Advertisement

     அலுவலகத்தில் சென்று வேலை அமர்ந்து தன் வேலையில் கவனமாக இருந்த போது போன் அடிக்கவுமே பார்த்தவள்,  கதிரவன் என்றவுடன் ஹெட் போனை மாட்டிக் கொண்டு,

” சொல்லுங்க” என்றாள்.

    அவனும் இவள் குரலை வைத்தே “என்ன ஆச்சு” என்றான்.

     “ஒர்க் கொஞ்சம் டைட்” என்று சொல்லி விட்டு “நீங்க ப்ரீயா  இருக்கீங்க போல” என்று கேட்டாள்.

    “வொர்க் இருக்கு,  ஆமா அது என்ன இன்னைக்கு பக்கத்துல வரும் போது என்ன கோபம் உனக்கு”, என்று கேட்டான்.

“என்ன பண்ணுவீங்க ன்னு தெரியும்,  பக்கத்துல நெருங்கி எல்லாம் வராதீங்க, தள்ளியே நில்லுங்க”, என்று சொல்லவும்,

    “உத்தரவு மேடம், இப்ப நீங்க நார்மல் மோடுக்கு வந்துட்டீங்களா”, என்று கேட்டான்.

“நான் நார்மலா தான் இருக்கேன், நீங்க தான் மூஞ்ச தூக்கிட்டு போனீங்க”, என்று சொன்னாள்.

“நானும் மூஞ்செல்லாம் தூக்கல, எனக்கு வருத்தம் தான், பக்கத்துல கூட வரக்கூடாதா, ஆறு வருஷம் மிஸ் ஆச்சு இல்ல,  காலேஜ் லைஃப் சமயம் சொல்லி இருந்தா, நம்ம இந்த ஆறு வருஷத்தை மிஸ் பண்ணாம இருந்திருந்தா,  நம்ம எப்படி எல்லாம் சுத்தி இருப்போம் ன்னு யோசிச்சு பாரு” என்று சொன்னான்.

     “ஒஒ ஓகே அதுதான் விஷயமா,  இப்போ நான் ஆபீஸ் லீவ் போட்டுட்டு அல்லது பெர்மிஷன் போட்டுட்டு  கிளம்பி வாரேன்,   நீங்களும் வாங்க,  நாம பீச்சில் போய்  அந்த போட் பக்கத்துல உக்காந்து,  வெட்டவெளி வெயில்ல கதை பேசலாம் வாங்க”, என்று சொன்னாள்.

அவனோ  சத்தமிட்டு சிரித்தவன், “அடியே  நானே அங்கே உட்காந்திருக்கவங்கள விரட்டிட்டு இடத்தை கிளியர் பண்ண சொல்லி ஆர்டர் போட்டுட்டு இருக்கேன்,  நீ என்னையவே அங்க கூப்பிடுறியா”, என்று கேட்டான்.

       “பின்ன நீங்க  தானே சொன்னீங்க, காலேஜ் படிக்கும் போது அல்லது காலேஜ் முடிச்ச உடனே ன்னு ஆறு வருஷத்த சொன்னீங்க இல்ல, அப்ப ஆறு வருஷத்துல இதெல்லாம் தானே பண்ணி இருப்போம், வாங்க போலாம்”, என்று சொன்னாள்.

     “அதுக்கு தான் உன்னை மொட்டைமாடி கூப்பிடுறேன், வரமாட்டேங்குற”, என்றான்.

   ” நல்ல ஆளு தான் மொட்டைமாடிக்கு வருவாங்களாம்”, என்றாள்.

    “ஓகே இன்னைக்கு பால்கனியில உட்கார்ந்து பேசலாமா”, என்று கேட்டான்.

     “ஏன் உங்க அம்மா அப்பா பாதி தூக்கத்தில் எந்திரிச்சு வந்து எட்டி பாக்குறதுக்கா”, என்று கேட்டாள்.

    “நான் எதைக் கேட்டாலும் நீ அதுக்கு ஒரு பிரேக் போட்டுக்கிட்டே இருக்க, பின்ன எப்ப தான் நம்ம ரெண்டு பேரும் பேசுறது” என்று கேட்டான்.

“போதும் போதும் போன்ல பேசுவதே போதும்” என்றாள்.

  “எனக்கு போதாதே”, என்றான்.

