Advertisement

5

  ஏர்போர்ட்டில் ராதாவும் நந்தனும் காத்திருந்தனர்,  இன்னும் சற்று நேரத்தில் யாழினி இந்தியாவிற்கு வந்து விடுவாள்,

     அப்போது தான் நந்தன் “சித்தியும், சித்தப்பாவும்  நல்லவேளை நேத்தே வந்தாங்க, வீடு க்ளீன் பண்ணி வைச்சாச்சி, இல்ல னா வந்து குறை சொல்லுவா”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

“இவ இந்தளவு சேட்டை, வாய்  எல்லாத்துக்கும் நீங்க எல்லாரும் தான் காரணம், முக்கியமா உங்க சித்தி தான் காரணம், பொண்ணுங்க  னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும், வீடு னா  இப்படி இருக்கணும்னு சொல்லி வளர்த்து இருக்காங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     “அவங்க காலையிலேயே பால் காய்ச்ச கூப்பிட்டாங்க தானே,  நீ போய் எட்டி பாத்துட்டு வந்திருக்க வேண்டியது தானே”, என்று ராதாவிடம் கேட்டான்.

      அவளும் “நேற்றே நான் சொல்லிட்டேன் அவங்ககிட்ட,

மெதுவா  தான் வருவேன், ஏர்போர்ட் ல போய் கூட்டிட்டு வந்துட்டு தான் நான் வர முடியும் சொல்லிட்டேன்”, என்றாள்.

       “யார் கிட்ட அந்த எஸ் பி  சார் கிட்டவா”, என்று கேட்டான்.

      “அவர் கிட்ட யார் பேசுவா, பார்த்தாலே முறைக்கிற மாதிரியே இருக்கு,  நீங்க மட்டும் பேசுறீங்களாக்கும்,  நீங்களும் பார்த்தா ஹலோ ஹாய் சொல்றதோட  நிப்பாட்டிருவீங்க,  நான் அவரோட அம்மாவும் அக்காவும் இருந்தாங்களா, அவங்க கிட்ட தான் சொல்லிட்டு வந்தேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     “சித்தி ட்ட நேத்து ஈவினிங் வந்து சொல்லி இருக்காங்க, ஃபங்ஷனுக்கு வந்துருங்க ன்னு “, என்றான்.

    “ஓ அவங்க கிட்டயும் சொல்லி இருக்காங்களா” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே சற்று தூரத்தில் டிராலியில் லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்டு யாழினி வருவது தெரிந்தது.

    சற்று மெலிந்திருப்பது போல தான் தோன்றியது ராதாவிற்கு,  அதையே அவனிடம் சொல்லி விட்டு எழுந்து வேகமாக நடக்க தொடங்கவும்,

        இவன் தான் “மெதுவாக போ, நீ வேகமாக போனா அதுக்கும் என்னை தான் திட்டுவா, உன்ன திட்ட மாட்டா” என்று சொல்லி அவளை கைபிடித்து மெதுவாகவே அழைத்து சென்றான்.

      இவர்கள் இருவரையும் தூரத்தில் இருந்தே ஜோடியாக பார்த்தவள் சற்று நேரம் பார்த்துக் கொண்டே வந்தாள், பின்பு தன் பார்வையை  மாற்றிக் கொண்டு ராதாவை பார்த்து நேரடியாக வந்தவள்,  அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

        “அது என்னடி உனக்கும் எனக்கும் நடுவுல எப்பவும் ஒரு டிஸ்டர்பன்ஸ் இருந்துட்டே இருக்கு,  ஒன்னு அது உன் புருஷனா இருக்காரு,  இல்லன்னா,  இப்ப வயத்துக்குள் வந்திருக்கும் பிள்ளையா இருக்கும்னு நினைக்கிறேன்”, என்று சொன்னாள்.

      “வந்த உடனே ரொம்ப ஆரம்பிச்சுட்டியா” என்று சொல்லி நந்தன் அவள் தலையில் கொட்ட வர,

      அவன் கையை தட்டி பிடித்தவள், “இந்தா பாரு ராது எப்ப பார்த்தாலும் உன் புருஷன் தலையிலேயே கொட்டு வைக்கான்,  நாளைக்கு உன் பிள்ளைக்கு தான் இருக்கு பாத்துக்கோ” ராதாவை மிரட்ட தவறவில்லை.

அவள் தடுத்து பிடித்த கையை இழுத்த நந்தன் அவளை அனுப்பும் போது எப்படி தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டானோ,  அதுபோலவே அணைத்துக் கொண்டவன், “மெஞ்சிட்டீயே” என்று அவளிடம் கேட்டான்.

