Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, அதே சமயம் உங்கள் கருத்துகளை எண்ணுடன் பகிர்ந்துக்கொண்டாள் இன்னும் மகிழ்வேன். 

நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 04

ரங்கராஜன் அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசு, ஒரு திருமணவீட்டில் அவர் பார்த்த பெண் தான் ரங்கநாயகி, பார்த்தும் அவளை பிடித்துவிட அவளை தான் திருமணம் செய்வேன் என்று தன் பெற்றோரிடம் முடிவாக சொல்லிவிட்டார்.

அதில் அவரின் பெற்றோருக்கு சிறிதும் விருப்பம் இல்லை, அதை மகன்னிடமும் சொல்லி பார்த்தனர், ஆனால் ரங்கராகஜன் அவரின் முடிவில் எந்த மாற்றம் இல்லை என்று கூறிவிட, 1 வருடம் வரை காத்து இருந்தும் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தால், பெற்றோர் ரங்கநாயகியை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ரங்கநாயகி வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சார்ந்தவர், தந்தை எல்லாவற்றையும் அழித்து இருக்க. மனைவி சுந்தரவடிவு, மகள் ரங்கநாயகி, மகன் சண்முகம் எல்லோரையும் தவிக்கவிட்டு அவர் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். அதன் பின் இருக்கும் சொத்துக்களை விற்று சுந்தரவடிவு  தன் மகன், மகளை காபாற்றி வந்தார். 

அந்து நேரத்தில் தான் ரங்கநாயகியை ரங்கராஜன் வீட்டில் பெண் கேட்டனர். இவர்களும் சம்மதிக்க, திருமணம் நடந்து.

ஆனால் அதன் பின் ரங்கநாயகியின் நல்ல குணத்தினால் அவளை விரைவில் மணமார ஏற்றுக்கொண்டனர். திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் கடந்த கழித்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு கலாதரன் என்று பெயர் சூட்டினர், என்ன தான் வள்ளியை தங்கள் மருமகளாக ஏற்றுக்கொண்டாளும்,  அந்த விழாவிற்கு  குழந்தையை காண வந்த சுந்திரவடிவையும், சண்முகத்தையும், ரங்கராஜன் பெற்றோர் மரியாதை இல்லாமல் நடத்த, அதில் அவர்கள் மிகவும் வருந்தினர். ஆனால் இது எதுவும் ரங்கராஜன் காதுக்கு போகாமல் பார்த்துக்கொண்டனர். ரங்கநாயகிக்கு இது எல்லாம் தெரிந்தும் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை.

அதனால் அவரின் தாய்வீட்டின் உடனான உறவு அவருக்கு அவ்வளவு சுமுகமாக இல்லை. 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரங்கநாயகி கருவுற்றாள். இம்முறை குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து. அதற்கு காரணம், அவர்கள் குடும்பத்தில் இதுவரை ஒற்றை வாரிசு தான், மருமகள் மறுமுறை கருதரித்து இருப்பது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்து. அதுவும் அவர் முதல் பெண் வாரிசை பெற்று எடுத்த போது குடும்பமே கொண்டாடி தீர்த்து.   அந்த குழந்தைக்கு கலாராணி என்று பெயர் வைத்தனர்.

எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டு இருக்க கலாதரன் 8வது வயதில் அவனின் தோல் நிறம் மாற தொடங்கியது. முதல் ஏதோ ஒவ்வாமை என்று நினைத்து மருத்துவம் பார்த்தனர். ஆனால் நாட்கள் நகர நகர அதன் பாதிப்புகள் அதிகமானதே தவிர குறையவில்லை.

யார் எந்த மருந்து சொன்னாலும் முயன்று பார்த்தனர். ஆனால் அதனால் ஒரு முன்னோற்றமும் ஏதும் இல்லை. நாளுக்கு நாள் அவன் நிலை மேசமாகியது. இப்படியே அவன் 11 வயது அடையும் போது, ரங்கராஜன் பெற்றோர் அடுத்து அடுத்து இறந்துவிட. இரு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு ரங்கநாயகியால் தனியாக சமாளிக்கமுடியாமல். தன் கனவன் சொல்படி தன் தாய் மற்றும் தம்பியை தன்னுடன் அழைத்துக்கொண்டார்.

