Advertisement

       “நீ தானே, ரொம்ப நல்ல பிள்ளையா வளர்த்து விடுவ”, என்று சொன்னாள்.

      “நான் வளர்த்து காமிக்கிறேன், பிள்ளைய மட்டும் என்கிட்ட குடு”, என்று சொன்னாள்.

     “அம்மாடியோ உன் கையில கொடுத்தா,  நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும்,  ஒன்னு என் பிள்ளை எப்ப பார்த்தாலும் டான்ஸ் ஆடிட்டு இருக்கும்.,  இல்லாட்டி என்னையும் என் புருஷனையும் கரிச்சி கொட்டிட்டு இருக்கும், அது தானே செய்யும்”,  என்று கேட்டாள்.,

    “டெபனட்லி அது தான் சொல்லிக் கொடுப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

   அதே  நேரம் வீடு வந்து சேர அவளுடைய லக்கேஜ் நந்தன்,  யாழினி மட்டும் தள்ளி கொண்டு வர இவள் எடுக்க வர,  “தள்ளிப்போ, நீ தூக்கக்கூடாது,  அது கூட தெரியாதா, உனக்கு டாக்டர் எதுவும் சொல்லலையா,  எந்த டாக்டர் கிட்ட போற” என்ன என்று  அவளிடம் கேட்டவள்,

    ஒரு சிறிய ஹேண்ட்பேக்கை மட்டும் அவள் கையில் கொடுத்து விட்டு லிப்ட் மேலே வந்து சேர்ந்தனர்,

பக்கத்து வீட்டில் விசேஷத்திற்கான அத்தனை அடையாளங்களோடு நடந்து இருப்பது தெரிந்தது,

     இவளோ பார்த்து சிரித்து விட்டு “அப்பாடா பக்கத்து வீட்டுக்கு ஆள் வந்தாச்சு” என்று சொன்னாள்.

   “உனக்கு பேச்சு துணைக்கு நினைக்கிறாயா” என்றாள்.

   “என் வீட்டை பாதுகாப்பதற்கு, இந்த தாத்தா பாட்டி  அந்த ஆன்ட்டி அங்கிள் எல்லாம் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க, இவங்க எப்படி ன்னு தெரியலையே” என்று சொல்லிக் கொண்டே தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

    அதே நேரம் அம்மா அப்பா இவள் வரவுக்காக காத்திருக்க,  வந்தவள் முதலில் அப்பாவை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள்,  அதன் பிறகு அம்மாவை பார்த்தவள்,

“தாயே நீ இங்கதான் இருக்கியா,  என்ன உன் பேச்சு சத்ததையே காணோம்” என்று கேட்டாள்.

அவள் அம்மாவோ “ரெண்டு பேர் இருக்குற இடத்துல ஒரு ஆள் தான் பேசணும், அதனால தான் நான் பேசவில்லை,  எப்படியும்  நீ வாய் கிளிய  பேசுவ,  உன் பேச்சைக் கேட்க வேண்டாமா அதனாலதான்”,  என்று சொன்னார்.

    யம்மா வாய் கிளிய பேசினா,  எப்படிமா அடுத்து பேசுறதுக்கு வாய் இருக்கும்” என்று கேட்டவள் தனது தாயிடமும் கொஞ்சி விட்டு  “சாப்பிடுவதற்கு ஏதாவது செஞ்சு வச்சீங்களா” என்று கேட்டாள்.

“அய்யய்யோ” என்று அவள் அம்மா சத்தம் கொடுக்க,

      “என்ன” என்றாள்.

     “இன்னைக்கு பக்கத்து வீட்ல பங்க்ஷனா,  அவங்க அங்க தான் சாப்பிடணும்னு சொன்னாங்களா” என்று சொல்லவும்,

  “சாப்பிடனும்னு சொன்னாங்க னா, நீங்க போய் சாப்பிடுங்க,  எனக்கு நம்ம வீட்ல சாப்பாடு வேணும்” என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கும் போதே.,

இவள் சத்தம் கேட்டு எதிர்த்த வீட்டில் இருந்த பெரியவர்கள் வந்து எட்டிப் பார்க்க,  இவளும் வாசலுக்கே வந்துவிட்டாள்,

     அவர்களிடம் வந்து பேசிக் கொண்டிருந்தாள், அதில் உள்ள ஆன்ட்டி அவளை சேர்த்து பிடித்துக் கொண்டு “மெலிஞ்சிட்டிய குட்டிமா” என்று கொஞ்ச நந்தனோ ராதாவிடம்

    “இப்படி எல்லாரும்  கொஞ்சுறாங்கன்னு சொல்லுவ” என்று சொல்ல

     “கொஞ்சிட்டு தான் இருப்பாங்க, அவ யார் மனசையும் நோகடிக்க மாட்டாளே,  பின்ன இவ கிட்ட எப்படி கோபப்பட முடியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் ராதா.

       பின்பு இரு வீட்டினரிடமும் பேசிவிட்டு உள்ளே நுழைலாம் என்று நினைக்கும் போது அந்த லேடி போலீஸ் வந்துவிட ராதாவும் “இந்தா வந்துட்டா என் பிரண்டு” என்று சொன்னாள்.

     அவரோ என்று யூனிபார்மில் இல்லாமல் ஃபங்ஷனுக்கு வந்திருப்பது போல கிளம்பி வந்து இருந்தார்.  அதே நேரம் சக போலீஸ்காரர்களும்  அந்த பெண் போலீஸோடு வர யாழினி யை பிடித்துக் கொண்டு “அன்னைக்கு  பார்த்தது கால்கட்டோட” என்று சொல்ல தொடங்கவும்.

     “ஐயோ நீங்க வேற கால் கட்டுன்னு சொல்லாதீங்க.,  எங்க அம்மா அவங்களுக்கு தெரியாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சிட போறாங்க” என்று சொன்னாள்.

       “நான் ஒரு வார்த்தை சொன்னால் நீ அதுக்கு ரெண்டு அர்த்தம் கண்டுபிடிக்கிற மா” என்று சொல்லி அவளை கொஞ்சி விட்டு,  “உன்னை மறக்கவே முடியாது தெரியுமா, அன்னைக்கு என்ன வாய் அந்த நேரத்துலயும் ஃபோட்டோவை கிறுக்கி கொடுக்கிற,  எங்கள் ஃபோட்டோ எல்லாம் பார்க்காதீங்க என்கிற,  போட்டோ யாருக்கும் கொடுக்க கூடாது ன்கிற” என்று சிரித்துக் கொண்டு பேசியவர் அவளிடம் “ஜெர்மன் ட்ரிப் எப்படி இருந்தது, ஒர்க் எல்லாம் முடிஞ்சிடுச்சா, இனி போக வேண்டியது இருக்கா” என்று கேட்டார்.

   வேகமாக தலையாட்டிவள் “இனிமேல் கூப்பிட்டால் கூட போக மாட்டேன்,  என்னால முடியாது” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

        இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த கதிரவனின் அக்கா,  “ஹலோ நீங்க தான் இந்த வீட்டுக்காரங்களா” என்று சொல்லி அவளிடம் வந்து பேச வந்தார்.

      அவளும் கதிரவன் அக்காவை பார்த்து ‘நாம இவங்களை எங்கேயும் பார்த்திருக்கோமா’ என்று யோசனையோடு “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கயும் பார்த்திருக்கேனா” என்று கேட்டாள்.

     “இல்லையே” என்று சொன்னார்.

      “இல்ல டக்குனு உங்க முகத்தை பார்த்தவுடன், எங்கேயோ பார்த்த ஒரு பீல் அதுதான் கேட்டேன்” என்று சொன்னவள்.  “நல்லா இருக்கீங்களா” என்று கேட்டுக் கொண்டு “நீங்கதான் இங்க வர போறீங்களா” என்று கேட்டாள்.

       “இல்லை  இல்லை இது தம்பி வீடு,  எங்க அம்மா  அப்பா கூட இருக்க போறாங்க,  நான்  இன்னைக்கு வந்து இருக்கேன்., அப்பப்ப வந்துட்டு போவேன்” என்று சொன்னாள்.

     “அப்பப்போ இல்ல,  அடிக்கடி வாங்க” என்று சொல்லி அவரோடும் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.

         சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும்,  யாழினி முகம் வாட்டமாக இருப்பதை பார்த்தவர் தான்,  “டல்லா  இருக்கியே மா” என்று கேட்டார்.

