Advertisement

  “ஓ காலேஜ் பிரண்டா”, என்றவள் நீயும் புதுசா தான் தெரியுற” என்று சொல்லி விட்டு அருகில் அமர்ந்தவள்.

     “டைம் 12:30  தான் ஆகுது, பசிக்குதுடி வாயேன்”, என்று கூப்பிட்டாள்.

       “எங்க கூப்பிடுற”, என்றாள்.

    “கேண்டின் க்கு” என்றாள்.

      “கேண்டின்ல போய் எல்லாம் நீ கண்டதையும் சாப்பிடக் கூடாதுன்னு தான்  உனக்காக நான் ஒரு டிஷ் செஞ்சு எடுத்துட்டு வந்து இருக்கேன், இத சாப்பிடு” என்று சொல்லி தன் பேக்கில் இருந்து எடுத்து அவள் கையில் கொடுத்தவள்.

    “இதை சாப்பிடு, உன் புருஷனை  கூப்பிட்டு  கேண்டின்ல ஒரு ஜூஸ் வாங்கிட்டு வர சொல்லு”, என்று சொன்னாள்.

      “ஏன், நீ எப்பவும்  ஜூஸ் வைத்திருப்ப தானே”, என்றாள்.

     “அந்த ஜூஸ் எல்லாம் நீ குடிக்க கூடாது, அது எனக்கு மட்டும் தான்” என்று சொன்னாள்.

   “அப்படி என்னடி ரகசிய ஜூஸ்” என்று கேட்டாள்.

     “இன்னைக்கு பைனாப்பிள் ஜூஸ், அதனால அது உனக்கு கிடையாது” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

     “ஆனாலும் சரியான ஆளுடி நீனு”, என்றாள் ராதா

      “அப்படி என்ன சரியான ஆளுன்னு பார்த்த”,என்றாள்.

    “நான் வந்தவுடன் ஃபோனை வச்ச,  அதுக்கு முன்னாடி உக்காந்து பேசிட்டு இருந்த,  நீ பேசிட்டு இருக்கும் போது உன் முகம் அப்படி ஒரு பிரைட்டா இருந்துச்சு”, என்று சொன்னாள்.

     “அடியே சும்மா இரு, நான் பிரைட்டா இருக்கேன், ப்ரைட்டா இருக்கேன் ன்னு சொல்லாத, அதான் சொல்லிட்டேன்ல 100 வாட்ஸ் பல்ப் மாத்திட்டு வந்தேன்,  இவ்வளவு நாள் 40 வாட்ஸ் ல எறிஞ்சுட்டு இருந்துச்சு சோ, டல்லா தான் தெரியும்,  வேணும் னா ஒன்னு பண்ணு,  நீயும் நாளைக்கு பல்பு மாத்தேன்”, என்று சொன்னாள்.

 “மாத்திட்டாலும், ஆமா எப்படி பல்ப் மாத்துன”, என்று கேட்டாள்.

   “அதெல்லாம் ரகசியம்” என்று சொன்னவள் சிரித்துக் கொண்டே “ஏதாவது புக் படி, சிரிச்சிட்டே படிச்சேன்னு  வையேன், மனது ஹேப்பியா இருக்கும்,  முகம் தன்னால பிரைட்டா ஆகும்”,  என்றாள்.

  “ஓஹோ நீ புக் படிச்சதுல தான் ப்ரைட்டா ஆகிட்ட” என்றாள்.

     “ஆமா இல்லையா பின்ன”, என்றாள்.

     “அது என்ன கதை, நல்லா இருந்துச்சா”, என்றாள்,

      “நல்லா இருக்கு, நான் படிச்சி முடிச்சிட்டு உனக்கு கதை சொல்லுறேன்.சரியா”, என்றாள்.

   ராதாவும் “நீ  என்ன புதுசா கதை படிக்க ஆரம்பிச்சிருக்க” என்று கேட்டாள்.

     ” ஜஸ்ட் டைம் பாஸ் அவ்வளவு தான்” என்று சொன்னாள்.

      “ஓ ஆனா நேத்து பாட்டு ரொம்ப நேரமா ஓடிட்டு இருந்ததா சொன்னாங்க”, என்றாள்.

     “யார் சொன்னா”, என்று கேட்டாள்ன.

    உனக்கு எதிர் வீட்டு ஆன்ட்டி இல்ல, அவங்க ஏதோ ஒரு மருந்து வச்சு குடிக்க சொன்னாங்கன்னு நந்தன் சொன்னாங்க,  அது தான் அந்த ஆன்ட்டிக்கு போன் பண்ணி இருந்தேன், என்ன மருந்து வச்சு, எப்படி குடிக்கணும் கேட்டுட்டு இருந்தேன், ரொம்ப லேட் ஆயிருச்சா? எப்படி  கேட்கிறது ன்னு தயங்கி தான் போன் பண்ணி இருந்தேன்,  ஆன்ட்டி தான் மருந்து டிடெயில்ஸ் சொல்லி குடிக்க சொன்னாங்க,  நான் கேட்டேன் அவ தூங்கிட்டாளா ஆன்ட்டி அப்படின்னு, இல்லம்மா ஹால்ல லைட் எரியுது, பாட்டு ஓடுது போல, சத்தம் லைட்டா கேக்குது, பாட்டு கேட்டுட்டு இருப்பா அப்படின்னு சொன்னாங்க, அப்போ நீ பாட்டு தானே கேட்டுட்டு இருந்த”,என்று சொன்னாள்.

    “பாட்டு கேட்டுகிட்டே கதை படிச்சுட்டு இருந்தேன்”, என்று சொன்னாள்.

     “எப்படி நீ ஒரே நேரத்தில் கான்சன்ட்ரேட் பண்ண முடியும்” என்று கேட்டாள்.

     பாட்டு காது கேக்குதா,  கதையை கண் படிக்குதா,  அப்புறம் ரெண்டும், காது வழியாகவும்,  கண்ணு வழியாகவும் மூளைக்கு போகும்”, என்று சொன்னாள்.

     நீ சேட்டை பண்ணுவேன்னு தெரியும், ஆனா இப்படி எல்லாம் குரங்கு சேட்டை எல்லாம் இப்பதான் பண்ணுற மாதிரி தோணுது,  உங்க அண்ணன் கிட்ட கேட்டா தெரியும், நீ  காலேஜ் படிக்கும் போது எப்படி இருந்த, சாதா சேட்ட பண்ணுவியா, இல்ல குரங்கு சேட்டை பண்ணுவியா,  இல்ல எப்பவுமே இந்த சேட்டை எல்லாம் இருக்குமா,  இல்ல புதுசா இந்த சேட்டை இருக்கான்னு,  கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி இவள் கொடுத்த உணவையும் எடுத்துக் கொண்டே நந்தனிடம் சென்றாள்.

 அங்கு சற்று நேரம் அமர்ந்து பேசிவிட்டு சென்றாள்.

    நந்தன் யாழினியை சிரிப்போடு திரும்பி பார்க்க,  இவளோ அவனை பார்த்து முறைத்துக் கொண்டு திரும்பி கொண்டாள்.

அவனும் சிரித்துக் கொண்டே எழுந்து கேண்டின் நோக்கி சென்றான், ராதாவிற்கு  ஜூஸ் வாங்குவதற்காக.

யாழினியோ “கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும், ராதா நம்மளை ரொம்ப நோட் பண்றாளோ,  இல்லையே அப்படி பண்ண மாட்டாளே”,  என்று நினைக்க,

      ‘இல்ல நம்ம முகம் தான் ஏதோ காட்டிக் கொடுக்குது போல,  நம்ம தான் ஓவர் எக்ஸைட் ஆகுறோம்னு நினைக்கிறேன்,  எப்பவும் போல இரு ,எப்பவும் போல இரு’,  என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டவள்,

‘அய்யய்யோ இப்போ பார்த்தா, நீ  இப்போ என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தேயே ன்னு வந்து கேட்டாலும் கேட்பா’, என்று மனதை திசை திருப்பும் போதே,

    மீண்டும் அவனிடம் இருந்து அழைப்பு வர, எடுத்தவள்  “இப்ப என்ன”, என்றாள்.

    “இப்ப என்ன, ராதா போயாச்சா” என்று கேட்டான்.

” போயாச்சு போயாச்சு” என்று சொன்னவள், “வேலை இருக்கு வைக்கட்டுமா” என்று  கேட்டவுடன்,

    அவனும் “அப்படி என்னடி வேலை பாப்ப, ப்ராஜெக்ட் தானே, நீங்க அந்த ஒரு ப்ராஜெக்ட் அ ஆறு மாசத்துக்கு இழுத்து தான கொண்டு போவீங்க,  என்னமோ ரெண்டே நாள்ல ப்ராஜெக்ட் முடிக்க போற மாதிரி வேலை இருக்கு, வேலை இருக்குன்னு, சொல்லிட்டு இருக்க, இப்ப இன்னும் கொஞ்ச நேரத்துல லஞ்ச் ஹவர் எல்லாரும் சாப்பிட போவீங்க, ஒரு  மணி நேரம் அரட்டை அடிச்சிட்டு, சாப்பிட்டு அதுக்கப்புறம் தான் மெதுவா  வந்து மறுபடியும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்காருவீங்க, குடுத்து வச்ச லைப் டி”, என்று சொன்னாள்.,

     “அப்போ அந்த வேலையை விட்டுட்டு,  இப்படியே  இங்குட்டு  வந்து ஜாயின் பண்றது”, என்றாள்.

