Advertisement

இந்த பொண்ணு முதல்ல பவித்ரனை வண்டியில் பின்னால் உட்காரவைத்து அழைத்து போனது. இருவரும் அப்படி ஒட்டிக்கிட்டு போனாங்க. அப்புறம் திரும்ப பரணி அதே வண்டிய ஓட்ட இந்த பொண்ணு பின்னாடி உட்கார்ந்து இருந்துச்சு. இப்போவும் இந்த பொண்ணு பரணியை முதுகோடு கட்டிக்கொண்டு போனது. நாங்க அங்க கோயில்கிட்ட நின்று  பாத்துட்டு இருந்தோம். நாங்க பார்த்ததை அவங்களும் பார்த்திட்டாங்க. எங்க ஊருக்குள்ள அவங்கள பத்தி  சொல்லிடுவோமோனு பயந்து இப்போ எங்களை மாட்டிவிடறாங்க.
பரணி பவித்ரன் இரண்டுபேரும் கொதித்தனர். ஆனால்  வீட்டில் இருந்து கிளம்பும்போதே அவனுடைய தாத்தா அங்க எந்த கை கலப்பும் கூடாது என்று சொல்லி கூட்டி வந்திருந்தார். அவரும் பெரிய தலைகளில் ஒருவராக அமர்ந்து இருந்தார்.
“ஏ யாருப்பா அந்த பொண்ணு? முன்னாடி வர சொல்லுங்கப்பா” ஒரு தாடிக்காரன் கெத்து காட்டினான். கூட்டமும் ஆர்வமானது ஒரு பெண்ணை அவமானப்படுத்தலாம் என்று. ஆனால்  பவித்ரன் ஊர்க்காரர்களுக்கு புரிந்தது இவனுங்க வம்பை விலை குடுத்து வாங்குறானுங்க என்று.
பவித்ரன் ஊரில் உள்ள அனைவருக்கும் தீபா பற்றி தெரியும். அனைவரும் ஏதோ ஒரு நேரம் அவள் மேற்பார்வையில் வேலு மில்லில் வேலை செய்திருக்கின்றனர். அவர்களுக்கு தெரியும் அவள் கோபம் எப்படி இருக்கும் என்று. ஆனால் பரணி பவித்ரன் அவள் கோபத்தை பார்த்தது இல்லை.
இப்பொழுது அவள் அங்கு அந்த பஞ்சாயத்துக்கு வந்திருக்கவில்லை. பரணி அவளை போனில் அழைத்து அங்கு  வரக்கூறினான்.
அடுத்த இருபது நிமிடத்தில் வந்து சேர்ந்தாள்.
அவள் வந்ததும் ஒரு பெரிய தலை விசாரித்தது.
“சொல்லும்மா நேத்து என்ன பார்த்த.”
“நைட் ஒரு பத்தரை மணிக்கு பரணி கூட பைக்ல போயிட்டு இருந்தோம். அப்போ கொஞ்ச பேர் அங்க உட்கார்ந்து என்னமோ பண்ணிட்டு இருந்தாங்க. எங்களை பார்த்ததும் ஓடிட்டாங்க. எல்லாரையும் சரியாய் பார்க்க முடியல. சாமி சார் மாப்பிளையை மட்டும் தான் எனக்கு அடையாளம் தெரிஞ்சது. அவ்ளோ தான்” அப்படியே கூறி முடித்தாள்.
“ஆனா பசங்க வேற மாதிரி சொல்றாங்களேம்மா”
“என்ன சொல்றாங்க”
அந்த தாடிக்காரன் இப்பொழுது சத்தமாக கூறினான்.
“நீ அண்ணன் தம்பி ரெண்டு பேரு கூடவும் மாத்தி மாத்தி பைக்ல போனதாகவும் அதுவும் அவங்கள இறுக்கி கட்டிபிடிச்சிட்டு போனதாகவும் சொல்லறாங்க. அத அவங்க பாத்துட்டதால தான் நீங்க அவங்க மேல பழியை போட்டு தப்பிக்க பாக்கரீங்கன்னு சொல்லறாங்க. இதுக்கு நீ என்னம்மா சொல்ற?” நியாயஸ்தன் அனைத்தும் கூறி முடித்தான்.
பாஞ்சாலி காலத்தில் இருந்து நடப்பது. ஒரு பெண் ஒரு விஷயத்தின் உள் இருந்தால் அவளின் கேரக்டெர் தான் முதலில் அலசப்படும். அங்கு நூறு கொலைகள் நடந்திருந்தாலும் அது பிறகு தான் கவனத்திற்கு வரும். அவளுக்கும் சபை நடுவில் நிற்க வைத்து அவமானப்படுவது ஒன்றும் புதிதில்லையே. அதனால் இறுகிப்போய் இரும்பாய் இருப்பவளிடம் ஒரு கூட்டம் மோதிப்பார்த்தது.
“இதுக்கு நான் என்ன சொல்லணும்?”
“நீங்க பைக்ல போனீங்கன்னு சொல்றாங்கலேம்மா”
“வண்டின்னு இருந்தா அதுல போகத்தான் செய்வாங்க. வீட்டுல வச்சு பூஜையை போடுவாங்க.”
“நீ அந்த பசங்களோட ஒட்டிக்கிட்டு போனதா சொல்லறாங்க”
“கரெக்ட்டா சொல்லுங்க. முன்னாடி கட்டிக்கிட்டுன்னு சொன்னிங்க. இப்போ ஒட்டிக்கிட்டுன்னு சொல்றிங்க. சரி ஏதோ ஒன்னு. நான் அவங்க மடியில உட்கார்ந்து போனேன்னு கூட சொல்லிக்கோங்க. அதனால் இப்போ என்ன?”
“அத மறைக்கத்தான் நீ அவங்கள மாட்டிவிடறன்னு..”
“நான் எங்க மறைச்சேன். அதான் மடியிலேயே உக்காந்து போனேன்னு சொல்லிட்டனே. அப்புறம் நான் யாரையும் மாட்டிவிடலையே. நான் என்ன பார்த்தேனோ அத அப்படியே சொன்னேன். அதுல நான் யார் மேலையும் குற்றம் சொல்லலையே.”
“இப்போ அந்த பசங்க ஏதாச்சும் தப்பு செஞ்சாங்களா இல்லையா?”
“அது எனக்கு தெரியாது. நீங்க தான் விசாரிச்சு கண்டுபிடிக்கணும். அதுக்கு தான் இந்த பஞ்சாயத்துன்னு நினைக்கிறேன். ஆனால் நீங்க நான் யாரை கட்டிக்கிட்டு போனேன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க”
கூட்டம் சிரித்தது. பரணி பவித்ரன் கூட சிரித்துவிட்டான்.
“ஏய் யப்பா அந்த பொண்ணு என் பெரிய பேரனை கூட்டிட்டு வந்துச்சு. சின்ன பேரன் அவளை கொண்டு விட சென்றான். நாங்க தான் அனுப்பிச்சோம்.” அத விட்டுட்டு பஞ்சாயத்துல நடக்கற விசயத்துக்கு வாங்கப்பா.
“நாங்க தான் அந்த பொண்ணு தப்பிக்க எங்கமேல குற்றம் சொல்லுதுன்னு சொல்றோம்ல.ஏதாச்சும் விசாரிச்சு தண்டனை குடுக்கணும்னா அந்த பெண்ணுக்கே குடுங்க”
“சார் இங்க வந்து கொஞ்சம் முன்னாடி நில்லுங்க சார்” தீபா அவனை அழைத்தாள்.
அவனும் வந்து நின்றான்.
“எனக்கு தண்டனை குடுக்குற அளவுக்கு நான் என்ன பண்ணினேன்”
“அதான் ரெண்டு பேர…”
அவளின் தீ பார்வையில் வாயடைத்து போய் நின்றான்.
“சொல்லி முடி” தீபா கோபமாக கூறினாள்.
“ரெண்டு பேர…”
“சொல்லி முடிடா” அவனை கண்களை நேருக்கு நேர் பார்த்து தைரியமாக நின்றாள்.
“நீ ஏன் என்ன இப்படி முறைக்கிற”
“நீ ஏன் நான் முறைக்கிறதுக்கு எல்லாம் பயப்படுற. உண்மையா “நாங்க தான் அந்த பொண்ணு தப்பிக்க எங்கமேல குற்றம் “நாங்க தான் அந்த பொண்ணு தப்பிக்க எங்கமேல குற்றம் சொல்லுதுன்னு சொல்றோம்ல.ஏதாச்சும் விசாரிச்சு தண்டனை குடுக்கணும்னா அந்த பெண்ணுக்கே குடுங்க”
“சார் இங்க வந்து கொஞ்சம் முன்னாடி நில்லுங்க சார்” தீபா அவனை அழைத்தாள்.
அவனும் வந்து நின்றான்.
“எனக்கு தண்டனை குடுக்குற அளவுக்கு நான் என்ன பண்ணினேன்”
“அதான் ரெண்டு பேர…”
அவளின் தீ பார்வையில் வாயடைத்து பொய் நின்றான்.
“சொல்லி முடி” தீபா கோபமாக கூறினாள்.
“ரெண்டு பேர…”
“சொல்லி முடிடா” அவனை கண்களை நேருக்கு நேர் பார்த்த்து தைரியமாக நின்றாள்.
“நீ ஏன் என்ன இப்படி முறைக்கிற”
“நீ ஏன் நான் முறைக்கிறதுக்கு எல்லாம் பயப்படுற. உண்மைய சொல்றவன் யார் முறைச்சாலும் பயப்படாம சொல்லுவான். நீ சொல்ல வந்தத ஒரே ஒரு முறை திக்கமா சொல்லிட்டு போ. அப்புறம் உங்க பஞ்சாயத்து என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்.”
அவனும் பல முறை கூறி முடித்துவிட நினைத்தான். ஆனால் தீபா அவனை பார்வையிலே நிறுத்தி வைத்தாள்.
இப்பொழுது பவித்ரன் வாய் திறந்தான்.
“சுத்து பட்டு அத்தனை ஊரும் கட்டுக்கோப்போட இருந்தா தான் எல்லாரும் பயம் இல்லாம போயிட்டு வர முடியும். இந்த பசங்க என்னமோ தப்பு பண்ணிட்டு அத மறைக்க ரொம்ப போராடுறாங்க. எனக்கு என்னமோ அவங்க போதை பொருள் எதுவும் எடுத்துருப்பாங்களோன்னு தோணுது. இத அவங்களே ஒத்துக்கிட்டா பொது மன்னிப்பு அபராதம்னு முடிச்சிக்கலாம். இல்லன்னா நான் போலீஸ்க்கு போறேன். அவங்க வந்தா மொத்த நெட்ஒர்க்கையும் பிடிச்சிடுவாங்க. இந்த கேஸ்ல உள்ள போனா பெயில் கூட கிடைக்காது. குற்றம் உறுதி ஆச்சுன்னா பத்து வருஷம் உள்ள வச்சிடுவாங்க. என்ன பண்ணலாம்ணு பெரியவங்க யோசிச்சி சொல்லுங்க”
“அய்யய்யோ…”
“போதை எல்லாம் இல்ல. வெறும் கஞ்சா தான். அதும் நேத்திக்கு தான் முதல்முறை ட்ரை பண்ணினோம். இப்படி மாட்டிகிட்டோம். எங்களை மன்னிச்சிடுங்க.” ஒருவன் ஒத்து கொண்டு காலில் விழுந்தான்.
பஞ்சாயத்து யோசனை செய்து பொது மன்னிப்புன்கேட்க சொல்லியும், அந்த ஊர் ஏரியை சுத்தம் செய்ய கூறியும் அபராதம் விதித்தும் தண்டனை வழங்கியது.
“அப்போ எனக்கு எந்த நியாயமும் கிடைக்காதா” தீபா கேட்டாள்.
“உனக்கு என்னமா நியாயம் வேணும்”
“அவங்க என்ன அசிங்கப்படுத்தி அது மூலமா தப்பிக்க பார்த்தாங்க. இனிமே ஊர் மக்கள் எல்லாம் என்னை எப்படி பார்ப்பங்க. நான் இனிமேல் ரோட்டுல தைரியமா நடந்து போகணும்ல. அதுக்கு ஒரு வழி சொல்லுங்க”
பஞ்சாயத்து யோசித்தது.
“எனக்கு என்ன நியாயம் வேணும்னு நானே சொல்லவா”
“இது நல்லா இருக்கே. சொல்லும்மா” ஒரு பெரிய தலை கூறியது.
“இவங்க எல்லாம் படிச்ச பசங்க தான். ஆறு பேரும் உங்க ஊருல இருக்க ஒரு ஆறு பாட்டிக்கு தமிழ் படிக்க சொல்லி தரணும். அந்த பாட்டிங்க என் முன்னாடி நியூஸ் பேப்பர்ல ஒரு பக்கம் முழுசா படிச்சுங்காட்டிட்டாங்கன்னா போதும். அதோட அவங்க தண்டனை முடிஞ்சதது.
இனிமேலும் என்னோட கேரக்ட்டரை யாராச்சும் தப்பா பேசினா அவங்களுக்கும் இதே தண்டனை வாங்கி குடுப்பேன்”
“அருமையான தண்டனை. நான் ஒத்துக்குறேன். மத்தவங்க என்னய்யா சொல்றிங்க?”
எல்லோரும்  சிரித்து விட்டனர். மற்ற தண்டனையை விட இது பெரிய தலைவலியானது அந்த ஆறு பேருக்கும்.
அதனுடன் பஞ்சாயத்து கலைந்தது. கூடவே ஒருவன் மனமும் கலைந்தது. அந்த கோபம், அந்த கண்ணின் சிவப்பு, அந்த கோவைப்பழமாக சிவந்த மூக்கு அத்தனையிலும் புதைந்து காணாமல் போய்க்கொண்டிருந்தான் ஒருவன். நேத்து காதலிக்கு திருமணம் முடிந்தது. இன்றே இவன் தொபுக்கடீர் என்று இன்னொரு பெண்ணிடம் விழுகிறான். என்ன கண்றாவிடா என்று அவனுக்கே தோன்றுகிறது. ஆனாலும் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“அண்ணா” இது பரணி
“ம்ம்ம்…” மறுபடியும் சிட்டி ரோபோ.
“போலாம்”
“ம்ம்ம்”
“கார் எடுங்க”
“ம்ம்ம்”
“போலாம்ன்னா”
“ம்ம்ம்”
“சாவியாச்சும் குடுங்கண்ணா”
 சாவி எடுத்து போய் பரணி கார் எடுத்தான்.
“அண்ணா ஏறுங்க”
ஏறினான்.
கார் பறந்தது. அவனும் எங்கோ பறந்துகொண்டிருந்தான்.

Advertisement