Advertisement

     அம்மா தான் “ரெண்டு நாள்ல நான் ஊருக்கு போறேண்டி,  நீ உன் வேலையை பார்த்துப்பியா,  இல்ல இருக்கணுமா”, என்று கேட்டார்.

 “அவளோ,  நான் நல்லா தான் இருக்கேன், நான் பாத்துக்குறேன். நீங்க போய் உங்க ஸ்கூல்ல பாருங்க, உங்க ஸ்டூடண்ட்ஸ் உங்களை விட்டுட்டு இருந்துருவாங்களா என்ன”, என்று கேட்டாள்.

“இவள வச்சுக்கிட்டு” என்று சொன்னவர் அவர்களும் இரண்டு நாளில் கிளம்புவதாக சொன்னார்கள்.

 யாழினி அம்மா அப்பா இருவருமே ஆசிரியர்களாக இருந்தனர்.

      அவள் மெஷினில் துணியை போட்டு விட்டு வரும் போது ராதா தான்,  “ஃபுல்லா உங்களுக்கு பிடிச்சதா வாங்கிட்டு வந்து இருக்கா, எடுத்துட்டு போங்க” என்றாள்.

      “ஏன் உனக்கு மட்டும் வாங்கிட்டு வரலையா” என்று அவன் கேட்டான்.

 “எனக்கு வாங்கிட்டு வந்தத விட அதிகமா பிள்ளைக்கு வாங்கி இருக்கா” என்று சொன்னாள்.

    அவனோ “அவ உன்னை கழட்டி விட்டுட்டா, அவ்வளவு தான் ஞாபகம் வச்சுக்கோ” என்று  அவளை வம்பு இழுத்துக் கொண்டு இருந்தான்.

    பார்த்தும் பார்க்காதது போல அனைவருக்கும் காபி கலக்குவதற்காக கிச்சனிற்குள் சென்று விட்டாள்  யாழினி.

அதன் பிறகு மறுநாளும் வார நாளின் இறுதி நாளாக இருக்க,

   அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களுக்கு தான் வாங்கி வந்த பரிசு பொருளை கொடுத்து விட்டு எல்லோரிடமும் பேசிவிட்டே வந்தாள்,  கதிரவனின் அக்கா இருப்பதை பார்த்துவிட்டு அவர்களிடம் வாசலில் வைத்து கொடுக்க,  “வீட்டுக்குள்ள வா” என்று அழைத்தார்,

    “இல்ல இன்னொரு நாள் வாரேன்”, என்று சொன்னாள்.

     அவன்  அம்மா அப்பாவும் கட்டாயப்படுத்தி கூப்பிட வேறு வழி இன்றி வீட்டிற்குள் சென்றவள் அவர்களுக்கான கிஃப்ட்  ஐ  கொடுத்துவிட்டு “ராதா சொன்னாள் அங்கிள் சுவற்றில் எதுவும் போடலன்னு சொன்னாங்க அப்படி ன்னு,  எனக்கு சுவர்ல போடுறது ல  இன்ரஸ்ட் இல்ல, ஆனா கண்டிப்பா உங்களுக்கு போட பிடிக்கும் தானே, அது தான்” என்று சொல்லி அவர்கள் கையில் கொடுத்து விட்டு சற்று நேரம் இருந்து பேசிவிட்டு உடனடியாக வந்துவிட்டாள்.

 ஏனென்றால் வேலைக்கு சென்றவன் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என்ற சூழ்நிலையில் அங்கு அதிக நேரம் இருப்பது சரிபட்டு வராது என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

            அன்று மாலையே  அவளுடைய பெற்றோர்கள் கிளம்பி இருக்க, ராதா தான் “தனியா இருந்துக்குவியா, ஹெல்த் ஓகேவா”, என்று கேட்டாள்.

 “அதெல்லாம் இருந்துக்குவேன், நீ ஒழுங்கா ஹெல்த்த பாரு,  அலையாத அங்கிட்டும் இங்கிட்டுமா, சாப்பிட்டு ரெஸ்ட் எடு”, என்று சொன்னாள்.

 “இருந்துப்ப தானே” என்று கேட்க,  “அதெல்லாம் இருந்துப்பேன், நீ போ” என்று அவளை அனுப்பி வைத்தாள்.

 இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த கதிரவனின் அக்கா தான்,  “ஒரு வாரம் நான் இங்க தான் இருப்பேன்,  அம்மா அப்பாக்கு வீடு எல்லாம் செட் பண்ணி கொடுத்துட்டு அதுக்கப்புறம் தான் போவேன்,  கவலைப்படாதீங்க, நான் அப்பப்ப எட்டி பார்த்துக்கிறேன்”, என்று சொன்னார்.

இவளோ  சிரித்துக்கொண்டே “ஐயோ நான் நாளைக்கு ஆபீஸ் போய் விடுவேன்” என்று சொன்னாள்.

 “இருந்தாலும் ஈவ்னிங், மார்னிங் வீட்ல  தானே இருப்பீங்க” என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

 சிரித்துக் கொண்டே ராதா கிளம்புறேன் என்று கை காட்டிவிட்டு சென்றாள்.

   சற்று நேரம் அவர்கள் கேட்ட பதில் சொல்லிட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் யாழினி.

       எப்போதும் வீட்டிற்குள் இருந்து பால்கனிக்கு செல்லும் கதவை திறந்து தான் வைத்திருப்பாள், பகலில் அவள் இருக்கும் போது, அலுவலகம் செல்லும் போது மட்டும் தான் அந்தக் கதவை பூட்டுவாள்,  ஏனெனில் அந்த பக்கம் வழியாக சற்று காற்று நன்றாக வரும், அதனால் அன்றும் அப்படி திறந்து வைத்து விட்டு அலக்ஸாவின் தன் பாடல் லிஸ்ட் ஐ ஒட விட்டு விட்டு தன் வேலைகளை செய்ய துவங்கியிருந்தாள்.,

    மெதுவான மெலோடியான பாடல்கள் ஓடிக் கொண்டிருக்க,  அவளது வேலைகளை முடித்து மறுநாள் சமையலுக்கு தேவையானவற்றை தயார் செய்து வைத்தவள், மிஷினில் கிடந்த துணியை எடுத்து காய போட்டு விட்டு கதவை பூட்டும் போது யாரோ பார்ப்பது போல் தெரிந்தாலும் திரும்பியே பார்க்காமல் கதவை பூட்டிவிட்டு வந்து விட்டாள்.

        மறுநாள் காலையில் எப்போதும் போல எழுந்தவள், தன் வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகம் கிளம்ப தயாராகினாள்.

 உணவை எடுத்து தயார் செய்து வைத்தவள் ராதாவுக்கு பிடித்த விதமான உணவையும் செய்து வைத்திருந்தாள்,  அதையும் தனியாக ஒரு பாக்ஸில் போட்டு எடுத்து வைத்தாள்,  தேவையான தண்ணீர் மற்றும் ஜூஸ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அலுவலக பேக்கில் வைத்து தூக்கி தோளில் மாட்டியவள்,  வீட்டை விட்டு வெளியே இறங்கி கதவை பூட்டினாள்.

       சிறிது நேரம் லிப்ட் வருவதற்காக காத்திருந்து,  சரியாக லிப்ட் வரவும் அவள் ஏறிய அடுத்த நொடி கதிரவன் அவன் வீட்டிற்குள் இருந்து வேகமாக வந்து ஏறினான்.

 அவனைப் பார்க்கும் போது சற்று படபடப்பாக இருந்தாலும், எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டாள், ஏறியவனோ லிப்டின் பட்டனை மேல் மாடிக்கு அழுத்திவிட்டு அமைதியாக நிற்க,   அவளோ ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும், அவள் கிரவுண்ட் ப்ளோர்க்கு போவதற்காக லிப்ட்  பட்டனை அமுக்க போகும் போது அவன் அவள் கையை தட்டி விட்டான்.

    “எனக்கு உங்கிட்ட பேசணும்” என்றான்.

    “இல்ல எனக்கு ஆபிஸ் கேப் போயிரும்”, என்றாள்.

    “பேசணும்னு சொன்னேன்” என்று மீண்டும் சொன்னான்.

    “இல்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேல் மாடியில் நின்று,  மீண்டும் டோர் குலோசாகவும்,

    இவள் மீண்டும் பட்டனை அழுத்த செல்ல,  “இங்க பாரு நான் பேசுறதுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுனா கரெக்டா கீழே கிரவுண்ட் ப்ளோர் க்கு ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்,  இல்லன்னா நீயும் நானும் இந்த மொட்டை மாடியில் தான் நிக்க போறோம், என்ன பண்ண போற”, என்று சற்று அதட்டலாக கேட்டான்.

   அமைதியாக நின்றவள் “என்ன பேசனும்”, என்றாள்.

    “எனக்கு உன் கிட்ட பேசணும் அவ்வளவு தான்” என்று சொன்னான்.

    “பேசுறதுக்கு என்ன இருக்கு, ஒன்னும் இல்ல”, என்றாள்.

“இருக்கு” என்றவன் “எதை சொல்லும் போதும் என்னை நிமிர்ந்து பார்த்து பேசு,  இருக்கா இல்லையான்னு நான் சொல்றேன்” என்று சொன்னான்.

    நிமிர்ந்தவளுக்கோ அவன் முகத்தில் இடது புருவத்தின் மேலே இருந்த தலும்பை மட்டுமே பார்த்தாள்.

    அவள் பார்வையை பார்தவனும் “அப்ப பேசுவதற்கு இருக்கு இல்ல” என்று கேட்டான்.

“என்ன பேசணும்” என்றான்.

     “நான் சொல்றேன்” என்று சொன்னவன் அவள் கையில் வைத்திருந்த போனை அவளிடம் இருந்து பறித்தவுடன் , அவளும் பதறிப் போய் புடுங்க போக,  “பேசாம இரு” என்று சொன்னவன்,

     அழகாக அவளுடைய லாக்கை போட்டு ஓபன் செய்து,  அவள் எண்ணில் இருந்து தன் பர்சனல் நம்பருக்கு அழைப்பு விடுத்து கட் செய்தான்,

    “நம்பர் ஸ்டோர் பண்ணி வச்சுக்கோ” என்று சொல்லி விட்டு இப்போது கீழே பட்டனை அழுத்தவும் லிப்ட் கிரவுண்ட் ப்ளோருக்கு போகும் வரை அவன் மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தான்.

     எப்போதும் வாயடிப்பவளோ அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

     கீழே வருவதற்குள் “அது என்ன அப்படி ஒரு மயக்கம்,  எல்லாரும் பார்த்தவுடனே பயந்து போறதுக்கு தானே,  உனக்கு என்னை பார்த்து அப்படி ஒரு ஷாக் இல்ல, என்ன நான் போய் சேர்ந்திருப்பேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் அவனைப் பார்த்து முறைத்தவள் அவனை முறைத்தபடியே இருக்க,

     “ஓகே ஓகே அப்புறம் என்னம்மா ஷாக்” என்றான்.

    அவள் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொள்ள,  “இங்க பாரு நான் பேசணும்னு சொல்லிட்டு இருக்கேன், நான் கேக்குறதுக்கு எதுக்குமே பதில் சொல்லாமல் திரும்பி  நின்னுக்குற,  அது எல்லாம் எனக்கு தெரியாது,  எனக்கு பேசியே ஆகணும், என்கிட்ட நீ பதில் சொல்லியே ஆகணும்” என்று அழுத்தமாக சொன்னான்.

     மூச்சை இழுத்து விட்டவள்,  “எனக்கு ஆபீஸ்ல ஒர்க் இருக்கு, இப்ப பேச முடியாது” என்று சொன்னாள்.

 “அது தெரியும், உனக்கு இப்ப ஆபீஸ்ல ஒர்க் இருக்கு,  நீ ஆபிஸ்தான் போறேன்னு,  எனக்கும் தெரியும்,  எனக்கும் வேலை இருக்கு,  நானும் இப்ப ஆபீஸ் தான் போறேன்” என்று சொல்லி விட்டு அவளை நெருங்கி வர,

     “பக்கத்துல வராதீங்க,  நீங்க போட்டு இருக்க யூனிபார்முக்குன்னு ஒரு மரியாதை இருக்கு,  கெடுத்துக்காதீங்க” என்று சொன்னாள்.

  “பரவாயில்லையே மரியாதையா பேசுற”,  என்று சொன்னான்.

   “அது ஒன்னு தான் குறைச்சல்” என்று சொல்ல,

 அவனும் “இந்த யூனிஃபார்ம்க்குனு ஒரு மரியாதை இருக்கு,  அதனால தான் அமைதியா இருக்கிறேன்,  இல்லையென்றால் நான் வெறும் கதிரவன் தான்,  உன்ன பொறுத்த வரைக்கும் பொறுக்கி சரியா, சரி தானே அப்படி தானே ,  மத்தவங்கள பொருத்தவரைக்கும் மட்டும் தான் இந்த எஸ் பி,   ஆபிஸர் அந்த மாதிரி இதெல்லாம்,  உன்ன பொறுத்த வரைக்கும் அதே கதிரவன் என்ன,  பொறுத்த வரைக்கும் நீ அதே” என்று  சொல்ல வர, இவளோ அவனை முறைக்க,

      “உனக்கு நான் வச்ச பேரு இருக்குல்ல,  அதுதான்.

 எனக்கும் நீ பேர் வச்ச, ஆனா இப்ப அதை யோசிக்க மாட்ட ன்னு, எனக்கு தெரியும்” என்று சொன்னான்.

    அவள் முறைத்து பார்க்க சிரித்துக் கொண்டே “போடி” என்று சொன்னவன்,  ஆனா இன்னும் அந்த பேரை தானே பாஸ்வேர்ட்ஆ  வச்சிருக்க” என்று கேட்டாள்.

 அவனை முறைக்க, அவனும் “என்னோட பாஸ்வேர்டும் அதுதான்”, என்று சொல்லிவிட அதேநேரம் லிப்ட்டும் தரைத்தளம் வந்த சேர்ந்து,

” ஒர்க் முடிச்சிட்டு வா பேசணும்” என்று வாய்க்குள் சொல்லி விட்டு வெளியே வர, அவனுக்கும் அங்கு கார் காத்திருக்க,  இவளோ அங்கிருந்து அந்த கேட் வரை நடந்து சென்றால் தான் முடியும்,  கேப் வரும் கேட் அருகில் தான் ராதாவும் காத்திருப்பாள்,

     ராதா இருப்பது பக்கத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில்,  எனவே விறு விறு என கேட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.

 இவன்  அவளை கடந்து போகும் போது அந்த பிரத்தியேகமான பாடல் சத்தம் மட்டும் கேட்டது,  மீண்டும் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவள்,

  ‘எப்படி ஹேண்டில் பண்ண’ என்று சற்று தடுமாறி தான் யோசிக்க தொடங்கி இருந்தாள்.  எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் மனதில் தோன்றியது.

Advertisement