Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.

நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, அதே சமயம் உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்வேன். 

நன்றி

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 05

அந்த வீட்டில் கல்யாண வேலைகள் முழு வீச்சாக நடந்துக்கொண்டு இருந்து. சும்மாவா இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில், அதுவும் பெரிய வீட்டு திருமணம் என்றால் கேட்கவும் வேண்டுமா?

அந்த வீட்டில் தான் திருமணம் என்பதால், விருந்தினர்கள் தங்குவதற்க்கு, உணவு தயாரிப்பு, என்று வீட்டில் எப்போதும் வேலை இருந்துக்கொண்டே இருந்து.

இத்தனை நாட்களில் தன் அறையை வீட்டு வெளிவராத கலாதாரன் கூட இப்போது எல்லாம் வீட்டுக்குள் நடமாட ஆரம்பித்து இருந்தான். நாளுக்கு நாள் அவனுக்கும் வள்ளிக்கும் இருக்கும் பினைப்பு அதிகமாகியது.

சுந்தரவடிவு தன் ஒரே மகனின் திருமணம் என்பதில் எல்லாவற்றையும் மறந்து ஒடிக்கொண்டு இருந்தார். சண்முகம் கூட கல்யாண கலையில் இருந்தான்.

அவனுக்கும், கலாவிற்க்கும் விருப்பத்தின் பேரில் இந்த திருமணம் நடைபெறவில்லை தான், ஆனால் தான் இத்தனை நாள், இந்த வீட்டில் உழைத்த உழைப்புக்கு ஒர் அங்கீகாரம் கிடைப்பதாகவே நினைத்தான்.

இதில் எதிலும் ஒன்ற முடியாமல் தவித்த ஒரே ஜீவன் கலா மட்டும் தான். அவளால் இன்னும் வள்ளியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வள்ளியை தனக்கு சம்மாக நடத்துவதும் பிடிக்கவில்லை.

அதற்கு காரணமும் இருந்து, என்று ரங்கராஜன் திருமண பேச்சை எடுத்தாரோ அன்று கலா பேசிய பேச்சுகள் அவருக்கு மிகவும் வருத்ததை கொடுத்து, தான் மகளை கவனிக்க தவறிவிட்டோம்மோ? என்று வருந்தினார்.

இப்படியே இருந்தால் தன் மகன் முற்றிலும் இந்த வீட்டில் ஒதுக்கி விடுவார்களோ? என்று நினைத்தவர், அதன் பின் மகனை எல்லாவற்றிலும் ஈடுபட வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் கலாதரனுக்கு அது உடனே வரவில்லை. 

அவர் எல்லோரிடம் இருந்தும் ஒதுங்கி இருக்கவே விரும்பினான். தான் யாருக்கும் காட்சி பொருள் ஆவதை கலாதரன் விரும்பவில்லை. அதனால் ரங்கராஜன் வள்ளியை மகன் இடத்தில் நிறுத்த அது இன்னும் கலாராணிக்கு வெறுப்பை உறுவாக்கியது.

விடிந்தால் திருமனம் என்னும் நிலையில், தன்னால் வள்ளி விஷயத்தில் ஒன்னும் செய்ய முடியவில்லை என்று கடுமையான மன உளைச்சலில் இருந்தாள் கலா, ஆரம்பத்தில் வள்ளியின் வீட்டினரை இழிவாக பேசுவது, மரியாதை குறைவாக நடத்துவது  போன்ற செயல்களில் ஈடுபட்டவளை, கண்டுக்கொண்ட அவள் தந்தை நேரடியாகவே கலாவிடம் இந்த திருமணத்தில் ஏதும் குழப்பம் செய்தால், திருமனம் முடிந்த பின் கலாவை தனியாக அனுப்பிவிடுவதாக கூறியவர், அதற்கு பின் இது உன் பிறந்த வீடு மட்டும் தான் என்று கூறினார், எதற்காக இந்த திருமணத்திற்க்கு சம்மதித்தாலே அதுவே இல்லை என்றால், தான் இந்த வீட்டை விட்டு போவதா என்று நனைத்தவள். அதன் பின் ஏதும் செய்வில்லை. திருமணம் முடியட்டும் பார்த்துக்கொள்ளாம் என்று நினைத்தாள்.

அழகான விடியல் இரு ஜோடிகளும் தங்கள் இனையின் அருகில் அந்த நாளுக்கே உரிய எதிர்பார்ப்புடன் அமர்ந்து இருக்க அவர்கள் திருமண நிகழ்வு நடந்து முடிந்து இருந்து.

என்ன தான் மாமா வீட்டின் அங்கீகாரத்துகாக கலாவை திருமணம் முடித்து இருந்தாலும். இந்த இடைபட்ட நாட்களில் கலாவின் மேல் சண்முகத்துக்கு ஒரு ஈர்ப்பு வந்து இருந்து. அவள் ஒரு போதும் சண்முகத்தை மரியாதை குறைவாகவோ, இல்லை நீ எனக்கு இனை இல்லை என்பது போல் நடந்து கொண்டது இல்லை. 

திருமணம் முடிவாகிய பின் அவள் முடிவேடுக்கும் முன் சண்முகத்தின் கருத்தை கேட்கவும் தவறியது இல்லை. இது எல்லாம் சண்முகத்துக்கு கலா மேல் காதல் மலர காரணமாக அமைந்து, இதுவரை யாரும் தனக்கு தராத முக்கியத்துவம், அங்கீகாரம் கலா கொடுக்கவும் கலா மேல் அவருக்கும் அன்பு பெருகிற்று, அவளை மனப்பூர்வமாக தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டார்.

கலாதரன்னோ எல்லை இல்லாத மகிழ்ச்சியில் இருந்தான். இதுவரை எல்லாமே அவனுக்கு அந்த அறைக்குள் தான், தன் அம்மா அப்பாவை தாண்டி தன்னை ஏற்றுக்கொண்ட இன்னும் ஒரு ஜீவன் என்று வள்ளியின் மேல் உயிரையே வைத்து இருந்தான். வள்ளியும் அப்படி தான் கலாதரன் மனதால் எப்படி என்று உணர்ந்தவள், அவனை உயிருக்கு இனையாக நேசித்தாள்.

திருமண சடங்குகள் முடிந்து, அவர் அவர் துணையுடன் அவர்களுக்கான தனிமையான நேரங்கள் வந்துவிட்டன.

கலாதரனுக்கு இப்போது மனைவி எப்படி தன்னிடம் நடந்துகெகொள்வாள் என்ற பயம் வந்து இருந்து. ஒரு சிறிய முக சுழிப்பும் அவரை மொத்தமாக சாய்த்துவிட்டும். இதுவரை தன்னை மனதால் தீண்டியவள், தன் அகம் ஏற்றுக்கொள்வாளா?

தான் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், தன்னால் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும்மா என்று பல குழப்பங்கள் அவனுகுள், அவள் அறைக்கு வந்து முதல் அவளை தான் பார்த்து இருந்தான், அவள் முகத்தில் என்ன தெரிகிறது, அவள் என்ன நினைக்கிறாள் என்று அறிய முயன்றான்.

ஆனால் வள்ளிக்கு அப்படி ஏதும் இல்லை போலும், இயல்பாக அறைக்கு வந்தவள், பால் சொம்பை வைத்தாள் அவன் அருகில் வந்து  அமர்ந்தாள், அதிலே பாதி தெளிந்து இருந்தான், இருந்தும் தான் முதலில் ஆரம்பித்து அது அவளுக்கு பிடிக்காவிட்டால் என்று தயங்கியவன் ஏதும் பேசாமல் என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தான்.