          அவனிடம் பதில் சொல்லாமல் ராதாவிடம் “வீட்டு சாப்பாடு சாப்பிடல, பின்ன அப்படித்தான் இருக்கும், ஒரே காய்ந்த ரொட்டியை சாப்பிட்டுட்டு,  நான் என்ன பூசணிக்காய் மாதிரியா வருவேன்” என்று சொன்னாள்.

          ராதாவோ “எரும, இப்பவாவது உங்க அண்ணனுக்கு பதில் சொல்லு எரும”,  என்று சொன்னாள்.

     “யார் அண்ணன், நான் அண்ணன் அம்மா அப்பா அண்ணன் பொண்டாட்டி எல்லாத்தையும் டைவர்ஸ் பண்ணிட்டேன்”, என்று சொன்னாள்.

       “எருமை எருமை, இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை எருமை” என்று சொன்னவள்.

       “ஏண்டி அப்படி என்ன கோவம், உன்கிட்ட நாங்க லவ் பண்ணதை சொல்லலைன்னா.,  எல்லாத்துக்கும் போய் சொல்லிட்டே இருப்பாங்களா,  நாங்க லவ் பண்றோம்,  லவ் பண்றோம் ன்னு சொல்லவா முடியும், என்ன நடுவில் அம்மணிய தூதுவிடாமல் நாங்களே லவ் பண்ணிட்டோம்னு கோவமா.,   ஆனாலும் உனக்கு இவ்வளவு திமிரு ஆகாதுடி வா”, என்று அவள் கையை பிடிக்க,

“எவ்வளவு நாளைக்கு கோபத்தை இழுத்து பிடித்துட்டு அலைவ,  எங்களுக்கும் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகப்போகுது”.,  என்று சொன்னாள்.

இவளோ “அப்படித்தான் டி,  நீ ப்ரன்ட் ஆ,   துரோகி” என்று திட்டவும்,

    “அடிப்பாவி இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த” என்று கேட்டாள்.

        அவள் கையைத் தள்ளிவிட்டு அவள் லக்கேஜ் இருந்த டிராலியை நந்தன் தள்ள, “ரெண்டு பேரும் எனக்கு துரோகி தான், என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்களா,  ரெண்டு பேரும் என்னோட க்ளோசா இருந்துட்டு, ஒரு வார்த்தை கூட பேசல, அப்புறம் கல்யாணத்து அப்ப தான் எனக்கே தெரியுது” என்று சொன்னாள்.

       “நீ சின்ன புள்ள பாப்பா, உன்கிட்ட எதுவும் சொல்லக்கூடாது”, என்று நந்தன் சொல்லவும்,

      “யார் சின்ன புள்ள” என்று அவனிடம் பேச தொடங்கி ராதாவை பார்த்து திரும்பியவள்,  சின்ன புள்ள சின்ன புள்ள ன்னு சொல்ல வேண்டியது,  அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ,  கல்யாணம் பண்ணிக்கோ,  டார்ச்சர் பண்ண வேண்டியது,  அதெல்லாம் பண்ண முடியாது,  நானும் உங்க யார்கிட்டயும் சொல்லாம,  ஒரு ஆளை தேடி கண்டுபிடிச்சு,  லவ் பண்ணி,  அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிட்டு வந்து உங்க முன்னாடி நிக்கிறனா இல்லையா ன்னு  பாரு”,  என்று சொன்னாள்.

     “அடிப்பாவி வந்து இறங்கவுமே இப்படி ஒரு சேலஞ்சா”, என்று கேட்டாள்.

      “ஆமாமா நான் எல்லாம் சேலஞ்சு விட்டு தான் லவ் பண்ணுவேன்னு” அவள்  சொன்னாள்.

     “ஓஹோ ஜெர்மனியில் யாரையும் பார்த்து வச்சிட்டு வந்துட்டியா”,என்று கேட்டாள்.

     “ஜெர்மன் லையா, கடவுளே மறந்து போய் என் தலையில் அந்த மாதிரி எழுதி இருந்தா, அழித்துரு, மறுபடியும் காய்ந்து போன ப்ரட் ஆ, சோறு ன்னு தேட விட்ட ஊரு அது, ஒன்னும் இல்ல னா,  நானே பொங்கி நானே சாப்பிட்டா தான் உண்டு,  அந்த ஊருல வசல்ஸ் கூட ஒழுங்கா கிடைக்காது”, என்று புலம்பி கொண்டு வந்தாள்.

