Advertisement

அஷ்டலட்சுமி கோவிலுக்கு எதிர் புறம் இருக்கும் கடற்கரைக்கு வந்தவர்கள், கடற்கரை பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தனர்.

அதிக கூடம் இல்லை, சிலர் குடும்பமாகவும், நன்பர்கள், கல்லூரி மானவர்கள், காதலர்கள் என்று கடற்கரை தனக்காக கலையோடு இருந்து.

இன்னும் இருள் முழுமையாக வரவில்லை, மாலை வெளிச்சம் மிச்சம் இருந்து. அந்த காற்று இருவருக்கும் இதமாக இருக்க. இப்போது இருவர் மணமும் எதை பற்றியும் நினைக்காமல் அமைதியக கடலை வெறித்தபடி அமர்ந்து இருந்தனர்.

முதலில் பேச்சை துவங்கியது ராஜன் தான், அப்பறம் என் பிளான் என்றான் கடலை பார்த்தபடி, என்ன ப்ளன் என்றாள் அவள் அவனை கேள்வியாக பார்த்தபடி.

கல்யாணத்துக்கு அப்புறம், என்றவன் கேள்ளவியில் அவள் முகம் சற்று மாறியதோ!!!!!!!!!!!!!!!

ம்மம்மம்மம்மம்ம இங்க சென்னை தான், நவினுக்கும் கூட இங்க தான் வேலை என்றாள்.

உன் கிட்ட ஒன்னு கேக்கவா என்ற அவன் கேள்வியில் சமன்பட்டு இருந்த மனம் மீண்டும் மத்தளம் கொட்டியது…………….. என்ன கேட்க போகிறான். எதை பற்றி இந்த திருமணத்தை நிறத்த சொல்லி கேட்பானோ? இல்லை அவன் விருப்பத்தை பற்றி சொல்வானோ? என்று நொடிக்கு நூறு எண்ணங்கள் மனதில்…………….. ஆனால் ஏதும் வெளியில் தெரியாமல் அவனை பார்த்து  இருந்தாள்……….

அவளையே பார்த்து இருந்தவன், முகத்தில் சிறு புன்னகை……….

ம்மம்மம்மம்மம ஓகே, எங்க இருக்க போற இந்த வீடு என்ன பன்ன போற வாடகையா என்றான்???

சற்றும் அவள் எதிர்பார்ப்பு பொருந்தாமல்………………

அவன் இடம் இருந்து வந்தது கேள்வி அவன் முகம் பார்த்தவள், என்ன என்ற புரியாத பார்வை தான்.

இதையா கேட்டாய் என்ற ஆசுவாசம் மனதில் ஏற்பட்டாலும், இவனுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையா?!?!?

இவனை நான் பாதிக்கவே இல்லையா? என்ற கேள்வியும் மனதில் எழாமல் இல்லை. ஆனால் அடுத்து மூளை அவன் கேட்ட கேள்விக்கு தாவி இருக்க, இப்போது தான் அதை பற்றி என்ன சொல்வது என்று வழித்தாள். அவளே இன்னும் அதை பற்றி முடிவு செய்யவில்லை,

அதை பத்தி இன்னும் யோசிக்கவில்லை அவள், திருமணத்து பின் அவன் வீட்டில் தான் என்றாலும், இந்த வீடு அதை என்ன செய்வது என்று அவள் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த வீடு அவள் முதல் கணவு, அவளின் வெற்றி, தன் வீட்டைவிட்டு வெளியேறிய பின் 6 வருடங்கள் விடுதி வாசம் தான், அதன் பின் வேலைக்கு சேர்ந்த பின் கூட விடுதிதான், வேலைக்கு சேர்ந்து அடுத்த ஒரு வருடத்தில் தான் வீடு வாங்கி இருந்தாள், அதுவரை அவளுக்கும் முகவரி இல்லை என்பது போல் இருக்கும். அவ்வளவு பெரியவீட்டில் இருந்தவள், அவ்வளவு பெரிய குடும்பத்தில் வாழ்ந்தவள், இருக்க இடம் கூட பிறர் தயவு தான் என்ற நிலையில் மிகவும் மன உடைந்து இருக்கிறாள். ஆனால் காட்டிக்கொண்டது இல்லை. அவளுக்குகான முதல் அடையாளம் இந்த வீடு தான், தான் அது வரை சம்பாதித்த எல்லாவற்றையும் கொண்டு தான் அந்த வீட்டை வாங்கி இருந்தாள். அது அவளின் கூடு அங்கு இருந்து அவளை யாரும் வெளியில் அனுப்ப முடியாது. எனக்கான அடையாளம் என் முகவரி என்று அந்த வீடு அவளின் தனிபட்ட சந்தோஷம், அவளின் வளர்ச்சியின் முதல் படி, அவளின் இளைப்பாருதல் அங்கு தான்,

