Advertisement

அத்தியாயம் -18(2)

அவள் கன்னத்தில் ஒற்றை விரல் கொண்டு வருடி விட்டுக் கொண்டே, “எனக்கு உன் இண்டிமேசி தேவைப்படுது” என்றான்.

“இவ்ளோ நாள் நான் இல்லாம என்ன செஞ்சீங்க?” என்னை விட்டு வெளிநாடு சென்றாய்தானே எனும் ஆதங்கத்தில் சற்று கோவமாகவே கேட்டாள்.

“என்ன செய்ய? உன்கூட மட்டும்தான் இதெல்லாம் வேணும்னு இருக்கு, அதனால வேற எந்த வழிக்கும் நான் ட்ரை பண்ணல, நானே சமாளிச்சிக்கிட்டேன். அதெல்லாம் சொன்னா நீ கோவப்பட மாட்டனு நம்பிக்கை வந்த பிறகு எப்படின்னு சொல்றேன்” குதர்க்கமாக சொன்னான்.

பாவனா குழப்பமும் சந்தேகமுமாக பார்க்க, சிரித்தவன், “கனவுல கூட உன்னை தவிர யார் கூடவும் குடும்பம் நடத்த மாட்டேன். என் பெட்ல எப்பவும் ஒரே ஒரு பொண்ணுக்குத்தான் இடம்னு ரொம்ப முன்னாடியே முடிவு பண்ணியிருந்தேன்” என்றான்.

“எப்போலேர்ந்து”

“நான் வயசுக்கு வந்ததிலேர்ந்து”

“ச்சீய்!”

“நீ சமாதானம் செய்ற மூட்ல இல்லைனு நினைக்கிறேன்” குறையாக சொன்னான்.

விழிகளை சுருக்கி முகத்தை கோணலாக்கி யோசிப்பது போல பாவனை செய்தவள் மனது வந்தவளாக, “சரி, சொல்லுங்க எப்படி சமாதானம் செய்யணும்னு?” எனக் கேட்டாள்.

“வெரி சிம்பில், சமாதானக் கொடி கொடுத்துதான்”

“புரியுற மாதிரி சொல்லுங்க”

“சமாதானக் கொடி ஒயிட் கலர்தான் இருக்கும்னு யார் சொன்னா? இப்படி உன் நைட் ட்ரெஸ் போல ப்ளூ கலர்ல கூட இருக்கலாம்” மிக தீவிரமான தொனியில் அவன் கூற கண்களை பெரிதாக்கி திகைத்தாள்.

“ஈஸி, உன் நைட் ஷர்ட்ல இந்த பட்டன்ஸ் எல்லாம் லாக் ஆகி இருக்கு? ஜஸ்ட் அன்லாக், நாம சமாதானமா போய்டலாம்” என வெகு சாதாரணமாக அவன் சொல்ல திகிலடைந்து அவனிடமிருந்து வேகமாக விலகி படுத்திருந்தளுக்கு மூச்சு வாங்கியது.

“எஸ் எனக்கு தெரியும், என்னை சமாதானம் செய்யும் எண்ணம் இல்ல உனக்கு. இனிமே டிஸ்டர்ப் பண்ணாத” என்றவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

“குரங்கு குரங்கு சேட்டையை பாரு, நான் டிஸ்டர்ப் பண்றேனாம். எப்படியோ போகட்டும்னு விட்ருக்கணும், நீயா போய் மேல படுத்தீல உன் மேலதான் தப்பு” வேண்டுமென்றே சத்தமாக முணு முணுத்தாள்.

“ஹேய் தூங்க விடு!” அதட்டல் போட்டான்.

“நீங்க வாய மூடுங்க. பேச்சை பாரு!”

“லவ்தானே பண்றேன் உன்னை?” என கேட்க அவள் இன்னும் முறைத்தாள்.

