Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.

நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி,  உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்வேன். 

நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 06

திருமனம் முடிந்த நிலையில், இரண்டு ஜோடிகளும் தங்கள் மகிழ்ச்சியாக வாழ்வை வாழ்ந்து வந்தனர்.

கலா அடிக்கடி வீட்டில் உள்ளோர் இடம் முகம் திருப்பினாலும், வீட்டினர் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. முத்தவர்கள் இருவரும் எல்லா சொல்வங்களும் இருந்தும், இத்தனை நாள் மகனுக்கு இப்படி இருக்கிறதே என்ற கவலையில் இருந்தவர்கள், அவனுக்கு ஒர் திருமன வாழ்வு அமைந்துவிடாதா? என்ற கவலையில் இருந்தவர்களுக்கு, இப்போது இருக்கும் நிலை பொரும் மகிழ்ச்சியே, அதனால் அவர்கள் கலாவின் இந்த கிறுக்கு தனங்களை பெருத்து போய்யினர்.

அதுவும் இல்லாமல், திருமணம் முடிந்த பிறகு சண்முகம் மற்றும் ரங்கநாயகியின் உறவில் கொஞ்சம் சுமுகதன்மை வந்து இருந்து. ஒர் நாள் கலா அவனிடம் முதல் இரவில் சொன்னதை எல்லாம் சொல்லி இருக்க, அதன் பின் கலாவின் கலாட்டகள் சிறுபிள்ளைகளின் சன்டையாகவே பெற்றோருக்கு இருந்து.

இப்படியே நாட்கள் நகர, அந்த அதிகாலை வேலையில் வள்ளி எழுந்தும் அசதியாக உணர்ந்தாள், பக்கத்தில் கலாதரன் படுத்து இருக்க, அவரையே சிறிது நேரம் பார்த்தவாரு, எழுந்திருக்க மனம்மில்லாமல் அமர்ந்து இருந்தார்.

அவள் மனம் தன் திருமனவாழ்க்கை பற்றி அசைபோட்ட படி இருந்து, என்ன தான் அவள் தம்பி தங்கையை பார்த்துக்கொண்டாலும், அவளும் அந்த வயதிற்கு உரிய சில எதிர்பார்ப்புகள் இருக்க தான் செய்தது, எல்லாவற்றையும் பிறக்கு செய்பவள், சில நேரம் நமக்கு இதை எல்லாம் யார் செய்வார்கள் என்று ஏங்கியது உண்டு, அந்த மனவருத்தம் இப்போது இல்லை, அந்த அளவிற்க்கு கலாதரன் அவளை தாங்கினான்.

ஒர் அம்மா குழந்தையை பார்த்துக்கொள்ளவது போல், ஒர் விளையாடும் குழந்தை தன் பிடித்த பொம்மையை பார்த்துக்கொள்ளவது போல், எப்போதும் அவளை சுற்றியே வந்தான். இதை எல்லாம் யோசித்துக்கொண்டு  இருந்தவள், சட்டென்று தேன்ற திரும்பி காலண்டரில் தேதியை பார்த்தவள், திருமணம் முடிந்து அந்த மாதத்தில் வீட்டுக்கு விலக்கானவள் தான், அதன் பின் ஆகவில்லை,  எத்தனை நாட்கள் என்று கணக்கு பார்த்தவள் 42 நாட்கள் என்று வந்து. மனதில் மகிழ்ச்சி அலை அடிக்க ஆரம்பித்து. உடலும், மனமும் சொல்லமுடியாத ஒரு உணர்வில் இருந்து. 

அப்படியா, நான் அம்மாவா, என்னால் …………. எனக்கு ஒர் குட்டி பாப்பாவா, இந்த வயிற்றில் ஒர் குட்டி உயிர் இருக்கிறதா, அவளால் அதை வாய்விட்டு சொல்லமுடியவில்லை. நெஞ்செல்லாம் சந்தோஷத்தில் அடைத்து. சட்டென்று ஒர் வேலை அப்படி இல்லாமல் இருந்தாள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் அவள் மனம் அது உண்மை என்றே நம்பியது.

அப்படியே அமர்ந்து இருந்தவளை பார்த்தபடி கண்விழித்த கலாதரன் என்ன வள்ளி என்றான், அவன் கேட்டும் அவளிடம் இருந்து பதில் இல்லை, அவள் கவனம் இங்கு இல்லை என்று தெரிந்தவன், அவள் தோள்பற்றி உலுக்கினான். 

ஆங்….  என்னங்க என்றாள், என்னவா?

எவ்வளவு நேரம் கூப்பிட்டு இருக்கேன், என்றான்

அவளுக்கு அவனிடம் விஷயத்தை சொல்லுவோம்மா? வேண்டாமா என்று இருந்து.

முதில் இந்த விஷயத்தை கலாதரனிடம் சொல்லவே பிரியபட்டாள், ஆனால் ஒரு வேளை அப்படி ஏதும் இல்லை என்றால் அவன் அதை எப்படி எடுத்துக்கொள்ளவானோ………. என்று இருந்து. எனவே அவன் முகம் பார்த்து இருந்தாள்.

என்ன வள்ளி? 

அது அது வந்து நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லுவேன், ஆனா அது அப்படி இல்லைனா நீங்க வருத்தபட கூடாது………….

என்றாள் அவன் முகம் பார்த்து….

என்ன சொல்லுவே……………. என்ன இருக்காது………… என்றான் அவள் முகம் பார்த்து.

அது வந்து ……… அது எனக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும், உங்களுக்கு? என்றாள்.

இது என்ன கேள்வி அப்பாக்களுக்கு எப்போதும் பெண் குழந்தை தான்…………. என்று சொல்லவந்தவன்…. சட்டென்று நிறுத்தி அவள் முகம் பார்த்து அப்படியா வள்ளி என்றான் முகத்தில் மலர்ச்சியுடன்.

அவள் சரியா தெரியலை ஆனா அப்படி இருக்கலாம், அத்தைகிட்ட தான் கேட்கனும், ஆனா அத்தை ஆமா சொல்லிட்டா…………………….. எனக்கு உங்கிட்ட தான் முதல சொல்லனும், அதான்……….. என்றாள் இழுவையுடன்.

அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டவன், அவள் முகம் உற்று பார்த்தான், பின் அவளிடம் கண்டிப்பா குழந்தை தான் என்றான் அவள் முகம் பார்த்து.

அதில் மலர்ந்தவள் எப்படி? என்றாள்

அது நான் இந்த வீட்டில் இருந்த நாட்களைவிட ஆஸ்பிட்டல் இருந்த நாள் தான் அதிகம், அங்க சிலசமயம் பொழுது போகாம  அங்க வேலை செய்றவங்க கூட பேசுவேன், பல சமயம் அவங்க பேசுறதை கேட்டு இருக்கேன். அதை எல்லாம் வைச்சு தான் சொல்றேன். உன் முகத்தை பார்த்தா அப்படி தான் இருக்கு. அதை விட இது குழந்தை தான் என மனசு சொல்லுது என்றான் அவளை காதலாக பார்த்தபடி.

அதில் சிவந்தவள், தன் முகத்தை மறைக்க குளியல் அறைக்குள் நுழைந்து இருந்தாள், தன் காலை கடன்களை முடித்தவள், நேரக சென்றது பூஜை அறைக்குதான். பின் தன் அத்தையை தேடி சென்றவள், அவரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி அங்கேயே நின்று இருந்தாள்.

எப்போதும் காலையில் வந்தால் தனக்கும், மகனுக்கும் தேவையானதை எடுத்துக்கொண்டு போகும் மருமகள் இன்று இங்கேயே தயங்கி நிற்பதை பார்த்தவள் என்ன வள்ளி என்றார்.

அது வந்து அத்தை………….. என்றவள் மீண்டும் அமைதியாகிவிட, என்ன வள்ளி?

இன்னிக்கு உங்களுக்கு ஏதும் வேலை இல்லைனா, நாம இரண்டு பேரும்  ஆஸ்பிட்டல் போய்ட்டு வரலாமா? என்றாள் அவர் முகம் பார்த்து தயக்கமாய்.

ஆஸ்பிட்டல் என்று வள்ளி கூறியதில் மற்றதை மறந்தவர், ஏன் வள்ளி கலாக்கு மறுபடியும் எதாவது என்றார் கலக்கமாய்?

இல்லை அத்தை இது எனக்கு தான்……………………

உனக்கு………………………. என்று கூறவந்தவர்.

என் வள்ளி……………………. என்றவர் மனதில் தேன்றிய எண்ணம் மகிழ்ச்சியை கொடுக்க அதை உறுதிபடுத்திக்கொள்ள, நிஜமா வள்ளி?

தெரியல அத்த………….. அதான் போய் பார்த்துட்டு வரலாம் என்றாள் கீழே குனிந்தவாறு.

வீட்டுக்கு விலக்காகி எத்தனநான் ஆச்சு, 

42 நாள் என்றாள்……….

அருகே வந்து அவள் கண்ணம் வழித்து நெட்டி முறித்தவர், கண்டிப்பா நல்ல விஷயம்மா தான் இருக்கும்….

இரு மாமாகிட்ட சொல்லிட்டு வரறேன் என்றவர் கையை பிடித்தவள், இல்லை அத்தை, ஆஸ்பிட்டல் போய் வந்து எல்லார்கிட்டயும் சொல்லாம் என்றாள்.

அவள் கூறுவதும் சரிதான் என்று நினைத்தவர் சரி என்று சீக்கரம் வேலைகளை முடிக்க கிளம்பினார்.

இருவரும், காலை உணவு முடிந்து மருத்துவமனை கிளம்பி இருந்தனர். அது அவர்களின் மருத்துவமனை என்பதால் இவர்கள் போன உடன் விஷயத்தை கேட்டு அதற்கு உண்டான பரிசேதனைகளை செய்த மருத்தவர், கர்பத்தை உறுதி செய்தார். 42 நாட்கள் என்பதால் இன்னும் 20 நாட்கள் கடந்து மறுபடியும் வந்து ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்றும் கூறினார்.

இருவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அங்கு இருந்தே தன் கனவருக்கு அழைத்த ரங்கநாயகி, விஷயத்தை சொல்ல, நேர மருத்துவமனை வந்த ரங்கராஜன் இருவரைரும் அழைத்துக்கொண்டு விட்டிக்கு வந்தார்.

காலையில் தனிதனியாக வெளியில் போன இருவரும் ஒன்றாக வர சுந்திரவடிவும், கலாவும் என்ன வென்று பார்த்து இருக்க. அவர்கள் வந்த விதமும், அவர்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் சுந்திரவடிவுக்கு செய்தியை உணர்த்திவிட, என்ன நாயகி எதுவும் சொல்லாம நீங்கமட்டும் போய்டு வந்தா என்ன அர்த்தம். அப்புறம் பெரியவங்க வீட்டில் எதுக்கு நாங்க இருக்கோம் என்றார் கோவமாக.

இல்ல மா….. காலையில் வள்ளி சொன்னதும், உறுதிபடுத்திட்டு எல்லோருக்கும் சொல்லாம் நினைத்தேன் அதான் என்றவர், நம்ம டாக்டர் அம்மா நல்ல செய்தி சென்னதும் இங்க தான் மா வரோம் என்றார் மகிழ்வாக.

சரி சரி இனிமே கவனமா இருந்துக்கோ, என்றவர் சென்றுவிட, அவருக்கும் தன் பேரனுக்கு வாரிசு வரபோகும் சந்தோஷம். அது வரை அங்கு நடப்பவற்றை பார்த்து இருந்த கலாராணிக்கு புரியாமல், என்ன மா ஆச்சு, என்ன நல்லவிஷயம் என்றாள் அம்மாவை கேள்வியாக?

கலா உன் அண்ணி முழுகாம இருக்கா, இப்படியே என் புள்ள வாழ்க்கை முடிஞ்சுபோய்டும் நினைச்சு கவல படாத நாள் இல்ல அந்த கடவுள் வள்ளி மூலமாக இந்த குடும்பத்து ஒரு விடிவு கொடுத்துடான், இந்த குடும்பத்தோட மொத வாரிசு வரபோகுது, என்று கூறியபடி பூஜை அறை நேக்கி போனார், ரங்கராஜனும் தன் மகனை கான சென்றுவிட, இவர்கள் இருந்த மகிழ்ச்சியான மனநிலையில் கலாவின் முக மாற்றத்தை கவணிக்க தவறினார். 

வள்ளியிடம் இத்தனை நாள் அடங்கி இருந்த குணம் மீண்டும் தலை தூக்கியது, தனக்கும், அவளுக்கும் ஒரே நாளில் தான் திருமணம் நடந்து, ஆனால் அவளுக்கு மட்டும்…………………… 

தனக்கு ஏன் இல்லை என்ற எண்ணம் தோன்ற………….

இந்த வீட்டின் முதல் வாரிசு என்றதில் வந்து நின்றது. அவள் இந்த வீட்டில் முதல் வாரிசை பெற்று எடுத்தால் மீண்டும் இந்த வீட்டில் தான் இரண்டாம் பச்சமாக நடத்தபடுவோம்……………

என்ற எண்ணம் அவளை வதைத்து.

அந்த எண்ணத்தை அவளுள் இன்னும் ஆழமாக பதிய வைத்து, அடுத்து அடுத்து அந்து வீட்டில் நடந்த நிகழ்வுகள். ஆம் வள்ளியை குடும்பமோ தாங்கியகி.

எப்போதும் அறைவிட்டு வெளிவராத கலாதரன் கூட, இப்போது எல்லாம் மனைவிக்காக அவள் இருக்கும் இடத்தில் இருந்தான், உணவு முதல் எல்லாம் அவளுக்கு பார்த்து பார்த்து செய்தனர். இதை எல்லாம் பார்த்த கலாவினால் தான் தாங்க முடியவில்லை.

அன்று இரவே அவள் சண்முகத்திடம் புலம்பி தீர்த்து இருந்தாள். தனக்கு மட்டும் ஏன் ஏதும் நடக்கவில்லை என்று அடுத்த இரண்டு நாட்களில் அவள் புலம்பியதை பார்த்து பயந்து போன சண்முகம், அவளை சமதானபடுத்த படாதபாடு பட்டான். அந்த ஊரில் இல்லாமல் வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து வந்து இருந்தான்.

அந்த மருத்துவர் அவர்களை பரிசேதித்துவிட்டு,  எல்லாம் சரியாக தான் இருக்கிறது, உங்கள் இருவருக்கும் எந்த குறையும் இல்லை  என்று சொன்னபோது தான் அவளின் புலம்பல்கள் குறைந்து. 

அதற்கு பிறகு வீட்டினர் எல்லோரும் வள்ளி பின்னால் சுற்றிக்கொண்டு இருக்க. இரு வாரங்கள் கடந்த நிலையில், அடுத்த வாரம் ஸ்கேன் செய்ய மருத்தவமனை செல்வது பற்றி கூடத்தில் அமர்ந்து எல்லோரும் பேசிக்கொண்டு இருக்க, அதை கேட்டு கடுப்பான கால என் மா ஊர்ல யாரும் குழந்தை பெத்துக்கலயா? என்னமோ உன் மகன் மட்டும் தான் அப்பா ஆக போற மாதிரி உன்ன கைல பிடிக்க முடியல. 

என்றாள் கடுப்புடன்.

என்னடி இப்படி சொல்லிட்ட, இந்த வீட்டோட முத்த வாரிசு, இந்த வீட்டையும், சொத்தையும் ஆள போறவன், என் மகன் தான் எல்லாம் இருந்தும் ஏதும் அனுபவிக்கல, அவன் பிள்ளையாவது, இது எல்லாத்தையும் ஆளனும் என்றார் கண்ணில் நீர் கசிய.

வாரிசு என்ற சொல்லில் ரவுத்திரமான கலா, பார்த்து மா இந்த குழந்தையும் உன் மகன் மாதிரி பெறந்துறப்போகுது, என்றாள் வெறுப்புடன். 

என்னடி பேசுற என்று அவளை அறை கை ஒங்கியவர். ச்சீ…………. என்று சொன்னவர், அங்கு இருந்து தன் அறைக்கு சென்றுவிட்டார். அவள் சொன்னது அவளுக்கே தவறு என்று தெரியும், ஆனாலும் அம்மா தன்னை அடிக்க கை ஒங்கியதை நினைத்து, இவர்களுக்கு தான் எப்போதும் இரண்டாம் பட்சம் தான் என்று நினைத்தவள் மேலும் நாளை என் பிள்ளைக்கும் என் நிலை தான் வருமே?! என்று எண்ணியவள் தான் பேசியது ஒன்றும் தவறு இல்லை நான் இப்படியும் நடக்காலம் என்று தான் சென்னேன் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டவள்  தன் அறைக்கு சென்றாள். அன்று இரவே அதை சண்முகத்திடமும் சொல்ல மறக்கவில்லை அவள்.

ஆனால் இந்த உரையாடல் அப்போது அந்த பக்கம் வந்த கலாதரன் காதிலும் விழுந்து இருந்து. அது அவனுள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், அதன் பொருட்டு அவன் எடுக்கும் முடிவுகள், அவன் மனைவியை எந்த அளவு பாதிக்கும் என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை. தன் தங்கையே இப்படி சொல்ல ஒரு வேளை தன் குழந்தை தன்னை போல் பிறந்துவிட்டாள், தான் அனுபவித்த துன்பம் எல்லாம் அதுவும் அனுபவிக்க வேண்டுமே? என்ற என்னத்தில் அவன் மனம் தவித்து………

இது எல்லாம் தன்னோடு மட்டும் போகட்டும் தன் குழந்தைக்கு வேண்டாம் என்று அவன் மனம் கடவுளிடம் வேண்டிக்கொண்டது.

கலா அப்படி பேசி சென்றது வள்ளியின் மனதையும் பெரிதும் பாதித்து. அவள் கலாதரனை முழு மனதாக ஏற்றுக்கொண்டாள், அவனை காதலிக்கிறாள். ஆனால் தன் குழந்தை?????

திருமனம் முடிந்து வந்த இத்தனை நாட்களில் அவள் கலாதரனின் துன்பம் அறிவாள், அந்த வீட்டில் அவன் தாய், தந்தை தவிர அவன் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள் இருக்கிறார்களா? என்றாள் அது கேள்வி குறி தான். அது தவிர அவன் சிறு வயது கஷ்டங்கள் அவன் சொல்லக்கேட்டு மனம் வருந்தி இருக்கிறாள். எல்லாவற்றையும் விட விரும்பி மனந்த தங்கள் வாழ்க்கை தெடங்கவே அவன் எவ்வளவு தயங்கினான் என்று அவள் அறிவாள்.

சொந்த தங்கையே இப்படி பேசினால்…………………..

பிறர் ……………….. அதை அவளால் நினைக்கவே முடியவில்லை…….

அன்று இரவு கலாதரன், வள்ளி, ரங்கநாயகி மூவரும் தங்கள் உறக்கம் தொலைத்தனர். மறுநாள் காலை யாருக்கு நல்லதாக விடிந்தோ இல்லையோ, வள்ளிக்கு விடியவில்லை.

காலையில் எழுந்தும் தன் அத்தையிடம் வந்தவள், நாம இன்னிக்கே ஆஸ்பிட்டல் போய்   பார்த்துட்டு வரலாம் அத்தை என்றாள்.

அவருக்கும் அவள் சொல்வது சரி எனபட சரிமா என்றார். அன்று காலை வேளைகள் முடிந்தும் இருவரும் கிளம்பலாம் என்று முடிவு செய்தனர். 

கலா மற்றும் சண்முகம் இருவரும் அப்போதுதான் கோவிலுக்கு சென்று இருக்க, சுந்திரவடிவு வயலுக்கு கிளம்பி இருந்தார். ரங்கராஜனும் கிளம்பிவிட, மாடிக்கு கிளம்ப சென்றாள் வள்ளி, 

 

அதற்குள் அவர்வீட்டு வேளையாள், அவர்கள் வீட்டு மாடு கன்று ஈன்று இருப்பதாக சொல்ல, அதை பார்க்க அவர் கொல்லைக்கு சென்று விட்டார்.

அவர் அரை மணி நேரம் கடந்து வந்து போது பார்த்து மாடி படி அருகில் இரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்த வள்ளியை தான்………….

அதை பார்த்தும் பதறியவர், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அவள் அருகில் அமர்ந்து அவளை எழுப்ப நினைத்தார்.

இதை எல்லாம் மாடியில் இருந்து வெறித்துக்கொண்டு இருந்தான் கலாதரனை யாரும் கவணிக்கவில்லை?!?!?!

நிறம் மாறு(ம்)மோ

Advertisement