வேலையை பார்த்துக் கொண்டே திரும்பிப் பார்க்க ராதாவும் நந்தனும் அருகே வந்து நின்றனர், நன்றாக திரும்பி பார்த்து “என்ன ராது” என்றாள்.

     அவளோ “நான் அப்புறமா பேசறேன் டி உன்கிட்ட”, என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

     நந்தனோ யாழினியின் காதை பிடித்து உனக்கு சும்மாவே இருக்க முடியாதா என்ன தேவையில்லாததெல்லாம் கேப்ல வச்சு கதை பேசுறது, அந்த கதையை இங்க வந்து டெவலப் ஆகுறதுக்கு, நீயே போய் ஏஞ்சல் கிட்ட இந்த ப்ராஜெக்ட்ல இந்த இடத்தில தப்பு வருதா, போயி நீ  எங்க டீம் லீடர் ட்ட  கேளு  ன்னு சொல்லிக் கொடுத்து ஏஞ்சலை இங்க வர வைக்கிறது, ராதா ட்ட உன் புருஷன் இப்படி ன்னு கதை சொல்றது, எல்லா கோளு மாளும் பண்ற”, என்று சொல்லி காதைத் திறுகவும்.

       அவன் கையில் ஒரு அடியை வைத்து தள்ளியவள்.,     “ஸ்கூல்லையே டீச்சர்ஸ் வந்து ஸ்டுடென்ட் மேல கை வைக்க கூடாது, இங்க டீம் மெம்பர்ஸ் மேல, டீம் லிடர் கை வைக்க கூடாது,  அதுவும் காத பிடிச்சி திருக கூடாது” என்று காதை தடவி விட்ட படி சொன்னாள்.

   அவனும் “வேலையை பாரு” என்று தலையில் தட்டி விட்டு போகவும்,

 “இவனுக்கு இருக்கு, இவன் பிள்ளை வெளியே வரட்டும்” என்று சத்தமாகவே சொன்னாள்.

  அவன் சென்ற சற்று நேரத்தில் ராதா வந்து இடுப்பில் கையை வைத்து இவளை முறைத்து பார்க்க,

 இவளோ அவளை பார்த்து “ஏன்டி நீ என்ன பார்த்து முறைக்கிற” என்று கேட்டாள்.

    ” இப்ப வரவர இல்லாத சேட்டை எல்லாம் பண்ற  நீ”, என்று சொல்லி அவன் பிடித்த காதையே பிடிக்க போக.,

 “இங்க பாரு என் காதை பதம் பாக்குறதிலேயே இருக்காதீங்க, வெயிட் பண்ணுங்க, இன்னும் ஒரு இரண்டு  மாதத்தில் உன் பிள்ளை வெளிய வந்துரும்,  அதுக்கப்புறம் உன் பிள்ளை காதை ஆளாளுக்கு திருகுங்க”,  என்று சொல்லியவள்,  “யார் சொன்னாலும் அப்படியே நம்ப கூடாது சரியா, போய் வேலையை பாருப்பா”, என்று சொல்லிவிட்டாள்.

     அவளோ வேலையை பார்க்காமல் “இருடி உனக்கு வீட்டுக்கு வந்து வச்சிக்கிறேன்” என்று சத்தம் போட்டுவிட்டு  கிளம்பி சென்றாள்.

    அதன் பிறகு அவள் வேலை அதன் பாட்டில் போக,  இடையே ஒரு முறை கதிரவன் அழைத்து “சாப்பிட்டியா என்ன பண்ற” என்று கேட்டான்.

     “கம்ப்யூட்டர கட்டிப்புடிச்சிட்டு இருக்கேன்”, என்று  அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

      அவனும் “அப்படியா எங்க ஒரு செல்பி எடுத்து போடு பாப்போம்”, என்று சொன்னான்.

 இவ்வளவு கம்ப்யூட்டரை கட்டிப்பிடித்தது போன்று செல்பி எடுத்து,  அதில் இவள்  முகத்தை மட்டும் கட் செய்து விட்டு, கை கம்ப்யூட்டரை பிடித்திருப்பது போல கிராப் செய்து அனுப்பி வைத்தாள்.

