“அம்மா அப்பா எல்லாம் சீக்கிரம் தூங்கிடுவாங்க, நான் என்ன பண்றேன்னு பார்க்க மாட்டாங்க, பால்கனியில நின்னு போன் பேசிட்டு இருக்கேன் ன்னு நினைப்பாங்க சரியா, சரி வா இப்ப பேசலாம்” என்று கூலாக அழைத்தான்.
இவளோ அதிர்வாக அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள், “உட்காருமா, உன் வீடு தான் எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற”, என்று நிதானமாக சொல்லிக் கொண்டு இருந்தான்.
“யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க” என்றாள்.
“இங்க பாரு, இப்போ நான் யூனிஃபார்மிலே இல்ல, நான் எஸ்பியும் இல்ல, ஓகேவா, முன் கதவு பூட்டி இருக்க லைட்டெல்லாம் ஆஃப் பண்ணியாச்சு,இப்ப இந்த ஹால்ல உள்ள லைட்டும், கிச்சன்” என்று எட்டி பார்த்தவன்”நீ கிச்சன்ல கூட ஆப் பண்ணிட்ட ன்னு நினைக்கிறேன்” என்றவன் “ஹால் லைட் மட்டும் தான், சாங்ஸ் ஓடுது, அப்ப வெளிய உள்ளவங்க பார்த்தா கூட என்ன நினைப்பாங்க, நீ எப்பவும் இந்த டைமுக்கு பாட்டு போடுவது தானே, அப்புறம் என்ன விடு, இப்ப சொல்லு” என்றான்.
“ப்ளீஸ் போங்க, இன்னொரு நாள் பேசுவோம்” என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“மத்தவங்க கிட்ட என்னவாய் அடிக்கிற, ஏன் என்கிட்ட பேசுறதுக்கு என்ன, வா இன்னைக்கு ஒரு முடிவு பண்ணி விடுவோம், வந்து உட்காரு” என்றான்.
இவளோ அசையாமல் நின்றாள். “உனக்கு இப்போ பேசுறதுக்கு மூடு இல்லையா, பரவால்ல நான் ஒரு குஷனை போட்டு ஹாலில் படுக்கிறேன், உனக்கு எப்போ பேசலாம்னு தோணுதோ அப்போ எழுப்பு” என்று சொன்னவன் சோபாவில் இருந்த குஷனை எடுத்து கீழே போட்டான்.
“என்ன பண்ணுறீங்க” என்று பதறி கீழே போட்ட குஷனை எடுத்தாள்.
வேறு வழியே இல்லாமல் அவன் அமர்ந்திருந்த சோபாவிற்கு பக்கவாட்டில் உள்ள தனியான சிங்கிள் சோபாவில் சென்று அமர்ந்தாள்.
அவன் எதுவுமே சொல்லாமல் அவள் முகத்தை பார்த்தபடி “இசை ப்ளீஸ் இசை, டென்ஷன் ஆகாம பேசு”, என்றான்.
அவன் இசை என்று கூப்பிட்டதுமே, கல்லூரி காலங்கள் கண்முன் ஓடியது, ‘அவனை பொறுத்தவரை அவள் என்றும் அவனது இசை’ என்று அவன் சொன்னதும்,
அவள் அவனுக்கு பெயர் வைத்தது மட்டுமே நினைவில் ஆடியது, இவர்களுடைய கல்லூரி காலத்தில் சந்தித்துக்கொண்டது தான், பின்பு எத்தனை வருடங்கள் கழித்து இப்போது தான் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
கிட்டத்தட்ட இருவரும் பார்த்தே ஆறு வருடங்கள் இருக்கும், ஆறு வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் இன்டர் காலேஜ் காமடிஷனுக்காக இவள் கல்லூரிக்கு, அவன் கல்லூரியில் இருந்து வந்திருந்த போது பார்த்தது தான், ஐந்து நாள் புரோகிராம் அந்த ஐந்து நாளில் தான் இருவரும் ஒருவரை ஒருவர் நட்பாக பழகியது, அந்த நட்புக்கு பின் காதல் எப்போது துளிர்த்தது என்று கூட இருவரும் அறியவில்லை, ஆனால் இருவருக்கும் ஒருவரை ஒருவர் அத்தனை பிடித்திருந்தது.
அந்த நேரத்தில் யாழினியை, அவன் யாழிசை என்று அழைக்க, இவளோ அவனுக்கு பரிதி என்று பெயர் வைத்திருந்தாள்.
சூரியனின் மற்ற பெயர்களை எல்லாம் அலசி ஆராய்ந்து தான் அவனுக்கு இந்த பெயர் வைத்திருந்தாள்.
ஒரு நிமிடம் கல்லூரி நாட்கள் கண் முன் வந்து விட்டு ஓட , மற்றவற்றை நினைக்க பிடிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கோ.
‘இத்தனை நாள் எங்கே போயிருந்தான், இன்று வந்து உன்னிடம் பேச வேண்டும் என்று ஈசியாக சொல்கிறான் ஆறு வருடங்களாக தேடவில்லை தானே, இப்போதும் நேரில் பார்க்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக பேச வேண்டும், என்று நினைத்திருக்க மாட்டார் தானே’ என்று எண்ணிக்கொண்டவள் குனிந்தபடியே இருந்தாள்.