ரங்கராஜன் பெற்றோர் இருக்கும் வரை அவர்களும் அங்கு போக்குவரத்து வைத்துக்கொள்ளவில்லை. இப்பொது அங்கு சகஜமாக போய் வந்தனர். கொஞ்சநாட்களில் அவர்களுக்கு அந்த வசதியாக வாழ்வு பழகிவிட மெல்ல அங்கேயே இருந்துக்கொண்டனர்.

ரங்கநாயக்கும், ரங்கராஜனுக்கும் மகன் காலதரன் சிகிச்சை என்று அவனை பற்றியே சிந்தனை இருக்க,  சுந்தரவடிவு பேத்தி கலாராணியை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார்.

இப்படியே வருடங்கள் ஒட கலாராணிக்கு பெற்றோர் தன்னை கவணிக்காமல் அண்ணன் உடன் இருப்பது அவளுக்கு கலாதரன் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. அதிலும் அவன் உருவம் முற்றிலும் மாறி பார்க்க விகாரமாக இருக்கும் கலாதரனை அவள் முற்றிலும் வெறுத்தாள்.

அண்ணன், தங்கையிடம் வரும் இயல்பான பாசபினைப்பு இருவருக்கும் ஏற்படவில்லை. 

இதற்கு இடையில் மகன் இப்படி இருக்க எல்லாவற்றிலும் மகள் கலாராணியை முன்னிலை படுத்தினார் ரங்கராஜன், அதனால் எல்லாம் அவள் விருப்பம் என்று ஆனாது.

ரங்கநாயகி மகனை நினைத்தே மிகவும் வருந்தினார். எப்போதும் அவனுக்கு துனை நின்றார்.

படிக்கும் விஷயத்திலும் கலாராணி பள்ளி, கல்லூரி செல்ல, மகனுக்கு விட்டில் வைத்தே கல்வி கற்பித்தனர். 

மருத்துவர்கள் இது பரம்பரை வியாதி இல்லை. ஆரம்பத்தில் இவருக்கு கொடுக்கபட்ட பல்வேறு மருந்துகளால் இந்த நிலை என்று கூறியவர்கள். அதை முற்றிலும் சரிசெய்ய முடியாது என்றும் கூறினார்.

அதன் பின் கலாதரன் வாசம் அவன் அறை என்று மட்டும் ஆனது. அவனுக்கு வரைவதில் அதிக ஆர்வம். அதில் அவன் தன் கவனத்தை செலுத்த. மகளை முன்னிட்டு எல்லாவற்றையும் செய்தார் ரங்கராஜன்.

இருவரும் திருமண வயதை அடைந்தும், திருமணம் குறித்த பேச்சில், மருத்துவர் கலாதரனுக்கு இந்த நிலை திருமணப உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் அவரை புரிந்துக்கொள்ளும் பெண்னை அவருக்கு மணம்முடிக்க அறிவுறித்தனர்.

பல இடங்களில் பெண் பார்த்தும் ஏதும் அமையவில்லை. கடைசியில் அவர்களிடம் வேலை செய்யும் முருகனின் மகளை தன் மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

முருகனுக்கு 3 குழந்தைகள், பெரியவள் வள்ளி, அடுத்து லட்சுமி, கனேசன் என மனைவி இறந்து 3 பிள்ளைகளுடன் அவருக்கு கஷ்ட ஜீவனம் தான். 

தந்தைக்கு உடல் நிலை குறைவு ஏற்பட வள்ளி அவருக்கு பதில் வேலைக்கு வர, அவரை பார்த்து கலாதரனுக்கு இவள் மேல் விருப்பம் ஏற்பட்டது. ஆனால் தன்னை பார்த்தால் பயந்து நடங்கும் வள்ளியிடம் அவன் தன் விருப்பத்தை சொல்லாமல் தனக்குள் மறைத்துக்கொண்டார்.