     “ஏன் போதாது”, என்றவள் “அப்போ எப்படி பேசனும்”, என்றாள்.

     “ஒன்னு பண்ணலாமா,  ஏதாவது வெளியூர் போயிட்டு பேசிட்டு வரலாம்”, என்று சொல்லவும்,

      “ஹலோ, நான் மொட்டை மாடிக்கே வரமாட்டேன், யாரை பார்த்து வெளியூருக்கு வான்னு கூப்பிடுறீங்க”, என்று கேட்டாள்.

    “இந்த ஊர்ல நான் யாருன்னு, எல்லாருக்கும் ஓரளவு தெரியும், அதனால இங்க பேச முடியாது,  ஒன்னு பண்ணுவோமா எங்கேயாவது போயிடலாம்,  போயிட்டு ஒரு ரெண்டு நாள் கொஞ்சம் சுத்திட்டு வருவோமா”, என்று கேட்கவும்,

     “ஹலோ எஸ்பி சார் நீங்க சரியில்லை, நீங்க எஸ் பி லெவல்ல யோசிங்க, காலேஜ் பையன் லெவலுக்கு யோசிக்காதீங்க, நீங்க ஒன்னும் டீனேஜ் பையன் இல்ல,  நானும் டீன் ஏஜ் பொண்ணு இல்ல,  யாருக்கும் தெரியாம அங்க சுத்துவோம்,  இங்க சுத்துவோம், ன்னு சொல்ல”  என்றாள்.

“உனக்கு தான் புரியலை இசை, உன்னோட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும், உன் கைய பிடித்து நடக்கனும், அப்போ மனசுல இருக்குறத எல்லாம் பேசனும், என்னோட ஆசை எல்லாம் சொல்லனும்”, என்றான்.

   “கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு வேற ஏதாவது ப்ளான்”,என்றாள்.

  “நானும் நீயும் மட்டும் ஒரு நாள் பைக் ல ரைட் போவோம் ஓகேவா,  யாருக்கும் தெரியாது, ஹெல்மெட் போட்டுப்போம்,  ரெண்டு பேரும் ஹெல்மெட் போட்டோம்னா நீ யாருன்னு வெளியே தெரியாது, நான் யாருன்னு வெளியே தெரியாது, லாங் ரைடு போயிட்டு வந்துரலாம், ஓகேவா”, என்று கேட்டான்.

         “இது நல்ல ஐடியாவா இருக்கே, போலாம் போலாம்”, என்று சொல்லவும்,

    “ஏய் நிஜமாவா சொல்ற”, என்று கேட்டான்.

“நெஜமா சொல்றேன் போலாம், ஆனா நான் ராதா கிட்ட ஏதாவது சொல்லி பிளான் பண்ணனும், அதுக்கு நீங்களே ஏதாவது ஒரு ஐடியா கொடுங்க, வந்துடறேன்”, என்று சொன்னாள்.

   “சரி நீ என்னைக்கு ன்னு டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லு, அதுக்கப்புறம் உங்க ராதா கிட்ட சொல்றதுக்கு பிளான் பண்ணலாம், டேய் சும்மா சரின்னு சொல்லிட்டியா”, என்று கேட்டான்.

   “ஹலோ நீங்க நெஜமா தானே பைக்ல கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க”, என்று கேட்டாள்.

     “நிச்சயமா”,  என்றான்.

     “அப்போ  நிஜமா நானும் வரேன்”, என்று இவளும் சொன்னாள்.

     “ஓகே ஒர்க் வந்துருச்சி,  கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன் சரியா, இந்த ஹேப்பி மூட்ல நான் இருக்குற ஒர்க்க கடகடன்னு முடிச்சிட்டு ஓடி வரேன், நீயும் உட்கார்ந்து ப்ராஜெக்ட் முடி,  போ உன் கம்ப்யூட்டர் கட்டி பிடிச்சுக்கோ”,  என்றான்.