இப்போது அந்த வீட்டை விற்றுவிடவோ வேறு யாருக்கும் வாடகைக்கு கொடுக்கவோ அவளுக்கு வருப்பம் இல்லை, ஆனால் அங்க அவள் இருக்க நவீன் என்ன சொல்வான், அவன் அம்மா என்ன சொல்லவார். என்று அவள் எண்ணங்கள் அதிலே வட்டமிட்டது. இவனை நான் எப்போது சந்தித்தாலும் ஏன் என்னை இப்படி எதையாவது யோசிக்க வைக்கிறான். என்று அவன் மேலும் கடுப்பாக வந்து.

இப்படி யோசனையில் இருந்தவளை கலைத்து அவன் குரல் இல்ல இப்போதைக்கு உனக்கு அந்த வீடு வேண்டாம் என்றால், நான் ஒரு யோசனை சொல்லவா? என்றான்……….

அடுத்து என்ன என்பது போல் பார்த்துவைத்தாள் அவனை…….

இங்கே என் தொழில் ஆரம்பிச்சாச்சு முன்ன மாதிரி இல்லாம வாரத்திக்கு 3 நாள் நான் இங்க தங்க வேண்டி இருக்கும், சில சமயம் வாரகனக்குல கூட, எத்தனை நாள் இப்படி ஒட்டலில் ரூம் போடுவது, எனக்கு செட் ஆகல,அதுவும் இல்லாம, இங்க வெளியில் சாப்பிடுவதும் எனக்கு ஒத்துவராது. அதனால் என்ன இப்போ என்றாள்.

இல்ல உனக்கு அந்த வீடு விக்கற ஐடியா இருந்தா எனக்கு கொடுத்துடு, இல்லை அப்படி வேண்டாம் நினைச்சா வாடகையாக இருந்தாலும் ஒகே, எனக்கு அந்த வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு……..

என்றவன் அவள் ஏதோ மறுத்து பேசும் முன், நீ நவீன்கிட்ட பேசி முடிவுக்குவா………. ஆனா வீடு எனக்கு தான் வேற யாருக்கும் கொடுக்க கூடாது என்றான்.அதில் இன்னும் வெறியானவள், அது என் வீடு அதை எதுக்கு நவீன்கிட்ட கேக்கனும். அதை என்ன பன்னனும் நான் தான் முடிவு பன்னும் என்றாள் அவனை முறைத்தபடி.

என்ன இருந்தாலும் அவன் உன் வருங்கால கனவன் என்ற அவன் பேச்சில் இன்னும் கடுப்பானவள், தயவு செய்து வாய்யை முடு என்றாள்…. அவனை முறைத்த படி……….

இருவரும் ஏதும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக இருக்க…….

மீண்டும் பேச்சை அவன் தான் துவங்கினான், உன்கிட்ட ஒன்னு கேட்கவா என்றான் மீண்டும்…………. மீண்டும் மனதில் மத்தளத்தின் ஒசை இந்த முறை என்ன?

இல்ல இந்த சொத்து எல்லாம் வேண்ணாம் சொல்லிட்ட, நாளைக்கு உனக்கு ஒரு குடும்பம் , குழந்தைகள் எல்லாம் வந்த பிறகு, இப்படி எல்லாத்தையும் வீட்டு வந்துடோம் நீ பீல் பன்னுவியா என்றான்.

இந்த முறையும் அவனின் கேள்வயில் ஏமாற்றமாய் உணர்ந்தவள், இங்க வாழ்க்கையே வீட்டுட்டு வந்துட்டேன் அதுக்கே பீல் பன்னலை, என்று வாய்க்குள் முனுமுனுத்தவள், இல்லை எந்த காலத்தலையும் அப்படி பீல் பன்னமாட்டேன், என்றாள்.

எனக்கு அந்த சொத்து எந்த சந்தோஷத்தையும், நம்மதியும் கொடுக்கலா, எல்லாத்தையும் என்கிட்ட இருந்து எடுத்துகிட்டு என்னைய தனி மனிஷியா இந்த சமுதாயத்துல போராடதான் வச்சது, சொத்து என்ன பெரிய சொத்து, இதை விட அதிகமாக என்னால சம்பாத்திக்க முடியும். ஆனால் கடந்து போன என்னோட காலங்களையும், சந்தோஷங்களையும் இந்த பனத்தால கொண்டு வர முடியாது. என்றவள் மீண்டும் கடலை வெறிக்க துவங்கிவிட்டாள்.