“லவ் மேக் அப்படினா இங்கிலிஷ் காரன் இதைதான் சொல்லியிருக்கான்”

“நாம இங்கிலிஷ் ஆளுங்க இல்லை”

“ஓகே உனக்கு சமாதானம் செய்ய வரலை, நானும் உன்னை விட்டுட்டு அப்ராட் போனேன்தானே. அப்போ நான் சாரி கேட்டு சமாதானம் செய்யணும்ல?” என்றவன் அவன் பச்சை நிற சட்டையை கழற்றி அவள் மீது எறிந்து, “சமாதானக் கொடி க்ரீன் கலர்ல கூட இருக்கலாம்” என சொல்லி கண்கள் சிமிட்டினான்.

“போதும் விஜய், தூங்குங்க. நேத்து சரியா தூங்கலைல… இப்போ கண்ணெல்லாம் எரியுது” அவன் சட்டையை எடுத்து மடித்து படுக்கையின் ஓரமாக வைத்தவள் சலிப்பாக சொல்வது போல சொன்னாலும் அவளின் இதழ்க் கடையோரம் வெட்க சிரிப்பு.

அப்படியெல்லாம் விட மாட்டேன் என்பதாக அவளை தன்னருகே இழுத்துக் கொண்டான்.

தயக்கம் இருந்தாலும் மறுக்கும் எண்ணம் இல்லாமல் அவனை அவள் பார்த்திருக்க, அவள் நெற்றியில் இதழ் பதித்து, “நான்… நான்… அப்படி அப்ராட் போயிருக்க கூடாது, வந்திருக்கணும் உன்கிட்ட. சாரி… ரியலி சாரி!” என்றவன் மீண்டும் அவளை தன் மீது போட்டுக் கொண்டு, “தூங்கு” என்றான்.

அவன் வெற்று தோளை தொட்டு தடவியவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

“என்னடி வந்தது இப்போ?” செல்லமாக அதட்டினான்.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “என்னை பொறுத்த வரை தி ஸேஃபஸ்ட் பிளேஸ் இதுதான். நிறைய… ரொம்ப ரொம்ப தேடினேன் உங்களை. மிஸ் யூ… மிஸ் யூ விஜய்!” என கர கரப்பாக சொல்லி அவன் மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

அவள் தலையை லேசாக தன் மார்போடு அழுத்திக் கொண்டவன், “உன்னை திட்றதுக்குதான் வருது இப்போ. போனா போகுதுன்னு விடுறேன். என்னை ஈரம் பண்ணாம ஒழுங்கா தூங்கு” என்றான்.

“ம்ம்…” என்றவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

விஜய் அமைதியாக இருக்க சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள் பாவனா. அவனுக்கோ தன் மனைவியை தாங்கியிருப்பது மனதின் கனம் குறைந்தது போல உணர வைத்தது.

விடிந்தும் உறங்கிக் கொண்டிருந்தாள் பாவனா. விஜய்க்கு விழிப்பு வந்தாலும் கண்கள் எரிந்தன. இந்நேரம் ஆழினி விழித்திருப்பாளே என நினைத்துக்கொண்டே சத்தமில்லாமல் ஓய்வறை சென்று விட்டு வெளியில் சென்று பார்க்க ஆழினியை பால் அருந்த வைத்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரி.

“பாவனா இன்னும் எழலையே. நல்லா இருக்குதானே?” என விசாரித்தார் ஈஸ்வரி.

“உடம்பு முடியாம போனாதான் தூங்கணுமா?”

“பாவனா அப்படி தூங்கி பார்த்ததே இல்லை நான், அதான் கேட்டேன் தம்பி”

“ஏன் லீவ் நாள் கூட கொஞ்ச நேரம் தூங்க மாட்டாளா?” எனக் கேட்டான்.

