Advertisement

நேற்று இருந்த வெறுப்பான மன நிலை இப்பொழுது இல்லை. மனம் ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது பவித்ரனுக்கு. தீபாவின் முகம் அவன் மனதில் வந்து வந்து போனது. அவளை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது. பரபரப்பாககிளம்பி மில்லுக்கு சென்றான்.

இவன் சென்றதும் தீபா அவளுக்கு காலை வணக்கம் வைத்தாள்.

“குட்மார்னிங் தீபா” என்றான்.

அவளுக்கு ஆச்சர்யம். எப்பொழும் “ம்ம்ம்”  என்று மட்டும் தான் சொல்வான். அவனை ஆச்சர்யமாக பார்க்க, “டேய்கண்ட்ரோல்  பண்ணுடா” என்று தன் மனதை அடக்கி தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் குகனும் பரணியும் கூட வந்துவிட்டனர்.

“ரொம்ப புதுமை பெண்ணா இருக்கீங்களே தீபா. இனிமேல் உங்கள பேர் சொல்லி கூப்பிடலாமா அது மரியாதையாஇருக்குமான்னு தெரியல. உங்க முன்னாடி கை கட்டி முதுகு வளைஞ்சு நிக்கனும்னு எல்லாம் தோணுது. என்னபண்ணலாம் சொல்லுங்க தீபா மேடம்” குகன் அவளை வம்பிழுத்தான்.

“வாவ். நீ எனக்கு மரியாதை குடுக்க போறியா? கேக்கவே காதுல தேன் பாயுது. நீ என்னை கொரங்கு சனியன்னுகூப்பிட்டதெல்லாம் எனக்கு மறந்து போற அளவுக்கு மரியாதை குடுக்கணும். சரியா?

அப்படியே இன்னும் யாருக்காச்சும் உனக்கு தோணுன மாதிரியே தோணுதான்னு செக் பண்ணி சொல்லுடா. இன்னிக்குஉனக்கு அது தான் வேலை” அவளும் வாரினாள்.

பிறகு அவரவர் வேலையை பார்க்க, மதிய வேளை வந்தது. குகனுக்கு காலும் வந்தது. “இதோ வரேன்” என்று கூறிபக்கத்தில் இருக்கும் சாமியின் வயலுக்கு சென்றான்.

இதை பரணியும் தீபாவும் பார்த்தும் பார்க்காதது போல இருந்தனர்.

அவன் சென்றதும், தீபா பரணியிடம் விசாரித்தாள்.

“இவனுக்கு அடிக்கடி  சாப்பிடுற நேரம் கால் வருது. உடனே  சாமியோட தோப்புக்கு போறான். நான் எடுத்துட்டு வரசாப்பிட்ட நைட்டுக்கு வச்சிக்கிறேன்னு எடுத்த்துட்டு போய்டறான். சாமிகிட்ட போய் தினமும் சாப்பிடறானா?” தீபாகேட்டாள்.

“என்ன நடக்குதுன்னு நாம பாத்து தெரிஞ்சிகிட்டா என்ன ?” பரணி கேட்டான்.

“நேர்ல போய் பாக்கலாம்னு சொல்றியா?”

“ச்ச ச்ச அப்படி வெளிப்படையா போய் பார்க்க கூடாது. நம்ம கோடௌன்க்குள்ள இருக்க மூட்டை மேல ஏறி நின்னாஜன்னல் வழியா சாமியோட மொத்த தோப்பும் தெரியும்.”

“ஹே வா அப்போ ஏறி பாக்கலாம்” தீபா ஆர்வமானாள்.

குகன் சாமி வீட்டின் எதிரில் தான் ஒரு தாத்தாவுடன் வசித்து வருகிறான். தாத்தாவின் ஒரே மகன் வெளிநாட்டில் செட்டில்ஆகிவிட பாட்டியும் இறந்துவிட அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக தான் இருந்தார். இவன் வீடு தேட சாமி தான் அங்குகை காட்டினார். அந்த தாத்தாவுக்கும் பேச்சுத்துணை ஆனது என்று வைத்துக்கொண்டார். வாடகைகூட  எதுவும்கேட்கவில்லை. இவனும் தாத்தாவை நன்றாகவே பார்த்துக்கொண்டான். தினமும் ஒரு பெண்மணி வந்து சமைத்துகொடுத்துவிட்டு போவார். காலை இரவு அங்கு சாப்பிடுவான். மதியம் தீபா கொண்டுவருவாள்.

ஆனால் அடிக்கடி இப்படி மதிய வேளையில் காணாமல் போகிறான்.