மறுபடியும் அவன் ஏதோ பேச வாய் எடுக்க, இவள் சாப்பிட்டு கிளம்பளாம் என்றாள் அவனுக்கு முன். இப்போது இரவு ஏழு மணியாகி இருந்து. சரி என்று இருவரும் எழுந்தனர், ஒட்டலுக்கு சென்றவர்கள், இட்லிகளை ஆடர் செய்து சாப்பிட்டனர். அதன் பின் ஒரு காபி பருகிவிட்டு அங்கு இருந்து புறப்பட்டு இருந்தனர், இப்போது சற்று வாகன நெரிசல் ஆரம்பித்து இருந்து. லேசான தூறலும். காருக்குள் அமைதி. இருவரும் பேசவில்லையே தவிர இருவர் மனதும் சத்தமிட்டுக்கொண்டு இருந்து.

சொல்லுக்கும் தெரியாமல்

சொல்லத்தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போல்

சொல்லாமல் நின்றேனே

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

காரில் இருந்த ரோடியோவில் பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, அது அங்கு யார் மனநிலையை பிரதிபளித்திதோ………..

அவளின் அலைபேசி அடிக்க எடுத்து பார்த்தாள், நவீன் தான் அழைத்து இருந்தான்,இவன் இந்த நேரத்தில் என்று யோசித்தவள்…………….

அது ப்ளுடுத்தில் இனைந்து இருக்க, எப்போதும் போல் பாடல் நின்று எப்போதும் போல் அழைப்பை ஏற்றாள், அதன் பின் தான் இருக்கும் சூழ்நிலை புரிந்து. ஆனால் இனிமேல் காலை கட்டு செய்தால் நின்றாக இருக்காது அதனால் சொல்லுங்க நவீன் என்றாள். சாதாரணம் போல்.

என்ன பன்றிங்க நாயகி, சும்மா தான் என்றவள் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாள், நாளைக்கு இந்த டைம் நிச்சயம் முடிஞ்சி இருக்கும், என்றவன் பேசில் அவள் என் சொல்லவது என்று தெரியாமல் ம்மம்மம என்றாள்…

என்ன பன்றீங்க வீட்லயா? நான் வெளியில வந்தேன், இப்போ வேற ஏதும் வேலை இல்லைனா மீட் பன்னலாமா என்றான், இல்லை என்றவள் நான் வெளியில் இருக்கேன் என்றாள் அவசரமாய்.

ஒஒ எங்கே, தி நகர் கடைக்கு வந்தேன் என்றாள் வாயில் வந்ததை, ஓ சரி எப்போ வருவீங்க, வேலை முடிஞ்சா வீட்டுக்கு போக முன்னாடி டின்னர் போலாமா என்றான், இல்ல ஸாரி நவின் இன்னிக்கு முடியாது, நான் கொஞ்சம் வேலையா இருக்கேன், ப்ளிஸ் அப்புறம் கூப்பிடுகிறேன் என்றவள் அவன் பதில் பேசும் முன் அழைப்பை துண்டித்து இருந்தாள்.

ஏனோ இந்த அழைப்பை வைத்த பிறகு தான் அவளுக்கு இயல்பாக முடிந்து. அப்போது அதான் ராஜன் அருகில் இருப்பதை உணர்ந்தவள் அவன் முகம் பார்தாள். இப்போது இங்கு என்ன நடந்தது என்பது போல் அவன் காரை ஒட்டிக்கொண்டு இருந்தான். அவன் முகத்தில் வேறு ஏதும் இல்லை.

ஏதும் யோசிக்காமல் அமைதியாக இருக்கையில் சாய்ந்து கண்களை முடிக்கொண்டாள். அடுத்த சிறிது நேரத்தில் வண்டி நின்றதும் தான் கண்களை திறந்தாள், அவள் அப்பாட்மெண்ட் முன்னால் வண்டி நின்று இருந்து, நேரம் 9.00 வெளியில் இறங்கியவள் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு, அவன் வண்டியை லாக் செய்து வரும் வரை காத்து இருந்தாள் பின் இருவரும் லிப்டை நேக்கி சென்றனர்.

லிப்டில் ஏறியவர்கள், அவர்களின் தளம் வந்து, வெளியில் வந்து தன் வீட்டின் திறப்பை எடுத்து திறந்தவள், அவன் வருவதற்க்கு வழிவிட்டாள், பின் கதவை முடியவள் தன் அறைக்கு செல்ல, அதுவரை ஏதும் போசாமல் இருந்தவன்.

நாயகி என்றவன் அழைப்பில் நின்றவள் திரும்பி அவனை பார்தாள் என்வென்பது போல், ஒன்னு கேக்கனும் என்றான் மறுபடியும், இப்போ எதை பற்றி என்று மனதில் சத்தம் இருந்தாலும் எதையும் காண்பிக்காமல் அமைதியாக இருந்தாள்.

Advertisement