சிறிது நேரம் பெறுத்து பார்த்த வள்ளி, பால் குடிக்கிறிங்களா? என்றாள் அவன் முகம் பார்த்து, இல்லை… வேண்டாம்….. அப்புறம்…. என்று பதில் கூறியவன் மீண்டும் அமைதியாக இருக்க. அவன் முகத்தை பார்த்தே அவன் மனதில் என் ஒடும் என்று கணித்தவள்

இன்னும் அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள் அவன் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டாள், அதில் அதிர்ந்து அவளை பார்க்க, என்ன ஆச்சு நான் அதோ வள்ளி தான்.

இத்தனை நாள் எப்படி என்கூட இருந்திங்களோ அப்படியோ இப்பவும் இருக்கலாம், சொல்லபோனால் அதற்கும் மேல கூட என்று சொல்லி நிறுத்தியவள் அவன் முகம் பார்த்தாள்.

அதில் அதிர்ந்து அவள் முகம் பார்த்தவன், உன…. க்கு உனக்கு ……….. அது………. வந்து……………… அது என்னை பார்க்க……………. என்று ஏதோ கூற வந்தவன் நிறுத்த…………

அவன் கூற வருவதை புரிந்துக்கொண்டவள், மேலும் அவன் கைகள் இரண்டையும் இருக்கி பிடித்து அவனை பார்த்த வண்ணம் அமர்ந்துக்கொண்டாள்.

உனக்கு நான்………. உன்னால முடியுமா………… என்ன உன்னால சகிச்சுக்கமுடியுமா? என்று ஒருவாறாக மனதில் இருந்தை கேட்டு இருந்தான்.

அவனையே பார்த்து இருந்தவள் ஏன் சகீச்சுக்கனும்? என்றாள்.

அவளை புரியாமல் பார்த்தவன் அடுத்து பேசும் முன்………

இருங்க நான் பேசனும்……….

என்றவள், மாமா நம்ம கல்யாணம் பத்தி என்கிட்ட பேசும் போதே உங்களை பத்தி எல்லாத்தையும் சொன்னார். அதுவும் இல்லாம உங்களுக்கு பாக்கற டாக்டர்கிட்ட என்ன கூட்டிகிட்டு போனார்.

அவரு உங்களை பத்தி எல்லாம் சென்னார், எதனால இப்படி ஆச்சு, உங்களை எப்படி பாத்துக்கனும், எல்லாம் சென்னார். உங்க மனச பத்தியும் தான்.

இதுவரைக்கும் அம்மா அப்பாவை தாண்டி நீங்க யார் அன்பையும் அனுபவிக்கல, மனசால நீங்க எப்படினு சொன்னார். உங்களை என்னால முழுசா ஏத்துக்க முடிஞ்ச மட்டும் கல்யாணத்துக்கு சம்மதிக்க சொன்னார், அதையே தான் மாமாவும் சொன்னார்.

எல்லாத்தையும் யோசிச்சி பார்த்தேன், உங்க மனசவிட இந்த அழகு என் கண்ணுக்கு பெரிச தெரியல, உங்கள முழு மனசோட தான் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன். என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.

இதற்கு மேல் அவனுக்கு எதுவும் தேவைபடவில்லை. தன்னை தன் குறைகளோடு ஏற்றுக்கொள்ளும் துனை கிடைத்தால் அந்த வாழ்க்கை சொர்கம் என்பதை அன்று இரவு அவர்கள் உணர்ந்துக்கொண்டனர்.

வாழ்கையின் அடுத்த நிலை அவர்கள் வாழ ஆரம்பித்து இருந்தனர். ஒருவருக்கு காயபடுத்திக்கொள்ளாமல், இருவரும் மற்றவர் தேவை அறிந்து தங்கள் இல்லறத்தை தொடங்கி இருந்தனர்.

இங்கு கலாராணி அறைக்குள் வந்து முதல், சண்முகம் அவளை தான் பார்த்து இருந்தான். இந்த இடைபட்ட நாட்கிளில் அவனுக்கு அவள் மேல் ஏற்பட்ட காதல், அவளுக்கு இருக்குமா, இல்லை இந்த திருமணத்தை கடமையாக நினைப்பாளா என்று அவனுக்கு கலக்கம். 

எது எப்படி இருந்தாலும் கலாராணியை அவன் தன் ராணி என்று தான் நினைத்தான். எந்த இன்ப துன்பத்திலும் அவளுக்கு துனை நிற்பதாக மனதில் நினைத்துக்கொண்டான். 

அறைக்குள் வந்தவள் என்ன மனநிலையில் இருந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. தன் மாமாவை தான் திருமணம் செய்து இருக்கிறாள் என்றாலும், இதுவரை அந்த கோனத்தில் அவரிடம் பழகியது இல்லை. திருமணம் முடிவான நாட்களில் இருந்து தந்தையின் பாரமுகம் இவளை முற்றிலும் தளர்த்தி இருந்து. தனக்கு என்று யாரும் இல்லையோ என்ற எண்ணம் அவளை மிகவும் சோர்வுற செய்து இருந்து. இப்போது மாமா எப்படி நடத்துக்கொள்வார்.

தான் எடுத்த முடிவு சரியா என்று பல எண்ணங்கள் அவள் மனதில். அறைக்குள் வந்தவள் அங்கேயே நிற்க, என்ன கலா என்றான் சண்முகம் மென்னமையாக, அவளின் முகத்தை வைத்தே அவள் இப்போது மனதில் என்ன நினைக்கிறாள் என்று அவன் அறிந்து இருந்தாலும், அமைதியாக இருந்தான்.

அவனும் இதோ போல் தனக்கு யாரும் இல்லை என்று மனதால் வெறுமையை உணர்ந்து இருந்தவன் தானே, அக்காவின் திருமனத்தின் போது அவனுக்கு 7 வயது, அதன் பின் அம்மா எப்போதும் குடும்பநிலை, கடன் பற்றி மட்டுமே புலம்பிக்கொண்டு இருப்பார், அந்த வயதில் அவன் விளையாடவும், தன் மன எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளவும் யாரும் இல்லை, அதன் பின் அவன் அக்கா வீட்டினரால் நடத்தபட்ட விதம் என்று அவன் வட்டம் மிகவுத் சிறியது, அதில் அவன் முதலில் ஆசைபட்டது கலாவை தான் அதானல் கலாவை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்து.

எழுந்து சென்று கலாவை அழைத்து வந்தவன் தன் அருகில் அமர வைத்து அவள் முகம் பார்த்தான், அவள் ஏதும் பேசாமல் அமர்ந்து இருந்தாள். மெல்ல அவள் கால்களை தூக்கி தன் மடிமீது வைத்தவன் அவள் பாதங்களை பிடித்துவிட ஆரம்பித்தான்.

அதில் அதிர்ந்தவள் என்ன பன்றீங்க மாமா என்றவள் தன் கால்களை எடுத்துக்கொள்ள முயல, ஷஷ்ஷ்………… அப்படியே இரு, இன்னிக்கு முழுக்க நின்னுகிட்டே இருந்த உனக்கு இவ்வளவு நேரம் நின்னு பழக்கம் இல்லை கால் வலி எடுத்து இருக்கும். நான் பிடித்துவிடுகிறேன் என்றவன் அவள் கால்களை பிடித்துவிட.

அவனை ஆச்சிரியமாக பார்த்து இருந்தாள், இத்தனை நாள் தன்னிடம் நின்று கூட பேசாத மாமன், அவ்வளவு ஏன் திருமணம் நிச்சயம் செய்ய பின் கூட அவர்களிடம் அதற்கான பார்வை பறிமாற்றமோ, எதிர்பார்போ இருந்து இல்லை. 

அப்படி இருக்க அவர் இன்று தன் கால் பிடித்து இருப்பதை நம்ப முடியாமல் பார்த்து இருந்தால்.

என்ன டா? என்றான் அவள் முகம் பார்த்து..

அந்த ஒரு வார்த்தை, ஒரு கேள்வி? அவளை முற்றிலும் புரட்டி போட்டு இருந்து.

அவன் தோள் சாய்ந்து கதறிவிட்டாள். அவளை கொஞ்சம் அழவிட்டவன் பின் அவள் முகம் நிமிர்த்தி வேண்டாம் என்பது போல் தலை அசைத்தான்.

ஏன் மாமா அப்பா அம்மாக்கு என் மேல் பாசம் இல்லாம போச்சு என்றாள் விசும்பலாக. 

அவளை ஆதரவாக அனைத்து இருந்தவன் ஏதும் பேசாமல் அவள் பேசுவதை கேட்டு இருந்தான்.

அண்ணாக்கு இப்படி இருக்க நான் என்ன பண்ண முடியும், அண்ணாக்கு எல்லாமே கூட இருந்து பார்த்து பார்த்து செய்றாங்க தானே அதே மாதிரி எனக்கும் செய்யனும் எனக்கு ஆசை இருக்கும் தானே? பணமும், பொருளும் கொடுத்தா போதுமா?

எனக்கு எல்லாமே கிடைச்சது ஆன அது எல்லாம் அவங்க என்கிட்ட  கொடுத்து இல்லை. யாராவது வேலைகாரங்க கொடுப்பாங்க, நீங்களும் பாட்டியும் இல்லாம போய் இருந்தா என் நிலை, பாசம் காட்ட யாரும் இல்லாம இந்த வீட்டில் வளர்ந்து இருப்பேன் என்றாள்.

ஆம் அது உண்மை தான் மகள் மேல் அளவுகடந்த பாசம் தான் ரங்கராஜனுக்கு ஆனால் அதை அவர் நேரடியாக அவளிடம் வெளிபடுத்தியது இல்லை. அதற்கு அவருக்கு சூழிநிலையும் அமையவில்லை, அவள் கேட்டது கிடைக்கும், நினைத்து நடக்கும், ஆனால் அருகில் பெற்றோர் இருக்கவில்லை.

அவள் பிறந்த நாளுக்கு அதிக செலவில் துணி வாங்கி கொடுத்து, ஊருக்கே சாப்பாடு போட்டு, கோவிலில் பூஜை என்று அந்த நாள் கொண்டாடபட்டாலும், அவள் அம்மாவும் அப்பாவும் ஏதாவது ஒரு மருத்துவமனையில், மகனுக்காக காத்துக்கொண்டு இருப்பார்கள். 

அவளுக்கு எது நடந்தாலும் பாட்டியும் சண்முகமும் தான் இருப்பார்கள். இவ்வளவு ஏன் அவள் கல்லூரி சேர்ந்த போது கூட சண்முகம் தான் அவளுடன் சென்றான். இது எல்லாம் தான் அவளை அப்படி எல்லாம் நடந்துக்கொள்ள வைத்து இருந்து. என்ன செய்தாவது பெற்றோரின் பார்வையை தன் புறம் திருப்ப நினைத்தாள் ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லை.

திருமண விஷயத்திலும், தன் முடிவு தவறு என்று கூறினாரே தவிர அவளிடம் அமர்ந்து ஏன் இப்படி ஒர் முடிவு எடுத்தாய் என்று கேட்கவில்லை.

இது எல்லாம் அவளுக்கு மனதளவில் பெற்றோர் இடம் இருந்து விலக வைத்து இருந்து. இப்போது வரை மகனை முன் நிறுத்தி எல்லாவற்றையும் செய்யும் தந்தை மேல் மன கசப்பு வந்து இருந்தது. அதுவும் அவர் கடைசியாக கூறியது இது உனக்கு பிறந்த வீட்டு தான் உன் வீடு இல்லை என்ற சொல் அவளுக்கு பெரும் வலியை கொடுத்து. அப்போது நான் யார் இந்த வீட்டில் இப்போது எனக்கு செய்வது எல்லாம் கடமைகாக தான் போல என்று பல எண்ணங்கள் அவள் மனதில்………………..

எல்லாவற்றையும் கொட்டி கொண்டு இருந்தாள் சண்முகத்திடம். எல்லாவற்றையும் கேட்டபடி அவள் கால்களை பிடித்துக்கொண்டு இருந்தவன். அவள் முகம் நிமிர்த்தி. இந்த நிமிடம் முதல் உனக்கு எல்லாமாகவும் நான்  இருப்பேன். நீ என்ன செய்தாலும், அது தவறாகவே இருந்தாலும் நான் உன் பக்கம் தான் இருப்பேன் என்றான் அவள் கண்களை பார்த்து.

இந்த வார்த்தை அவளை எந்த எல்லைக்கும் இட்டு செல்லும் என்று அவன் அன்று அறியவில்லை. நல்ல அறிவுறை, அன்பு என்பது நீ என்ன செய்தாலும் உன் உடன் இருப்பேன் என்பது அல்ல. நீ தவறும் போது அதை திருத்துவன், நீ வெற்றி பெறும் போது அதில் மகிழ்வேன் என்பது தான்.

அவள் தந்தை செய்த அதே தவறை அவனும் செய்தான். தன் மகளுக்கு எல்லா வசதிகளும் செய்தால் அவள் சந்தோஷமாக இருப்பாள், என்று நினைத்து அவள் அப்பா செய்து எவ்வளவு பிழையோ, அதே போல் இன்று சண்முகம் கூறியதும்.

அவள் மனம்விட்டு பேசிய பின் தான் அவள் எந்த நிலையில் அவனுடன் இருக்கிறாள் என்று உணர்ந்தாள், பெண்மைக்கே உன்டான கூச்சம் அவளை தடுக்க மெல்ல அவளை விட்டு விலக நினைத்தவள், அவன் கைசிறையில் இன்னும் நெருங்கி இருந்தாள்.

என்ன கலா இன்னும்…………………. என்று ஆரம்பித்தவன் அதன் பிறகு அவன் வார்த்தைகள் எல்லாம் அவள் இதழ்லில் தான் முடிந்து.  

 

இரு ஜோடிகளும் தங்கள் வாழ்கையை வாழ தொடங்கிவிட்டனர் என்று அவர்கள் முகத்தின் பொலிவே பெரியவர்களுக்கு காட்ட அவர்களும் மகிழ்ச்சிதான்.

கலாவும் கூட அமைதியாகி இருந்தாள், அவள் இத்தனை நாள் எதிர்பார்த்த அன்பு அவளுக்கு சண்முகத்திடம் இருந்து கொள்ளை கொள்ளையாக கிடைத்து, அதில் அவள் எல்லாவற்றையும் மறந்து இருந்தால்.

இரு ஜோடிகளும் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் அது எல்லாம், அடுத்த இரண்டே மாதத்தில் வள்ளி பிள்ளை உண்டாகி இருப்பது தெரிந்ததும், அதை குடும்பமே கொண்டாடியதில், அவள் தான் அந்த வீட்டின் அடுத்த வாரிசை முதலில் சுமக்கிறாள் என்று ரங்கநாயகி அவளை தாங்கிய பாங்கில், மீண்டும் கலாவின் மனதில் பழைய கோவம் தலை தூக்கியது.

அந்த கோவம் அடுத்த 20 நாட்களில் வள்ளி மாடிபடியில் இருந்து விழுந்து அவள் கரு கலைந்து போனதில் தான் அமைதி அடைந்து.

நிறம் மாறு(ம்)மோ

Advertisement