Advertisement

“ஓஹோ அன்னைக்கு அவங்க வேற மாதிரி போன் பேசி, உங்ககிட்ட கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க” என்று சொல்லி பெண் போலீஸ் கேட்டார்.

“ஆமா அவ எப்பவுமே அப்படித்தான் பேசுவா”, என்று சொல்லி சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.

பெண் போலீஸோ “ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க உங்க பிரண்டிடம்”, என்றார்

“நிச்சயமா சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்,

அப்போது கதிரவன் தன் அம்மா அப்பாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தான். “இப்படி ஒரு வீடு பார்த்து இருக்கேன் வந்து பாக்க வரீங்களா”, என்று கேட்டான்.

மறுநாளே அவன் அம்மா அப்பா வருவதாக சொல்லவும், பெண் போலீஸிடம் கேட்டுக் கொண்டிருந்தான் “நாளைக்கு நீங்க கூட்டிட்டு வந்து வீட்டை கொஞ்சம் காட்ட முடியுமா, எனக்கு ஒர்க் இல்லன்னா நான் வந்துருவேன்., நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு” என்று சொன்னான்.

“நான் பார்த்து கூட்டிட்டு வரேன் சார்”, என்று அவர் சொல்லும் போதே

கதிரவனோ ராதாவிடம் “கொஞ்சம் நீங்களும் வருவீங்களா” என்று கேட்டான்.

“ஏன் னா எங்க அம்மாக்கு இப்படி வெறும் வீட பார்த்தால் எல்லாம் திருப்தி ஆகாது, நீங்க வந்தீங்கன்னா உங்க பிரண்ட் வீட்டை காட்ட சொல்லலாம் இல்ல, அது தான்”, என்றான்.

“கண்டிப்பாக நீங்க வரும்போது சொல்லுங்க”, என்று பெண் போலீசிடம் நம்பர் வாங்கிக் கொண்டு ராதாவின் நம்பரையும் கொடுத்து விட்டு சென்றனர்.

சொன்னது போலவே பெண் போலீஸ் மறுநாள் கதிரவனின் அம்மா அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டை காட்ட வர அதே நேரம் ராதாவிற்கு அழைத்துச் சொன்னார்,

ராதாவும் வந்து சேர்ந்தால் மெய்ட் தற்செயலாக வந்திருக்க அவரிடம் “செடிக்கு மட்டும் தண்ணி ஊத்திட்டு போயிருங்க” என்று சொன்னாள்.

அவரும் “மற்ற நாட்களில் எப்படிமா ஊத்துறீங்க” என்று கேட்டார்.

“அதெல்லாம் அவ ரெடி பண்ணி வச்சுட்டு போயிருக்கா, வாரத்துக்கு ஒரு நாள் நீங்க அந்த தண்ணி பாட்டில் ல தண்ணீர் நிரப்பி இருக்கீங்க இல்ல, அதுவே போயிடும் அவ செடிக்கு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் கதிரவன் அம்மா, அப்பா வீட்டை திறந்து பார்த்துவிட்டு “நன்றாக இருப்பதாக சொல்லிவிட்டு இன்னும் பார்த்தால்” என்று சொல்லும் போது தான் பெண் போலீஸ்

“அதுக்காக தான் சார் இவங்களை வர சொன்னாங்க, இவங்க வீட்ட பாருங்க ரெண்டு வீடும் ஒரே மாடல்ல கட்டினது” என்று அந்த பால்கனி விஷயத்தையும் சொன்னார்.

“அதுவும் அழகா தான் இருக்கு பார்த்தேன்” என்று சொல்லி விட்டு, அவர்கள் வந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே மீட்டிங் முடிந்து கதிரவனும் அங்கே வந்து விட்டான்,

அப்போது தான் பெரியவர்கள் இருவரும் யாழினி வீட்டிற்குள் சென்று வீட்டை பார்த்தனர், ராதா தான் ஒவ்வொன்றும் காட்டிக் கொண்டு இருந்தாள்,

வீட்டை பார்த்தவர்கள் “ரொம்ப நீட்டா வச்சிருக்காங்க”, என்றனர்.

“அவ எப்பவுமே அப்படித்தான் என்று சொல்லும் போதே

வீட்டை பார்த்தவர்கள் “அழகா வைத்து இருக்கீங்க இதுல கொஞ்சம் போட்டோஸ் எல்லாம் மாட்டினால் நல்லா இருக்கும் இல்ல” என்று கதிரவனின் அப்பா கேட்டார்.

