ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் காலை நேரம் அழகாக விடிந்தது.
வழக்கம் போல மீனா விரைவில் எழுந்தவள் என்ன செய்வது? என்று தெரியாமல் குளித்து முடித்து பூஜையறைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்து உட்கார, சிவகுமாரி அப்பொழுதுதான் எழுந்து வந்தார்.
“என்னமா மீனாட்சி அதுக்குள்ள எந்திரிச்சிட்டா” என்றவர் கேட்க,
அவருக்கு பதிலாக அழகிய புன்னகையை சிந்தியவள் “எனக்கு எப்பவும் சீக்கிரம் எழுந்துக்கற வழக்கம்மா. அதான் எழுந்துட்டேன்.
“ஆமாமா நம்ம எழுந்தாதானே வீட்ல வேலையே நடக்கும். உன் புருஷன் எப்போ பாரின் போனாரு. திரும்ப எப்போ வருவாரு” என்று கேட்க,
திரு திருவென விழித்தவள் “அ…அ…. அவர் இப்போதான் போன மாசம் போனாரும்மா. தி…. திரும்ப வர ரெண்டு வருஷம் ஆகும்”.
“சரியா போச்சு போ. பாரின் வேலை செய்யறவங்க பொழப்பே இப்படிதான். புள்ள பொறக்கறப்ப அவர் இங்க இருக்கமாட்டாரா” என்க,
முகம் வாடியவள் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொள்ள,
“வருத்தபடாதாம்மா. உங்களுக்காகதானே அந்த மனுஷன் அங்க கஷ்டப்படறாரு. சரி. அதை விடு. நான் பால் எடுத்துட்டு வரேன் குடி”.
“இல்லம்மா அதெல்லாம் வேண்டாம். நீங்க உட்காருங்க. நான் உங்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வரேன்”.
“அட என்னம்மா நீ. உட்காரு. பிள்ளை உண்டானவ. உன்னை போய் வேலை வாங்குவேனா.உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் செஞ்சு தரேன்” என்று சொல்ல,
மீனாட்சி ஒன்றும் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.
“என்ன வேண்டாம். நான் பால் எடுத்துட்டு வரேன் நீ குடிக்கணும். வேண்டாம் வேண்டாம்னு சொன்னா புள்ளைய தாங்க சத்து வேண்டாமா” என்றவர் சென்று பால் எடுத்து வந்து கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு “சரிம்மா நான் போய் எல்லாத்துக்கும் காலை சாப்பாடு ரெடிபண்றேன்.கோயிலுக்கு வேற கிளம்பனும்” என்று சொல்லி கிச்சன் நோக்கி செல்ல,
“நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்ம்மா” என்று வர, குமாரி எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் அவருடனே வேலை செய்ய ஆரம்பித்தாள்.
ஸ்ரீ திருமணம் முடிந்து இங்கு வந்ததிலிருந்து சீக்கிரமாக எழுபவள் அன்று நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
தீரன் எழுந்தவன், ஸ்ரீ இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து புருவம் சுருக்கி மணியை பார்க்க அது ஏழு என்று காட்டியது.
‘என்ன இவ்வளவு நேரம் தூங்குறா, எப்பவும் நமக்கு முன்னாடி எழுந்து டீ கொண்டு வந்துருப்பா. இன்னைக்கு என்ன ஆச்சு’ என்று யோசித்தவன், பின் தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டு ‘ஆமா இவ்வளவு நாள் அவ டீ கொடுத்துதான் உனக்கு பொழுது விடிஞ்சுது. இன்னைக்கு அவ தரலைன்னு யோசிக்கற போடா….போடா…. ஒரு வருஷ பொண்டாட்டிகிட்ட இது எல்லாம் எதிர்பார்க்க கூடாது’ என்ற மனசாட்சியை முறைத்தவன் ‘ஒரு வருஷம்னாலும் என் பொண்டாட்டிதானே அப்புறம் என்ன. நான் என்ன அடுத்தவன் பொண்டாட்டி போடற டீ காணோம்னா தேடறேன். பேசாம போய்டு’ என்க,
‘அடே அப்பா…பொண்டாட்டியா…ம்ம்…. நீ நடத்து ராசா’ என்றுவிட்டு சென்றுவிட,
இவனோ ஸ்ரீயை பொண்டாட்டி என்று சொன்னதில் அதிர்ந்து பின் முகம் இறுகி எழுந்து பாத்ரூம் சென்றுவிட அவளோ நன்றாக உறக்கத்தில் இருந்தாள்.
தீரன் குளித்துவிட்டு வந்த பிறகும் ஸ்ரீ எழும்பாமல் இருக்க, குமாரி வேறு ஸ்ரீ என்று அழைக்கும் சத்தம் கேட்க, அவளை எழுப்ப நினைத்து அருகில் சென்றவன், அழைத்து அழைத்துப் பார்க்க அவள் எழும்பவில்லை. அவள் கைகளை பிடித்து ஆட்டி எழுப்ப முயற்சிக்க,
அவளோ அந்த கையை இழுத்து தன் கழுத்துக்கு கீழே வைத்து “முனிஷ்….முனிஷ்… ப்ளீஸ் முனிஷ் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்” என்று சொல்ல,
அவளது இளம் சூடான கழுத்தில் இருந்து வெடுக்கென்று தன் கையை உறுவியவன், கடுப்பாகி அவள் காதருகில் சென்று “நித்யா……..” என்று கத்த,
“ஆஆ…….. “என்ற கத்தலோடு எழுந்து வந்தவள் காதுகளை தேய்த்துக்கொண்டே அவனை முறைக்க,
அவனோ சாதாரணமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏங்க இப்ப எதுக்கு என் காதில் கத்துனீங்க”.
“நான் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன். நீ எழுந்துக்கல அதனாலதான் காதுல கத்தற மாதிரி ஆகிடுச்சு”.
அவளோ சட்டமாக அமர்ந்து கொண்டு “உங்க அம்மா கூப்பிட்டா நான் ஏன் போகணும். நான் என்ன இந்த வீட்டு நிரந்தர மருமகளா,பிரிஞ்சு போகப்போறவ தானே. அதனாலநான் போக மாட்டேன்.எதுவும் செய்ய மாட்டேன். எனக்கு தூக்கம்…தூக்கமா வருது” என்றுவிட்டு மீண்டும் படுத்துக்கொள்ள,
அவனோ கோபமாக “பார் நித்யா என்னை கோபமாக்காத ஒழுங்கா எந்திருச்சு கீழே போ”.
“முடியாது….. “ என்றுவிட்டு தூங்க துவங்க,
அதில் கோபமானவன் அவளை அப்படியே தொடையோடு கையிட்டு தூக்கி பாத்டப்பில் போட்டு “ஒழுங்கா சீக்கிரம் குளிச்சிட்டு புடவை கட்டிட்டு கீழ போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுற. இல்ல.. முடியாது…. நடக்காதுனு எதாவது சொன்ன,
“என்ன…. என்ன பண்ணுவீங்க…இல்ல என்ன பண்ணிடுவீங்கன்னு கேட்கிறேன். இல்ல நான் தெரியாமல் தான் கேட்கிறேன். என்னரொம்ப தான் மிரட்டுறீங்க. என்னமோ உண்மையான புருஷன் மாதிரி” என்று எகிறி கொண்டுவர, அவள் நின்றிருந்த நிலையை கண்டு தடுமாறத் துவங்கினான்.
இரவு உடையில் உடல் முழுதும் நினைந்து உடை உடலோடு ஒட்டி, அவள் அழகை அப்பட்டமாக அவன் கண்களுக்கு விருந்தாக்க அதையெல்லாம் உணராமல் சண்டைக்கு நின்றவளை கண்டு திரும்பி கொண்டவன் “நான் வெளிய இருக்கேன் சீக்கிரம் கிளம்பி வா” என்றுவிட்டு செல்ல போக,
அவன் கையை பிடித்து நிறுத்தியவள் “நில்லுங்க. எங்க ஓட பாக்குறீங்க இல்லைனா என்ன பண்ணுவீங்கன்னு சொல்லிட்டு போங்க” என்க,
எந்த உணர்வும் இல்லாமல் அவள் கண்களை அழுத்தமாக பார்த்தவன் “நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருக்கேன்டி எனக்கு அதிகமா பேசறது பிடிக்காதுன்னு. இப்போவும் சொல்றேன். நீ இன்னும் அஞ்சு நிமிஷத்தில கிளம்பி வரலைன்னா நானே உன்னை ரெடி பண்ண வேண்டியதா இருக்கும். செய்ய மாட்டேன்னு நினைக்காதடி . சொன்னா நான் கண்டிப்பா செய்வேன்” என்று செல்ல போக,
