Advertisement

“இல்லை” என்னும் விதமாக தலையாட்டியவள், தன் கையால் முகத்தை மூடியபடி அப்படியே குனியவும்,

      சோபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து அவளை அமர்ந்திருந்த சோபாவின் அருகில் முட்டி போட்டு, அவள் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடி மேல் கையை வைத்து,  “ப்ளீஸ் இசை, எதுவா இருந்தாலும் பேசிடலாம், கண்ட்ரோல் யுவர் செல்ப்,  பேசி முடிச்சுட்டு சண்டை போடுறதா,  சமாதானம் ஆகிறதா, என்பதை முடிவு பண்ணுவோம்”,  என்று சொன்னான்.

அவனையே பார்த்தபடி இருந்தவளுக்கு கல்லூரி காலங்களில் உள்ள நினைவுகள் கரைபுரண்டு ஓட தொடங்கியது.

ரெண்டு பேருக்கும் அறிமுகமாகி ஐந்து நாட்கள் தான் ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப முடியாத படிக்கு இருவருக்கும் ஆன பிணைப்பு எப்படி தொடங்கியது, என்று இப்போது வரை அவளால் கணிக்க முடியவில்லை,  இவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது,  அவன் பிஜி கடைசி வருடத்தில் இருந்தான்.

      அப்போதுதான் இன்டர் காலேஜ் காமடிஷனுக்காக இவளுடைய கல்லூரிக்கு அவர்களுடைய கல்லூரியிலிருந்து வந்திருந்தனர்,  ஐந்து நாள் தொடர் நிகழ்வுகள் என்று இருந்ததால் அவர்கள் அங்கேயே உள்ள ஹாஸ்டலில் தங்கி இருந்தனர்,  அப்போது தான் இவளுக்கு அவர்களை தெரியும், இவளுடைய கல்லூரியில் இருந்து நடன போட்டியில் இவள் சேர்ந்திருக்க,  இவளுடைய நடனத்தை பார்த்து வேகமாக விசில் அடித்து ஆர்ப்பரித்தவன் இவனாகத்தான் இருப்பான்,

    அவனுடைய கல்லூரியில்  போட்டி போடுவது இவள் தான் என்று தெரிந்தும் இவளுடைய நடன அசைவுகள் அவனுக்கு பிடித்திருந்தது,

      அதன் பிறகு இவளை பார்த்து “ஹாய் ரொம்ப நல்லா ஆடுனீங்க” என்று சொல்ல வந்தான்.

   இவளோ “நீ யாரு” என்று மரியாதை இல்லாமல் தான் முதன் முதலாக பேசினாள்.

    அவனும் “நீ எப்படினாலும் கூப்பிட்டுக்கோ, பட் உன்னோட டான்ஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு”, என்று சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு,

      அவன் “கதிரவன்” என்று சொல்ல,

    “கதிரவனா அந்த காலத்து பேர் மாதிரி இல்ல” என்று சொல்லிவிட்டாள்.

     இவனும் “யாழினி” என்று அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டவன்,

     அவள் முறைத்து பார்க்கவும்,  “உன் பெயரை கூட சாட் பண்ணி,  எப்படியும் கூப்பிட முடியாது, அதனால உனக்கு வேறு பெயர் வைக்கலாமா,  உன்னை பார்த்தாலே  நீ டான்ஸ் ஆடுனா அந்த மியூசிக் சவுண்டும்,  உன்னோட ரிதம்க்கிகான மூமண்ட் ம் தான் ஞாபகம் வருது,  உன்னை நான் யாழிசை.,  ன்னு கூப்பிடுகிறேன்”,  என்று சொன்னான்.

     இவள் அவனைப் பார்த்து முறைத்து,  “பிச்சிருவேன் வேற காலேஜ்ல இருந்து வந்திருக்கிறீர்கள்  ன்னு பார்க்கிறேன்,  ஆனால் எங்க காலேஜ்ல தான் நிக்கிறீங்க,  வம்பு இழுத்துறாதீங்க” என்று சொன்னாள்,

    அவனும் “நான் உன்னை கூப்பிடலைன்னு சொல்லிடுவேன்,  உன் பேரு யாழிசையா, யாழினி தானே” என்று சொன்னவன் “ஆனா எனக்கு மட்டும் நீ யாழிசை,  இசை  ன்னு கூப்பிடுவேன்,  நல்லா இருக்குல்ல”,  என்று சொன்னான்.

இவளோ அவனை முறைத்து விட்டு சென்றாள், முதல் நாள் இப்படித்தான் அறிமுகம் செல்ல,  இரண்டாவது நாள் இவர்களுடைய டீம் ஒவ்வொரு போட்டியிலும் வின் செய்து கொண்டு வர,  அப்போது தான் இவள் அவனைப் பாராட்ட சொல்ல இருவருக்கும் இப்படியே பேச்சுவார்த்தை தொடங்கியது.

    முதலில் அவன் ஃப்ரெண்ட்ஸ் என்று இவளோடு  கை குலுக்கி நட்பு பாராட்ட,  இவளும் அமைதியாக கைகுலுக்கி நட்பு பாராட்டினாள்,  பின்பு நண்பர்கள் தான் அந்த பொண்ணு பின்னாடி சுத்த ஆரம்பிச்சிட்டயா என்று கேட்க,  இவனுக்கும் அவளுடைய துறுதுறு நடவடிக்கைகளும்,  வெடுவெடு வாய் பேச்சும் பிடிக்க,  அவளோடு பேசுவதே இவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

இவளுக்கும் வித்தியாசமாக தெரியாததால் அவனோடு பேச தொடங்கியவள்,  அவனுக்கு பரிதி என்று பெயர் வைத்திருந்தாள்,

இவன் இசை என்று அழைக்க, அவள் பரிதி என்று அழைக்க, இப்படியாக அவர்கள் நட்பு,  மூன்றாம் நாள்  இறுகி போயிருந்தது.

        அவன் என்ன கல்லூரி என்று தெரியும் , இவளும் இதே கல்லூரி தான் என்று தெரிந்ததால்,  சரி பார்க்கலாம் என்று நினைத்திருந்தார்கள்.

    கடைசி நாளில் போன் நம்பர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் நினைத்திருந்தான், அதுபோல தான் அவளும் நினைத்திருந்தாள்,  ஆனால் விதி தான் அவர்கள் வாழ்க்கையில் விளையாடிவிட்டது.

    கடைசி நாள் வரை எல்லாம் சரியாக செல்ல,  கடைசி நாள் தான் இவனுக்கோ ‘எங்கே அவளை பிரிந்து சென்று விட்டால், திரும்பி பார்க்க முடியாமல் போய்விடுமோ’ என்று எண்ணத்தோடு அவளை பார்க்க வந்தவன் அவளிடம் பேசிக் கொண்டே இருந்தான்.

      அங்கிருந்த பில்டிங்குக்கு பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது தான் இந்த பாடலை பாடி இருந்தான்.

‘அன்னக்கிளி நீ வாடி

என் காதல் சீட்டெடுக்க

நெல்லுக்கு பதிலாக முத்தங்கள்

நான் கொடுக்க’

      இவளோ அவனை கேள்வியாக பார்க்க, அவனும் அருகில் நெருங்கி வந்தவன் தன் விருப்பத்தை மட்டும் தெரிவிக்க நினைத்தான்.

   ஆனால் அவன் மனமோ அவளை முத்தமிட தூண்டியது,

     அவன் அவளை முத்தமிட துணியும் போது,  இவ்ளோ கையை வைத்து அவன் வாயை பொத்தி விட்டாள், “என்ன பண்ற பரிதி” என்று கேட்டாள்.

     அவனும் அவள் கையை எடுத்துவிட்டு, “எனக்கு பிடிச்சிருக்கு, அது மட்டும் இல்லாம எனக்கு உன்கிட்ட சொல்றதுக்கு ஒரு விதம் வேணும், அந்த விதம் இதுவா இருக்கணும்னு நினைச்சேன்”,  என்று சொன்னான்.