ராதாவும் “இல்ல அவளுக்கு வீடு அழுக்கா இருக்க கூடாதுன்னு, வீட்டு சுவர்ல எதுவும் இருக்க கூடாதுன்னு நினைப்பா, அப்படி தான் சொல்லுவா, சில நேரம் பண்ணலாம் ன்னு சொல்லுவா, அப்புறம் என்ன நினைப்பா ன்னு தெரியல விட்டுடுவா” என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கும் போது கதிரவனையும் “உள்ள வந்து பாருங்க” என்று நந்தன் தான் அழைத்தான்.

வெளியே நின்றவன், உள்ளே வந்து வீட்டினை பார்த்தவன் “நல்லா இருக்கு, அழகா மெயின்டெய்ன் பண்ணுறாங்க” என்று சொன்னான்.

கதிரவனின் அம்மாவும் “இதே மாதிரி பண்ணா நமக்கு நல்லா இருக்கும்” என்று சொன்னார்.

“உங்களுக்கு வீடு பிடிச்சிருக்கா” என்று கேட்டான்.

“நல்லா இருக்கு” என்று சொன்னவர். “இந்த வீட்டு பொண்ணோட மாப்பிள்ளை எங்க இருக்காங்க” என்று கேட்டார்.

அப்போது தான் “இல்ல இப்போ தான் பாத்துட்டு இருக்கோம், சீக்கிரத்தில் முடிப்போம்” என்றாள்.

” அப்போ கல்யாணம் முடிஞ்ச உடனே பொண்ணு இங்க இருப்பாளா, மாப்பிள்ளை வீடுக்கு போய்ருவாளா” என்று கேட்டார்.

“அது மாப்பிள்ளை பொறுத்து, நமக்கு தெரியாது”என்றாள்.

“இப்பதான் பார்க்க ஆரம்பித்து இருக்கோம்” என்று நந்தன் சொன்னான்.

ஓ என்று கேட்டுக் கொண்டனர், பின்பு அவர்களுக்குள் அறிமுகம் செய்து முடித்த பின்னர் “சரி பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு அவர்களும் வீட்டை பேசி முடிப்பதாக புரோக்கரிடமும் சொல்லி விட்டு கிளம்பினர்.

“உங்கள் தோழியிடம் பேசுனீங்களா” என்று கேட்டார் லேடி போலீஸ்,

“இல்லை நேற்று கொஞ்சம் டைட் வொர்க் இருக்கு னா அது தான் பேச முடியல, இன்னைக்கு கண்டிப்பா பேசுவா, கண்டிப்பா உங்கள சொல்றேன்” என்று சொல்லிவிட்டாள்.

“சரி அவங்க வந்த உடனே சொல்லுங்க, நான் வந்து அவங்களை பாக்கணும், பேசணும், பயங்கர துறு துறு ன்னு இருப்பாங்களோ” என்று கேட்டார்.

நந்தனோ சிரித்துக் கொண்டே “செம வாய்” என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அதன் பின்பு நாட்கள் வேகமாக நகர்வது போல தான் தோன்றியது, வீட்டை இன்டீரியர் ஒருவரிடம் கொடுத்து, அவன் அம்மா சொல்வது போல எல்லாம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தவன், வீட்டிற்க்கான லோன் போட்டு அதை ரிஜிஸ்டர் செய்யும் வேலையிலும் இறங்கியிருந்தான்.

பெற்றோர்கள் பெயரில் வாங்க நினைத்தாலும், லோன் போட்டு வாங்குவதால் அவன் பெயரில் பதிவு செய்து விட்டு பின்பு மற்ற வேலைகளை செய்ய தொடங்கியிருந்தனர்.

விரைவில் பால் காய்ப்பு வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போது தான், ராதாவிற்கு நன்றாக வயிறு தெரிய தொடங்கியிருந்தது.

அப்போது ஒருநாள் வீட்டை பார்க்க கதிரவனின் அம்மா அப்பாவோடு அவனுடைய அக்கா குடும்பமும் வந்து இருக்க பேசிக் கொண்டிருக்கும் போது தான், “நீங்களும் உங்க பிரண்டும் ரொம்ப க்ளோஸ் அப்படின்னு அந்த லேடி போலீஸ் சொன்னாங்களே, எப்படி உங்களை விட்டுட்டு ஃபாரின் போனாங்க” என்று கேட்டனர்.