      அதற்கு முன்பு தான் அவர்களிடம் நீங்க ரெண்டு பேரும் துரோகின்னு சொன்னது மறந்துட்டு மீண்டும் அவர்களுடன் சேர்ந்து நடக்க தொடங்கினாள்.

     ” இப்பதான் என்னமோ துரோகி ன்னு சொன்ன”, என்றாள்.

     “வேற வழி இல்ல பசிக்கு இந்த பந்த பாசம் தெரியாதாம்,  வா முதல்ல சாப்பிடணும்”, என்று சொன்னாள்.

        “சாப்பிடாதவ மாதிரி சாப்பாடு சாப்பாடு பறக்காதடி,  எப்படியும் பிளைட்ல கொடுத்து இருப்பாங்க இல்ல,  சாப்பிடாம ல இருந்த” என்று கேட்டாள்,

      “வ்வாக் அது எல்லாம் நல்லவே இல்லை”, என்றாள்.

      நந்தனோ “ஹோட்டலுக்கு போவோமா”என்றான்.

          “ம்ஹூம் வீட்டில் போய் சோறும் தயிரும், அப்படி இல்லன்னா சோறும் ரசம் வைத்து சாப்பிட்டால் போதும்,  வீட்டிற்கு போறோம் சாப்பிடுகிறோம்”, என்று சொன்னாள்.

  “ராது அதே மாதிரி டான்ஸ் ஆடி ரொம்ப நாளாச்சு,  இன்னைக்கு போன உடனே என் கூட சேர்ந்து நீ ஒரு டான்ஸ் ஆடுற, உன் பிள்ளையே என்ன ஏதுன்னு கேட்கணும்”, என்று சொன்னாள்,

     “அம்மா தாயே நான் டான்ஸ் எல்லாம் ஆட முடியாது,  நீ ஆடு உன் கூட சேர்ந்து வேணா நான் உட்கார்ந்து பார்க்குறேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      இனிமேல் ஆபீஸ்ல எவனாவது ஆன்சைட் ன்னு  சொல்லட்டும்,  நான் வேலையவே விட்டுட்டு வீட்டில் உட்கார்ந்துடுவேன். இனி ஆன்சைட் வேலையே கிடையாது”,  என்று சொன்னாள்.

         பின்பு காரில் ஏறவும் ராதாவின் அருகில் அமர்ந்து கொண்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டு,  அவள் வயிற்றில் கையை ஒரு வைத்து “டேய் குட்டி பிள்ளை, உங்க அம்மா அப்பாவை நம்பாதே,  அவங்க ரெண்டு பேரும் எதையுமே சொல்ல மாட்டாங்க நம்ம கிட்ட.,  நல்ல பழகுவாங்க ஆனா என்னன்னா நம்ம கிட்ட எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டாங்க,  எல்லாத்தையும் மறச்சிடுவாங்க,  சோ நீ என்ன பண்ற வெளியே வந்த உடனே இந்த அத்தையை மட்டும் தான் நம்பனும், அம்மா அப்பாவை நம்ப கூடாது,  நான் உனக்கு எப்படி சேட்டை பண்ணனும்,  எப்படி இவங்க ரெண்டு பேரையும் டென்ஷன் பண்ணனும் ன்ற விஷயத்தை எல்லாம் சொல்லித்தருவனாம்,  நீ எல்லாத்தையும் கத்துக்குவியா”,  என்று வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசிக் கொண்டு வந்தாள்.

     நந்தனும் காரின் மிரர் வழியாக பார்த்து சிரித்துக் கொண்டே,  லேசாக திரும்பி ராதாவை பார்த்து சிரித்தான்.

     அவளோ யாழினின் காதை பிடித்து “எருமை மாடு வயித்துக்குள் இருக்கும் போது பிள்ளைக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுப்பியா”,  என்று சொன்னாள்.

    “பின்ன உண்மையை தான சொல்லி வளர்க்கணும்,  ஒரு பிள்ளையை நேர்மையா வளர்க்கணும்னா, உண்மையெல்லாம் சொல்லணும்,  உங்கள மாதிரி சொல்லாத ஆட்களை பத்தி விஷயத்தையெல்லாம் சொல்லணும்,  என்னதான் அம்மா அப்பா வா  இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு பெரிய ஆளுங்கறது  சொல்லிக் கொடுக்கணும் இல்ல, அப்போ நல்ல பிள்ளையாக வளரும்”,  என்று சொன்னாள்.

Advertisement