     “டிராவல் வேற ஒன்னும் இல்ல, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்” என்று சொல்லிவிட்டு அங்கிள் ஆன்டி , தாத்தா பாட்டி என இருவரிடமும் நான் அப்புறமா வர்றேன் பார்ப்போம்” என்று சொல்லி கையை ஆட்டிவிட்டு லேடி போலீஸ் இடமும்,  “இனிமேல் தான் அடிக்கடி வருவிங்களே பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு உள்ளே வாங்களேன் என்று அழைத்தாள்.

    அவரோ “நீ இல்லாதப்பவே வந்து வீட்டை பார்த்தோம்” என்று சொன்னவர். “அழகா மெயின்டன் பண்றமா” என்று சொன்னார்.

 இவளும் சிரித்துக் கொண்டே, “தேங்க் யூ கண்டிப்பா எனக்கு வீடு மட்டும் அப்படியே இருக்கணும்” என்று சொல்லிவிட்டு “சரி நீங்க பாருங்க” என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைய போகும் போது கதிரவனின் அக்கா தான் அவர்கள் அம்மா அப்பாவை அழைத்து வந்து  அறிமுகப்படுத்த அங்கே நின்று விட்டாள். சற்று சோர்வாக உணர்ந்தாள்.

     வீட்டிற்குள் வந்து தண்ணி கூட குடிக்காமல் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு இன்னும் சோர்வாக தோன்றியது,

       அவர்கள் அம்மா அப்பாவிடமும் வணக்கம் சொல்லிவிட்டு சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள்,

      அந்த நேரம் தான் கதிரவன்  சொந்தக்காரர்கள் யாரோ அம்மாவை தேட அதை அம்மா உங்களை என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்தவன்,  யாழினி  யை பார்த்தவுடன் ஒரு நிமிடம் பேசாமல் அவளை விழி விரித்து பார்த்திருந்தான்,

     அதே நேரம் கதிரவனின் அம்மாவும் “வாடா என்ன” என்று கேட்டார்.

 “அத்தை கூப்பிடுறாங்க” என்று சொன்னவன் யாழினி யை  பார்த்த படி இருந்தான்.

     கதிரவனின் அக்கா தான் “இவங்க தான் பக்கத்து வீட்ல இருக்கிறவங்க,  இது என் தம்பி, இவன் தான் இங்க இருக்க போறான்” என்று சொன்ன படி அறிமுகம் செய்து வைத்தார்.

     அவளும் கதிரவனை ஒரு நிமிடம் ஆழ்ந்து நோக்கியவள்,  வேகமாக அவன் முகத்தை ஒரு முறை ஆராய்ச்சியாக பார்த்துவிட்டு,  அவன் இடது  புருவத்திற்கு  மேல் இருக்கும் தழும்பை பார்த்தவர்களுக்கு  நிச்சயமாக நம்ப முடியாமல் தான் இருந்தது,  அதிர்ச்சியா வேறு எதுவுமா  என்று மனநிலையை கணிக்க முடியாமல் இருந்தவள்,

     தன்னை அறியாமல் கண் சொறுக சாயத் தொடங்கி இருந்தாள்.

 அவள் சாயப்  போவதை உணர்ந்து நந்தன் அருகில் வருவதற்குள்,  ஒரே எட்டில் கதிரவன் அவளை நெருங்கி தாங்கியிருந்தான்.

       கதிரவன் மனமோ ஏதும் தவறாக நினைப்பார்களோ, என்று நினைத்தாலும்  அவனோ நிதானமாக அருகில் இருந்த பெண் போலீசிடம் “பிடிங்க” என்று சொல்லி அவளை அவர் கையில் சாய்த்தான்.

   முழுமையாக சாய்ப்பதற்குள்,  நந்தன்  வேகமாக வந்து தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டான்,

     ராதா தான் யாழி என்று அவள் கன்னத்தை தட்ட  அவளோ முழு மயக்கத்திற்கு சென்றிருந்தாள்,

 அதற்குள் அங்கு சிறிது பதட்டமாக  தண்ணீர் என்று கேட்க,  தண்ணீர் எடுத்துக் கொண்டு கதிரவனின் அக்கா ஓடி வந்தார், “இப்படி சாய்த்த படி தண்ணீர் தெளிக்க முடியாது” என்று சொன்னார்.

Advertisement