Advertisement

அப்போதும் அவன் முகத்தில் எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன இவன் இப்படி இருக்கான். இதே போல் தான்  நான் அவன் நிச்சயத்து அன்று அங்கு இருந்த போது அவனுக்கும் இருந்து இருக்குமோ………….

அதனால தான் என் முகத்தையே பார்த்துகிட்டு இருந்தான் போல……………

இவன் முகத்தை பார்த்துகிட்டே நாளைக்கு என்னால நார்மலா இருக்க முடியுமா? அந்த யோசனையில் இருந்தவள் அவன் என்ன கேட்டான் என்றே கவணிக்காமல் தலையாட்டி இருந்தாள்.

அவன் கதவை திறக்கும் சத்ததில் தான் நினைவுக்கு வந்தாள். அவன் பெருட்களோடு அவளின் அறையின் பக்கத்து அறைக்கு சென்று இருந்தான். அதை பார்த்தவள் அதிர்ந்து, அவன் பின்னால் போனவள். வேகமாய் கதவை தட்டியவள் இங்க என்ன பன்ற ராஜன் என்றாள் அவனிடம் கோவமாய்…

அவன் அவளை புரியாமல் பார்த்து வைக்க………

அவள் என்ன என்பது போல் பார்த்தாள்…………….

ஏய் என்ன விளையாடுறியா. வெளியில் மழை நிறைய இருக்கு, இப்போதைக்கு இங்க இருந்துட்டு மழைவிட பிறகு போகவா அப்படினு கேட்டதுக்கு சரினு தலைய ஆட்டிட்டு………… இப்ப இப்படி கேள்வி கேட்கிற என்றான் அவளை பார்த்து..

என்னது நான் ஏன் இங்க இருக்க சொல்ல போறேன்? அவன் அப்பவே கிளம்பவா கேட்டான் அப்படியே விட்டு இருக்கலாம். நான் எதையே  இப்ப நானே ……………… என்று யேசித்துக்கொண்டு இருந்தவள்…………

என்ன நான் இங்க தங்க சரி சென்னா?

எப்போ? என்றாள் அவனை பார்த்து……….

சரியா போச்சு போ, இப்பதான் தள்ளு என்று விட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்து இருந்தான். நல்ல வேலை அவளை குழப்பிட்டேன். இல்லைனா கேள்ளவியா கேட்டு மனுசன சாகடிப்பா…….. அப்படி அவங்க அம்மா மாதிரி என்று எண்ணிக்கொண்டவன் முகத்தில் சிறு புன்னகையும், வருத்தமும் ஒருங்கே……………..

அவன் கதவை அடைத்த பின் சிறிது நேரம் இருந்தவள், பின் ஹால் ஷேபாவில் அமர்ந்துவிட்டாள். சிறிது நேரம் கதவை பார்த்து இருந்தவள் நன்றாக உண்டு இருந்தாள் அப்படியே உறங்கியும் விட்டவள் எழும் போது மாலை 5 மணி ஆகி இருந்து.

அவள் உறங்கிய சிறிது நேரத்தில் அறையில் இருந்து வெளியில் வந்தவன் அவள் அங்கு உறங்குவதை பார்த்தவன் மனதில் எண்ண தோன்றியதோ, அதை அப்படியே புகைப்படமாக எடுத்துக்கொண்டவன். சிறிது நேரம் அங்கு அமர்ந்து இருந்தான். பின் அலைபேசி அவனை அழைக்கவும், அதை உடனே ஏற்றவன் அவள் உறக்கம் கலைகாத வண்ணம் அங்கு இருந்த பால்கனிக்கு சென்று இருந்தான்.

அழைத்து அசோக் தான், அழைப்பை ஏற்றவன் என்டா உங்க ஊர்ல மழை இப்படி வெளுத்து வாங்குது என்றான். என்னபா பன்றது…………. சரி அதை விடு என்றவன் நீ வந்த வேலை என்ன ஆச்சு என்ன நாயகி சொல்றா? என்றான்…………

இன்னும் ஏதும் பேசலை டா. சாப்பிட்டு அவ தூங்க போய்டா என்றவன். சிறிது நேரம் அவனுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு திரும்பி இருந்தான். அப்போதும் அவள் தூக்கம் கலையாது இருக்க……………..

வெளியாள் ஒருத்தர் வீட்டுல இருக்கும் போது எப்படி உன்னால இப்படி   தூங்க முடியுது……………………. இன்னும்மா உன் மனசு உனக்கு புரியலை? எதுக்கு இப்படி வீம்பு புடிக்குற நாயகி என்று அவளை பார்த்து மனதில் கேட்டுக்கொண்டான்……………………… ஆனால் அதற்கான பதிலை அவள் வாய் மொழியாக கேட்பது அவ்வளவு சுலபமில்லை என்று அவனுக்கு தெரியுமே!!!!!!!!!!!

இன்னும் 1 மணி நேரம் சென்று தான் அவள் எழுந்துவந்தாள், எழுந்தவள் முதலில் ஒன்றும் புரியாமல் அப்படியே படுத்து இருந்தவள், பின் தான் காலையில் இருந்து நடந்து எல்லாம் நினைவுக்கு வர வேகமாக எழுந்தவள், வீட்டை சுற்றி பார்த்தாள். அவன் அங்கு எங்கும் இல்லை, அவன் அறையின்  இருப்பான் போல என்று நினைத்தவள் எழுந்து அங்க சொல்லாம் என்று நினைக்க, அவன் பால்கனியில் நின்று இருப்பது தெரிந்து.

இங்க தான் இருக்கான், எவ்வளவு நேரமா இருக்கான்………… என்று நனைத்தவள் அவன் அருகில் செல்ல அவன் காதில் இயர் போனை மாட்டிய படி கண்முடி அமர்ந்து இருந்தான். அவன் அமர்ந்து இருந்த நிலை, உதட்டில் சிறு புண்ணகையுடன் அவன் அமர்ந்து இருந்த விதம், இரசிக்கும் படியாக இருந்து. சற்று நேரம் அவனை பார்த்தபடி இருந்தவள், அவன் தீடிர் என்று கண்திறக்கவும் என்ன வென்று அவன் புருவம் தூக்க, அப்போது தான் தான் செய்துக்கொண்டு இருக்கும் செயல் புரிய ஒன்றும் இல்லை என்று தலையாட்டியவள் உள்ளே வந்துவிட்டவள், தன் அறைக்கு சென்று முகத்தை நன்றாக கழுவி இருந்தாள்.

பின் சிறிது நேரம் ஆசுவாசத்திற்க்கு பிறகு ஹாலுக்கு வந்தவள், நேராக சமையல் அறை சென்று தனக்காக ஒரு காபி தயாரித்தவள், சிறிது தயங்கி அவனுக்கு எடுத்துக்கொண்டு மீண்டும் பால்கணி வந்தாள். அவன் முன் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்தவள் அவனுக்கும் காபி கப்பை நீட்ட பெற்றுக்கொண்டாவன், அப்பா இப்பதான காபி குடிக்க வேண்டும் போல் இருந்து, என்று வாங்கி கொண்டவன், அதை பருக ஆரம்பித்தான், வெகு நாளைக்கு பிறகாக அவன் குடிக்கும் சுவையில் இருக்கும் காபி, இவளுக்கு என்னை பற்றி எல்லாம் தெரிந்து இருக்கிறது………… ஆனால் என்க்கு தான் ஏதும் இவளை பற்றி தெரியவில்லை என்று நினைத்தவன்.

காபியை குடித்துக்கொண்டே, அவளை பார்த்து எல்லாத்தையும் பார்த்துட்டயா? எதாவது மாத்தனுமா என்றான். முதலில் அவன் கேட்டதில் விழித்தவள் பின், இன்னும் இல்லை என்றாள் தன் கப்பில் கவனம் வைத்தபடி.

சரி இப்போ பாத்துடலாம் என்றவன் தன் கப்பை டீப்பாய் மேல் வைத்துவிட்டு, ஹாலில் இருந்த அவன் கொண்டு வந்த பையை எடுத்து வந்தான். உள்ளவிட, இந்த வெளிச்சத்துல தான் கலர் நல்லா தெரியும், அதனால் இங்கயே பார்க்கலாம். என்றவன்.

அவன் கொண்டு வந்து எல்லாவற்றையும் கடை பரப்பி இருந்தான். தங்க நிற சரிகைக்கை கொண்டு அங்க அங்க சிவப்பு மற்றும் பச்சை நிறத்தைக்கொண்டு இருந்த அந்த புடவை பார்க்க அழகாக இருந்து. அதன் வேலைபாடுகள் அதன் விலையை சொன்னது. அதன் பின் ஆகாய நிலத்தில் அதிக எடையில்லாத ஆனால் பார்க்க ரீச் லுக்கில் இருந்து அடுத்த புடவை, 3வது இள மஞ்சள் நிறம் பாடர் பச்சையில், 4வது வெள்ளையும், பிங்கும் கலந்து கற்கள் கொண்டு வேலைபாடுகள் செய்த டினைசர் புடவை, அடுத்து நகை பெட்டியை எடுத்தான். முதலில் அவன் பரம்பரை நகைகள், அவர்களின் பாட்டி அவளுக்கு எடுத்து வைத்து இருந்த நகைகள், அந்த கால கலையணத்துடன் இருந்து. ஒரு பெரிய ஆரம், கல் வைத்த அட்டிகை, 4 டசன் வளையல்கள், நெற்றி சுட்டி, மோதிரம், கொலுசு, செயின்கள் என்று இன்னும் சில, எல்லாம் கெட்டியான நகைகள், அவற்றை சுமக்க வேண்டும் என்றால் அதற்கே தனியாக சாப்பிட வேண்டும், எப்படி தான் பாட்டி இது எல்லாம் அனிந்து இருந்தார்களோ என்று நினைத்தவள். அது அவன் ஒரு பெட்டியை திறக்க அவளாள் கண்களை அந்த புறம் இந்த புறம் நகர்த்த முடியவில்லை. அது ஒரு நகாசு ஆரம், அதற்கு பெருத்தமான காதனியும், கை வளையலும். அந்த ஆரத்தில் பல்லக்கில் திருமணப்பெண் அமர்ந்து இருப்பது சதுர வடிவில் இருந்து அதன் டாலர் அதன் கீழ் தங்கத்தில் மணிகள் போல் வடிவமைக்க பட்டு இருந்து, அந்த பல்லக்கு இருபக்கமும் தங்க கொடி போல் அதன் பக்க செயின் இருக்க அதன் கனம் மற்றும் அகலம் கழுத்தை நேக்கி செல்லும் போது குறுகி இருந்து, அதன் நீண்ட ஒரு கொடி அந்த பல்லக்கை இனைப்பதை  போல் இருக்க அதில் அங்காங்கே பச்சை மற்றும் சிவப்புகள் கொண்டு பூக்கள் மற்றும் இலை போல் செய்யபட்டு இருந்து.  கிட்ட தட்ட அதே போல் தான் அந்த பல்லக்கின் வடிவில் தான் காதனிகளும் அதன் வேலைபாடும் அவளை அத்தனை கவர்ந்தது, அதில் இருந்து அவளால் கண்களை நகர்த்த முடியவில்லை.

நகைகள் மீது அவளுக்கு அத்தனை ஆர்வம் எப்போதும் இருந்து இல்லை, ஆனால் எப்போது இந்த மாதிரியான வடிவமைப்பில் அவளுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அவள் இருக்கும் வாழ்க்கை முறையில் இது போல் அவள் அனிந்து கொள்ள சாத்தியம் இல்லை, ஆர்வமும் இல்லை. அதைவிட இப்படி அனிந்து அதை யாருக்கு காண்பிக்க………………. ஆனால் இன்று அதை பார்க்க பார்க்க அதை அனிந்து பார்க்கும் ஆர்வம் அவள் கண்ணில், அதை எடுக்க கூட கைகளை நீண்டு விட்டனதான், என்ன பிடிச்சு இருக்க என்ற அவன் பேச்சு சத்தத்தில் நினைவுக்கு வந்தவள், கையை இழுத்துக்கொண்டாள்.

ஆனால் அவன் தான் பார்த்துக்கொண்டு இருந்தானே அவளின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை, அது அவளுக்கு எத்தனை பிடித்து இருந்து என்று. அவளுடன் அவன் பேசிய நாட்களில் அவளை பற்றி அவன் அறிந்தும் அறியாமலும், அவள் அறிந்தும் அறியாமலும் தெரிந்துக்கொண்டவைகள் பல, அதில் இதுவும் ஒன்று ஒரு நாள் அவர்கள் வழக்கமாக செல்லும் உணவு விடுதியில் சாப்பிட்டு கொண்டு இருக்க, அப்போது அங்க திருமணம் முடிந்து, ஒரு குடும்பம் சாப்பிட வந்து இருந்தார்கள். அந்த பெண்னையும் மாப்பிள்ளையும் பார்த்திருந்தனர் இருவரும் அவள் முகத்தில் இருந்த சந்தோஷம், நிறைவு அவள் ஆடைகள், நகைகள் என்று அதை பற்றி பேசிய படி சாப்பிட்டவர்கள். உனக்கு எப்படி நகை வேனும் கல்யாணத்துக்கு என்றான் நாயகியிடம்.

அவள் சற்று திகைத்தாலும், எனக்கு இப்படி நிறைய நகை எல்லாம் போட்டு கச கச இருக்க கூடாது. ஒரே ஒரு ஆரம் பெருசா, காதுல அதுக்கு பெருந்தர மாதிரி பெரிய ஜமிக்கை, கையில் நிறைய கண்ணாடி வளையல் அப்புறம் இரண்டு கையிலும் கொஞ்சம் பெருச ஒரே ஒரு தங்க வளையல் அவ்வளவு தான். ஆன அந்த நகை எல்லாம் ஸ்பேஷல்லா இருக்கனும். அந்த டிசைன், ஏதாவது ஒரு கல்யாண காட்சி மாதிரி இருக்கனும், என்றாள் கண்களில் கணவு மின்ன!!!!!!!!!!!!!!!

அது என்ன கல்யாண காட்சி?

அது அன்டிக் மாதிரி, இப்போ சீதா ராமன் கல்யாண காட்சி மாதிரி என்றாள்.

அந்த பெண்ணு போட்டு இருக்க நகை ஒரு அம்பது பவுன் இருக்கும், ஆனா நீ கேக்கறத பார்த்த ஒரு ஆரத்துக்கே அம்பது பவுன் வேனும் போல என்றவன் அவளின் முறைப்பையும் பெற்றுக்கொண்டான்.

ஆமா என்னவோ நீ வாங்கி தரப்போற மாதிரி தான் என்று அவனை முறைத்தாள் அவள்………… ஏன் நான் வாங்கி தர மாட்டேன்னா…………. என்றான் அவன்.

அன்று அவர்கள் பேசியது இன்று அவள் நினைவில், அவன் நினைவிலும் தான், ஆனால் இருவரும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. சட்டென்று தன்னை மீட்டு கொண்டுவள் அதற்கு மேல் அங்கு இருக்க விரும்பாதவள், சரி எல்லாம் நல்லா இருக்கு என்று எல்லாவற்றை எடுத்து மீண்டும் அந்த பையில் அடுக்கினாள்.

அப்ப சரி வேற ஏதும் வாங்கனும்மா? என்றான் .

அவள் இல்லை வேண்டாம் இதுவே போதும் என்றவள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து உள்ளே சென்றாள். போகும் அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். தான் நினைத்து வந்த காரியம் நிறைவேறுமா!!!!!!!!!!!! என்று அவளை பார்த்து இருந்தான்.

மேலும் 1 மணி நேரம் சென்று இருக்க, இருவருக்கும்மே சகஜமாக இருக்கு முடியவில்லை அந்த வீட்டில். நைட் டின்னருக்கு வெளியில் போலாமா? என்றான் அவன் அவளிடம்.

அவளுக்கும் அந்த சூழல் மூச்சு முட்ட சரி என்றவள், அடுத்த அரை மணிநேரத்தில் கிளம்பி வந்தாள். அவள் ஒரு கருநீல நிற டாப்ஸ் மற்றும் வெள்ளை பட்டேலா பாட்டம் அனிந்து இருந்தாள், தலைமுடியை தளர்வாக விட்டு நடுவில் கிளிப் மாட்டி இருந்தாள். அவனும் ஒரு வெளிர் நிற மஞ்சள் டீசர்ட் மற்றும், ஜீன்ஸ் அனிந்து வந்தான், இருவரும் கீழே வந்து அவளின் காரில் ஏறி அமர்ந்து எங்கு செல்வது என்று விவாதித்து பின் பெசன் நகர் அருகில் இருக்கும் முருகன் இட்லி கடைக்கு செல்லாம் என்று முடிவு செய்தனர். வார நாள் என்றாலும், போக்கு வரத்து நெரிசல் குறைவாகவே இருந்து. அதனால் சீக்கரம் வந்துவிட்டு இருந்தனர்.

இவ்வளவு சீக்கரம் சாப்பிட வேண்டுமா என்று நினைத்தவர்கள், அப்படி கடற்கரையில் சிறிது நேரம் இருந்துவிட்டு பின் சாப்பிட்டு கிளம்பளாம் என்று நினைத்து அங்கு வந்தனர்.

Advertisement