இருவரும் சென்று குன்று போல் அடுக்கி இருந்த மூட்டைகளில் ஆளுக்கு ஒரு ஜன்னல் பக்கம் ஏறினர். சற்று உயரமாகஇருந்ததால் தீபா ஏணி வைத்து ஏறிக்கொண்டாள். பரணி ஏக் தம்மில் ஏறிவிட்டான்.

இருவரும் எட்டி பார்த்த பொழுது சாமி வயல் வேலை பார்க்க சாமியின் மனைவி இவனுக்கு சாப்பாடுபரிமாறிக்கொண்டிருந்தார்.

“பரணி, அவன்  சாப்பிட தான் போயிருக்கான்” தீபா கூறினாள்.

“இங்க என்ன பண்றீங்க?” பவித்ரனின் குரல் திடீர் என்று கேட்டது.

இருவரும் அதிர்ந்து திரும்பினர். தீபா பதட்டத்தில் அந்த உயரத்தில் இருந்து ஒரு ஜம்ப் பண்ணி கீழே குதித்துவிட்டாள். அதுவும் பவித்ராவின் கண் பார்க்க.

ஆஹா ஆஹா. என்ன ஒரு ஸீன். அவன் பார்வை முறைத்தபடி இருக்க மனமோ  அவளை அப்படியே கீழே விழாமல் கையில் கேட்ச் பிடித்துக்கொண்டு இமய மலைக்குப் பறந்தது. அங்கு “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” என்று ரோஜா பட பாடலை போட்டு அவளுடன் ஒரு டூயட் ஆடி முடித்துவிட்டு  திரும்ப வேலு மில்லுக்கு வந்து சேர்ந்தது.

தான் எப்படி குதித்தோம் என்று அவள் உடலின் பாகங்களின் அதிர்வில் அவளுக்கும் உணர்ந்தது. அவனை நிமிர்ந்துபார்க்க முடியாமல் பாதத்தை தூக்கி கையால் தேய்த்து கொடுத்துக்கொண்டுருந்தாள். குதித்ததில் பாதம் வலித்தது.

பரணியும் குதித்து இறங்கினான்.

“ஒன்றும்  இல்லைன்னா. குகன் சாமியோட தோப்புக்கு போயிருக்கான். அங்க என்ன பண்றான்னு பார்த்தோம்.”

பவித்ரனும் வேறு கேட்கவில்லை. ஆனால் தீபாவை தன் கண் பார்வையில் பிடித்து வைக்க வேறு கேள்விகளைக்கேட்டான்.

அதற்கு தீபாவும் பரணியும் பதில் கூறிகொண்டிருந்தனர்.

அப்பொழுது குகன் வந்து சேர்ந்தான். அவனை பார்த்ததும் ஞாபகம் வந்தவனாக,

“நம்ம மில்ல டெவெலப் பண்ண இன்னும் கொஞ்சம்  இடம் வேணும்டா” பவித்ரன் கூறினான்.

“சார். சாமி அவர் தோப்புல ஒரு ஒன்னு ரெண்டு ஏக்கரை விர்க்கலாம்னு

  தான் இருக்கார். பொண்ணு கல்யாணம் வச்சிருக்கார். இன்னும் முதல் பெண்ணோட பசங்களுக்கு காதுகுத்து வேறுவைக்க வேண்டுமாம். அவருக்கு  இப்போ செலவு இருக்கு. நீங்க போய் கேட்டு பாருங்க.” தீபா கூறினாள்.

குகன் குறுக்கிட்டால்.

“ அந்த கல்யாணம்  நடக்குமா?

அப்புறம் இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். சாமியோட தோப்பை அவரோட மூத்த மருமகன் மொத்தமாகேக்குறாராம். எப்படியும் பாதி பெரிய பெண்ணுக்கு தானே குடுப்பீங்க. மீதியும் என்கிட்டவே குடுங்க. நான் அதுக்குபணம் குடுத்துடுறேன்னு சொல்றாராம்.”

அதை கேட்டு பவித்ரன் பரணி இருவரும் அதிர்ந்தனர். ஆனால் தீபா குழம்பினாள்.

“சாமியோட  முதல் பொண்ணு ரொம்ப தூரத்துல இல்ல கட்டிக்குடுத்துருக்கு. இங்க தோப்ப வாங்கி என்னபண்ணுவாரு?” தீபா கேட்டாள்.

“டார்கெட் இந்த வேலு மில்  தான் தீபா. இப்போ நமக்கு நிலம் தேவைப்படுத்துல்ல. நமக்கு பக்கத்துல இருக்க ஒரேநிலம் அவரோடது தான். நீயே சொல்லு. இப்போ அவரோட நிலம் ஒரு ஏக்கர் எவ்ளோ போகும்?” குகன் விளக்கம்கொடுத்து கேட்டான்.

“ஆறுல இருந்து எட்டு  லட்சம்  போகும்னு கேள்விப்பட்டேன்”

“ இப்போ நமக்கு நிலம் கண்டிப்பா வேணும். பக்கத்துல வேற இடமும் இல்ல. இப்போ சாமி மருமகன் வந்து ஏக்கர்முப்பது லட்சம் சொன்னாருன்னா என்ன பண்ணுவோம்.”

“நமக்கு கண்டிப்பா நிலம் தேவை தான். அந்த காசு குடுத்து வாங்கி தான் ஆகணும்”

“ம்ம்ம். அவரு இருபது ஏக்கர் வச்சிருக்கார். அதுல பாதிக்கு பணமா ஒரு அறுபது லட்சத்தை சாமிக்கு குடுத்துட்டு அதவிட அஞ்சு மடங்குக்கு அவர் வித்துட்டு போயிடுவார். அந்த லாபத்துல சாமிக்கும் பங்கு கிடைக்காது. அவரோட சின்னபெண்ணுக்கும் பங்கு கிடைக்காது.

“அப்போ என்ன பண்றது?”

“நாம முந்திக்கனும். இன்னும் கொஞ்சம் நல்ல ரேட் குடுத்து மொத்த நிலத்ததையும் நாமளே வாங்கணும். அப்படிபண்ணினா சாமிக்கும் நல்ல லாபம் கிடைக்கும்” இப்பொழுது பரணி கூறினான்.

“அப்போ நாம சாமிய கூப்பிட்டு பேசலாமா சார்.” குகன் கேட்டான்.

“பேசலாம். அதுக்கும் முன்னாடி இந்த ரெண்டாவது பொண்ணு கல்யாணத்த பார்க்கணும்.  என்ன ஐடியாவுலஇருக்காங்கன்னு தெரியணும்” பவித்ரன் கூறினான்.

சாமியை உடனே வரவழைத்து கேட்டனர்.

“கல்யாணம்  நடக்கணும்பா. ஊரை கூட்டி நிச்சயம் பண்ணிட்டு எப்படி நிறுத்துறது?” சாமி பதில் கூறினார்.

“அதுக்காக பையன் சரி இல்லன்னாலும் பொண்ண குடுப்பீங்களா?” குகன் கேட்டான்.

“இதுல முடிவு எடுக்க வேண்டியடித்து உங்க பொண்ணு தான். முதல அவங்கள கேளுங்க” தீபா கூறினாள்.

சாமி கால் செய்து அவர் பெண்ணை மில்லுக்கு வருமாறு கூறினார். அவளும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தாள். முகம்பொலிவு இழந்து மிகவும் சோர்வாக இருந்தாள். அனைவருக்கும் புரிந்தது இந்த திருமண விஷயம் அவளையும்வருத்துகிறது என்று.

அவளோட விருப்பம் என்னவென்று கேட்டனர். அவள் முகமே கசங்கி போனது.

நேராக குகனை பார்த்து கூறினாள்.

“ எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் குகன் அண்ணா. அத எப்படி வீட்டுல சொல்றதுன்னு தெரியாம இருக்கேன். என்புருஷன் ஒரு கஞ்சா குடிக்கிறவன். ஊரு முன்னால எல்லாருகிட்டையும் மன்னிப்பு கேட்டான். இப்படி சொல்லி நான்பெருமை பட்டுக்கணுமா?”.

பாவமாக கூறினாள்.

“உன் பொண்ணுக்கு பிடிக்கல சாமி. அப்போ கண்டிப்பா இந்த கல்யாணத்த நிறுத்தியே ஆகணும். உன் பொண்ணுக்குநான் வேற ஒரு நல்ல மாப்பிள்ளை பாக்குறேன். இந்த பையன் வேண்டாம்.” பவித்ரன் இறுதி முடிவு கூறினான்.

“சரி. நாம நாளைக்கு அந்த பையன் வீட்டுல பேசலாம்” சாமியம் ஒத்துக்கொண்டார்.

எல்லோரும் டிப் ஆப் த ஐஸ் பெர்க் என்று சொல்வார்களே அது போல பிரச்சனையின் நுனியை மட்டும் தான் இதுவரைபார்த்திருக்கின்றனர்.

முழு பிரச்னையும் கிளம்பி மேலே வந்தால் தீபா என்ன ஆவாள்? பவித்ரன் எத்தனை பேரை பந்தாடுவான்?

Advertisement