      “புடிச்சுக்குறேன் புடிச்சிக்கிறேன்”, என்று இவளும் சொல்லிட்டு போனை கட் செய்தாள்,

     சிறிது நேரம் வேலையில் இருக்க, அதே நேரம் ராகேஷ் டிமிலிருந்து ஏஞ்சல் இவர்கள் டீம் இருக்கும் பக்கமாக வருவது தெரிந்தவுடன்,  மெதுவாக எட்டிப் பார்த்தாள், ஏஞ்சல் இந்த பக்கமாக வருவது தெரிந்தவுடன் , அவள் ராதாவை பார்க்க,  ராதாவும் இங்கு தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

          ஏஞ்சல் வந்து சற்று நேரத்தில் ராதா பின்னாடியே வர,  ராதாவோ வந்தவள் யாழினி அருகில் அமர்ந்து கொண்டு திரும்பி பார்க்க, சரியாக ஏஞ்சலும் நந்தன் அருகில் போய் அமர்ந்து பேச தொடங்கி இருந்தாள்.

  நந்தனோ வேலையில் கவனமாக இருந்தவன் யாழினி அருகில் ராதா இருப்பதை கவனிக்கவில்லை, யாழினியும் திரும்பி பார்த்துக் கொண்டிருப்பதை அவனும் பார்க்கவில்லை,

  “பாத்தியா ராதா நான் சொன்னேன்ல, நான் ஒன்னும் பொய் சொல்ல மாட்டேன் ன்னு  இப்போ நம்புறியா”,  என்று கேட்டாள்.

    “உங்க அண்ணனுக்கு எங்கடி போச்சு புத்தி”, என்றாள்.

     “ஹலோ உன் புருஷன், உன் வீடு , உன் புருஷன் தப்பு பண்ணினா  நீ தட்டி கேளு, அதுக்கு எதுக்கு  நொண்ணனை பத்தி எல்லாம் பேசிட்டு இருக்க”, என்று சொன்னவள்,  “ஆனாலும் உன் புருஷன் ஓரளவுக்கு நல்ல பையன் தான் டி, அங்க பாரு கம்ப்யூட்டரையே பாத்து பேசிட்டு இருக்கான், ஆனா இந்த ஏஞ்சல பாரு உன் புருஷனையே பார்த்துட்டு இருக்காடி,  நல்ல பாரு” என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

  “இருடி நான் போய் என்னன்னு கேட்டு வரேன்”, என்றாள்.

    “அடியே கொஞ்சம் அமைதியா இரு, நீ எதுக்கு இம்புட்டு டென்ஷன் ஆகுற,  வயித்துல பிள்ளைய வச்சுக்கிட்டு இப்படி எல்லாம் டென்ஷன் ஆக கூடாது, அமைதியா இரு, ரிலாக்ஸா இரு,  ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல, என்று வயிற்றை  தடவி கொடுத்தவள்,

     “அடியே லூசு, உன் புருஷன பத்தி உனக்கு தெரியாதா, உன்னை தவிர எவ வந்து நின்னாலும் திரும்பி கூட பாக்க மாட்டான் சரியா,  இந்த ஏஞ்சல் எல்லாம் உனக்கு முன்னாடியே இங்க வொர்க் பண்ணினா  தானே,  பார்க்கிறதா இருந்தா அப்பவே பார்த்திருக்க மாட்டானா,  இவன் அப்பவே தான் ஜொல்லிட்டு இருந்தா, பார்க்கிறதா இருந்தா அப்பவே பார்த்திருக்க மாட்டானா, உன்ன லவ் பண்ணது எனக்கே தெரியாம பண்ணி,  கல்யாணம் பண்ணி வச்சிருக்கான் டி, அப்ப எப்பேர்பட்ட புருஷன் கிடைச்சிருக்கான் உனக்கு, நீ அவனை சந்தேகப்படுத லூசு, நான் கிண்டலுக்கு சொன்னா கூட, நீ அவனை சந்தேகப்படுவியா”, என்று கேட்டு சத்தம் போட்டாள்.

அதேநேரம் ஏஞ்சல் கிளம்பி விட நந்தனும் அப்போதும் கம்ப்யூட்டரில் கவனமாக இருக்க, “போ இப்ப போய் உன் புருஷன் ட்ட பேசு போ, ஆனால் மவள போய் சண்டை போட்ட ன்னு தெரிஞ்சது ன்னு வை, கதை வேற மாதிரி மாறி போகும் ஞாபகம் வச்சுக்கோ, சும்மா சும்மா சந்தேகப்படாத”,  என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தவள்.

    தன் வேலையில் கவனமாக இருந்தாலும், காதை மட்டும் அவர்கள் புறம் சற்று கூர்மையாக வைத்துக் கொண்டாள்.

Advertisement