Advertisement

ஏன் நவீன்கிட்ட பொய் சொன்ன என்றான்?

ஒரளவு இந்த கேள்வியை எதிர் பார்த்து இருந்தாலும், நான் என்ன பொய் சொன்னேன், நாம வெளியில் கிளம்பம் போது கடைக்கு போகலாம் தானே கிளம்பினோம் என்றாள். அந்த பதில் அவன் தான் அயர்ந்து போனான்…………

ஆனாலும் விடாமல், ஏன் நவின் கிட்ட நான் இங்க இருக்கறத சொல்ல என்றான் மறுபடியும், அவன் கேட்கவே இல்லையே என்றாள் சற்றும் அசராமள்.

அவன் எப்படி கேட்கனும் ராஜன் கூட இருக்கியானும் கேட்கனும்மா? என்றான் சற்று காட்டமாக…………….

இல்லை கூட யார் வந்து இருக்காங்க கேட்டு இருக்கனும் என்றாள் சற்றும் தயங்காமள்……….

அவளின் இந்த பதில் அவன் தான் அமைதியானான். இங்க பார் ராஜன், நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை, பொய் சொல்ல தேவையில்லை. நான் எந்த தப்பும் செய்யலை, சரியா போய் தூங்கு குட் நைட் என்றவள் தன் அறை கதவில் கையை வைத்தாள்.

நில்லு உன்கிட்ட ஒன்னு கேட்கனும், என்றான்………

இன்னும் என்ன வேணும் உனக்கு, என்றாள் அவள் பொருமை எங்கோ பறந்து இருந்து..

அவளை தீர்கமாக பார்த்தவன் சொன்ன பதிலில் இப்போது அவள் இதயம் வெளியில் குதித்துவிடும் படி அடித்துக்கொண்டது.

நீ தான் வேணும் நாயகி!!!!!!!!!!!!!!!!

காலையில் அவன் வந்ததில் இருந்து எதை கேட்க கூடாது என்று நினைத்தாளோ? எதை அவன் கேட்பான் என்று எதிர்பார்த்தாளோ அதை இப்போது கேட்டுவிட்டு இருந்தான்.

ஆமா எனக்கு நீ தான் தான் வேணும், இதுவரைக்கும் நான் இதை

இப்படி கேட்கவில்லை, நீ சொன்ன மாதிரி இத்தனை நாள் யாரும் இல்லாமல் நான் தனியா இருக்கறதனால அந்த இடத்துல நீ வேணும் நினைக்கல, எனக்காக எல்லோரும் இருந்தாலும், இல்லைனாலும், நீ எனகே எனக்கா வேணும்.

இது காதல் அப்படினா காதல், தேவை அப்படினா தேவை, எப்படி  வேனா வச்சிக்கோ, ஆனா நீ இல்லாமல் ஒரு வாழ்க்கை எனக்கு முழுமையானதா இருக்காது. நீ இல்லாத இத்தனை வருஷத்துல இதை நான் உணரல, நீ திரும்ப ஊருக்கு வந்த போது கூட எனக்கு அது தெரியல, ஆனா உன் கூட நான் சென்னையில் இருந்த அந்த சில நாட்கள் எனக்கு புரிஞ்சுது,   அப்படியும் நீ என்னை வேண்டாம்னு சொன்னப்ப உன்னை தொந்தரவு பன்ன வேண்டாம் தான் ஊருக்கு போய்டேன். ஆனா என்னால் முடியலடா, அதான் கடைசியா உன்கிட்ட ஒரு வாட்டி வந்து நின்னு இருக்கேன்.

இப்பவும் உன் முடிவு தான் உனக்கு என்னை மாதிரி அந்த எண்ணம் இருந்தா மட்டும் நம்ம இதை பற்றி எல்லார்கிட்டயும் பேசலாம், இல்லைனா இதை இப்படியே இங்கயே விட்டுடலாம், நான் உன் நிச்சயத்துக்கு வந்ததாகவே இருக்கடும், என்றவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

அவன் பேசியது அனைத்தனையும் கேட்டவள், அப்படியே அங்கு இருந்த பால்கனியில் அமர்ந்துவிட்டாள், அடுத்து என்ன என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள். மனதில் சந்தோஷமும், தூக்கமும் ஒரே நேரத்தில், நெஞ்சல்லாம் கனத்து அப்படியே ஏதும் செய்ய தோனாமல் அமர்ந்துவிட்டு இருந்தாள்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க கூட முடியாதவளாக, இதற்கு முன் இவன் வேண்டாம் என்று அவள் சொன்ன காரணங்கள் எல்லாம் இன்னும் அப்படியே இருக்க, இப்போது அவைகளில் ஒன்று கூட அவள் நினைவில் வரவில்லை.

அவன் இல்லாமல் அவளால் தன் நாட்களை நகர்த்த முடியுமா? என்பதே அவள் கேள்வியாக அவள் முன்.  நான் இப்போது என்ன செய்ய, இவனுடன் ஒரு வாழ்க்கை எப்படி இருக்கும்.

நவினுக்கு என்ன பதில் சொல்லவது. அதற்காக இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று மனம் குழப்பத்தில் இருக்க, இவனை யார் இப்ப இங்க வர சொன்னது. என்ற அவனையும் மனதில் அர்ச்சனை செய்தவள் அந்த தூங்காமல் தான் கழித்து இருந்தாள்.

அவள் சிறு வயது நினைவுகள், அவர்கள் திருமணம், அதன் பின் நடந்தவைகள், அவன் திருமணம் செய் ஒத்துக்கொண்டது, அவர்களின் சென்னை நாட்கள் என்று எல்லாம் அவள் நினைவில் வந்து போனது.

இந்த நினைவுகளுடன் நவினுடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியுமா என்பது இப்போது அவள் மனதில் இருந்த கேள்வியாக இருந்து. எல்லாவற்றையும் யோசித்த படி இருந்தவள் அதிகாலையில் தான் உறங்கியும் இருந்தாள்.

ஆனால் அவளுக்கு முற்றிலும் மாறாக ராஜன் அந்த அறையில் நிம்மதியாக உறங்கி இருந்தான். அவனுக்கு இத்தனை நாள் மனதில் இருந்த பாரம் எல்லாம் இறக்கி வைத்த நிம்மதி,  இனி அவள் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாம் என்ற மனநிலையில் இருந்தான்.

நேரம் யாருக்கும் காத்து இருக்காமல் அதன் வேலையை செவ்வனே செய்து இருக்க, காலை முதலில் விழித்து ராஜன் தான், நீண்ட நாள் கழித்து ஒரு நிம்மதியான உறக்கம். புத்துணர்வாக இருந்து.

மழைவிட்டு ஒரு குளுமையான காலநிலை இதமாக இருந்து, சமையல் அறைக்கு வந்தவன், குளிர்சாதன பெட்டியில் பால் இருக்க அதை எடுத்து சூடுபடுத்தியவன், தனக்காக காபியை எடுத்துக்கொண்டு பால்கனி சென்றான். காப்பியை பருகியபடி, அந்த காலையை இரசித்து இருந்தான்.

மேலும் அரை மணி நேரம் சென்று இருந்து, நேரம் காலை  8 மணியை தொட்டு இருக்க, அலைபேசியை எடுத்து அவன் பிஏ வுக்கு அழைத்தவன் அன்றைய வேலைகளை பற்றி கேட்டுக்கொண்டான். அவன் சொல்லிவிட்டு வந்த நேற்றைய வேலைகள் முடிந்ததா என்று கேட்க்கொண்டவன், அது தொடர்பான அழைப்புகளை எடுத்து, எல்லா தகவல்களையும் கேட்டுக்கொண்டான்.

மேலும் 1 மணி நேரம் ஒடி இருந்து. அப்போது தான் தன் அறைகதவை திறந்து நாயகி வெளியில் வந்து இருக்க, இருவரும் பார்த்துக்கொண்டாலும் ஒன்றும் பேசவில்லை. அதை இருவரும் எதிர்பாத்தாகவும் தெரியவில்லை. நேராக சமையல் அறைக்கு சென்றவள் அங்கு இருந்த பாலை சூடுபடுத்தி தனக்கு ஒரு காபியை போட்டுக்கொண்டவள், ஹால் ஷோபாவில் அமர்ந்தாள், தொலைகாட்சியை இயக்கியவள் அன்றைய சந்தை நிலவரங்களை பற்றி ஆராய்ந்தாள், தன் லேப்டாப்பில் சில வேலைகளை செய்தவள், எழுந்து தன் அறைக்கு சென்றாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் அழைப்பு மணி அடிக்க, வெளியில் காலை உணவுடன் நின்று இருந்தான் ஒருவன், அவனிடம் உணவை பெற்றுக்கொண்டவன், அதை சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு தன் அறைக்கு சென்று குளித்து கிளம்பி வந்தான், அவன் வந்த போது அவளும் கிளம்பி இருந்தாள். இருவரும் ஏதும் பேசவில்லை, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவர்கள் வந்து இருந்த உணவை உண்ண ஆரம்பித்து இருந்தனர்.

இருவர் மனதிலும் கேட்க, பகிர்ந்துக்கொள்ள நிறைய இருந்தாலும் அந்த நிமிடம் அமைதியாக இருந்து. நாயகி தான் முதலில் ஆரம்பித்தாள், நான் வெளியில் போகிறேன், கொஞ்சம் வேலை இருக்கு என்றவள்…… நீ என்பது போல் பார்த்து வைத்தாள்.

நானும் தான் ஒட்டலில் ரும் புக்க பன்னிட்டேன், ஈவீனிங்க பங்ஷன் முடிந்து அப்படியே நைட் கிளம்புறேன் என்றான், சரி என்று தலை அசைத்தவள், அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. அவள் முகத்தையே பார்த்து இருந்தவன் பின் ஏதும் பேசாமல் சாப்பிட்டு முடித்து, தன் அறைக்கு சென்றவன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்து இருந்தான்.