“எவ்வளவோ சொல்லிட்டேன், கேட்காது. அதுக்கு ஆழி வயித்துல இருந்தப்ப பி பி இருந்ததுல்ல? அப்புறமும் கொஞ்ச நாள் குறையாமதான் ஆஸ்பத்திரியில இருந்தது… அதனால உடம்ப நல்லா வச்சுக்கணும்னு கரெக்ட்டா இருக்கும். காலைல வாக்கிங் போய்டும், வேளைக்கு ஒழுங்கா சாப்பிட்டுக்கும், சாப்பாடு கூட சிம்பிலா இருந்தாலும் ஆரோக்கியமா இருக்கணும் சொல்லும்”

விஜய்க்கு புரிந்தது. ஆழினிக்காக அவளை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம். உடல் நலன் பேணுவது நல்லதுதான் என்றாலும் அதன் அடிப்படையாக எத்தனை பெரிய பயம் இருந்திருக்க கூடும் இவளுக்கு? மனதில் நினைத்தவன், “காபி தாங்க ம்மா” என சொல்லி விட்டு மகளோடு அமர்ந்து விட்டான்.

காபி தந்தவர், “இன்னைக்கு ஸ்கூல் போகலையா பாவனா?” எனக் கேட்டார்.

“தூங்கட்டும், ஸ்கூல் விஷயம் நான் பார்த்துக்கிறேன்” என்றவன் காபி பருக ஆரம்பிக்க அவர் காலை உணவு தயாரிக்க சென்று விட்டார்.

இன்னும் பாவனா உறக்கத்தில் இருக்க மகளை வெளியில் அழைத்து சென்று சைக்கிள் ஓட்ட விட்டான். அரை மணி நேரம் சென்று பார்க்கும் போதுதான் லேசாக உறக்கம் கலைந்து புரண்டு படுத்தாள் பாவனா.

“நைட் ஒழுங்கா ஒரு சமாதானம் செய்ய தெரியலை உனக்கு, அதுக்கே ஏழு மணி தாண்டியும் கண்ணு முழிக்கல. இதுல சமாதானம் எல்லாம் செஞ்சு அப்படியே நைட் ஷிஃப்ட் வேற இருந்தது ம்ஹூம்… ரொம்ப மோசம் நீ” என்றான்.

“அச்சோ! காலங்கார்த்தால பேச்சை பாரு. எழுப்பி விட வேண்டியதுதானே?” கேட்டுக் கொண்டே எழுந்தாள்.

“இன்னும் தூங்குறதுன்னா கூட தூங்கு. ஸ்கூல் போய் இன்னிக்கே ரிலீவ் ஆகிடலாம். அப்புறம் ஹாஸ்பிடல் போய் பாப்பாக்கு ட்ரெஸிங் பண்ணனும்”

“இப்போவே ரிலீவ் ஆகணுமா நான்? இன்னைக்கு ஏன் ட்ரெஸிங், நேத்துதானே செய்தோம்?”

“ரிலீவ் ஆகுறது தள்ளி போட்டு என்ன செய்ய போற நீ? ஈரோட்டுல இன்னொரு முக்கியமான வேலை இருக்கு எனக்கு, ஒன் மன்த் லீவ்லதான் வந்திருக்கேன். என்கிட்ட டைம் இல்ல. நாளைக்கு கிளம்பணும், மார்னிங் ஃபிளைட் இருக்கு. அதனால இன்னைக்கு ஒரு முறை ட்ரெஸிங் பண்ணிடலாம்” என்றான்.

எப்படி இன்றே வேலையை விட முடியும் என பாவனா கேள்விகளாக கேட்க தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி சென்று விட்டான். ஈரோடு செல்வது குறித்து உள்ளுக்குள் மருகினாள். விஜய்யின் அப்பா செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே என் மீது நல் அபிப்பிராயம் இல்லை, இப்போது ஆழினியோடு சென்றால் என்ன சொல்வார்களோ? குழந்தையை ஏதும் பேசினால் எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்?