    மீண்டும் அருகில் வர அவன் நெஞ்சில் கை வைத்து வேகமாக தள்ளியவள் நகன்று சென்றாள்.

  அவனோ கையைப் பிடித்து அவளை நெருங்கி வர., இவளோ கோபத்தில் அருகில் இருந்த கையில் கிடைத்த பொருள் என்னவென்று கூட பார்க்காமல் அவனை ஓங்கி அடித்து விட்டாள்.

 அதுதான் அவனுடைய இடது புருவத்திற்கு மேல் உள்ள தழும்பு,

  அடித்த பிறகு தான் தன் உணர்வுக்கு வந்தவள்,  அவனுக்கு ரத்தம் வடிய தொடங்கிய பிறகு அவனை பார்க்க தான் இவளுடைய தவறு புரிந்து,

         கையில் இருப்பதை பார்க்க, அது அங்கு மரவேலை செய்து கொண்டிருந்த, ஒரு மரக்கட்டை என்பதும்,  அதில் சிறிய ஆணி இருந்தது தான் அவன் தலையை பதம் பார்த்து விட்டது என்பதும் அதன் பிறகு அறிந்து கொண்டாள்,

       அந்த கட்டையை தூர வீசியவள்,  அவனுக்கு வடியும் ரத்தத்தை துடைக்க தான் அன்று உடுத்தியிருந்த பச்சை நிற சாலை அவன் நெற்றியில் அழுத்தி பிடித்தாள்.

  அவனோ அவளை தோளைப் பிடித்து தள்ளிவிட்டு, “போ முதல்ல இங்கிருந்து,  இடத்தை காலி பண்ணு” என்று சொல்லி,

    அவளை அங்கிருந்த பில்டிங்  பின்னால் மறைத்து நகர்த்தி விட்டு நண்பர்களுக்கு அழைத்தான்.

   உடனே நண்பர்கள் வந்து விட,  “என்ன” என்று கேட்கும் போது “கீழே தவறி விழுந்துட்டேன்,  இந்த கட்டை அடிச்சிருச்சு” என்று சொல்லி அங்கு வேலை செய்த பொருட்கள்  கிடந்ததை காட்டி சொன்னான்.

  அந்த கட்டிடத்திற்கு பின் நின்றவளுக்கு அனைத்தும் கேட்டாலும், எதுவும் சொல்ல முடியாமல் தன் சாலில் நனைந்து இருந்த அவன் ரத்தத்தை மட்டும் பார்த்துக் கொண்டே நின்றாள்.

    பின்பு அவசரமாக தோழிகள் இருந்த இடம் வந்தவள்,  அந்த சாலை எடுத்து பேக் ல்  வைத்துவிட்டு,  வீட்டிற்கு தெரிந்தால் திட்டு விழும் என்று தெரிந்ததால் மறைத்து விட்டாள்,

   அதன் பிறகு இவன் அவளை பார்க்கவும் இல்லை,  அவளும் இவனை பார்க்கவில்லை, அதோடு இவர்களுடைய சந்திப்பு முடிந்தது,

    ஏனெனில் இன்டர் காலேஜ் காமடிஷனல் முதலிடத்தில் அவனுடைய கல்லூரி வந்திருந்தாலும், பரிசு வாங்கும் போது அவன் நண்பர்கள் மட்டுமே இருந்தனர்.

    இவனை அவளால் பார்க்க முடியவில்லை,  அதில் சற்று பதட்டம் அடைந்தவள் அதன் பிறகு அவனுடைய உயரத்தில் யாரைப் பார்த்தாலும் திரும்பிப் பார்ப்பது மட்டும் நிறுத்தாமல் இன்று வரை இப்படி தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

 இதை எப்படி இவனுக்கு புரிய வைப்பது என்று அவனே பார்த்தபடி இருந்தாள்.

   அவனும் அவள் ஏதோ யோசனையில் இருக்கிறாள் என்பதை கண்டு பொறுமையாக அவளையே பார்த்துக் கொண்டே அவள் முன் மண்டியிட்டு நின்றான்.

Advertisement