அவளோ அதிர்ந்து நின்றவள் அவன் செல்வதை பார்த்து தன்னிலை அடைந்து “ஹலோ…ஹலோ…எங்க ஓடுறீங்க. என்ன வாடி போடின்னு எல்லாம் பேசிட்டு இருக்கீங்க. இப்படியெல்லாம் பேசற வேலை வெச்சிக்காதீங்க. ஒரு வருஷ புருஷனுக்கு அந்த ரைட்ஸ் இல்ல. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நான் பேசுனா முதல்ல என்னை பார்த்து பதில் சொல்லுங்க. அது என்ன செவுத்த பார்த்துட்டு நிற்கறது” என்க,
தன் தோளிலிருந்து துண்டை எடுத்து அவள் மீது போட்டவன் முதல்ல போய் குளிடி. அப்புறம் மல்லுக்கு நிற்ப”என்று வெளியில் சென்று விட,
ஸ்ரீயோ இவனுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பொம்பள புள்ள மாதிரி தலையை குனிஞ்சுகிட்டே போறான். என்று திரும்ப எதிரிலிருந்து கண்ணாடியில் தன்னை பார்த்து “ஆஆஆ…”என்று கத்த,
‘இவ எதுக்கு இப்ப கத்துறா’ என்று யோசித்தவன் “என்ன ஆச்சு” என்று வெளியில் இருந்து கேட்க,
உடனே வேகமாக சென்று கதவை அடைத்து அதன் மீது சாய்ந்தவள் “இல்ல…இல்ல…ஒன்னும் இல்ல” என்று சொன்னவளுக்கு படபடப்பானது.
‘ச்ச…இப்படியேவா அவர் முன்னாடி நின்னு சண்டை போட்டுட்டு இருந்தேன். கடவுளே… அசிங்கமா போச்சே குமாரு’ என்று தலையில் அடித்துக் கொண்டவள் காதில் “நான் சொன்ன அஞ்சு நிமிஷம் முடிஞ்சுருச்சு” என்ற கணவன் குரல் காதில் விழ,
“இதோ…இதோ…வந்துட்டேன்” என்றவள் வேக வேகமாக குளித்து முடித்த பின்தான் உணர்ந்தாள். மாற்று துணி எடுத்து வரவில்லை என்று, எப்படி வெளியில் செல்வது என்று நகத்தை கடித்துக் கொண்டிருந்தவள் காதில், “வெளிய வர்ற ஐடியா இருக்கா இல்லையா” என்றவன் குரல் கோபமாக ஒழிக்க,
இவனிடம் எப்படி தன் நிலையை சொல்வது என்று யோசித்தவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க,
அவள் வேண்டுமென்றே அமைதியாக இருக்கிறாள் என்று நினைத்தவன் “இப்படி எல்லாம் அமைதியா பேசுனா, நீ கேட்க மாட்ட, நானே உள்ளே வரேன்” என்று கதவை உடைப்பது போல் தட்டியவனிடம்,
“இருங்க.. இருங்க.. உள்ள வந்தறாதீங்க. வா…. வான்னா எப்படி வர முடியும். நீங்க பாட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டீங்க.சேஞ்ச்பண்ண ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரல”. என்று சொல்ல,
அப்பொழுதுதான் நினைவு வந்தனாக “ஓ…” என்றான்,
“ஓதான்….. ஓ….வெளிய போங்க. நான் வெளிய வரணும்” என்க, அடுத்த நிமிடம் தீரன் அறையைவிட்டு வெளியே சென்றிருந்தான்.
என்ன சத்தத்தையே காணோம் போயிட்டாரா இருக்காரா ஒன்னும் தெரியலையே சரி வெளியே எட்டி பார்ப்போம் என்றவாறு வெளியே தலையை நீட்டி பார்க்க அங்கு தீரன் இல்லை.
‘போயிட்டாரு போல. போறேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா என்ன வாயில இருக்க முத்தா கொட்டிடும்’ என்று முணு முணுத்தவாறே உடையை மாற்றியவள் கிளம்பி கீழே சென்றாள்.
படியில் இறங்கி வரும்போதுதான் கவனித்தால் அங்கு சோபாவில் அமர்ந்து போன் பேசிகொண்டிருந்த தீரனும் அவள் சேரிக்கு மேட்சான ஷர்ட் அணிந்திருப்பதை. இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வருவதை பார்த்த அஸ்வின் “ம்ம்ம்…..ஒரே மேட்ச் தான் போல” என்று கிண்டலாக சொல்ல,
அவனை முறைத்து கொண்டே இறங்கிய ஸ்ரீ மீனாவை பார்க்க சென்றுவிட,
போன் பேசி முடித்த தீரன் “என்னடா கிளம்பலாமா? அம்மா எங்க?”
“பொறுப்பா உன் அவசரத்துக்கு அளவில்லாம இருக்கு. சாப்பிட வேண்டாமா. அம்மா அப்பா கிளம்புன. உடனே வருவாங்க” என்றுவிட்டு “பிரக் அண்ணன பொறுப்பான ஆளா பார்த்திருப்ப, நல்ல அண்ணனா பார்த்திருப்ப, பெரிய பிஸ்னஸ் மேனா பார்த்திருப்ப லவ்வர் பாயா பார்த்திருக்கியா? பார்த்துக்கோ…. நல்லா கண்ணை திறந்து பார்த்துக்கோ” என்று கிண்டலாக சொல்ல,
தீரன் தம்பியை தீயாக முறைக்க, அதை கண்டு கொள்ளாதவன் “பார்த்துட்டியா பிரக்” என்க,
அவளோ “என்ன லவ்வர் பாய்னா ஒன்னும் புரியலையே” என்று வேண்டுமென்றே தெரியாதது போல் கேட்க,
“நீ இன்னும் அண்ணிய கவனிக்கலியா? அதான் அப்படி பேசற அக்கடே சூடு” என்று மீனாவுடன் வந்த ஸ்ரீயை கண் காட்ட,
தீரனும் அவளை திரும்பி பார்த்தவன் அதிர்ந்து போனான். அவனுமே இதை எதிர் பார்க்கவில்லை என்பதை அவன் பார்வையில் கண்டு கொண்ட அஷ்வின் “பார்த்துட்டியா? இது கோ ஆக்சிடண்ட்டாம் நம்பிரு”
“ம்ம்…நம்பிட்டேன்ண்ணா. நம்பிட்டேன்” என்று சிரிப்போடு சொல்ல,
தீரனோ அவனை உக்கிரமாக முறைத்து கொண்டு இருந்தான்
அதை கவனித்த அஷ்வின் “இது என்ன வம்பா போச்சு உண்மையத்தானே சொன்னேன். அதுக்கு ஏன் உடன்பிறப்பே முறைக்கற”என்று கேட்க,
“என்ன உண்மை கண்டதை உளராம பொறுப்பான டாக்டர் மாதிரி நடந்துக்கோ” என்று உருமிவிட்டு, ஷர்ட்டை மாற்ற நினைத்தவன் மீண்டும் அறைக்கு செல்ல போக, அப்போது சீனி கிளம்பி வந்தார்.
மகன் வேகமாக படியேறுவதை கவனித்தவர் “என்னப்பா. எங்க போற. கிளம்பிட்டதானே”.
“ம்ம்…. கிளம்பிட்டேன்ப்பா. ஷர்ட் மாத்தலாம்னு…”
“ஏன் இந்த ஷர்ட்க்கு என்ன? நல்லாதான் இருக்கு. நேரமாச்சு வா. போய் சாப்பிடலாம். கோவிலுக்கு போக நேரம் ஆகும்” என்று சொல்ல,
அவனும் தம்பியை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் சொல்லாமல் டைனிங் அறை நோக்கி சென்றான்.
மீனாவுடன் வரும் ஸ்ரீயை பார்த்த அஷ்வின், பிரக்யா இருவரும் “ஐ.. ஐ…அடுத்த எண்டர்டெயின்மெண்ட் வந்துடுச்சு” என்று கண்ணடித்து கொண்டவர்கள் ஒன்றாக பாட ஆரம்பித்தனர்.
“டிங்கிரி டிங்காலே மீனாட்சி மாவிடுச்சாளே.டிங்கிரி டிங்காலே மீனாட்சி தோசை சுட்டாலே….. நானும் போயி கேட்டதுக்கு ஒன்னு குடுத்தாளே. பட்டணத்து மாமனுக்கு பத்து குடுத்தாளே. அவ வாழ போறாளா நான் பார்க்க போறேனா…” என்று பாட, மீனு ‘பே…வென்று’ விழித்துக் கொண்டிருக்க,
அவள் விழிப்பதை பார்த்து அண்ணன், தங்கை இருவரும் சிரிக்க துவங்கினர். அதில் கடுப்பான ஸ்ரீ “என்ன ரெண்டு பேரும் சேர்ந்து என் பிரண்ட கிண்டல் பண்றீங்களா. வாயிலேயே ரெண்டு பேருக்கும் ஊசி போட்டுருவேன் பார்த்துக்கோங்க”.
அஷ்வின், “ஆமா ஆமா டாக்டர் அம்மா நம்ம பயமுறுத்தறாங்க. வா பிரகி பயந்துடலாம்” .