   “ஒரு வேலை என்னைக்காவது எனக்கு இந்த வேலை ஒத்து வராதுன்னு தெரிஞ்சா,  விட்டுட்டு வந்துருவேன்” என்று சொன்னான்.

   ” அப்பவும் உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லன்னு சொல்லி, இங்க வேலைக்கு எடுக்க மாட்டாங்களே”, என்று சொன்னாள்.

     “நான் எதுக்கு வேலைக்கு போறேன், நீ தான் வேலை பார்க்கிற இல்ல, நீ சம்பாதிச்சு போடு, நான் வீட்ல உட்கார்ந்து உனக்கு சமைச்சு போடுறேன்”, என்று சொன்னாள்.

    “அய்யய்யோ நீங்க பேசுறது யாராவது கேட்டுற போறாங்க, அக்கரைக்கு இக்கரை பச்சை தான், கஷ்டம் இல்லாத வேலை எதுவும் இல்லை”,என்றாள்.

     “யாரும் கேட்க மாட்டாங்க,  இந்த ரூமுக்குள்ள யாரும் வர மாட்டாங்க, நீ சொல்லுற மாதிரி கஷ்டம் இல்லாத வேலை எதுவும் இல்லை தான்,  சொல்லு வேற என்ன”, என்று கேட்டவன்,

      “ப்ளீஸ் ஒரே ஒரு முறை வீடியோ கால் வாயேன்”,  என்று சொல்லவும்,

    “அதெல்லாம் முடியாது, நீங்க தனி ரூம்ல இருக்கீங்க, வீடியோ கால் பார்க்கலாம்,  நான் தனி ரூம்ல இல்ல,  என்னை சுத்தி ஒரு அஞ்சாறு டிக்கெட் உட்கார்ந்து இருக்கும்,  எங்க டீம் மெம்பர்ஸ் எல்லாம் ஒரே இடத்தில் தான் இருப்போம்,  என்ன கொஞ்சம் தள்ளி தள்ளி இருப்போம், பேசுறது கேட்காத அளவுக்கு இருக்கும் அவ்வளவு தான், ப்ளீஸ் ஈவினிங் வீடியோ கால்ல பார்க்கலாம்”, என்று சொன்னாள்.

 “ஈவினிங் எதுக்கு வீடியோ கால்ல பார்க்கணும், நேரிலேயே பார்ப்போம்”, என்றான்.

     “நோ நோ நேத்திக்கு மாதிரி எல்லாம் வந்துராதீங்க,  அப்புறம் நான் சத்தம் போட்டு கூப்பிடுவேன்”, என்றாள்.

    “யாரை கூப்பிடுவ”, என்று கேட்டான்,

    “உங்க அம்மா அப்பாவ தான்”, என்றாள்,

   “அப்படி எல்லாம் நோ சொல்லாத இசை,  நான் உன்ன பாக்கணும்”,  என்று அவன் கெஞ்ச,

    “நோ வே,  நைட் வீடியோ கால் வேணா வாங்க,  நேர்ல எல்லாம் பார்க்க மாட்டேன்”,  என்று சொன்னவள், தயங்கிய படியே “ப்ளீஸ் பரிதி” என்றாள்.

    அவனும் சிரித்துக்கொண்டே “சரி வீடியோ கால்லயே பாப்போம், ஆமா இப்போ வெட்கப் பட்ட தானே”, என்றவன்,  “ஓகே ஈவினிங் சீக்கிரம் வந்துட்டேன்னா,  போன் பண்றேன்”, என்று சொல்லி சிரித்தபடியே போனை  வைக்கவும்,

    ‘அய்யோ இது என்ன டீன் ஏஜ் மாதிரி, ஒரு வித்தியாசமான பீல்’, என்று நினைத்தவள், பெருமூச்சு விட்டபடி ‘திடீர்னு மொத்தமா எல்லாத்தையும் சேர்த்து இப்படி கொட்டினா, நான் எப்படி தாங்குவேன்’ என்று மனதிற்குள்ளே பேசிக் கொண்டிருந்தாள்.

    பின்பு உணவருந்து போகும் போது உணவை எடுத்துக் கொண்டு கேண்டினுக்கு செல்லும் வழியில் அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்தாள்.

    பார்க்கும் போது தான் அவளுக்கே தெரிந்தது, ‘மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, முகத்தில் ஒரு தனி கலை தெரியுமே, அதுபோல முகம் இருப்பதை உணர்ந்தவள், இல்லை நான் சந்தோஷமா இருக்கேன்,  ஆனா இது அதிகமா முகத்தில் தெரிய விடக்கூடாது, இதனால் தான் ராதா கேட்டுட்டே இருந்திருக்கா’, என்ற நினைப்போடு கண்ணாடியை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு ராதாவும் நந்தனும் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி சென்றாள்.

Advertisement