ஆனால் அவளுடைய இத்தனை வருடத் தேடலை அவள் மனம் நினைத்துக் கொண்டது, இந்த ஆறு வருடங்களில் இவனுடைய உயரம் கொண்டு யாரும் தெரிந்தால் அவர்களை சற்று ஆராய்ச்சியாக பார்ப்பதும், உயரமானவர்கள் எங்கேயாவது நிற்கிறார்கள் என்றால் ஒரு முறைக்கு இருமுறை திரும்பி பார்த்து விட்டு வருவதும், இவளுடைய பழக்கம்., ‘ஒருவேளை அவனாக இருக்குமோ’ என்று இவள் தேடிய நாட்கள் அதிகம் அதை எண்ணிக் கொண்டவளுக்கு கோபம் தான் வந்தது.
‘பெண்களின் மனம் எப்போதும் அதிக எதிர்பார்ப்போடு தான் இருக்கிறது போல’ என்று நினைத்துக் கொண்டவள், தன்னை சமப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்க்க அவனும் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்போது அவனை நேருக்கு நேராக பார்த்தவள், “என்ன பேசணும் சொல்லுங்க, எதுவா இருந்தாலும் பேசி முடிச்சுட்டு சீக்கிரம் உங்க வீட்டுக்கு போங்க”, என்று சொன்னாள்.
இவனும் “சொல்லு ஆறு வருஷமா ஒரு நாள் கூட என்னை உனக்கு தேடலையா”, என்று கேட்டான்.
இவளோ அவனைப் பார்த்து “ஏன் இதே கேள்வியை நான் உன் கிட்ட கேட்டா” என்றாள்.
அவனோ”எத்தனை இடத்தில் தேடினேன் தெரியுமா, உங்க காலேஜ்ல போய் கூட தேடி இருக்கேன், இந்த வேலைக்கு எப்படி வந்தேன் ன்னு நினைக்கிற, படிச்சது சாப்ட்வேர் லைன், ஆனால் என் வேலை, என் பிரெண்ட்ஸ் எல்லாம் சாப்ட்வேர் லைன்ல வேலை பார்க்கிறார்கள், நான் எப்படி இதுக்கு வந்தேன்னு யோசிச்சியா நீனு”, என்று கேட்டான்.
அமைதியாக அவன் சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பது போல அவனை பார்த்தபடி இருந்தாள்.
அதே நேரம் அவனும் அவனுடைய தழும்பை சுட்டிக்காட்டி, “இதுக்கு அப்புறம் என் மைண்ட் எல்லாம் கொஞ்சம் கோபம் இருந்துச்சு, இல்லன்னு சொல்லல, ஆனா உன்னை என்னால மறக்க முடியலை, மறந்தே ஆகணும்னு ஒரு வெறியும் இருந்துச்சு, அது என்ன அப்படி ஒரு நினைப்பு வர்றது, நினைக்க கூடாது அப்படின்னு நினைப்பேன், ஆனாலும் என்னால அப்படி நினைக்காம இருக்க முடியல, என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்க, அப்படி என்னடா பைவ் டேஸ் தானடா பார்த்திருப்ப, பைவ் டேஸ் ல உனக்கு என்னடா அப்படி ஒரு நினைப்பு ன்னு கேட்பாங்க, அப்ப எல்லாம் தோணும், ஆமா இல்ல அஞ்சு நாள்ல அப்படி என்ன பெரிய ஈர்ப்பு அப்படின்னு தோணுச்சு, அதை நான் வெறும் ஈர்ப்பா தான் முதல்ல நினைச்சேன், அப்புறம் எக்ஸாமுக்கு படிக்கணும், ஏதாவது ஒன்றில் கான்சன்ட்ரேட் பண்ணினா உன்னோட நினைப்பு என்னை விட்டு போயிடும் ன்னு நெனச்சு தான் எக்ஸாம்க்கு படிக்கப் போனேன், அப்போ கூட பிரெண்ட்ஸ் கிட்ட சொன்னேன், பாருடா நான் படிப்புல சாதித்து காட்டுகிறேன், அப்படின்னு சொல்லி சேலஞ்ச் பண்ணிட்டு இந்த எக்ஸாம் எழுத போனேன், எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி வேலைக்கும் போயிட்டேன், ஆனால் மனசுல இருந்த உன் நெனப்பு மட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்ல, நான் என்ன பண்ண முடியும், எங்கன்னு போய் தேட முடியும்,
கண்டிப்பா கிடைப்ப ன்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு, என் மனசுல இருப்பது வெறும் ஈர்ப்புனா நீ கிடைக்க மாட்ட, அந்த ஈர்ப்பை தாண்டி எனக்குள்ள இருக்கிற அன்பு நிஜம் னா நீ எப்படியும் எனக்கு கிடைப்பேன்ற நம்பிக்கையில் தான், இத்தனை வருஷம் ஓடுச்சு, கிட்டத்தட்ட நாலு வருஷமா நார்த்ல தான் இருந்தேன், இப்பதான் ட்ரான்ஸ்பர் ஆகி இங்க வந்தேன், ட்ரான்ஸ்பர் ஆகி வந்து ரொம்ப நாள் ஆகல” என்று அவளை பார்த்து சொன்னவன். “சரி இப்ப சொல்லு, நீ தேடினியா இல்லையா”, என்று கேட்டான்.
அவள் கண் கலங்க திரும்பி கொண்டு லேசாக தலையை மட்டும் அசைத்தால், “சொல்லு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிறது வெறும் ஈர்ப்பு தான் ன்னு இப்ப நீ நினைக்கிறாயா” என்று கேட்டான்.