Advertisement

 ‘என்ன ஆச்சு மயங்கிட்டாங்க” என்று பெண் போலீஸ் கேட்பதற்குள் நந்தன் தான் “அவ வரும் போது டயர்டாக தான் இருக்குன்னு சொன்னா,  கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னா,  எல்லாரையும் பார்த்தவுடன் பேசிட்டு இருந்துட்டா” என்று சொல்லி அவளை தன்னோடு சேர்த்து பிடித்தபடி நின்றவன், உள்ளே தூக்கி செல்லலாம் என்று அவன் தூக்கம் முயற்சிப்பதற்குள் பெண் போலீஸ் தான் , “ஆளுக்கு ஒரு பக்கமாக தூக்கிடலாம்” என்று சொல்லும் போதே  கதிரவனுக்கு  எரிச்சல் தான் வந்தது,

    ‘இவ ஒருத்திய தூக்குறதுக்கு இத்தனை பேரா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு “தள்ளுங்க” என்று சொன்னவன்,

அவன் உயரத்திற்கு நந்தனிடமிருந்து எளிதாக அவளை பிடித்து தன் பக்கமாக சாய்த்தவன், யாரும் எதிர்பார்க்கா  நேரத்தில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள், அவளை தூக்கிக்கொண்டு அவள் வீட்டிற்குள் நுழைந்தான்.

     ஒரு நிமிடம் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும்,  அவனுடன் வேலை பார்ப்பவர்களுக்கு அது ஆச்சரியம் தான்.

   அவ்வளவு எளிதில் தன்னிடம் யாரையும் நெருங்க விட மாட்டான், யாரிடமும் நெருங்க மாட்டான், என்பது உடன் வேலை பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.  அதுபோலவே கதிரவன் குடும்பத்தருக்கும் தெரியும்,  இருந்தாலும்  தான் வரவும் மயங்கிவளை தூக்கிக் கொண்டு செல்கிறான் என்று நினைத்து அமைதியாகிவிட்டனர்,

 யாரும் எதுவும் சொல்லாத போது அவர்கள் அவர் வீட்டில் ஹாலில் சோபாவில் அவளை  படுக்க வைக்க போகும் போது ராதா தான் “இங்க வேண்டாம்”, என்று ரூம் கதவை திறக்க ரூமில் ஒரு விதமான பெர்ஃப்யூம் ஸ்மெல் அடித்தது,  அவளை அங்கு படுக்க வைத்த பின் ராதா தான் ஃபேன் ஏசி என்று எல்லாத்தையும் போட்டு விட,  கதிரவனோ சற்று நேரம் நின்று அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

       முகத்தில் தண்ணீர் வைத்து கதிர்வனின் அக்கா  துடைத்து விட அப்போதும் அவளுக்கு மயக்கம் தெரியாததை கண்டவர்,  மீண்டும் தண்ணீரை வைத்து துடைக்க,  இவனோ “இப்படி தொடச்சா மயக்கம் இப்போதைக்கு தெளியாது குடு” என்று சொல்லி தண்ணீரை வாங்கி வேகமாக முகத்தில் அடித்தாள்.

     இரண்டு முறை அடிக்க மூன்றாவது முறை லேசாக கண்ணின் மணி அசைவது தெரிந்தது, கட்டிலுக்கு அருகே நின்றவன் அவள் கன்னத்தை வேகமாக தட்டி,  “ஹலோ கண்ண திறந்து பாரு” என்று வேகமாக தட்டினான்.

      “ஏன் டா இப்படி தட்ற”, என்றார்.

      “இன்னும் பயந்துற கூடாதுன்னு தான்” என்று சொன்னவன், ராதா அருகில் செல்லவும்,  வயிறுல  தட்டி விடக்கூடாது என்று ” நீங்க தள்ளி இருங்க, மேல கை கால் பட்டுட கூடாது” என்று சொல்லிவிட்டு நகர போக,

   யாழினியின் பக்கம் அமர்ந்திருந்த அவன் அக்காவோ,

 “டேய் இந்த அழகுல்ல மயங்குறது,  அழகுல்ல மயங்குறது ன்னு சொல்லுவாங்களே அது இது தானடா.,  உன்ன பார்த்த உடனே  மயங்கி விழுந்துட்டாளே” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

     “நீ ஒருத்தி போதும் கா, என்ன டேமேஜ் பண்ண” என்று சொல்லிவிட்டு அவன் வெளியே வரவும்,  பெண்கள் மட்டுமே அந்த அறையில்  இருந்தனர்.