“ஒண்ணு படுத்து தூங்கு, இல்ல ரெடி ஆகு. அதென்ன உட்கார்ந்திட்டே கனவு காண்ற?” ஹாலில் இருந்து விஜய் கேட்க தன் யோசனைகளை உதறி விட்டு குளியலறை புகுந்தாள்.

பள்ளியிலிருந்து வெளியேறுவது அத்தனை கடின காரியமாக இல்லை. கொடைக்கானல் பள்ளி ஃபாதர் சொன்னதே போதுமானதாக இருந்தது. இரண்டு மணி நேரத்தில் பள்ளி வேலை முடிய மருத்துவமனை சென்றனர். உள்ளே நுழையவுமே ஆழினி உதடுகள் பிதுக்க ஆரம்பிக்க இந்த முறை மகளை தானே வைத்துக்கொண்டான் விஜய்.

ட்ரெஸிங் முடிந்த பின் அப்பா மீதுள்ள கோவத்தில் அவனிடமிருந்து ஆழினி இறங்க முயல, குழந்தை கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “சாக்லேட், ஐஸ்க்ரீம், போட்டிங் எது வேணும் ஆழி குட்டிக்கு” என டீல் பேசினான்.

அவன் சொன்ன அதே வரிசையில் மூன்றையும் ஆழினி கூற, சிரித்தவன், “டன்” என்றான்.

மருத்துவமனை விட்டு வெளியில் நடந்து கொண்டே, “தினம் இப்படின்னா கோல்ட் வந்திடும்” என்றாள் பாவனா.

“வரட்டும், கோல்ட் கூட வராத குழந்தை இருக்குமா? அதுவும் இது போல சமயத்துல இதெல்லாம் செய்துதான் குழந்தைய சமாளிக்கணும்”

“இப்படி எத்தனை குழந்தையை சமாளிச்சி தெரிஞ்சுகிட்டீங்களாம்?”

“ஆழினிய சமாளிச்சு எல்லாம் கத்துக்குறேன். அடுத்து புள்ளைங்க பொறக்கும் போது யூஸ் ஆகும்”

பாவனா புன்னகை செய்ய, “ரெண்டு வருஷம் புள்ளைங்க எல்லாம் வேணாம், வீணா ஆசைய வளர்க்காத. ரெண்டைரை வயசுல ஒரு பொண்ணு இருக்கு, ஆனாலும் மெண்டலி நான் இன்னும் கன்னிப்பையன்தான். என்ன நீயும் அப்படித்தானே?” எனக் கேட்டான்.

சுற்றுப்புறம் பார்த்து விஜய்யை கண்டிப்பாக நோக்கியவள், “இன்னும் நம்ம பிரச்சனையே முடியலை” என்றாள்.

“பிரச்சனை முடிஞ்சுதான் எல்லாம்னா இந்த ஜென்மத்துல நான் பள்ளியறை பாடம் படிக்க முடியாது. பிரச்சனை பாட்டுக்கு பிரச்சனை இது பாட்டுக்கு இது. ஆமாம் அன்னைக்கு என்னடி நடந்துச்சு பொசுக்குன்னு பொண்ணை பெத்து கொடுத்திட்ட?”

“விஜய்!” அதட்டினாள் பாவனா.

“உனக்கு ஞாபகம் இருக்கா? இருந்தா சரி, எனக்குதான்…”

“ஸ்டாப் பண்ணுங்க. நீங்க ஏதோ ஜாலியா பேசிட்டு இருக்கீங்க. சீரியஸா எனக்கு ரொம்ப நெர்வஸா இருக்குங்க. அங்க ஈரோட்டுல ஆழினிய பார்த்திட்டு எதுவும் சொல்ல மாட்டாங்களா?”

“ஆழிய ஏத்துக்காத இடத்துல நாம இருக்க போறது இல்லை, எதுவா இருந்தாலும் போனாதானே தெரியும்?” என அவன் சொல்ல அமைதியடைந்து அவர்களை எதிர்கொள்ள மனதை ஓரளவுக்கு தயார் செய்ய ஆரம்பித்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement