Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 07

அடுத்த அரைமணி நேரத்தில் எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமணை வந்து இருந்து இருந்தனர். எல்லோர் மனதிலும் பல எண்ணங்கள், அடுத்த 1 மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர், வீட்டில் இத்தனை பேர் இருக்க எப்படி கவனம் இல்லாம இருந்திங்க?

பிபீ அதிகமாகி மயங்கி விழுந்து இருக்காங்க, விழுந்த அதிர்ச்சில் கரு கலைந்துடுச்சி. இன்னும் மயக்கத்தில் தான் இருக்காங்க, பிபீ இன்னும் குறையல, இப்போதைக்கு நல்லா இருக்காங்க. கண்விழித்த பிறகு போய் பாருங்க என்றவர் நகர்ந்துவிட.

என்ன ஆச்சு ரங்கநாயகி? என்றார் ரங்கராஜன்

எனக்கும் ஒன்னும் தெரியலைங்க. நாங்க இரண்டு பேரும் இன்னிக்கு ஆஸ்பத்திரிக்கு கிளம்பலாம் என்று இருந்தோம். அதுக்குள் மாடு கன்னு போட்டு இருக்குனு முருகன் வந்து சென்னான். நான் போய்  வந்து பாத்தா இப்படி இருக்கா. உடனே கலாதரன கூப்பிட்டு இங்க கூட்டிகிட்டு வந்துடோம். 

என்றவர் அவர் கையை பிடித்தபடி அழுது தீர்த்து இருந்தார். என் மகனுக்கு மட்டும் ஏன் இப்படி…………..

அவர்கள் அருகில் கலாவும், சண்முகமும் அமர்ந்து இருந்தனர். அவர்கள் முகத்திலும் கவலை அப்பி கிடந்து. கலாவிற்க்கு தான் அப்படி சொன்னதால் தான் இப்படி ஆகிவிட்டதோ என்ற கவலை. சண்முகம் அவளை அனைத்து ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தார்.

இது எதிலும் கலாதரன் கலந்துக்கொள்ளவில்லை. அவன் அந்த அறையை வெறித்த படி அமர்ந்து இருந்தான். சிறுது நேரம் கழித்து செவிலி அவள் கண்விழித்தாக சொல்லிவிட்டு சொல்ல அனைவரும் சென்று பார்த்து வந்தனர்.

அடுத்த இருநாட்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு அழைத்து வந்து இருந்தனர். வள்ளி எப்போதும் ஏதோ யோசனையில் இருந்தாள். கலாதரன் அதை பார்த்தாலும் அதை பற்றி அவளிடம் ஏதும் கேட்கவில்லை.

ஆனால் ரங்கநாயகி அது பற்றி வள்ளியிடம் பேசினார். என்ன வள்ளி குழந்தைய பத்தி நினைக்கிறயா?

கவல படாதே மா………… கடவுள் புண்ணியத்தில் உனக்கு சீக்கரம் அந்த பாக்கியம் கிடைக்கும் என்றார். அவரை பார்த்தவள் அத்த என்றாள் தயக்கமாய்…………

என்ன மா?

அத்த அது வந்து அன்னிக்கு……………. என்ன ஆச்சு? என்றாள் தயங்கியவாறே………..

எனக்கும் தெரியலமா………. நான் வந்த பார்த்தப்ப நீ அங்க மயங்கி கிடந்த என்றார்.

பக்கதில் யாரும் இல்லையா?

இல்லையேமா

அத்த ……….. அது அன்னிக்கு நான்…………….. விழல……………. 

அவள் சொல்ல வருவது புரியாமல் புருவம் நெத்தவர்……… என்ன? என்றார் கேள்வியாக

ஆமா அத்த நான் அன்னிக்கு விழல. என்ன யாரே தள்ளிவிட்டாங்க!!!!!!!!!!!!! என்றாள்.

அதை கேட்டவர் என்ன மா சொல்லற? என்று கேட்க……….

ஆமா அத்த அன்னிக்கு நான் மாடியில் இருந்து கீழ இறங்க படிகட்டு கிட்ட வந்த அப்ப யாரோ என்ன பின்னால் இருந்து தள்ளின மாதிரி இருந்து…….

என்றவள் சற்று தயங்கி நான் கிழ விழும் போது மேல பார்த்தேன். அங்க உங்க மகன் தான் இருந்தார் என்றாள் கலக்கமாய்.

அதை கேட்டவர் அதிர்ந்து விட்டார் என்ன சொல்லற வள்ளி………. கலா தான் உன்ன தள்ளிவிட்டதா சொல்றியா? என்றார் கோபமாய்………..

எனக்கு தெரியல அத்த. ஆனா நான் பார்த்தேன் அவர் அங்க தான் இருந்தார். 

ஒரு வேல அவன் நீ விழுந்த சத்தம் கேட்டு அங்க வந்து இருக்கலாம் என்றார் அவர்.

அப்போது நீங்க என்ன வந்து பார்க்கும் போது ஏன் அவர் என் பக்கத்தில் இல்லை? என்றாள்…..

இதற்கு என்ன சொல்லவது?

அவருக்கு தெரியவில்லை, அதுவும் இல்லாமல் அவர் அந்த நேரத்தில் அவர் மகனை அங்கு பார்க்கவில்லை.

இந்த உரையாடல் கேட்டவர்கள் மனதில் கலவரம் வந்தாலும், எதையும் வெளியில் காட்டாமல் அங்கு இருந்து நகர்ந்தனர்?!?!

வள்ளி சொன்னதில் மனம் குழம்பினாலும், மகன் அப்படி செய்ய கூடுமா? என்று யேசித்தவர், அதை பற்றி யாரிடமும் கூறவும் இல்லை, கேட்கவும் இல்லை.

ஆனால் வள்ளியை மேலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். வள்ளிக்கு கணவன் மேல் சந்தேகம் எல்லாம் இல்லை. ஆனால் ஏன் அன்று தன்னை பார்த்தும், ஏன் அவர் தன்னை காபாற்றவில்லை என்று குழம்பி தவித்தாள். ஆனால் எதையும் கணவனிடம் கேட்கவும் இல்லை.

…………………………………..

நாட்கள் இப்படியே மாதங்களாக கடந்து போய்விட. ஒர் நாள் மீண்டும் அந்த வீடு மகிழ்ச்சியில் மிதந்து. ஆம் அந்த வீட்டில் மீண்டும் ஒர் வாரிசு உருவாகி இருந்து. இந்த முறை கலாராணி உண்டாகி இருந்தாள். 

அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, கொண்டாடி தீர்த்துவிட்டாள்.     

வீட்டின் சூழ்நிலை மெல்ல மாற தொடங்கியது மீண்டும் சந்தோஷ சாரல் அங்கு. எல்லாவற்றிலும் கலந்துக்கொண்டாலும் கலாதரனும் வள்ளியும், சற்று ஒதுங்கியே இருந்தனர்.

 

கலாராணிக்கு 5 மாதம் தெடங்கி இருந்து. அவளுக்கு பூ முடிக்க வேண்டும் என்று ரங்கநாயகி சொல்ல அதற்கான ஏற்பாட்டில் இருந்தனர் வீட்டில் அனைவரும்.

அதற்கு முன் அந்த மாதம் மருத்துவ பரிசேதனைக்கு அவளை அழைத்து சென்றார். உடன் வள்ளியையும். 

கலாவை சேதித்த மருத்துவர் அவளும் குழந்தையும் நலம் என்றும் கூறியவர், வள்ளியை பற்றி விசாரித்தார்.

ரங்கநாயகி வள்ளியும் அழைத்து வந்து இருப்பதையும், அந்த நிகழ்வுக்கு பின் அவள் மிகவும் சேர்ந்து சரியாக தன்னை கவனித்துக்கொள்ளவில்லை என்றும் கூறியவர், அவளையும் பரிசோதிக்கும்மாறு கூற, மருத்துவரும் வள்ளியையும் பரிசோதித்தவர், அவள் மீண்டும் கருவுற்று இருப்பதாக கூற, ரங்கநாயகிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஆனால் அடுத்து அவர் சொன்ன விஷயத்தில் அவர் எப்படி உணர்ந்தார் என்றே தெரியவில்லை.

கிட்ட தட்ட 4 மாதம் முடிய போகிறது இதுவரைக்கும் யாருக்கும் தெரியலையா? 

அதற்கு என்ன பதில் சொல்லவது என்று அவருக்கு தெரியவில்லை. இத்தனை நாள் மருமகள் வீட்டுக்கு விலக்காக வில்லை என்பதை எப்படி தான் கவணிக்காமல் விட்டேன்.

தான் பார்த்துக்கொள்வதாக சொன்னவர், இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டு வந்தவர், வள்ளியிடம் ஏதும் பேசவில்லை.

கலா இவர்கள் மனநிலை அறியாமல் பேசியபடியே வந்தாள். கலா அவள் அறைக்கு சென்றதும், வள்ளியுடன் அவள் அறையில் நூழைந்தவர். உனக்கு முன்னாடியே தெரியுமா? என்றார்.

அவள் ஏதும் பேசாமல் தலை குனிந்து நின்று இருந்தாள். அது அவருக்கு உண்மையை உறைக்க. என்ன ஆச்சு வள்ளி என்றாள் அவள் அருகில் அமர்ந்து.

இத்தனை நாள் மனதின் அழுத்தம் அவளை அவர் தோள் சாய வைத்தது கண்களில் கண்ணீர் பெருக அழுது தீர்த்து இருந்தாள்.

அவளை அழவிட்டவர் என்ன என்றார் மறுபடியும்……..

அத்த அவருக்கு குழந்தை பெத்துகறதுல இஷ்டம் இல்லை அத்த என்றாள் விசும்பியபடி. 

அவள் சொன்ன பதில் அதிர்ந்தவர், என்ன சொல்ற……..

ஆமா அத்த எங்களுக்கு குழந்தை பிறந்தா அதுக்கும் அவரமாதிரி பாதிப்பு வரும் நினைக்கிறார். அதனால குழந்தையே வேணாம் நினைக்கிறார் என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

இந்த விஷயம் அவனுக்கு தெரியுமா?

இல்லை என்று தலை அசைத்தவள்……….

ஒரு வேலை அவன் இந்த குழந்தையை வேண்டாம் என்று கூறிவிட்டால்? அதனால் தான் என்று மனதில் கூறிக்கொண்டாள். அதோடு போன முறை போல் இந்த முறையும் ஏதாவது நிகழ்ந்துவிட்டால் என்பதை மனதில் நினைத்தவள் சொல்லவில்லை!!!!!!!!!

சரி நான் அவன் கிட்ட பேசுறேன், இந்த மாதிரி நேரத்தில் நீ சந்தோஷமா இருக்கனும். அப்பதான் வயித்து புள்ளையும் சந்தோஷமா இருக்கும்.

சரிவிடு நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்.

என்றவர் அவளை ஒய்வு எடுக்க சொல்லவிட்டு, மகனை தேடி சென்றார். அவன் தனக்கான தனி அறையில் ஒரு ஒவியம் வரைந்தபடி இருக்க. என்ன பன்ற கலா என்று அந்த அறைக்குள் நுழைந்தவரை பார்த்து என்ன மா?

அது ஒன்னும் இல்லை கலா, இன்னிக்கு ராணியை ஆஸ்பிட்டலுக்கு கூட்டி போய்ட்டு வந்தேன், அப்படியே வள்ளியையும் காட்டினேன். கொஞ்ச நாளாக சேர்ந்து தெரியுறா என்றார், அவன் முகம் பார்த்துக்கொண்டே.

அதில் அவன் முகம் வாடி போயிற்று. அதை அவனும் அறிவான் அந்த சம்பவத்துக்கு பிறகு, கலா பேசியது, தன் சிறயவயதில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் அவனை வெகுவாக பாதித்து இருந்து. அதில் அவன் ஒரு நாள் வள்ளியிடம் நமக்கு குழந்தைகள் வேண்டாம் என்று பேசி இருந்தான். அவன் பேச்சில் அதிர்ந்து அவனை பார்த்தவள், அன்று முதல் அவனிடம் சற்று விலகியே இருந்தாள், முதலில் கோவத்தில் இருக்கிறாள் சரியாகி விடுவாள் என்று நினைத்தவன், நாளாக நாளாக அவள் ஒதுக்கும் தெடர்வதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

இப்போது தாய்யும் இப்படி சொல்லவும், தான் அவள் வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டோம் என்று நினைத்தான்.

கலா என்று அவன் கையை பற்றி உலுக்கியவர், அவனை நினைவுக்கு கொண்டுவந்தார். வள்ளிகிட்ட ஏன் அப்படி பேசின கலா? 

என்றார் அவன் முகம் பார்த்து………..

அதில் திடுக்கிட்டவன்………… எப்படி மா………

பின் தலை குனிந்தவன், மா என்றான் கண்ணீர் நிரம்பிய விழியுடன். அதன் அர்த்தம் புரிந்தவர்.

அவன் கையை ஆதரவாக பற்றி, இங்க பார் கலா, உனக்கு நாங்க கல்யாணம் பன்ன நினைத்தபோது, ஒன்னுக்கு இரண்டு முறை டாக்டர்கிட்ட உன் நிலை பத்தி கேட்டோம். அவர் எந்த பிரச்சனையும் வராது அப்படினு உறுதி கொடுத்த பிறகு தான் உன் கல்யாண பேச்சை ஆரம்பித்தோம்.

அப்படி ஏதாவது அவர் வாய்ப்பு இருக்குனு சொல்லி இருந்தா கண்டிப்பா நான் உன் கல்யாணத்தை பத்தி பேசி இருக்கவே மாட்டேன். நான் பட்ட கஷ்டம் இன்னோறு பெண்ணுக்கு கொடுத்து இருக்க மாட்டேன் டா…………….

கடைசி வரை உன்ன என் புள்ளையாவே வைத்து பார்த்து இருப்பேன். என்றார் அவன் கையை பற்றியபடி. அதில் அவன் மனதில் இத்தனை நாள் அரித்துக்கொண்டு இருந்த பாரம் எல்லாம் கரைந்துவிட. லேசாக உணர்ந்தான்.

அவன் முகம் பார்த்து நீ அப்பாவ ஆக போற கலா என்றார். அதை கேட்டதும் அவன் முகம் மகிழ்ச்சியை தத்துஎடுக்க, நிஜமா மா? என்றான்…..

அவன் அம்மா ஆம் என்று தலையாட்ட…….

இத்தனை நாள் வள்ளி தன்னிடம் தள்ளி இருந்து இதற்காக தான் என்று புரிந்துக்கொண்டவன். உடனே அவளை கான சென்றான். மகன் மருமகள் வாழ்வு சீராகிவிடும் என்று நினைத்தவர்.

அன்று இரவே அனைவருக்கும் வள்ளி தாய்மை அடைந்து இருப்பதை கூற. அந்த குடும்பத்தில் இரட்டை மகிழ்ச்சி.

அடுத்து அவர் கூறிய விஷயத்தில் கலா மீண்டும் முருங்கை மரம் ஏறினாள்.

ஆம் இரு கர்பினிகள் ஒரே விட்டில் இருக்க கூடாது என்றும், அதனால் கலா அவள் கணவன் மற்றும் சுந்தரவடிவுடன் தோப்பு வீட்டில் இருக்கட்டும் என்றும் கூறினார்.

ஏன் நான் போக வேண்டும், அவளை போக சொல்லுங்கள் என்றாள் கலா. அவள் இந்த வீட்டு மருமகள், அது இந்த வீட்டு வாரிசு அவள் இங்கு தான் இருப்பாள்.

உன்னை திருமணம் முடித்து கொடுத்தாயிற்று, நீ உன் புகுந்த வீட்டின் தான் இருக்க வேண்டும். ஆனால் சூழ்நிலை அப்படி இல்லை. இதில் அவளை இந்த வீட்டை விட்டு அனுப்ப முடியாது என்றுவிட்டார் முடிவாக.

அது கலாவை இன்னும் சீற்றம் கொள்ள வைக்க போதுமானதாக இருந்து.

அவர் அப்படி சென்னதற்கு இரு காரணங்கள் இருந்தன, ஓன்று மருத்துவர் அவள் மிகவும் பலவினமாக இருப்பதாக கூறியது. மற்றோன்று போன முறை போல் இந்த முறையும் மகள் ஏதாவது கூறிவிடக்கூடாது என்ற பயம் அவருக்கு. இப்போது இருக்கும் நிலையில் அவளை கண்டிக்கவும் முடியாது, என்பதால் அவர் அப்படி கூற அதுவே பிரச்சனையாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

இதில் சுந்திரவடிவு தான் மகளின் உதவிக்கு வந்தார், அவள் சொல்லுறது சரி தான், உனக்கும் கொஞ்சநாள் வெளியில் இருந்தாபல இருக்கும் என்று ஏதோ சொல்லி அவளை சரி கட்டி அழைத்து சென்றார்.

அவர்கள் தோட்விட்டிற்கு குடிபெயர்ந்த பின் வள்ளியும், கலாதரனும்  அந்த வீட்டில் சற்று இலகுவாகவே நடமாடினார்கள்.

இதற்கு இடையில் கலா அந்த வீட்டில் இல்லை என்றாலும் நினைவு முழுவதும் அங்கு தான் இருந்து. தோட்டவீடு என்னதான் வசதியாக இருந்தாலும், அவள் எல்லாவற்றிக்கும் குறை கூறிக்கொண்டே இருந்தாள்.

தனக்கு பிறக்க போகும் வாரிசு, அதுவும் அந்த வீட்டின் முதல் வாரிசு அந்த வீட்டில் தான் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாக பதிந்து இருந்து.  9 மாதம் தொடங்க சில நாட்கள் இருந்த போதே தனக்கு வளைகாப்பு செய்து அங்க அழைத்து செல்ல சொல்லி சண்முகத்தையும், அவள் தந்தையும் நச்சரித்தாள்.

இருவருக்கும் ஒன்றாக வளைகாப்பு செயமுடியாது என்பதால் அவளுக்கு முதலில் செய்து விட்டு பிறகு வள்ளிக்கு செய்யலாம் என்று முடிவு செய்தனர்.

அதன் படி அடுத்த 10 நாளில் எல்லா ஏற்பாடுகளும் செய்ப்பட, வள்ளியை அங்கு அனுப்பிவிட்டு, கலாவை இங்கு அழைத்து வந்தனர்.

வள்ளிக்கும் 9ஆம் மாதம் துவங்கி இருந்தால் அவளுடன் கலாதரனும் அங்கேயே தங்கி கொண்டான்.

இங்கு வளைகாப்பு சிறப்பாக முடிவுற்றது, அடுத்த நாள் இரவு கலாவிற்க்கு வலிவர அவளை மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர்.

அதே நேரத்தில் எதிர்பாரத வீதமாக இரவு கழிவறைக்கு வந்த வள்ளி அங்கு கால் வழுக்கி விழுந்துவிட, அவள் சத்தம் கேட்டு வந்த கலாதரன், அவளை இருந்த நிலை பார்த்து கலங்கி போனான்.

உடனே அங்கு காவலுக்கு இருந்த வேலையாள் மூலம் மருத்துவமனைக்கு விரைந்தனந்தனர்.

இங்கு கலாவை பரிசேதித்த மருத்துவர் பிரசவ வலி தான் என்று சொல்லி அட்மிட் செய்துவிட. அடுத்த அறை மணி நேரத்தில் வள்ளியும் அங்கேயே அனுமதிக்கபட்டாள். 

வேளையாள் மூலம் செய்தி ரங்கநாதனுக்கு தெரிவிக்கப்பட அவரும் மருத்துவமனைக்கு விரைந்தார்.

வள்ளியை பரிசேதித்த மருத்துவர், விழுந்தில் பனிக்குடம் உடைந்து இருப்பாதல் அவளையும் பிரசவ அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.

வீட்டில் எல்லோரும் அங்க இருக்க, எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்ற எதிர்பார்த்து இருந்தனர்.

சுந்தரவடிவு இரவில் வர வேண்டாம் என்று வீட்டில் விட்டு வந்து இருந்தார்கள். ரங்கநாயகியும், ரங்கராஜனும் அங்கு இருக்கும் விருந்தினர் அறையில் இருக்க,

அவரவர் கணவன் மார்கள் மட்டும் அங்கு இருந்தனர். அதில் கலாதரன் எங்கும் அசையாமல் அங்கேயே இருக்க. சண்முகம் உள்ளே போவதும் வருவதும்மாக இருந்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் அந்த வீட்டின் வாரிசுகளின் சத்தம் ஒரே நேரத்தில் கேட்க, அதுலஅங்கு அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து.

கலாவிற்க்கு ஆண் குழந்தையும், வள்ளிக்கு பெண் குழ்ந்தையும் பிறந்து இருப்பதாக செவிலி வந்து தெரிவித்துவிட்டு இருகுழந்தைகளையும் காட்டி விட்டு செல்ல.

குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பி இருந்தனர்.

21 நாட்கள் கழித்து குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. கலாதரன் தன் அன்னையின் பெயரை குழைந்தைக்கு வைக்க. கலாவும் தன் தந்தையின் பெயரையே மகனுக்கு வைத்தாள்.

அந்த வீட்டில் இப்போது குட்டி ரங்கநாயகியும், ரங்கராஐனும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர்.

எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டு இருக்க.

அடுத்த பிரச்சனை ஆரம்பமானது. அதை ஆரம்பித்து கலாதான், அது அந்த வீட்டில் ஒரு உயிர் இழப்பை ஏற்படுத்திவிட்டுதான் ஒய்ந்து…………

 

 

நிறம் மாறு(ம்)மோ

Advertisement