“ஆமா…. அண்ணா எனக்கு பயமா இருக்கு. ஊசி….. ஊ…. ஊசி…. ப…பயம்ம்ம்மா……இருக்கு”
“ஹேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையா. ஒவ்வொருதரையா கலாச்சுட்டு இருக்கீங்க. எல்லாரையும் ஓட்டி முடிச்சாச்சு அடுத்த டார்கெட் நானா. உங்க ஆட்டத்துக்கு நான் வரலப்பா. ஆளை விடுங்க.” என்று சொல்ல, மீனாட்சி அவர்களை பார்த்து சிரித்தாள்.
அப்போது “சாப்பிட வாங்க நேரம் ஆகுது” என்ற குமாரியின் குரலில் அனைவரும் சாப்பிட சென்றனர்.
ஒருவழியாக சாப்பிட்டு முடித்தவர்கள் கோவிலுக்கு கிளம்பினர். அப்போது “அஷு…..” என்று பேச சென்ற ஸ்ரீயிடம், அஷ்வின் முகத்தை திருப்பி கொண்டு பேசாமல் செல்ல, அவள் முகம் வாடி போனது.
அவன் செல்வதை பெரு மூச்சுடன் பார்த்தவள் வெளியே சென்றாள்.குமாரி “அம்மாடி மருமகளே நீ மீனா தீரன் மூணு பேரும் நடுல இருக்க சீட்ல உட்காருங்க. நானும் பிரக்யாவும் பின்னாடி இருக்க ரெண்டு சீட்ல உட்காருறோம். மாமா முன்னாடி இருப்பாரு. அஷ்வின் கார் ஓட்டட்டும்” என்க,
அவளோ “ஹையோ….பக்கத்துல உட்காரணுமா”என்று முணக, நந்தன் தான் ஓய்வு எடுப்பதாக சொல்லி வீட்டிலேயே இருந்துவிட்டார்.
குமாரி, பிரக்யா முதலில் ஏறிவிட, வேறு வழியில்லாமல் ஸ்ரீ தீரன் அருகில் அமர்ந்தாள். அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் இருக்க, மீனாவும் தன் வாழ்வில் எதாவது மாற்றம் வராதா என்ற எண்ணத்துடன் கோவிலுக்கு கிளம்பினாள்.
கார் அவர்கள் குல தெய்வம் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.
சென்னப்பன் கோபமாக வீட்டின் நடு கூடத்தில் அமர்ந்திருந்தார்.
“அவன் நல்லா இருப்பானா? ராசா கணக்கா இருந்த மனுஷன இப்படி போலீஸ் ஸ்டேஷன் போக வச்சுட்டானே. இப்படி இருக்கும்போதே இவனுக்கு இவ்ளோ திமிருன்னா நல்லா இருந்தா இவனை எல்லாம் கைல பிடிக்க முடியாது போல, அவன் கை, கால் வெளங்காம போக” என்று தனம் ஒரு புறம் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்க,
சென்னப்பனுக்கு வெளியே செல்லவே அசிங்கமாக இருந்தது. தன்னை பார்த்து கூலை கும்பிடு போட்டவர்கள் எல்லாம் இப்போது அவரை கிண்டலாக பார்ப்பது போல் தோன்ற, முதலில் இருந்ததை விட பல மடங்கு அரக்கனாக மாறி போனார்.
மீனாவை தேட நாளா புறமும் ஆட்களை அனுப்பியவர். அவளால்தான் தனக்கு அசிங்கம் என்று நினைத்து அவளை பார்த்தவுடனே கண்ட துண்டமாக வெட்டி போட சொல்லிவிட்டார்.
பெரிய மகள் படித்த திமிரு என்று நினைத்தவர் கண்ணம்மாவின் படிப்பை நிறுத்தி வீட்டோடு இருக்க வைத்தார்.
சீக்கிரமே அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கிறேன். திருமணம் செய்து வைக்கிறேன் என்று குதித்து கொண்டு அலைய,
வீட்டில் யாரும் அவரிடம் எதுவும் பேசவில்லை. தனமும் புருஷன் சொன்னால் சரி என்று அமைதியாகிவிட, ஏழுமலையும் கண்ணம்மாவும் தவித்து போயினர்.
அங்கு கோவிலுக்கு செல்லும் ஸ்ரீ, தீரன் வாழ்க்கை இனியாவது சரியாகுமா…. சென்னப்பனிடம் மீனா மாட்டுவாளா அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.