இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும், இவளோ அவன் தழும்பை பார்த்து விட்டு கையை தன் மடியில் அழுத்தமாக கோர்த்து இருந்தாள்,
அவளுடைய டென்ஷனை பார்த்தவன் சோபாவின் கைப்பிடியில் இருந்த தன் கையை எடுத்து அவள் கையை பிடித்துக் கொண்டான், “இசை” என்று மெதுவாக அழைத்தான்.
இவளோ மெதுவாக அவனை நிமிர்ந்து பார்க்க, “புரிந்துப்ப ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னான்.
“எனக்கு என்ன பேசணும் தெரியல, ஆனா எதுவா இருந்தாலும் இப்ப பேசுறதுக்கான நேரம் இல்லை ன்னு மட்டும் எனக்கு புரியுது, ப்ளீஸ்” என்று சொன்னாள்.
அவனோ “நீ பேசனும் னா பேசு, இப்போ நான் பேசி முடிச்சட்டுமா” என்று கேட்க அவள் மெதுவாக தலையசைத்தாள்.
“அன்னைக்கு என்னை திட்டி அடிச்ச இல்ல, அப்போ உன்னை அவசரமா எதுக்கு அந்த பில்டிங் பின்னாடி தள்ளினேன் னா, அந்த பக்கமும் ஆட்கள் வந்தாங்க, சோ நீ அவங்க கண்ணுல படக்கூடாது என்பதற்காகத் தான் தள்ளினேன்,
இன்னொன்னு ரெண்டு பேரும் சேர்த்து வைத்து தப்பா பேசினாங்க னா அது நீ படிக்கிற காலேஜ், உனக்கு நேம் ஸ்பாயில் ஆயிடும் சரியா, அதுக்காக தான் உன்னை அந்த பிரச்சினையில் இழுக்கவே கூடாது ன்னு நினைச்சேன், அது மட்டும் இல்லாம எனக்கு உன்னை அந்த அளவுக்கு பிடிக்கும், அது எல்லாருக்கும் தெரியும், என் கூட இருந்த பிரெண்ட்ஸ் தவிர, என்கூட காலேஜ்ல இருந்து காம்படிஷனுக்கு வந்த என்னோட ஜூனியர் எல்லாருக்கும் தெரியும், அது மட்டும் இல்லாம உனக்கும் பிடிக்கும்ன்றது எனக்கும் தெரியும், ஆனா நான் உன்கிட்ட சொல்ல வந்த விதம் தப்பு தான், அதை நானே ஒத்துக்குறேன்,
அந்த வயசுல அதை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரியாம, நான் உன்கிட்ட நிறைய சொதப்பி, அந்த மாதிரி டிசைட் பண்ணி இருக்கேன், ஆனா நிஜமா சொல்றேன் எந்த வித தப்பான நினைப்போட, உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கணும்னு நினைக்கல, எனக்கு நீ வேணும், அதுல மட்டும் நான் ஸ்டெடியா இருந்தேன்,
அது மட்டும் இல்லாம எப்படி சொல்றது உன்னை எந்த விதத்திலும், நான் மிஸ் பண்ணிட கூடாதுன்னு நினைச்சேன், நீயும் என்னோட லவ்வ புரிஞ்சுக்கணும் அப்படின்னு நான் யோசிச்சேனே தவிர, அத சொல்ற விதமா சொல்லி இருக்கணும் அப்படின்னு அதுக்கு அப்புறம் தான் புரிஞ்சிச்சு, பட் எல்லாம் முடிஞ்சுச்சு, இனிமேல் அத ஒண்ணுமே பண்ண முடியாது, அன்னைக்கு நடந்ததுக்கு இன்னைக்கு சாரி கேட்டா நீ ஒத்துக்குவியா” என்று கேட்டான்.
இவளோ தலையை திருப்பிக் கொள்ள, “சாரி கேட்க வேண்டாமா, நீயும் சாரி கேட்க அவசியம் இல்ல, ஏன்னா இது பொண்ணுங்களுக்கே உள்ள தற்காப்பு உணர்வு, யாரும் பக்கத்துல வந்தாலோ, இல்ல யாரும் தப்பா நடந்துக்க போறாங்க, அப்படிங்கற மாதிரி பீல் ஆனாலும் அடிக்கிறது தான், கைல கிடைக்கிறது எல்லாம் பெண்களோட பாதுகாப்பு பொருள் தான், இந்த போஸ்டிங் வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு புரியுது, ஆனா அன்னைக்கு எனக்கு உன் மேல பயங்கர கோவம் தான் வந்துச்சு,
என்னோட லவ்வ கூட புரிஞ்சுக்கல இல்ல, அப்படிங்கற டென்ஷன் இருக்க தான் செஞ்சுச்சு, இல்லன்னு சொல்லல அது அந்த வயசுக்கான பிரச்சினை, அப்புறம் தான் யோசிச்சு பார்த்தேன், நீ என்னை விட சின்ன பொண்ணு, உனக்கும் அந்தளவு மெச்சூரிட்டி கிடையாது ன்னு தெரியும், உனக்கு 20 தான், எனக்கு 24 சோ என்னால அப்போ இதை கூட புரிஞ்சிக்க முடியல அப்படி ன்ற போது, நிச்சயமா உனக்கும் கோவம் இருக்கும் ன்னு தோணுச்சு, எனக்கும் ஒரு வருத்தம் இருந்தது,
உங்க காலேஜ்ல போய் உன் அட்ரஸ் வாங்கலாம் அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன், பட் இப்பதான் தமிழ்நாட்டுக்கு வந்து ஜாயின் பண்ணி இருக்கேன், உடனே என்னால ஊர் பக்கம் போக முடியல, பட் என் மனசுல என்ன இருந்துச்சு னா, எங்க அம்மா அப்பா பொண்ணு பாக்குறேன் அப்படின்னு சொல்லும் போதெல்லாம், என்னோட மைண்ட் செட், என் வாழ்க்கையில் இன்னொரு பொண்ணா அப்படிங்கற மாதிரி தான் தோணுச்சு,
ஏன்னா எங்க அம்மா, எங்க அக்காக்கு அப்புறம் என் வாழ்க்கையில் என்னுடைய நினைவுகளை அதிகமாக ஆக்ரமிச்ச ஒரு பொண்ணு அப்படின்னு சொன்னா, அது நீ மட்டும் தான், இதை நம்புவியா, நம்ப மாட்டியா ன்னு தெரியல, ஆனா இதுதான் உண்மை, இப்ப எப்பவும் ஆக்ரமிப்போட வச்சிருக்கவளும் நீ மட்டும் தான்,”என்றவன்,
என்னைத் தவிர வேற யாரையாவது கல்யாணம் பண்ணனும் அப்படின்னு உங்க வீட்ல சொன்னாங்கன்னு சொன்ன, கொன்னுருவேன் டி” என்று சொன்னான், சரி சொல்லு எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்று கேட்டான்.
அவளோ ‘இவன் ஏன் திடீர்னு அந்நியன் அவதாரம் எடுக்கான், அம்பி மாதிரி பேசும் போதே மாத்தி பேசுறானே’ என்று நினைத்தவள்.,
“வீட்டில் சம்மதிக்க மாட்டாங்க”, என்றாள்.
“ஏன் சம்மதிக்க மாட்டாங்க, நான் சம்மதம் வாங்குறேன், எங்க வீட்லயும் தான் யோசிப்பாங்க, நான் பேசுறேன்” என்று சொன்னவன்,
“அதையும் மீறி முடியாது ன்னு சொன்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம், ஏன் யோசிக்கிற, இல்ல னா கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்”, என்று சொன்னான்.
“என்ன இவ்வளவு ஷாக் ஆகுற, நம்ம என்ன டீனேஜிலயா இருக்கோம், வீட்ல இப்படி சொல்லுவாங்க, அப்படி சொல்லுவாங்க, ன்னு பயப்படுவாங்க”, என்றவன், “நீ ஓகே ன்னு சொல்லு நாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணலாம், போலீஸ் ட்ட வேணும் னா பாதுகாப்பு கேட்போமா”, என்று கண்ணடித்து கேட்ட படி அவள் கையை அழுத்தமாக பிடித்தவன், அப்படியே கையைப் பிடித்துக் கொண்டே எழுந்து நின்று, அவளையும் எழுப்பினான்.
“என் நினைப்பு உனக்கு இருக்கு ன்னு, அன்னைக்கு நான் உன் ரூமும்க்கு வந்த அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்”, அவள் கேள்வியாக அவன் முகத்தை பார்க்கவும்,
“நீ மயங்கி விழுந்தப்ப நான் தான் தூக்கிட்டு வந்து ரூம்ல உன்ன விட்டேன்”, என்று சொன்னான்.
அவனை எப்படி என்பது போல பார்த்தது பார்த்த படி நின்றாள்,
அவனும் “அந்த பர்ஃபியூம் ஸ்மெல், எனக்கு காட்டி கொடுத்துச்சு” என்று சொன்னான்.
என்ன சொல்வது என்று தெரியாமல் மீண்டும் அவனைப் பார்க்க, அவனும் “எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு, நான் காலேஜ்ல படிக்கும் போது அந்த பெர்ஃபியூம் தான் யூஸ் பண்ணேன்”, என்றான்.
அமைதியாக நின்றவள், “அந்த ஸ்மெல் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால வாங்கி ரூம் ல ரூம் ஸ்ப்ரே யா யூஸ் பண்ணிட்டு இருந்தேன்” என்று சொன்னாள்.
“நீ என் ட்ட மறைக்கிற, பொய் தான சொல்ற” என்று அவள் முகத்தை நோக்கி குனிந்த படி கேட்க,
அவளோ இல்ல நிஜம் தான் சொல்றேன், “எனக்கு ஸ்மெல் பிடிச்சது, அதனால தான் ரூம் ஸ்பிரே யா யூஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொன்னாள்.
அவனும் “சரி நீ ரூம் ஸ்ப்ரேயா யூஸ் பண்ணுனா, அது எல்லா ரூம்லயும் யூஸ் பண்ண வேண்டியது தானே, ஏன் உன் ரூமுக்கு மட்டும் யூஸ் பண்ற”, என்று கேட்டாள்.
அவளோ “இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை, கிளம்புங்க, பேசி முடிச்சாச்சு தானே கிளம்புங்க”, என்று சொன்னாள்.
“ஹலோ பேசியே முடிக்கல, இப்ப தான் பாதி கிணறு தாண்டி இருக்கோம், மீதி கிணறு தாண்ட வேண்டாமா” என்று கேட்டான்.
“தாண்டவே வேண்டாம் நீங்க போங்க” என்று சொல்லி அவன் கைகளுக்குள் இருந்து தன் கையை உருவ முயற்சித்தாள்.
அவனும் விடாமல் பிடித்துக் கொண்டு “எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், இன்னும் எப்படி சொல்லனும் ன்னு சொல்லு, ஏன்னா நான் உன்கிட்ட எப்படி இத சொல்லணும்னு நினைச்சேனோ, அதை கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன் சரியா, இப்போ நான் அந்த மாதிரி சொல்ல மாட்டேன், மறுபடியும் அடி வாங்க நான் தயாராக இல்லை”, என்று சொன்னவன்.
“ஆனா இப்போ ஒரே ஒரு சின்ன ரெக்வெஸ்ட்”, என்று சொல்ல,
அவளோ “என்ன” என்று ஒரு மாதிரியே அவனிடம் கேட்டாள்,
அவனும் “ஒன்னும் இல்ல” என்று சொன்னவன் அவளை அழுத்தமாக அணைத்துக் கொண்டான்,
அவனிடமிருந்து விடுபடும் உணர்வே இன்றி, சில வினாடிகள் அப்படியே நின்றவள், பின்பு மெதுவாக அவனிடமிருந்து நகர முயற்சி செய்த படி அவன் மேல் கையை வைத்து, அவனை தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்தாள், ஆனால் சிறிதளவு கூட நகர முடியவில்லை,
அந்த அளவிற்கு இறுக்கமான அணைப்பாக இருந்தது,
பெருமூச்சு விட்டவன் அவள் உயரத்திற்கு குனிந்து அவள் தோளிலேயே தலையை வைத்தவன், “எங்கேயோ ஓடி முடிச்சு, இப்ப தான் வந்து வீடு சேர்ந்த மாதிரி ஒரு பீல் கிடைக்குது, சீக்கிரம் வீட்ல சொல்றோம், மேரேஜ்க்கு ரெடி பண்றோம்”, என்று சொன்னான்.
இவளோ அவனை தள்ளி விட்டு, “எங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க” என்றாள்.
“யாரு, உங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க, நீ எப்படா ஏதாவது சொல்லுவ, கல்யாணத்த பண்ணி வைக்கலாம்னு, உங்க அம்மா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, நீ தான் பாக்கற மாப்பிளை எல்லாம் வேண்டாம்னு சொல்றியாமே,
அதான் எங்க அக்கா அன்னைக்கு உங்க அம்மா கிட்ட பேசிட்டு வந்து எங்க வீட்ல கதை சொல்லிட்டு இருந்தாளே, ஒரு மாப்பிள்ளை பார்க்க வராங்க ன்னு, நீ என்ன வேலை பார்த்த ன்னு சொன்னாங்க”, என்றவுடன், அவள் அறியா பிள்ளை போல முழிக்கவும்.
“ஏன் இப்படி ஒரு முழி, ஜஸ்ட், நீ ஜெர்மன் போறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பார்க்க வராங்க, நீ ஊருக்கு வா ன்னு சொன்னதுக்கு தான், அன்னைக்கு டான்ஸ் ஆடறேன்னு சொல்லி, கால பிசக வச்சு கட்டு போட்டுட்டு வந்தியா”, என்று கேட்டான்.
“அம்மாவா இது சொன்னாங்க” என்று கேட்டாள்.
“அதெல்லாம் என் காதுக்கு விஷயம் வந்துச்சுமா, சரி இப்ப சொல்லு என்ன பண்ணலாம்”, என்று கேட்டான்,
அவள் சிறிது விலகினாலும் அவளை தன் கைக்குள் இருந்து விடவில்லை.
“இந்த ஆறு வருஷம் நிறைய மிஸ் பண்ணிட்டோம் இல்ல, ரெண்டு பேருக்கும் நினைப்பு நிறைய இருந்துச்சு, ஆனா வெளியே சொல்ல முடியாம, யாரிடமும் ஷேர் பண்ணிக்க முடியாம, மனசுக்குள்ள இருந்த ஆச அன்பு எதையுமே தெரிவிக்க முடியாம, டிராஜடியான லைஃப் இல்ல”, என்று கேட்டான்.
இவளோ அவனை அண்ணாந்து நிமிர்ந்து பார்த்தாள், அவள் நெற்றியில் முட்டியவன், “எல்லாத்தையும் திருப்பி கொண்டு வரணும், போன எதுவும் கிடைக்காது, ஆனா ஆறு வருஷம் கடந்து போகவே இல்ல அப்படின்னு ஒரு ஃபீல் கொடுக்கணும், இது பியூர் லவ் மேரேஜ் ஆ இருக்கனும், அரேஞ்ச் கம் லவ் அந்த மாதிரி எல்லாம் கிடையாது, ரெண்டு பேர் வீட்லயும் சம்மதம் வாங்குறதுக்குள்ள, நம்ம இந்த ஆறு வருஷம் விட்ட லைஃபை வாழ்ந்துருவோம் சரியா”, என்று கேட்டான்.
இவளோ அவனை ஆச்சரியமாக விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்,
“என்ன” என்று அவன் கேள்வி கேட்டவுடன்,
“இல்ல நீங்க நெஜமாவே போலீஸ் தானே”, என்று கேட்டாள்.
அவன் சத்தமாக சிரிக்கவும், மெதுவா மெதுவா என்று பதட்டமாக சொன்னாள்.
“மத்தவங்க எல்லோருக்கும் போலீஸ், உன்னை பொறுத்த வரைக்கும் பொறுக்கி தான்” என்று சொன்னான்.
“நான் அப்போ திட்டினதை இப்பவும் சொல்லிக் காட்டுறீங்க அப்படித்தானே, அன்னைக்கு நீங்க அப்படி பக்கத்துல வரும் போது எனக்கு அப்படித்தான் தோணுச்சு, அதனால தான் அப்படி சொன்னேன்”, என்றாள்.
“அதே தான் நானும் சொல்றேன், உன்னை பொறுத்த வரைக்கும் அதே ஆளு தான் இன்னும் அப்படியே தான் இருக்கேன், இப்போ புரியுதா “, என்றான்.
மீண்டும் அவளை தன்னோடு சேர்த்து அணைக்க முற்படவும் அவனை தள்ளி விட்டவள்.
” பொறுக்கி, கேடி” என்று திட்டினாள்,
“என்ன வேணும்னாலும் திட்டிக்கோ, உனக்கு இருக்குற ரைட்ஸ் யாருக்கும் கிடையவே கிடையாது, உனக்கு மட்டும் தான் எல்லாமே” என்று சொன்னவன்,