Advertisement

6

   காலைப் பொழுதில் பேச்சு சத்தத்தில் தான் கண்விழித்தாள்,

     ஏசியின் மிதமான குளிரை உணர்ந்தாள்,  தன்னை போர்த்தி இருந்த போர்வையை மீண்டும் இழுத்துப் போர்த்தி கொண்டவள்,

     மெதுவாக அரைக்கண் திறந்து பார்க்க,  அறையின் கதவு லேசாக திறந்திருந்தது. ‘நிச்சயமாக அம்மாவோ அல்லது ராதாவோ தான் திறந்து வந்திருக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

     அதே நேரம் வெளியே பேச்சு குரல்  தெளிவாக கேட்டது,  அந்த பேச்சு குரலுக்கு சொந்தக்காரர் பக்கத்து வீட்டு அக்காவும் அம்மாவும் தான்,

    கதிரவனின் அக்கா “நைட்டு மாத்திரை எதுவும் போட்டாங்களா” என்று கேட்டார்.

    “ஆமாமா எப்பவும் பாக்குற டாக்டர் கிட்ட போயி நந்தன் தான் டேப்லெட் வாங்கிட்டு வந்தான், டேப்லெட் போட்டுட்டு தான் தூங்கினா, அலைச்சல் , டயட்னஸ் இதெல்லாம் சேர்ந்து தான் அவளுக்கு மயக்கம் வந்து இருக்கும் ன்னு டாக்டர் சொன்னாரு, அதான் நல்ல தூங்கி எந்திரிக்கட்டும்னு சொல்லி மாத்திரை கொடுத்திருந்தோம், இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா” என்று சொன்னார்.

   ராதா தான் “நல்ல தூங்கி எந்திரிக்கட்டும் அத்த,  இப்பதிக்கு அவளை எழுப்ப வேண்டாம், எந்திரிச்ச உடனே சாப்பிடறதுக்கு சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு,  அவ எப்ப எந்திரிச்சாலும் வயித்துக்கு ஸ்டப் பண்ணிருவோம்,  மறுபடியும் தூங்குறதா இருந்தா தூங்கட்டும் ன்னு விட்டுவிடுவோம்,  ஒரு ரெண்டு நாள் நல்ல தூங்கி எந்திரிச்சனா அப்புறம் ப்ஃரஸ் ஆயிடுவா, பழைய மாதிரி பேசவும் தொடங்கிருவா”,என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      அதே நேரம் நந்தன்  தான் “அவளுக்கு ஏதாவது லேஸான சூட்டில் கலந்து தூக்கத்திலேயே  எழுப்பி குடிக்க குடுதேனா,  அப்படி தூக்கத்திலேயே குடிச்சிடுவா”,  என்று சொன்னான்.

      அதைக் கேட்ட யாழினி அம்மாதான் “டேய் அவ என்ன சின்ன புள்ளையா, இன்னும் குழந்தை மாறியே ட்ரீட் பண்ணிட்டு இருக்க”, என்று கேட்டார்.

    “விடுங்க சித்தி அவ,  சின்ன பிள்ளை தானே, என்று சொன்னான்.

     ராதாவோ “இப்படியே அவ முன்னாடி இன்னொரு தடவை சின்ன பிள்ளைன்னு சொல்லுங்க, கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க விடமாட்டா,  மாப்பிள்ளை பாத்தா நான் சின்ன பிள்ளை தானே,  அதையே சொல்லிட்டு  இருப்பா,  அவளுக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சிச்சின்னா நீங்க அதுக்கப்புறம் அவளுக்கு பிடிக்காததை பேச வேண்டாம் விடுங்க,  அப்படின்னு சொல்றீங்க,  நல்ல அண்ணன், நல்ல தங்கச்சி இரண்டு பேரும்”, என்று சொல்லி சத்தம் போடுவது கேட்டது.

          ‘நந்தன் பெரியம்மா மகனாக இருந்தாலும், உடன் பிறந்த அண்ணன் போல பாசமானவன், அவனுக்கு கிடைத்த மனைவி ராதா அதே போல் தான் தோழி என்றாலும், அண்ணி என்ற ஸ்தானத்தில் அவள் என்றும் இருந்ததே இல்லை, இப்போதும் தோழியாகவே தன்னை நடத்துபவள்,  இவர்கள் கிடைப்பதெல்லாம் வரம் தானே’ என்று நினைத்துக் கொண்டாள்.