ஆனால் ரங்கநயாகி அதை கண்டுக்கொண்டார். அவர் பார்த்த வரையிலும் வள்ளி நல்ல பெண், பெறுமையானவள், மகனுக்கு பெறுத்தமாக இருப்பாள் என்று நினைத்தவர், அவளிடம் மெல்ல கலாதரன் பற்றி பேச தொடங்கினார். மெல்ல மெல்ல வள்ளிக்கு கலாதரன் மேல் இருந்த பயம் நீங்கி அவரிடம் நட்பு பாரட்ட ஆரம்பித்தாள்.

கலாராணியை முழுவதும் சுந்திரவடிவு தன் கட்டுபாட்டில் வளர்த்தாள். அவள் தான் அந்த வீட்டின் ராணி என்றும் அவளுக்கு தான் அந்த வீட்டின் அனைத்து உரிமைகளும் என்றும் அவளின் மனதில் பதிய வைத்து இருந்தார்.

அவள் எது செய்தாலும் அது தான் சரி தன் என்றும் அவளுக்கு துனை நின்றார். மொத்தில் ஒர் பிடிவாதகார குழந்தையாக அவள் வளர்ந்தாள்.

அக்கா மகனின் குறையை சுட்டி காட்டி ரங்கராஜனுக்கு பிறகு எல்லாவற்றையும் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தான் சண்முகம். 

எல்லாவற்றையும் ரங்கராஜன் உணரும் முன் நிலைமை கைமீறி இருந்து. அவரின் அன்பு  மகள் தன் தாய்மாமன் சண்முகத்தை தான் திருமணம் செய்வேன் என்று சொன்ன போது அவர் அதிர்ந்து தான் போனார்.  இருவருக்கும் 10 வயது வித்தியாசம், மேலும் கலாராணி பட்டபடிப்பு முடித்தவள். சண்முகமோ 10ஆவது வரை தான் படித்து இருந்தான். இப்படி எந்த வித்திலும் தன் மகளுக்கு பெறுத்தம் இல்லை என்று தெரிந்தும் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. ஏன் எனில் மகள் அந்த அளவிற்க்கு தன் திருமண முடிவில் உறுதியாக இருந்தாள். 

அதில் சுந்திரவடிவுக்கும், சண்முகத்துக்கும் முக்கிய பங்கு இருந்து. இது நாள் வரை இங்கே எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப அவர்கள் தயாராக இல்லை. அதிலும் கலா வேறு வீட்டில் மணம்முடித்து சென்றுவிட்டாள். யாரோ பெயர் தெரியாத ஒருவரிடம் மீண்டும் கையேந்த வேண்டிய நிலைவரும். அதனால் கலாவின் மனதில் மெல்ல மெல்ல அவள் தான் இந்த வீட்டின் எஜமானி என்பதை பதிய வைத்தவர்.

அவள் சொன்னால் அந்த வீட்டில் மறு சொல் கிடையாது என்ற நிலையில் வைத்து இருந்தார். அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த உடன், இது எல்லாம் நீ இங்கு இருக்கும் வரைக்கும் தான், நீ திருமணம் முடித்து வேறு வீட்டுக்கு சொன்று விட்டாள், இது எல்லாம் யாருக்கு என்பார்.

திருமணத்திற்க்கு பின் புகுந்தவீட்டில் அவள் இஷ்டபடி இருக்க முடியாது, எல்லாம் அம்மா வீட்டோடு முடிந்துவிடும் என்று அவள் மனதில் ஆழபதிய வைத்து இருந்தார்.

உன்னை போலவே படித்த ஒருவனை திருமணம் செய்தாள் அவன் உனக்கு அடங்கி இருக்கமாட்டான், என்றும் கூறுவார். இதை எல்லாம் அவள் மனதில் பதிய வைத்து மட்டும் இல்லாமல். அதே போல் தான் தன்னை சுற்றி இருப்பவர்கள், தன் தோழிகள் என்று அவர்கள் திருமணத்திற்க்கு முன் பின் என்று ஒப்பிட்டு பார்த்தாள் கலா. அவள் பாட்டி சுந்திரவடிவு சொல்வது எல்லாம் உண்மை தான் என்று அவள் மனம் நினைத்தது.

நாளாக நாளாக தான் இந்த வீட்டை விட்டு திருமணம் ஆகி சென்றுவிட்டாள், எல்லாவற்றையும் இழந்துவிடுவோம் என்று நம்பினாள்.

அதற்கு அவள் கண்டு பிடித்த வழிதான் சண்முகத்தை மணப்பது. சிறு வயதில் இருந்தே தான் சொல்வதை தட்டாமல் செய்யும் மாமா, இந்த வீடு, அதிகாரம் எதையும் அவளால் விட்டுவட முடியாது. அதனால் சண்முகத்தை மணந்துக்கொள்வது என்று முடிவுக்கு வந்து இருந்தாள். அதில் உறுதியாகவும் இருந்தாள்.

வேறு வழியின்றி அவள் விருப்பபடி அவளுக்கு திருமணம் என்று முடிவு செய்தனர். சுந்திரவடிவும், சண்முகமும் இதில் அதிகம் மகிழ்ந்தவர்கள்.

சண்முகதின் சிறு வயதில் வசதியாக வாழ்ந்து வந்தவர்கள் தான், தன் தந்தையின் தீயபழக்கங்கள், அவர் இறந்த பின் சொத்துக்கள் அனைத்தும் இழந்து தினம் சாப்பாட்டிற்க்கு கூட சிரமம், அதன் பின் அக்காவின் திருமணம், அதில் அவர்கள் நடத்தபட்டவிதம், அதன் பின் ஏற்பட்ட அவமாணங்கள், அவன் படிப்பு தடைபட்ட போது கூட அக்காவிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை. அவள் தன் மகனை பற்றிய கவலையில் இருந்தால், அவன் கேரிக்கைகள் எல்லாம் அவளின் புகுந்தவீட்டினரால் நிராகரிக்கபட  எல்லாம் அவன் அக்காவின் மீது அவனுக்கு கேபமாக மாறியது.

தாங்கள் மட்டும் இவ்வளவு துன்பத்தில் இருக்கும் போது தன் அக்கா இங்கே சுகமாக இருக்கிறாள் என்ற எண்ணம் அவன் மணதில் பதிந்துபோனது.

பெரியவர்கள் மறைவுக்கு பின் இங்கு வந்தவர்கள் வீட்டின் நிலை உணர்ந்து தங்களாகவே பெறுப்புகளை ஏற்றுக்கொண்டு உழைத்தனர். ஆனால் தங்கள் உழைப்பு தக்க மரியாதை இல்லை, தாங்கள் கவனிக்கபடவில்லை என்று உணர்ந்தனர், இதில் பிள்ளைகளின் திருமண பேச்சு வேறு சுந்தரவடிவுக்கு மனத்தாங்கல் ஆனது, இதுவரை தன் தம்பியின் திருமணம் பற்றி பேசாதவள், தன் மகன்  திருமணம் பற்றி கவலை படுகிறாள் என்று.

என்ன வசதி இருந்தும், மகனுக்கு பெண் அமையவில்லை, என்ற கவலையில் இருந்த பெற்றவர்கள் கலாராணியை முற்றிலும் கவணிக்கவில்லை. இது இன்னும் கலாராணி மனதில் அண்ணன் மற்றும் பெற்றவர்கள் மேல் கோவத்தை வரவழைத்து இருந்து.

இதில் சுந்தரவடிவின் சொற்களும் சேர்ந்துக்கொள்ள, தன் மணமாகி வேறு வீடு சென்றுவிட்டாள், தன்னை பொற்றோர் முற்றிலும் மறந்துவிடுவார்கள் என்றே என்ன தெடங்கினாள்.

அந்த நேரத்தில் பாட்டியும், மாமாவும் அவள் மேல் கொள்ளும் அக்கரையும், அவளுக்கு கொடுக்கும் முக்கியதுவமும், அவளை அந்த முடிவு எடுக்க வைத்து. சுந்திரவடிவோ, சண்முகமோ நேரடியாக ஏதும் அவளிடம் திருமணத்தை பற்றி பேசாமல், அவளாகவே சண்முகத்தை மணந்தால் மட்டுமே தான் இந்த வீட்டில் தன் உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்தவள்.

மாமாவை தான் திருமணம் செய்துக்கொள்ளேன் என்று தன் தந்தையிடமே நேரடையாக கூறியிருந்தாள். அவர் அவளிடம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், அவள் முடிவில் உறுதியாக இருந்தாள்.

வேறு வழியில்லாமல், கலாதரன் திருமணம் முடிந்து பிறகு அவளுக்கு திருமணம் செய்வதாக கூற, அது அவளுக்கு மேலும் கோவத்தை உண்டாக்கியது.

ரங்கராஜன்னோ இந்த இடைவெளியை கொண்டு பெண்ணின் மனதை மாற்றிவிட நினைத்தார். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. அவரின் ஒவ்வொரு முயற்ச்சிக்கும், அவளின் திடம் கூடிக்கொண்டே போனது.

இதற்கு நடுவே மகனுக்கு பெணும் அமையாதல், சோர்ந்து போனவர்கள். பார்வையில் வள்ளி மற்றும் கலாதரனின் நட்புபட்டது. வள்ளி மற்றவர்களை போல் இல்லாமல், கலாதரனிடம் இயல்பாக பழகுவது அவர்களுக்கு வேறு எண்ணத்தை ஏற்படுத்த. 

ரங்கநாயகியும் மகனின் மனம் பற்றி கனவனிடம் சொல்ல, அவர் முருகனிடன் திருமணத்திற்க்கு பேசினார்.

வெளியே தகுந்த பெண்ணை தேடுவதை விட, தன் மகனை புரிந்துக்கொண்டு வாழும் பெண் தான் சரி என்று முடிவுக்கு வந்தவர்கள். வள்ளியை கலாதரனுக்கு பெண் கேட்டனர்.

வள்ளியின் தம்பி, தங்கைகளை தாங்கள் பார்த்துக்கொள்வதாகவும்,  திருமணத்துக்கு பிறகு அவர் அந்த விட்டில் வேலை செய்யமுடியாதால் 10 ஏக்கர் நிலம் அவருக்கு வாழ்வாதாரத்துக்கு தருவதாகவும், அவர்கள் கூறியது வள்ளியின் தந்தைக்கு தன் பிள்ளைகளின் வாழ்க்கையை எண்ணி கவலை கொண்டு இருந்தவர், அதை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் இது எதையும் அவர் வள்ளியிடம் சொல்லவில்லை, மகள் ஒர் நல்ல இடத்தில் வாழப்போகிறாள், தாங்கள் வாழ்வும் மேம்படும் என்று நினைத்தவர். மகளிடம் ராங்கராஜன் திருமணம் பற்றி பேசியதை மட்டும் கூறினார்.

அதை கேட்ட வள்ளி முதலில் திடுக்கிட்டாலும், அவர் பழகியவரை கலாதரன் பற்றி அவருக்கு நன்றாக தெரியும், புற அழகை யோசிக்காமல் மனதின் அழகைகொண்டு யோசித்தவர், திருமணத்திற்க்கு சம்மதித்தார்.

அதன் பிறகு தான் இந்த திருமண விஷயம் கலாதரனிடம் பேசப்பட்டது. ஏன் என்றால் ஒரு வேளை வள்ளி இதற்கு ஒத்துக்கொள்ளாவிட்டால், மகன் மனம் வருந்தகூடாது என்று நினைத்தார்.

கலாதரன் வள்ளியிடம் என்னை மணத்துக்கொள்ள விருப்பமா என்று கேட்க அவரும் சம்மதம் என்று கூறவும், தந்தையிடம் தனகும் சம்மதம் என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த பேச்சுக்கள் ஏதும் மற்றவர்களுக்கு தெரியாது தான் செய்தனர். ஒரு வேளை இது நடக்காவிட்டாள், வேலை செய்பவன் பெண் கூட திருமணத்திற்க்கு சம்மதிக்கவில்லை என்று யாரும் கூறிவிட்டால் அது மகனை பாதிக்கும் என்று நினைத்தார்.

இவர்கள் எல்லாம் ஒத்துக்கொண்ட பின் தான் அவர் திருமணவிஷயத்தை மனைவியிடம் கூட கூறினார்.

மகன் தன் முடிவை சென்ன அடுத்த நாள் வீட்டினர் அனைவரையும் அழைத்தவர், மகனுக்கு திருமணம் என்றும், பெண் வள்ளி என்றும் அறிவித்தார். 