      மயக்கம் தெளிவதற்குள் கதிரவனின் அம்மா சென்று அவர்கள் வீட்டில் இருந்து பாயாசம் மட்டும் எடுத்து வந்தார்,

    “முதல்ல இனிப்பு கொடுத்தா கொஞ்சம் சரியாகும் ன்னு சொல்வாங்க, இதை குடுங்க” என்று சொன்னார்.

      அவள் அப்போது தான் எழுந்து உட்கார்ந்தவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

     “என்ன யாழி  இப்படி விழுந்துட்ட” என்று ராதா கேட்டாள்

 அவள் கையைப் பிடித்துக் கொண்டவள் “ஒன்றும் இல்லை நான் தான் சொன்னேன் இல்ல, கொஞ்சம் டயர்டா இருக்குன்னு அதுதான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கையில் பாயசத்தை திணித்திருந்தார் கதிரவனின் அம்மா,

        “இதை குடிமா இனிப்பா குடிச்சா, கொஞ்சம் தெம்பா இருக்கும்” என்றார்.

      “தேங்க்ஸ்” என்று வேறு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.

    அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று அவளுக்கே தெரியவில்லை,  ராதாவிடம் “நான் கொஞ்சம் தூங்குறேனே” என்று சொல்ல

   “முதலில் இதை குடிச்சிட்டு, அப்புறம் தூங்கு,  நீ முழிக்கும்  நேரத்துக்குள்ள சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கும், அல்லது சாப்பிட்டு தூங்குறியா”, என்று கேட்டார்.

       “இல்லை எனக்கு இப்ப தூங்கணும்” என்று மட்டும் தான் சொன்னாள்.

   எப்படியோ தன்னை தனியாக விட்டால் போதும் என்ற மனநிலை மட்டுமே அவளுக்கு இப்போது இருந்தது.

      ஆளாளுக்கு அவளிடம் பேசினாலும்,  எல்லாரிடமும் ஒரு சிரிப்பு மட்டுமே சிந்தியவள் அமைதியாக இருந்தாள்.

 கதிரவன் அக்கா தான்,  “அய்யோ நல்ல பேசிட்டு இருந்த பொண்ணு தொப்புன்னு இப்படி மயங்கி விழுந்து கொஞ்ச நேரத்தில் எல்லாரையும் பயம் காட்டினது மட்டும் இல்லாம, இப்ப அமைதியா வேற ஆயிட்டாலே” என்று கேட்டார்.

       ராதா தான் அவளை அறிந்தவளாக “அதெல்லாம் இல்ல,  அவ டயட் அது மட்டும் இல்லாம டக்குனு மயங்கிட்டேன்னு, அவளுக்கு ஒரு மாதிரி இருக்கு போல,   எல்லாம் தெரியாத ஆட்கள் வேற, அதனால் தான் இப்படி இருக்கா சரியாயிடுவா” என்று  சொல்லிக் கொண்டிருந்தாள்.

     நந்தன் வந்தவன் “சாயங்காலம் பாருங்க இதுக்கும் சேர்த்து வாய் அடிப்பா”, என்றான்

      அனைவரும் அவரவர் இடத்திற்கு திரும்ப,

அவள் கையை பிடித்துக் கொண்டு “டயர்டா இருந்துச்சுனா நல்ல தூங்கி எந்திரிமா, நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்”, என்று அவன் அக்கா சொன்னார்.

     அவள் கையை பிடித்தவள் “சாரி உங்க வீட்டு பங்க்ஷன் மூட் நான் எதுவும் ஸ்பாயில் பண்ணிட்டேனா” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

     “அச்சோ அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, நீ ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டனர்,

    வீட்டில் அனைவரும் சென்று விட,  நந்தன் தான் அருகில் வந்து “என்ன ஆச்சு”, என்று கேட்டான்,

    “ஒன்னுமில்லை” என்று அன்றுதான் அவனிடம் நேரடியாக பதில் சொல்லியிருந்தாள்.

     ராதாவோ சிரித்துக் கொண்டு ‘அப்பாடா ஒரு வழியா கேட்டதுக்கு பதில் சொல்லிட்டா’ என்று நினைத்திருந்தாள்,

       சற்று நேரத்தில் தெளிந்திருந்தவள், ராதாவும் நந்தனும் அருகில் இருப்பதை பார்த்து “நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்,  ராது நீ உன் புருஷன கூட்டிட்டு வெளியே போய் இரு, இல்லை னா இன்னொரு ரூம்ல போய் ரெஸ்ட் எடு,  நீ சாப்டியா” என்று கேட்டுக்கொண்டே படுக்க ரெடியானாள்,

     “இங்க பாரு அந்த ஒரு டம்ளர் பாயாசத்தோட படுக்காதே,  பொறு  நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்று சொன்னாள்.

    “இப்ப சாப்பாடு எல்லாம் வேண்டாம், எனக்கு ஒரு மாதிரி இருக்கு, நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன்,  ஆப்ன் ஹவர் படுத்துட்டு அப்புறம் வரேன்” என்று சொல்லிவிட்டு படுத்தவள் உடனே கண்ணை மூடி கொண்டாலும்,  ஏதேதோ நினைவுகளோடு சற்று நேரம் போராடிவிட்டு  தன்னை மறந்து தூங்கி விட்டாள்.

      கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து முழித்தவள்,  வீடு அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு ‘என்ன இப்படி ஒரு அமைதி’ என்று யோசனையோடு வெளியே வர,

        அப்போது ஹாலில் அம்மா அப்பா மட்டும் இருப்பது தெரிந்தது,  அவர்களுடன் அமர்ந்தவள்,  “ராதா எங்க”, என்று கேட்டாள்.

     “இப்பதான் பக்கத்து வீட்ல கட்டாயப்படுத்தி சாப்பிட கூட்டிட்டு போனாங்க,  சாப்பிட போயிருக்காங்க, நீ சாப்பிடுறியா” என்று கேட்டவர். “கொஞ்சம்  வாயை குறை, கண்ணு விழுந்திருக்கும் சுத்தி போடனும்”என்று சொன்னார்.

       “சாப்பாடு வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதிர் அக்கா எட்டிப் பார்த்தவர்,  “எழுந்துட்டியா இரு வரேன்” என்று சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குள்ளே வந்தவர்,

     வீட்டில் இருந்து ஒரு தட்டை மட்டும் எடுத்து சென்று அதில் சாப்பாடு எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து “சாப்பிடு” என்று சொன்னார்.

     “எனக்கு இப்ப பசிக்கலையே” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    “அதெல்லாம் கிடையாது, கொஞ்சமாக சாப்பிடணும்” என்று சொல்லி கட்டாயப்படுத்தி சாப்பாடு கொடுக்க முயற்சி செய்யவும்,

     “இல்லை எனக்கு இப்ப வேண்டாம்”, என்று சொல்லும் போது,  அவர் தான்  நீ முதல்ல போ ஹீட்டர் போட்டு நல்ல குளி, அதுக்கப்புறம் சாப்பிடு” என்று சொல்லி சாப்பாட்டை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, அவளை குளிக்க அனுப்பினார்.

    தன் வீட்டிற்கு செல்லும் முன் “ஆன்டி சுத்தி போடுங்க, அம்மா சொல்ல சொன்னாங்க”,  என்று சொல்லி சென்றாள்.

அவள் அம்மாவோ, “ம்ம் இவளுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்கனும், ஹெல்த் கொஞ்சம் கவனிக்கனும், அவ மயங்கின உடனே எனக்கு ஒன்னும் புரியல, நந்தனும் ராதாவும் டயர்ட் தான் ன்னு சொல்லுதாங்க, எதுக்கும் டாக்டர் கிட்ட கேட்போமா”, என்றார்.

    அவள் அப்பாவோ, “ஏன் இவ்வளவு பயப்படுற, ஐந்து மாசமா வீட்டு சாப்பாடு இல்ல, ஒழுங்கா சாப்பிடாம இருந்து இருப்பா, ரெஸ்ட் இல்லாம அலைச்சல் எல்லாம் சேர்ந்து தான் மயக்கம் வந்திருக்கும்”, என்றார்.

     குளித்து விட்டு வெளியே வந்தவள் தன்னை புத்துணர்ச்சியாக  இருப்பதாக உணர்ந்தாள்,  மீண்டும் பழைய யாழினியாக மாறி இருந்தாள்.

Advertisement