  அவளிடம் உன் புருஷன், உன் வீட்டுக்காரர் என்று கிண்டல் செய்தாலும் அவளும் அதை பெரிதாக எடுப்பதில்லை, வேண்டுமென்றே அவனிடம் பேசாமல் தள்ளி இருப்பதையும் அவனும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவளுக்கு செய்வதையெல்லாம் நந்தன் செய்து கொண்டு தான் இருக்கிறான், அதை எல்லாம் நினைத்தவள் லேசான சிரிப்போடு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு இழுத்து மூடிக்கொள்ள,

     கதிரவனின் அக்கா தான் “நல்ல செல்லம் கொஞ்சுறீங்க”, என்று சொன்னார்.

யாழினி அம்மா தான் “இவங்க எல்லாம் செல்லம் கொஞ்சுறதை  பார்க்கும் போது எனக்கு பயமா இருக்கும், வரப்போறவன் எப்படி பார்க்க போறான்னு தெரியலையே, அது வேற பயமா இருக்கு”, என்று சொன்னார்கள்.

    “அதெல்லாம் நல்ல பையனா தான் ஆன்ட்டி வருவான், நீங்க எதுக்கு பயப்படுறீங்க, உங்களை மாறியே நல்லா பாத்துக்கிற பையன் தான் கிடைப்பான்,  கவலை படாதீங்க”என்று சொன்னார்.

     இவளோ அதைக் கேட்டபடி அமைதியாக படுத்திருந்தாள்.

சற்று நேரம் சென்று எழுந்தவள் வெளியே வரும் போது, வீட்டினரை தவிர வேறு யாரும் இல்லை,  ராதா தான் அதட்டி “போ பிரஷ் பண்ணிட்டு  ரெப்ரஷ் ஆகி வா,  சாப்பிடு” என்று அவளை சாப்பிட வைத்தாள்.

   அவளோ சாப்பிட்டு விட்டு சோபாவில் அமர்ந்திருந்த ராதாவின் மடியில் போய் படுத்துக் கொண்டு ராதாவின் வயிற்றில் முத்தம் வைத்துக் கொண்டிருந்தாள்.

     “எருமை என்ன செஞ்சிட்டு இருக்க”, என்றாள்.

    “நீ ஏன் டிஸ்டர்ப் பண்ற, இது அத்தைக்கும் மருமகப்பிள்ளைக்கும் நடுவுல உள்ள விஷயம், நீ நடுவில் உட்கார்ந்துட்டு என்னையும் என் மருமகப்பிள்ளையையும், டிஸ்டர்ப் பண்ண கூடாது”, என்று சொன்னாள்.

      “ஆமாடி இப்ப நான் டிஸ்டர்பன்ஸ் ஆயிட்டேனா உனக்கு”, என்று கேட்டாள்.

    “பின்ன என்ன  இத்தனை நாள் அத்த நான், பிள்ளைக் கிட்ட பேசலையே,  நாங்க ரெண்டு பேரும்  மௌன பாஷையில் பேசிட்டு இருக்கோம், பாரு பேபி மூமெண்ட்ஸ் நல்லா ஆரம்பிக்கும் போது, நான் தொட்டா கண்டுபுடிக்கிற அளவுக்கு மாத்தி காட்டுறேன்” என்று சொன்னாள்.

      “நீதான் அதை நேத்தே சொல்லிட்டியே, எப்படி எப்படி வளர்க்க போறேன்னு”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,

     பக்கத்து வீட்டில் இருந்து கதிரவனின் அக்கா பிள்ளைகள் வந்தனர்.

இவள் மடியில் இருந்து தலையை நகர்த்தி எழுந்து கொண்டவள், ராதா அருகிலேயே அமர்ந்து பிள்ளைகளை அழைத்து பேசிக் கொண்டிருந்தாள்.

       அப்பிள்ளைகள் தான் “ஆன்ட்டி நீங்க நல்ல டான்ஸ் ஆடுவீங்கலாமே” என்று கேட்டனர்.

     “யாரு உங்க ட்ட சொன்னா” என்று கேட்டாள்.

    “இதோ இந்த ஆன்ட்டி தான் சொன்னாங்க, நீங்க சூப்பரா டான்ஸ் ஆடுவிங்கன்னு, எங்களுக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறீர்களா”, என்று கேட்டனர்.

    “ஈவினிங் ஆடலாமா” என்று அந்த பிள்ளைகளை தனக்கு டான்ஸ் ஆடுவதற்கு துணைக்கு சேர்த்துக் கொண்டிருந்தாள்.

    “அடியே இது என்ன” என்று கேட்டாள்.