எப்படி போக போற என்ற அவள் கேள்விக்கு வண்டி புக் பன்னிட்டேன் என்றான். இருவரும் கீழ் இறங்க, அதற்குள் அவன் புக் செய்த வண்டியும் வந்து இருந்து. இருவரும் தங்கள் வழியில் பயனத்தை தெடர்ந்தனர்.

நாயகி நேராக வந்து அசோக் வீட்டுக்கு தான், அவள் வருவதாக காலையில் செந்திலிடம் சொல்லி இருந்தாள். அவரும் வீட்டில் இருக்க, இவளை தான் பார்த்து இருந்தார். வீட்டிக்கு வந்தவள் நேராக அவருடன் அலுவலக அறைக்கு சென்றுவிட, சொல்லுடா என்ன விஷயம் என்றார் என்ற மேல் பூச்சும் இல்லாமல்.

நேற்று ராஜன் வந்து இருந்தான் என்று அவளும் எல்லாவற்றையும் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் கூறியவள், எனக்கு தெரியலை அங்கிள் இப்போ நான் என்ன முடிவு எடுக்கனும் என்றாள் அவரை பார்த்து. அவளை அவருக்கு இத்தனை வருடங்காக தெரியும் எப்போதும் அவள் இப்படி கலங்கியது இல்லை.

இப்போது தொலைந்து போன குழந்தை போல் அடுத்து என் என்று தெரியாமல் அவள் இருக்கும் நிலை அவருக்கு தவிப்பு தான், ஆனால் இந்த விஷயத்தில் அவர் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்று நினைத்தவர். சொல்லுடா நீ என்ன முடிவு எடுத்து இருக்க என்றார் அவளைபார்த்து. எனக்கு தெரியலை அங்கிள் என்றாள் தவிப்பாக……….

இங்க பார் நாயகி நாம நம்ம பிரச்சனையை யார்கிட்ட வேணும்னாலும் பகிர்ந்துக்கலம் ஆனால் முடிவு நம்மோடதா இருக்கனும். உன்னைவிட யாரால அதை எடுக்க முடியும் நீ நினைக்கற என்றவர்.

கண்டிப்பா இந்த நேரத்துக்கு நீ முடிவு எடுத்து இருப்பே, ஆனா அது எப்படி சம்பந்தபட்டவங்க கிட்ட சொல்வது என்பது தான் உன் பிரச்சனையாக இருக்கும்!!! என்றார் அவளை அறிந்தவராக.

ஆம் என்று தலையாட்டியவள், இப்போ இந்த நிச்சயம் வேண்டாம் அங்கிள் என்றாள், என்னால் நவீனுடன் ஒரு நிறைவான வாழ்கை வாழ முடியும் தோனலை என்றவள், அவங்க வீட்டில் பேசனும் என்றாள். அவளையே பார்த்து இருந்தவர் அடுத்து என்ன செய்ய போற என்றார். அவங்க வீட்டுக்கு போகனும் என் கூட வரனும் நீங்க என்றாள்.

இருவரும் கிளம்பி அங்கு சென்றனர். இவர்களை எதிர் பார்த்து இருவரும் காத்து இருந்தனர், எந்த மேல் பூச்சும் இல்லாமல் நாயகியே எல்லாவற்றையும் சொல்லியவள், நிச்சயத்தை நிறுத்திவிடலாம் என்று கூறிவிட, அவர்கள் பக்கம் அமைதி மட்டுமே. இந்த முடிவுக்கு என்ன காரணம்? நீ ராஜனை கல்யாணம் பன்னிக்க போறியா என்றான் நவின்.

தெரியலை ஆனா இப்போ இந்த நிச்சயம் வேண்டாம்,

இன்னிக்கா? இல்லை ???

எப்பவும் என்றாள் அவன் முகம் பார்த்து……….

சரி என்று அவன் கூறவும், அவன் அன்னை முகம் பார்த்தாள், அவரும் அமைதியாக அமர்ந்து இருக்க………….

உங்க எல்லோருக்கும் இந்த விஷயம் ஏற்கனவே தெரியமா? என்றவள்……… அதாவது ராஜன் நேத்து என்னை பார்க்க வந்த விஷயம்!!!!!! என்றாள்.

அதில் அவர்கள் முகத்தில் அதிர்வு தெரிந்தாலும்……………

இதில் கண்டுபிடிப்பது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை………..

நான் இந்த விஷயத்தை சொல்லும் போது இது நாங்க எதிர்பார்த்த விஷயம் தான் அப்படிங்கற மாதிரி உங்க ரியக்‌ஷன் இருந்து என்றவள்.

சிறு புன்னகையுடன், இந்த விஷயத்தில் நான் ரொம்ப லக்கி என்னை புரிஞ்சிக்கிட்ட நன்பர்கள் எனக்கு கிடைச்சது என்றவள், கிளம்ப நவினின் அம்மா என்ன முடிவு பன்னி இருக்க நாயகி என்று அது வரை அமைதியாக இருந்தவர் அவளை கேட்க. சிறு புன்னகையுடன் அங்கு இருந்து கிளம்பி இருந்தாள்.

Advertisement