மேலும் அடுத்த 20 நாட்களில் திருமணம் என்றும் கூறினார். எல்லாவற்றையும் முடிவு செய்த பிறகு தான் தன் தந்தை தங்களுக்கு இதை சொல்லகிறார், என்று எண்ணியிவள் மேலும் பெண் தன் வீட்டில் வேலை செய்யும் வள்ளி என்று தெரிந்து மேலும் ஆத்திரமானாள் கலா.

தனக்கு கீழ் இருக்கும் ஒருத்தி இந்த வீட்டில் தனக்கு சம்மாக நடத்தபடுவதா? அவளை தான் அண்ணி என்று அழைத்து மரியாதை தர வேண்டுமா என்ற அவள் எண்ணம் அவள் வார்த்தைகளை விட்டு இருந்தாள்.  

வேலைகாரி எல்லாம் இந்த வீட்டில் எனக்கு சம்மாக இருக்க விடமாட்டோன் என்றாள்.

 அதை கேட்டவர் ஏற்கனவே மகள் திருமணவிஷயத்தில் தன் பேச்சை கேட்கவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்தவர். உன் திருமணம் உன் விருப்பம் என்பது போல், இந்த திருமணம் என் மகன் விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமை இல்லை என்றும், அப்படி உனக்கு இங்கு இருக்க முடியாது என்றாள் திருமணம் முடிந்து உனக்கு தனியாக வீடு கட்டி திருகிறேன் என்று முடித்துவிட்டார் முடித்துவிட்டார்.

இதை எதிர் பார்க்காத கலா அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அந்த வீட்டில் தாய் தந்தையிடம் இருந்து முற்றிலும் ஒதுங்கிகொண்டார். 

திருமண வேலைகள் மும்முரமாக நடக்கத்தொடங்கின, புடவைகள், நகைகள் என்று வந்து குவிந்தன, எல்லாம் தனக்கு சம்மாக வள்ளிக்கும் என்று நினைக்கும் போது கலாவிற்க்கு அது பெரும் ஏமாற்றமாக இருந்து.

இத்தனை நாள் செல்வசெழிப்பில் வளர்ந்த நானும் அவளும் ஒன்றா என்ற எண்ணம் அவளுக்கு வள்ளி மேல் தீராத பகையை உண்டாக்கியது.

நேரடியாக இல்லாவிட்டாலும் வள்ளியையும், அவள் குடும்பத்தையும் மறைமுகமாக கலா பேச தொடங்கினாள்.  ஆனால் அதை எல்லாம் வள்ளி பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

அவளிடம் முன்போ இதை பற்றி ரங்கராஜன் கூறியிருந்தார். யார் என்ன கூறினாலும் அதை காதில் போட வேண்டாம் என்று.

அதனால் கலாவின் பேச்சுகளுக்கு வள்ளியிடம் எந்த பிரதிபளிப்பும் இல்லாமல் போனது.

தன் பாட்டியிடம் அவள் இதை பற்றி கூறி புலம்பும் போது அவரும் அதற்கு வலு சேர்ப்பது போல் பேசினார், அவருக்கு இப்படி ஓர் நிலையில் நாங்கள் இருக்கும் போது தான் தன் மகள் திருமணம் நடந்து என்றும் திருமணத்திற்கு பின் அவள் தங்களை கண்டுக்கொள்ளவில்லை என்றும், தாங்கள் பட்ட கஷ்டத்தை எல்லாம் கூற, அதில் மேலும் வள்ளியின் மேல் வெறுப்பு தான் வந்து. 

வள்ளியும் திருமணத்திற்க்கு பின் தன்னை ஒதுக்கிவிடுவாள், அதற்கு இடம் கொடுக்காமல், தான் அதிகாரத்தை கைபற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

இந்த முடிவு அந்த குடும்பத்தையே பின் நாட்களில் மொத்தமாக புரட்டிபோடும் என்று தெரிந்து இருந்தாள், அவள் அப்படி ஒரு முடிவு இருக்க மாட்டாள் ?!?

நிறம் மாறு(ம்)மோ

Advertisement