    “டான்ஸ் ஆட ஆள் கிடைக்கும் போது சேர்ந்து ஆட வேண்டியது தானே, அதுக்கு வருத்தப்பட முடியுமா” என்று சொல்லிவிட்டு “ஈவினிங் ஆடலாம்” என்று குழந்தைகளிடம் சொன்னவள்,

   அதன் பிறகு பிள்ளைகள் சிறிது நேரம் இங்கு விளையாடிவிட்டு அவர்கள் வீட்டை நோக்கி சென்றனர்.

      இவ்வளவு ராதாவிடம் “உன் பிள்ளையும் இப்படித்தான் சேட்டை பண்ணுமா”, என்று கேட்டாள்.

     ” நீதானே வளர்க்க போறேன்னு சொன்ன நீயே வளத்துக்கோ”, என்று சொன்னாள்.

    “அப்படி ஒன்னு இருக்கா, சரி நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

மதிய உணவுக்கு பின் ராதாவோடு அரட்டை அடித்து  கொண்டிருந்தவள், தன்னுடைய லக்கேஜ் எல்லாம் பிரித்து எல்லோருக்கும் வாங்கி வந்திருந்ததை எடுத்து வைத்தாள்.

    அம்மா அப்பாவிற்கு என்று வாங்கி வந்ததை அவர்கள் கையில் கொடுத்து விட்டு.,  ஊரில் உள்ள சொந்தங்களுக்கு என்று வாங்கியது எல்லாம் அம்மாவின் கையில் தந்தாள்.

     ஒரு சூட்கேசை மட்டும் தனியே இழுத்து வைத்து பிரிக்கத் தொடங்கினாள்.

    “இது என்னடி” என்று கேட்டாள்.

       “அது” என்று சொன்னவள் ராதாவிற்கு ஒரு கிப்ட் எடுத்துக் கொடுத்து விட்டு,  “இது உனக்கு” என்று அவளுக்கு பிடித்தது போன்ற பெர்ஃப்யூம், அவளுக்கு பிடித்தது போன்ற இலகுவான உடை போன்றவற்றை எடுத்துக் கொடுத்தாள்.

குழந்தைக்கு என நிறைய வாங்கி இருந்தாள்.  “குழந்தை பிறப்பதற்கு முன்னாடி வாங்க கூடாதுடி” என்று யாழினி அம்மா  சொன்னாள்.

     “லூசு மாதிரி பேசாதம்மா,  எந்த காலத்தில் இருக்க நீனு,  எந்த குழந்தையா இருந்தாலும் யூஸ் பண்ற மாதிரி பொதுவா தான் வாங்கி இருக்கேன்,  பையனா பொண்ணா எல்லாம் யோசிக்கல, எந்த குழந்தை பிறந்தாலும் யூஸ் பண்ற மாதிரி திங்ஸ் மட்டும் தான் வாங்கி இருக்கேன்,  மத்த திங்க்ஸ் எல்லாம் இங்க வாங்கிக்கலாம்” என்று சொன்னாள்.

        நந்தன் சோபாவில் இருந்தவன் இவள் முடியை பிடித்து இழுத்து விட்டு “எதிர்த்து பேசாத” என்று சொன்னான்.

     “இங்க  பாருடி ராது, என் தலையில் கொட்டுவதை விட்டான், இப்போ முடி இழுக்கான்,  நாளைக்கு உன் பிள்ளை முடிய பிடிச்சு இழுப்பேன்” என்று சொன்னாள்.

     “ஐயோ உங்க ரெண்டு பேர்க்கும் பஞ்சாயத்து பண்ணி என்னால முடியல சாமி”, என்று சொன்னாள் ராதா.

     “அமைதியாக இருக்க சொல்லு முடியல னா,  நான் தூக்கி வேற யாருக்காவது கொடுத்துடுவேன்” என்று சொன்னாள்.

      “ஏன் கொடுத்து தான் பாறேன்” என்று ராதா சொல்லிக் கொண்டிருந்தாள்.

     அதே நேரம் நந்தனுக்காக வாங்கிய திங்ஸ் பார்த்தவுடன் ராதாவோ “போடுவதெல்லாம் சண்ட, ஆனா வாங்குறது எல்லாம் உங்க அண்ணனுக்கு புடிச்சதா பார்த்து தேடி தேடி வாங்குறது, அப்படித்தானே”, என்று சொன்னாள்.

      “நான் ஒன்னும் எங்க அண்ணனுக்கு எல்லாம் வாங்கல, நான் தான் அண்ணன், அண்ணன் பொண்டாட்டி , அம்மா அப்பா எல்லாரையும் டைவர்ஸ் பண்ணியாச்சே, இது ராதாவோட ஹஸ்பண்டுக்கு” என்று சொல்லிக் கொடுத்தாள்.

      “திமிர் திமிர்” என்று மறுபடியும் தலையில் அவன் கொட்ட வர, அவன் கையை அழுத்தி பிடித்தவள்.

      “பாரு பாரு, கை எங்க வருது பாரு,  தலையில் கொட்ட தான் வருது” என்று அவளை மிரட்ட,

     “அய்யோ நீங்களும் தான் சும்மா இருங்க, அவ தலைல கொட்டுறதே வம்பா வச்சிக்கிட்டு இருக்கீங்க”, என்று சொன்னாள்.

 “சின்ன புள்ளையிலிருந்து அப்படியே கொட்டி பழகிட்டேன், இப்ப மாத்துனா எப்படி மாத்த முடியும்”, என்று சொன்னான்.

     “எல்லாம் இந்த அம்மாவை சொல்லணும், இதுதான் பழக்கி விட்டது எல்லாத்தையும்”, என்று அவள் அம்மாவிடம் வம்பு இழுக்க,  “தாயே தயவுசெய்து அமைதியா இரு” என்று யாழினி அம்மா சொன்னவர்.

     “நேத்திக்கு தான் மயங்கி விழுந்திருக்க, இன்னைக்கும் பேசி பேசி டயர்ட் ஆகிடாதே” என்றார்.

      “நான் ஒன்னும் டயர்ட் ஆக மாட்டேன், நான் நல்லா தான் இருக்கேன்” என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்.

     அதன் பிறகு அக்கம் பக்கம் வீட்டினருக்கு என்று வாங்கி வந்திருந்த கிப்ட் எல்லாம் எடுத்துக் காட்டியவள்,  பக்கத்து வீடு பால் காய்ப்பு என்று ஏற்கனவே ராதா சொல்லி இருந்தால்,அது மட்டுமல்லாமல் அவர்கள் நன்றாக பழகுகிறார்கள் என்று ஏற்கனவே சொல்லி இருந்ததால்,  அவர்களுக்காக அவள் வாங்கிய பரிசையும் பார்த்தனர்.

      அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தது,

        பக்கத்து வீட்டிற்கு வாங்கியது லக்கி ஏஞ்சல் என்று சொல்லப்படும் ஒரு வகையான கிப்ட் , அது கண்ணாடி பிரேமில் அங்கு பிரசித்தி பெற்ற மலர்களால் செய்யப்பட்ட ஓவியம் போல இருக்கும்,

   தூரத்தில் இருந்து பார்த்தால் அனைத்தும் பூக்கள்  போலவே தெரியும்,  வேறு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அந்த பூக்கள் எல்லாம் ஒரு தேவதையாக தெரியும்,  “இந்த கிப்ட் , ரொம்ப அழகா இருக்குடி” என்று ராதா சொன்னாள்.

   “தெரியும் இது ரொம்ப அழகா இருக்க போய் தான் நம்ம வீட்டுக்கு ஸ்டாண்ட்ல வைக்கிற மாதிரி வாங்கி இருக்கேன்,  நீ தான சொன்ன அந்த பக்கத்து வீட்டு அங்கிள் வந்து நம்ம வீட்ட பார்க்கும் போது ‘சுவர்ல ஒன்னும் போடலையான்னு கேட்டாரு ன்னு’ அப்ப கண்டிப்பா அவங்க வீட்ல சுவர்ல ஆணி அடிப்பாங்க,  ஆணியடிக்கும் போது இதை மாட்டிக்கட்டும்,  இதுவுமே ஸ்டாண்ட்ல வைக்கிற மாதிரி பின்னாடி ஒரு ஸ்டாண்டும் இருக்கும்” என்று சொன்னவள்,

    தங்கள் வீட்டிற்கு என அது போல வாங்கியதை அழகாக டேபிளில் வைக்கக்கூடிய கண்ணாடியில் அடைக்கப்பட்ட லக்கி ஏஞ்சல்  ஓவியத்தை ஸ்டான்ட் ல் வைத்தவள், அனைவர் கையிலும் கொடுத்தாள்.

     அதன் பிறகு வெறும் சூட்கேசை  எடுத்து எப்போதும் வைக்கும் கபோர்ட்டில் வைத்துவிட்டு,  அவளுடைய அழுக்கு துணிகளை எல்லாம் மிஷினில் கொண்டு போய் போட்டு விட்டு அவள் வேலையை பார்க்க தொடங்கியிருந்தாள் யாழினி.

Advertisement