“இல்ல அவ அண்ணனும் அவளும் சேர்ந்து போக வேண்டிய வேலை தான் இது, கன்ஸ்சிவ் ஆ இருக்கேன் ன்னு சொல்லி தான், வீட்ல என்னை தனியா விட்டுட்டு போக கூடாது ன்னு, அவங்க அண்ணன விட்டுட்டு அவ மட்டும் போய் இருக்கா, அது மட்டும் இல்லாம அவங்களும் இவளும் சேர்ந்து போயிருந்தாங்கன்னா, இதுக்குள்ள ரிட்டன் ஆகி இருப்பாங்க, அவ மட்டும் போக போய் தான் வேலை இழுத்துட்டு இருக்கு, கிட்டத்தட்ட அவ போய் மூன்று மாதத்திற்கு மேல் ஆகுது, இன்னும் ஒரு மாசம் வரைக்கும் வேலை இருக்கும் ன்னு சொன்னாங்க, முடிச்சிட்டு சீக்கிரம் திரும்புவா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் அவர்கள் பால் காய்ச்சி நாள் பார்த்துட்டு இருக்காங்க என்றுபேசிக் கொண்டிருந்தனர்,

  தினமும் வீடியோக்காலில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் “நேரில் பேசியது போல இல்லை” என்று யாழினி சொல்லிக் கொண்டிருந்தாள்.

” என்ன தான் இருந்தாலும் நேரில் பேசுற மாதிரி வருமா” என்று சொன்னவள், அவ்வப்போது “வயிறு தெரியுதா, பேபி மூவ் ஆகுதா” என்று அவளிடம் கேட்க தவறுவதில்லை.

அப்போது தான் தன்னோடு வேலை பார்க்கும் சாராவை பற்றி ஒருநாள் புலம்பி தள்ளிக் கொண்டிருந்தாள்.

“எனக்காக இந்த ஹெல்ப் பண்ணுவியா, நான் சொல்ற அட்ரஸ்ல போய் பார்ப்பியா, பேசுவியான்னு கேட்டுட்டு இருக்கு, நான் அவளிடம் என்னுடைய இந்தியா நம்பர் கொடுக்கவே மாட்டேன், அட்ரஸ் கொடுக்கவே மாட்டேன், கிளம்புற அன்னிக்கு சொல்லாம கொள்ளாம ஓடி வர்றேனா இல்லையான்னு மட்டும் பாரு ராது, என்னைய பார்த்தா யாழினி கொரியர் சர்வீஸ் ன்னு போர்டா வைச்சிருக்கேன்” என்று ராதாவிடம் புலம்பி கொண்டிருந்தாள்.

அதுபோலவே ராதாவும் “பெண் போலீஸ் உன்னை அதிகமாக கேட்டாங்க” என்று சொல்லி , “நீ ஏண்டி போட்டோல ஸ்கெட்ச் வைச்சி கிறுக்கி கொடுத்த, அதை சொல்லி சொல்லி சிரிச்சிட்டு இருக்கு அந்த அம்மா, நீ செய்த எல்லாத்தையும் சொல்லிடுச்சி, அந்த போலீஸ்காரர் கூட அப்படி பார்த்துட்டு இருக்காரு”, என்றாள்.

“யாருடி இந்த போலீஸ்காரர்” என்று ஆர்வமாக கேட்டாள்.

“தாயே வந்து பாத்துக்கோ எனக்கு யாரையும் தெரியாது, அவரு எஸ். பி ன்னு சொன்னாங்க, நீ தான் எல்லாத்தையும் நோட் பண்ண, நான் யாரையும் நோட் பண்ணல” என்று சொன்னாள்.

“வாரேண்டி வாரேன், இன்னும் ஒரு மாசம் இருக்கு” என்றாள்.

“ஒரு மாதத்தில் வந்துருவியா” என்று கேட்டாள்.

“அது சந்தேகம் தான், ஒரு மாசம் இல்ல ஒன்றரை மாசம் கூட ஆகலாம், ஆனால் முடிச்சிடுவேன், வேலை முடியுற ஸ்டேஜ் வந்துருச்சு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.,

அவள் வரும் நாளுக்காக காத்திருந்தனர்.

வந்த பிறகு தான் இவள் வாயடிப்பதை பார்த்து யார் யார் ஓட போகிறார்கள், யார் யார் இவள் வாயை அடைக்க முயற்சி செய்யப் போகிறார்கள், என்று தெரியும்.

Advertisement