மீண்டும் அழைத்தவன், “உனக்கு வரவர சேட்டை கூடிப்போச்சு, இரு வந்து பேசுகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

   வேலை முடிந்து வந்து கேப் நிக்கும் இடத்தில் இறங்கியவள்,  ராதாவிடம் பேசி விட்டு “ஓகே பய் வீட்ல போய் ரெஸ்ட் எடு,  ஆஃபீஸ் ல உள்ளத பேசி  சண்டை போடாமல் இரு” என்று சொல்ல,

ராதாவோ “இரு சொல்லிக் கொடுக்கேன்”, என்றாள்.

     “போ போ,  உன் புருஷன் வந்தவுடனே என்ன வேண்டும் ஆனாலும்  சொல்லி குடு”,  என்று சொல்லவும்,

” திமிரு” என்று சொல்லிவிட்டு  அவள் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.

     இவள்  இருப்பதும் ‘கம்யூனிட்டி பிளாக்’ என்று சொல்லக்கூடிய வகையான அப்பார்ட்மெண்ட்,  ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனியாக அப்பார்ட்மெண்ட் வகையில் இருக்கக்கூடிய நான்கு அப்பார்ட்மெண்டுகள் உள்ளே இருந்தது, இந்த நான்கு அபார்ட்மெண்ட் களுக்கும் பொதுவான மளிகை கடை,  மெடிக்கல் ஸ்டோர், ஸ்விம்மிங் ஃபூல், ஜிம்,  பார்க் என இருக்கும்,

    அதற்கு பக்கத்தில் உள்ள இதுபோன்ற கம்யூனிட்டி பிளாக்கில் தான் நந்தன் வீடு வாங்கி இருந்தான், அவர்கள் வீடு அங்கு இருக்க,ராதா அங்கு நடந்து செல்ல,  அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றவள்,  அவள் நடந்து போவதை பார்த்து விட்டு தன் அப்பார்ட்மெண்டிற்குள் நடக்க தொடங்கினாள்.

   எதிரில் பார்ப்பவர்களை பார்த்து லேசான நட்பான புன்னகையோடு கடந்து சென்றாள்.

அதே நேரம் அவளுடைய போன் அழைக்க எடுத்து பார்க்கும் போது அவன் தான் ‘வீட்டுக்கு வந்துட்டாங்க ளோ’  என்று யோசனையோடு போனை எடுத்து “என்ன” என்றாள்.

     “பேசணும்” என்று சொல்ல, “சரி பேசுங்க” என்றவள். அங்கேயே பார்க் ல் பிள்ளைகள் விளையாடும் இடம் அருகில் அமர்ந்து விட்டாள்,

 அவன் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க, அவனோடு பேசிக் கொண்டிருந்தாள்,

      இருவருக்கும் என்ன பேசினோம் என்று கேட்டால், அது எல்லாம் தெரியாது ஆனால் ஏதேதோ கதை பேசிக்கொண்டு நேரத்தை போக்கிக் கொண்டிருந்தாள்.

 இவள் தான் “நான் கிளம்பட்டுமா நேரம் ஆகுது, நீங்க வீட்டுக்கு வருவதற்கு நேரம் ஆகுமா”, என்று கேட்டாள்.

     “முடிச்சிட்டு வருவதற்கு  மேக்சிமம் எட்டு மணிக்கு மேல ஆகும்,  வந்த பிறகு பேசலாம்”, என்று சொன்னான்.

     “பேசலாம், பேசலாம், நீங்க சீக்கிரம் வந்துட்டீங்கன்னா” என்று சொல்லி சிரித்துவிடவும்,

    அவனும் “அந்த அளவுக்கு என் மேல நம்பிக்கை”, என்றான்.

  “நீங்க என்னைக்கு 10 மணிக்கு முன்னாடி வந்தீங்க, எப்பவாவது ரேரா தான் பத்து மணிக்கு முன்னாடி வரீங்க, அதுக்கப்புறம் நீங்க வர்ற டைம் எல்லாம் லேட் நைட் தானே, வீட்டுக்கு வந்து எனக்கு மெசேஜ் போட்டாலும் இல்ல கால் பண்ணாலும், அதுக்கு அப்புறம் தான்  பண்றீங்க”, என்று சொன்னாள்.

