Advertisement

நேச நதி -18

அத்தியாயம் -18(1)

முதல் நாள் இரவும் இன்றைய பகலும் வெகு அமைதியாக கழிந்திருந்தது. காலை வேளையே விஜய்யோடு மருத்துவமனை சென்று ஆழினிக்கு ட்ரெஸிங் செய்து விட்டு பாவனா பள்ளி சென்றிருக்க மகளோடு நேரம் செலவிட்டான் விஜய். அவனது மனம் மெல்ல அதிர்ச்சி, ஏமாற்றம், வேதனை போன்ற உணர்வுகளில் இருந்து வெளி வர ஆரம்பித்தது.

மதிய உணவுக்கு பாவனா வந்த போதும் வேறெதுவும் பேசாமல் அமைதியாக உணவை முடிக்க வைத்து அனுப்பி விட்டான். அவளுக்கும் முதல் நாள் இருந்த அதிர்ச்சியின் வீரியம் குறைந்திருந்தது. அவளால் நடந்த எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் இப்போது விஜய் வந்து விட்டது அனைத்தையும் சிறியதாக காட்டியது.

நிமிடங்கள் கரைய கரைய நடந்தவற்றை எண்ணி எண்ணி இன்னும் தங்களை அழுத்திக் கொள்ளக் கூடாது என்ற தெளிவுக்கு வந்திருந்தனர் இருவரும். மாலை பாவனா வீடு வந்த பின்னரும் ஆழியோடு இதமாகவே சென்றது நேரம்.

இரவு உணவு நானே சமைக்கிறேன் என பாவனா சென்று விட, தந்தையோடு பகல் முழுதும் விளையாடி களைத்து போயிருந்த ஆழினி உறக்கத்திற்காக கண்களை கசக்கினாள்.

“பாப்பாக்கு மட்டும் தோசை ஊத்தி எடுத்திட்டு வர்றேன், சாயந்தரம் பஜ்ஜிக்கு செய்த சட்னி இருக்கு” என்ற ஈஸ்வரி அதன் படியே உணவு எடுத்து வர விஜய் வாங்கி ஊட்டி விட்டான்.

விஜய் மிகவும் சிறிய வில்லையாக தோசையை பிய்த்து ஊட்ட, “ஹையோ தம்பி இன்னும் கொஞ்சம் பிச்சு ஊட்டுங்க, ரெண்டு நிமிஷத்துல தூங்கிடுவா. நடுராத்திரி பசிக்கு அழுவா” என்றார் ஈஸ்வரி.

“குட்டி வாய்ல பெரிய சைஸ் தோசை பீஸ் கொடுக்க முடியாது, தூங்க விடாம எப்படி ஊட்டுறேன் பாருங்க” என்றவன் அவர் கையில் தட்டை கொடுத்து மகளை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தான்.

அவளை உறங்க விடாமல் வேடிக்கை காட்டிக் கொண்டே அவன் ஊட்ட, அங்கே வெளியில் தன் குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண் இவனை வியந்து பார்த்து விட்டு அவசரமாக உள்ளே சென்று அவள் கணவனையும் அழைத்து வந்து விட்டாள்.

அந்த குழந்தையின் அப்பா, விஜய்யை முறைத்துக் கொண்டே தன் மகனை வாங்கி உணவூட்ட முயல சேட்டைக் கார பையன் அட்டகாசம் செய்தான்.

அவரின் மனைவி முறைக்க, “திடீர்னு ஊட்டினா இவன் எப்படி வாங்குவான்?” என ஆங்கிலமும் இந்தியும் கலந்து கோவமாக கேட்டான் அவளின் கணவன்.

“ரெண்டு நாள் முன்னாடி வெளிநாட்டுலேர்ந்து வந்த பாவனா ஹஸ்பண்ட் மட்டும் எப்படி இவ்ளோ அழகா அவர் மகளுக்கு ஊட்டி விடுறார்?” என பதிலுக்கு அவன் மனைவியும் கோவப்பட அவர்களின் மகன் தந்தையிடமிருந்து விடு பட்டு செடிகளின் இலைகளை பறித்து போட ஆரம்பித்து விட்டான்.

இப்போது விஜய் தன் மகளுக்கு ஊட்டி முடித்து ஏற்கனவே பாவனாவும் ஈஸ்வரியும் மகளுக்கு ஊட்டி விடுவதை பார்த்திருந்ததால் அவர்களை போலவே அழகாக வாய் துடைத்து விட ‘பாருங்க அங்க’ என்பது போல் பக்கத்து வீட்டு பெண் அவள் கணவனை முழங்கையால் இடிக்க அவள் கணவன் இன்னும் விஜய்யை முறைக்க ஈஸ்வரி வாயை மூடிக் கொண்டு சிரித்தார்.

“இவங்க லவ் மேரேஜ் செய்தவங்க. பாவம், பெரியவங்க சப்போர்ட் இல்லாம அதுங்களாவே புள்ளை வளர்க்குதுங்க. ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க, பகல்ல ஒரு ஆள் வச்சிருக்காங்க பார்த்துக்க. புருஷன் பொண்டாட்டி இப்படி பார்த்துகிட்டே இருந்தா நல்லா முட்டிக்கும் மோதிக்கும். அப்பப்ப யாராவது ஒருத்தர் ஒரு வாரம் பத்து நாள்னு வெளியூர் போய் சின்னதா ஒரு பிரிவு வந்தா இப்படி சண்டை வம்பு எல்லாம் ரொம்ப இருக்காது” என்றார் ஈஸ்வரி.

“வேணாம் ம்மா, சண்டை போட்டாலும் சேர்ந்தே இருக்கட்டும்” என்ற விஜய்யின் ஒற்றை வரியில் அவனின் பிரிவுத் துயரம் அப்பட்டமாக தெரிந்தது.

ஆழினி விஜய் தோளில் முகம் சாய்க்க, “நீங்க சாப்பிடுங்க தம்பி” என்ற ஈஸ்வரி குழந்தையை வாங்கிக் கொண்டு போய் தனதறையில் உறங்க வைத்து விட்டார்.

விஜய் அலுவல் சம்பந்தமாக ஏதோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரியும் உண்டு குழந்தையோடு படுத்து விட்டார்.

விஜய் சாப்பிட வர, “ரொம்ப நாள் கழிச்சு குக் பண்ணியிருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணுங்க” என சொல்லிக் கொண்டே பரிமாறினாள் பாவனா.

“சாப்பாட்டோட டேஸ்ட் வெறும் சாப்பாட்டுல மட்டும் இல்லை, அதை செய்றவங்கதான் மெயின் ஃபேக்டர். உன் கையால சாப்பிடும் போது…” விஜய் உருகி பேசிக் கொண்டிருக்க வேகமாக உள்ளே சென்று திரும்பியவள் அவன் முன் பச்சை மிளகாய் இருந்த கையை நீட்டினாள்.

விழிகள் தெறிப்பது போல இவன் அதிர அவளோ குறும்பு சிரிப்போடு கண்களில் சவால் நிறைந்து பார்த்தாள்.

இப்போது இலகுவாக சாய்ந்து அமர்ந்தவன், “நீ ஊட்டி விடு, சாப்பிடுறேன்” என்றான்.

மிளகாயை ஓரமாக வைத்து விட்டு சாப்பிட அமர்ந்தவள், “நல்லா மடக்கிட்டதா நினைப்பு! என் சமையல் ரொம்ப சுமார்தான் எனக்கே தெரியும். ஒரு நாளைக்கு எவ்ளோ கொடுமை செய்றது? அதனால விடுறேன்” என்றாள்.

“மூணு வருஷம் செய்யாத கொடுமையா இப்போ செய்ய போற?” சட்டென கேட்டு விட்டு இடது கையால் தலையை தட்டிக் கொண்டவன், “சாரி பாவனா” என்றான்.

“கோவம் இல்லை விஜய், ஏன் விட்டுட்டு போன ன்னு நீங்க கோவப்படுறதே நீங்க கொஞ்சுற எஃபெக்ட்தான் கொடுக்குது எனக்கு” என்றாள்.

“ஹான் அப்படியா! நிறைய கோவப்படலாம் போலயே” இப்படி ஏதேதோ பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்து குழந்தையை பார்த்து விட்டு இவள் அறைக்கு வர இவளுக்காக காத்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தான் விஜய்.

விஜய்யின் இமைகள் சிமிட்டாத பார்வையில் ஒரு கணம் தயங்கி பின் படுக்கைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.

“எங்க ஆழி… தூக்கிட்டு வரலையா?” என விசாரித்தான்.

“தூக்கினா முழிச்சிப்பா”

“இடையில எழுந்தா தேட மாட்டாளா உன்னை?”

“தெரியலை, இப்படி என்னை விட்டு நைட் டைம் தூங்கினது இல்ல. நேத்து நல்லாத்தானே தூங்கினா, அதான் அவங்க கூடவே விட்டுட்டேன். முழிச்சா கொண்டு வந்து விடுவாங்க”

“ம்… அப்புறம்?”

“அப்புறம் ஒண்ணுமில்ல. தூங்குங்க” என சொல்லி தள்ளியே படுத்திருந்தவளை அழுத்தமாக பார்த்தான்.

“ப்ச் தூங்குங்க” என்றாள்.

“பத்து மணிக்கு மேலே ஆகுது, தூங்காம உன் கூட டூயட்டா பாட போறாங்க?”

“அப்புறம் ஏன் இப்படி பார்க்குறீங்க?”

“எப்படி பார்க்கிறேன்?”

“தூங்குங்க விஜய், நாளைக்கு ஸ்கூல் போகணும். ரொம்ப லேட் ஆகிடுச்சு”

“ஸ்கூல் போகணுமா?”

“ஆமாம், அப்புறம் சும்மா சும்மா லீவ் போட முடியுமா?”

“ஏய் என்ன பிளான்ல இருக்க நீ? இங்கேயே செட்டில் ஆக போறியா?”

“எதுவா இருந்தாலும் உடனே ரிலீவ் ஆக முடியாது. ப்ரொசீஜர் இருக்கு”

“அந்த ப்ரொசீஜர் எல்லாம் நான் பார்த்துக்கிறேன். இப்போ கிட்ட வா”

“நீங்க வாங்க”

“முடியாது, வா நீ”

பாவனா முறைக்க, “நீதான் என் பக்கத்துல வரணும். என்ன இருந்தாலும் நீ விட்டுட்டு போனதுலதான் ஸ்டார்ட் ஆச்சு. நீயே வந்து முடிச்சு வை” என்றான்.

“எதை முடிச்சு வைக்கணும்?”

“சண்டையை? நான் இப்போ கோவமா இருக்கேன், சமாதானம் பண்ணு”

“நைட்ல என்ன விளையாட்டு இது?”

“இன்னும் மிட் நைட் ஆகலைன்னாலும் இதுக்கு மிட் நைட் மசாலா விளையாட்டுன்னே பேர் வச்சுக்கலாம்” நக்கலாக கூறினான்.

அவள் இன்னும் முறைப்பாக இருக்க, “இப்படி பார்த்தா? செஞ்சது தப்புன்னு பட்டா ஒழுங்கா சமாதானம் பண்ணிடு” என்றான் விடாமல்.

“ஓகே சாரி” அவன் முகம் பார்த்து கெஞ்சலாக சொன்னாள் பாவனா.

மன வருத்தங்கள் எல்லாம் ஒதுக்கி வைத்து கொஞ்சம் ரசனையாக அவளை பார்த்தவன், “நாட் பேட், ஆனாலும் சமாதானம் ஆக தோணல” என்றான்.

“போங்க” என்றவள் திரும்ப முனைய, வேகமாக அவளை தன்னிடம் இழுத்து அப்படியே அள்ளி தன் மேலே போட்டுக் கொண்டான்.

“என்ன செய்றீங்க?”

“இங்க பாரு, நான் உனக்கு ஹெல்ப்தான் பண்றேன்” கிசு கிசுத்தான்.

“என்ன?” பட படப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“என்னை சமாதானம் செய்றதானே? இப்படி இருந்திட்டே செஞ்சா சீக்கிரம் சமாதானம் ஆவேன்”

“வேணாம் வேணாம் நீங்க கோவமாவே இருந்துக்கோங்க” என சொல்லி அவனிடமிருந்து அவள் விலக முற்பட, வற்புறுத்தாமல் விட்டு விட்டான்.

கண்களை கையால் மறைத்துக் கொண்டு அவன் படுத்திருக்க இவளுக்குத்தான் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அப்படியே அவனை விட பிடிக்காமல் தயக்கம் உதறி மெல்ல அவன் மீது படுத்துக் கொண்டாள்.

அவனிடம் அசைவே இல்லை. உறங்கி விட்டானோ என சந்தேகம் வர, அவன் கையை விலக்கி ஒரு கண்ணின் இமையை திறக்க, “ப்ச்” எனும் சலிப்போடு அவள் கையை விலக்கி மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.

“ரொம்ப ஓவரா போறீங்க, அதான் வந்திட்டேனே, இன்னும் என்ன?”

“சமாதானம் இப்படி இருந்து பண்ண சொன்னேன். நீதான் இன்னும் சமாதானம் பண்ணலையே” என்றான்.

“சாரி…” என குழைவாக சொன்னாள்.

“இல்ல பாவனா இந்த சாரிக்கு சமாதானம் ஆக தோணல எனக்கு”

“ரொம்ப படுத்துறீங்க, என்ன செய்தா சமாதானம் ஆவீங்கன்னு நீங்களே சொல்லிடுங்க, எனக்கு தூங்கணும்”

“நானே எப்படின்னு சொல்லி என்னை சமாதானம் செய்வியா?”

“உங்க மனசுல எதுவோ இருக்கு, என்னால கண்டுபிடிக்க முடியலை. சொல்லிடுங்க, டைம் வேஸ்ட் ஆகுது”

“உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு. அதனால சொல்றேன்” என்றவன் அவன் கைகளை எடுத்து தலைக்கு கீழ் வைத்துக் கொள்ள அவனையே குறு குறுப்பாக பார்த்திருந்தாள்.

“கொஞ்சம் அடல்ட் கன்டெண்ட், பரவாயில்லையா?” என அவன் கேட்ட விதத்தில் திட்டுக்கிட்டாலும் “ம்ம்…” என சம்மதம் கொடுத்தாள்.

“என் வயசு தேர்ட்டி, ஸோ…”

“ஸோ டெர்ட்டியா பேசலாம்னு சொல்றீங்களா?”

“டெர்ட்டியா ஒரு பொண்ணுகிட்ட பேச வயசு முக்கியம் இல்லை. அவ பொண்டாட்டியா இருந்தா பேசலாம்”

“இது வேறவா, சொல்லுங்க”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement