Advertisement

……………………………..

3 மாதங்களுக்கு பிறகு…………………….

அந்த பதிவாளர் அலுவலகத்தில் தன்னை நேசிக்கும், உள்ளங்களின் வாழ்த்துகளுடன், தன் மனம் கவர்ந்தவள்(ன்) கரம் பற்றினான்(ள்) நாயகியும் ராஜனும் ஆம் இப்போது தான் கையொழுத்து இட்டு தங்க துனையை தங்கள் வாழ்க்கைகுள் இனைத்துக்கொண்டனர் இருவரும்.

இருவர் முகத்திலும் மகிழ்ச்சி மத்தாaப்புகள், இவர்களை வாழ்த்த அசோக் மற்றும் அவன் குடும்பமும், நவீன் அவன் மனைவி மற்றும் அவன் அம்மா, அவர்களின் குடும்ப வக்கீல், தமிழ் இன்னும் சில நன்பர்கள் உடன் அவர்கள் திருமணம் இனிமையாக நடந்து முடிந்து இருந்து.

எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு, அவளின் குடியிருப்புக்கு தான் வந்து இருந்தார்கள், உணவு முடிந்து எல்லோரும் கிளம்பிவிட, இருவரும் மட்டும் இப்போது அங்கு.

இதற்கு முன் இந்த மாதிரி தனிமையில் இந்த வீட்டில் இருந்து இருந்தாலும், இப்போது இது ஏதோ புதிய உணர்வை தந்து இருவருக்கும். எழுந்து சென்றவன் இருவருக்கும் காபி கலந்து கொண்டு வர. அமைதியாக அதை அருந்தினர்.

இந்த இடைபட்ட நாட்களில் நிறைய விஷயங்கள் நடந்து இருந்து. அவள் நிச்சயத்தை நிறுத்தியது தெரிந்தும், அதை பற்றி அவன் ஒன்றும் அவளிடம் கேட்கவில்லை. இந்த 3 மாத்தில் பாதி நாட்களி்ல் அவன் சென்னை வாசம் தான் தன் தொழிலுக்காக வந்து போய் கொண்டு இருந்தான். இருவரும் சந்தித்தாலும் பொதுவான விஷயங்களே, அதன் பின் அவன் திருமணத்தை பற்றி ஏதும் பேசவில்லை. அவளும் தான். அவன் எதிர் பார்த்த படியே தொழில் நன்றாக கால் ஊன்றினர் நன்பர்கள் இருவரும்.

அவன் இனிமேல் சென்னையில் தங்க வேண்டி அதிக நாட்கள் தங்க வேண்டி வரும் என்ற நிலையில் தனக்காக ஒர் வீட்டை வாங்க பார்த்துக்கொண்டு இருந்தான். அப்படி ஒரு மழை நாளில் அவளிடம் இருந்து அழைப்பு வந்து இருந்து அவனுக்கு, அவனும் அவள் வீட்டிற்க்கு சென்றான்.

அவனை வரவேற்றவள், பொதுவாக் பேசிய படி  இருக்க விஷயம் வீடு பற்றி போனது, இன்னும் எனக்கு இங்க வீடு செட் ஆகலை நாயகி, உன் வீட்டை எப்படியாவது வாங்கிடனும் நினைச்சேன் பச் அதுவும் முடியல, என்றான். அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள். ஏன் இந்த வீட்டை வாங்கனும் நினைக்கற இங்கேயே வந்துடு என்றவள் பின் சிறிது இடைவெளி விட்டு நம்ம கல்யாணம் பன்னிக்கலாம் ராஜன் என்றாள்…………..

அவள் என்னவோ பேசுகிறாள் என்று அசட்டையாக இருந்தவன், அவளின் இந்த வார்த்தைகளில் அவள் முகம் பார்த்தான். அவனை தான் பார்த்து இருந்தாள்.

அவன் முகத்திலும் புன்னகை, அடுத்து எல்லாம் விரைவாக நடந்து இருக்க இதோ இவர்கள் இன்று தம்பதிகளாக. ஆனால் திருமனத்தில் இவர்களின் பெற்றோர் கலந்துகொள்ளவில்லை, சிலருக்கு அழைக்கவில்லை, சிலருக்கு மனது இல்லை………………..

காபி தீர்ந்து இருந்து இருவர் கப்பிலும், அவளை நெருங்கி அமர்ந்து அவளை தன் தோளில் வாகாக சாய்த்துக்கொண்டவன், கைகள் அவள் கைகளை பற்றி இருந்து. நீண்ட நெடிய வருடத்திக்கு பிறகு பின் அவள் இளைபாரும் சொந்தம். கண் முடி அந்த கனத்தை தனக்குள் உள்வாக்கியவள் அமைதியாக இருந்தாள்.

நாம இங்க தான் இருக்க போறோம் நாயகி இந்த வீட்டில் என்றவன், அவள் தலையை கோதியபடியே பேசினான். எல்லாம் தெரியும் தானே என்றான், அவளிடம் அமைதி மட்டும்மே. ஆம் இன்று காலை திருமணம் முடிந்து இவர்கள் வீடு வந்த பிறகு சொந்தில் எல்லாவற்றையும் சொல்லி இருந்தார். அவர்களின் சொத்துக்கள் எல்லாம் டிரஸ்ட் மூலம் பிரக்கபட்டு அந்த ஊரில் இருக்கும் கல்லூரி, பள்ளி, மருத்துவமனைக்கும் இன்ன பிற இவர்களி்ன் ஸ்தாபனங்களுக்கும் பிரிக்கபட்டு பொதுவுடமையாக பட்டுவிட்டது. இது இவன் தன்னை திருமணம் செய் கேட்கும் முன்னமே செய்து இருந்தான்.

அதாவது, எல்லாவற்றையும் விட்டு தனக்கு என்று ஒரு தொழிலை தனது முயற்சியில் தொங்கி கொண்டு மற்றவற்றை எல்லாம் அந்த ஊருக்கே கொடுத்துவிட்டான்.

அவன் போன முறை அவளிடம் கையொழுத்து வாங்கும் போது ஏதோ செய இருக்கிறான் என்று தெரியும் ஆனால் இப்படி எல்லாவற்றையும் கொடுப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அதை எல்லாம் கேட்டதும் அவள் மனதில் ஏன் என்ற கேள்வி தான் இது எல்லாம் தனக்காகவா?

அதையே இப்போது அவனிடம் கேட்டாள் ஏன் இப்படி? என்று.

நம்ம வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயத்துக்கும் இந்த சொத்து தான் காரணம் நாயகி, உனக்கோ எனக்கோ இதில் என்ன கிடைத்து? இல்லை நம்ம பெத்தவங்களுக்கு தான் இதில் என்ன கிடைத்து.

அதனால் தான் இது எதுவும் மே எனக்கு வேண்டாம் முடிவு பன்னேன். நீயும் அப்படி தான், அதனால் என் வேலை சுலபமா முடிந்து. நான் உன்னை விட்டு இருந்த அந்த நாட்களில் தான் எனக்கு எல்லாத்தையும் புரியவைத்து. இந்த பனம் எந்த வகையிலும் நமக்கு சந்தோஷத்தை தராது. இதனால் நாம் இழந்து தான் அதிகம்.

ஆனா அதே சமயத்தில் இதை சொல்லி உன்னிடம் என்னை கல்யாணம் பன்ணிக்க சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. நீ எனக்காக என்னை விரும்பி நீ என்னை ஏத்துகனும் நினைச்சேன். எந்த தேவைக்காகவும், கட்டாயத்துகாவும், இல்ல அந்த நேரத்தில் தேன்றுகிற சின்பதில நீ என்னை பார்க கூடாது.

உன் மனசு நான் உன் வாழ்க்கை முழுக்க உன் துனையா உன் கூட வருவேன் உனக்கு தோன்னும், அதை உணரனும், அப்படி ஒரு நேசம் வந்த பின்னால் நம்ம கல்யாணம் பன்னும் நினைச்சேன். அந்த நேசம் தான் எப்போதும் நமக்கு இடையே நிறம் மாறாமல் இருக்கும்.

அந்த மாதிரி ஒரு உறுதி எனக்கு வந்த அப்புறம் தான் நான் உன்கிட்ட என்னை கல்யாணம் பன்ன சொல்லி கேட்டேன், உனக்கும் அந்த எண்ணம் மனிதில் வரும், அதுவரைக்கும் காத்து இருக்கனும் நினைச்சேன்.

அதனால தான் உன்னை எந்த விதத்திலும் நான் கட்டாய படுத்தல, இதோ இன்னிக்கும் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியமா? மனசும் உடலும் என்னால அந்த சொல்லவே முடியல என்றவன் மேலும் அவளை இறுக்கி அனைத்து இருந்தான்.

ஆமா அவளுக்கும் அதோ நிலைதான் இந்த இடைபட்ட நாட்களில் அவள் அவன் அன்பை காதலை உணர்ந்தாலும், அவன் இடத்தில் தன் வாழ்வு பொருந்தி போகுமா என்ற கேள்வி தான் அவளுக்குள், ஆனால் அதையும் தாண்டி அவனை இழக்க விரும்பாமல், தான் திருமனத்திற்க்கு சம்மதித்து இருந்தாள், ஆனால் அவன் அவளை யோசித்து இருக்கிறான். எல்லாவற்றையும். அதைவிட எனக்கு என்ன வேண்டும். எது எனக்கு நிம்மதியை தரும் சந்தோஷத்தை தரும் எல்லாவற்றையும் யோசித்து இருக்கிறான். அதுவும் நான் சம்மதம் சொல்லும் முன்னாலே………………..

அதை அவனிடமும் கேட்டுவிட்டாள் எந்த தைரியத்தில் இப்படி முடிவு எடுத்த ஒரு வேளை நான் உன்னை கல்யாணம் பன்ன ஒத்துக்கொள்ளவில்லை என்றால்?

நீ ஒத்துகிட்டாலும் இல்லைனாலும், இந்த கல்யாணம் நடந்து இருந்தாலும், இல்லைனாலும் என் முடிவு இதுவாக தான் இருக்கும். சொத்து நம்ம, நம்ம சந்ததிக்கு சந்தோஷமா, வசதியை தரனுமோ திவிர பயத்தை இல்லை, இந்த சொத்து நமக்கு வேண்டாம், நம்ம சந்திக்கும், இது ஒவ்வெரு நிமிஷமும் நம்ம கடந்த காலத்தை நமக்கு ஞாபகபடுத்திக்கொண்டே இருக்கும். நமக்கு தேவையானது நம்ம கிட்ட இருக்கும், இன்னும் கூட நம்மாள சம்பாதிக்க முடியும். அப்புறம் இது எதுக்கு என்பது தான் அவன் பதிலாக இருந்து. அதில் இன்னுமே அவனில் மயக்கம் கொண்டாள் பெண்னவள்.

சண்முகம் எதற்காக இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று நினைத்தாரோ அந்த சொத்துக்கள் மொத்தமா கைவிட்டு போய்விட்டதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மகள், மனைவி என்று எல்லாவற்றையும் சொத்துக்காக தூரவைத்தவர் இன்று யாரும் இல்லாமல் தனியாகவே நின்றார். அதில் அவருக்கு ஏக வருத்தம். இன்னும் அந்த வீட்டில தான், அவர்கள் விரும்பும் வரை அந்த வீட்டில் இருக்கலாம், அதை அவர்கள் விருப்பட்டால் விற்க கூட செய்லாம் என்ற படி தான் உயில் இருந்து.

வள்ளி தன் மகனுக்கு எல்லா சொத்தும் சேர வேண்டும் என்று எல்லாவற்றையும் செய்தார், ஆனால் இன்று மகன் எல்லாவற்றையும், இருக்க வீடு கூட வேண்டாம் என்று கொடுத்துவிட்டு தன்னையும் தவிர்த்துவிட்டு சென்றுவிட்டான். அவர் யாரை அதிகமாக வெறுத்தாரோ அவள் வீட்டில் இருக்கிறான், இதற்கா நான் இத்தனை பாடு பட்டேன் என்று எண்ணி எண்ணி மனதில் குமைந்தார். எல்லாவற்றையும் விட அவன் திருமணம் அதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், மகன் திருமணத்திற்க்கு அவரை வர வேண்டாம் என்று கூறியாது, காலம் கடந்தலும் இன்னும் அவர் தான் செய்த தவறுகளை ஒத்துக்கொள்ள தாயர் இல்லை. தன் நிலையில் தான் இருந்தார்.

கலா அன்று பேச்சை நிறுத்தியவர் தான், அதன் பின் ஏதும் பேசவில்லை. யாரிடமும், அவருக்கு தன் பேச்சால் தான் எல்லாம் என்ற எண்ணமே அவரை குற்ற உணர்வில் தள்ளியிருந்து. அதை உணர்ந்தாரோ என்னவோ இன்று முற்றிலும் அமைதியாகிவிட்டார்.

ராஜன் திருமணம் பற்றி கூறிய போது கூட அவன் முகத்தையே பார்த்து இருந்தவர் ஏதும் சொல்லாமல், அவன் தலையில் கைவைத்து அவனை வாழ்தினார், என்னால் என் பெண் சுகபடவில்லை, நீஅவளை நன்றாக வைத்துக்கொள்ள என்ற எண்ணம் அதில் இருந்தோ?

யாரும் திருமணத்திற்க்கு வரவில்லை என்பதை இருவரும் பெரிதாக கொள்ளவில்லை. இந்த புரிதல், இந்த காதல், இந்த நேசம் தங்கள் வாழ்நாள் முழுவதும் நிறமாது நிலைத்து நிற்க்கும் என்று அந்த இருவர் மனதிலும் பதிந்து இருந்து. நாமும் அதையே வாழ்த்தி விடைபெறுவோம்.

நன்றி………………….

உண்மையான நேசம் என்றும் நிறம் மாறாது…….

Advertisement