        “சிரித்துக் கொண்டே முடிஞ்ச அளவு இன்னைக்கு சீக்கிரம் வர ட்ரை பண்றேன், மேக்சிமம் வேலை முடிந்துவிடும், முடிந்துவிட்டது என்றால் கிளம்பிடுவேன்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 அவன் தான் “சரி இன்னிக்கு உன் அலெக்ஸா ல நல்ல பாட்டா செலக்ட் பண்ணி வை,  வந்த உடனே அலெக்சா ஓட விட்டுட்டு பால்கனியில உட்கார்ந்து பேசலாம்”, என்று சொன்னான்.

     இவ்வளவு சிரித்துக் கொண்டே “அதெல்லாம் நிறைய பாட்டு இருக்கு வாங்க வாங்க” என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.

 அதன் பிறகு லிப்ட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.

 இவள் வந்து சேர்ந்து வீட்டை திறந்து வீட்டிற்குள் போய் எல்லாவற்றையும் வைத்து விட்டு தன்னை ரெப்ரஷ் செய்து கொண்டு, ஃப்ரிட்ஜில் இருந்த பாலை எடுத்து தனக்கு காபி கலக்குவதற்காக அடுப்பில் வைத்தாள்.

 இரவிற்கு என்ன செய்யலாம் என்று பார்த்தவள், காலையில் வைத்த சாம்பார் இருக்க,  ‘ஐயோ சாம்பார் நிறைய இருக்கே’ என்று யோசித்து விட்டு மாவை பார்த்தால், ‘மாவு இருக்கு ஓகே” என்று நினைத்துக் கொண்டாள்,

 பின்பு காஃபி கலந்து குடித்து கொண்டே, மறுநாள் சமையலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து கூகுளை அலசிக்கொண்டிருந்தாள்,

   அதே நேரம் வீட்டின் காலிங் பெல் அடிக்க மெதுவாக சென்று  கதவை திறக்கவும்,  கதிரவனின் அம்மா அப்பா நின்றனர்.

   “என்ன ஆன்டி”, என்றாள்.

   அவர்களோ “இல்லமா திடீர்னு நாங்க ஊருக்கு போகவேண்டியதா இருக்கு, தம்பி கிட்ட சாவி இருக்கும், அவங்க ரெண்டு வீட்டிலும் ஆள் இல்ல,  அதான்  நீ வந்துட்டேன்னு தெரியும்,  சொல்லிட்டு போலாம்னு வந்தேன்”, என்றார்.

    “சரி ஆன்டி”,  என்றாள். அவள் எதுவும் கேட்காத போதும் அவன் அம்மா சொல்லியே சென்றார்.

          “பொண்ணு வீட்டுக்கு  போறோம் , இன்னைக்கு மத்தியானம் போன் பண்ணி சொன்னா,  ஒரு பொண்ணோட ஜாதகம் வந்து இருக்கு,  வந்தீங்கன்னா பாத்துக்கலாம்னு சொன்னா, அதான் போய் பார்த்துட்டு ஜாதகம் பொருந்தி இருந்தா, பொண்ணு பார்க்க முடிஞ்சா பார்த்துட்டு தான் வரணும்”, என்று சொல்லவும்,

 அதன் பிறகு அவர்கள் என்ன பேசினார்கள் என்று அவளுக்கு காதில் விழவில்லை,  அவர்கள் “கிளம்புகிறோம்” என்று சொன்னது மட்டும் காதில் விழ, தலையை மட்டும் அசைத்தவள்,  அவர்கள் லிப்டில் ஏறுவதை பார்த்து விட்டு கதவை சாத்திவிட்டு அப்படியே கதவில் சாய்ந்த படி நின்றாள்.

      பின்பு மெதுவாக வந்து சோபாவில் அமர்ந்தவர் அந்த இடத்தை விட்டு அசையவில்லை,   அவர்கள் அப்படி சொன்ன பிறகு அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை, அதே நினைப்போடு அமர்ந்திருந்தவளுக்கு எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்பது நினைவில்லை.

   மனமோ ஆறு வருடங்கள் கடந்தது கனவு என்று நினைத்தாயோ, இன்னும் இருக்கிறது உனக்கு என்று சொல்வது போல தோன்றியது.

Advertisement