Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.

எனது கதையை படித்த அனைவருக்கும் நன்றி.

இந்த பகுதியோடு கதை முடிகிறது வாசகர்களே, நன்றி, கதை படித்துவிட்டு தங்கள் விமர்சனங்களை என்னுடன் பகிரவும், நிச்சயம் எதிர்பார்த்து இருப்பேன்

இதுவரை என்னுடன் பயனித்த அனைவருக்கும் நன்றி

நன்றி.

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 25 – நிறைவு

காலமும் நேரமும் யாருக்கும் காத்திருதாமல் கடந்து இருந்து. நாளை இரவு நிச்சயம், மாப்பிள்ளை வீட்டு பக்கமும் அதிக சொந்தங்கள் இல்லை என்பதால், அவர்கள் வழக்கமாக சொல்லும் உணவு விடுதியில் உள்ள மினி ஹால் போதுமானதாக இருந்து. இவள் பக்கம் செந்தில் அவர் குடும்பத்தினர். அவள் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் நன்பர்கள், என்று ஒரு 50 பேர் அழைக்கபட்டு இருந்தனர்.

இரண்டு நாள் முன்பு தான் நிச்சய புடவை எடுத்து இருந்தனர். அன்று அசோக்குடன் பேசிய பின் அவளும் அந்த விஷயத்தை பற்றி அவளிடம் கேட்கவில்லை. அவனும் கேட்கவில்லை. அவள் வாழ்க்கை அவள் விருப்பம் என்று விட்டுவிட்டான்.

உடன் இருந்து ஒரு நல்ல தோழனாக எல்லா வேலைகளையும் செய்தான் இந்த இடைபட்ட நாட்களில் நவீனுடனும் அவனுக்கு ஒரு நல்ல நட்பு உருவாகி இருந்து.

நடுவில் ராஜனிடம் பேசினாலும் நாயகி விஷயமாக ஏதும் பேசுவதில்லை, அவன் கேட்பதுமில்லை. செந்தில் கூட சொல்லி பார்த்தார் என்ன இருந்தாலும் அவர்கள் உன் சொந்தம். அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்லாமல் எப்படி என்று ஆனால் அவள் முற்றிலும் மறுத்துவிட்டாள்.

எனக்கு என் வாழ்க்கையில் உடன் இருக்க வேண்டிய நேரத்தில் இல்லாதவர்கள், இப்போதும் தேவை இல்லை என்று அதனால் அவர்கள் வீட்டில் யாரையும் அழைக்கவில்லை. விஷயம் தெரிந்தாலும் சண்முகத்தால் ஏதும் செய்முடியவில்லை. தன்னை அறியாத மனிதப் போல் பார்க்கும் தன் பெண்ணை அவரால் எதிர் கொள்ள முடியவில்லை. அப்போதும் அவர் செய்த தவறுகள் அவர் உணர்ந்தார் என்று கூறமுடியாது. இத்தனை செய்தும் மகளுக்கு ஏதும் கிடைக்கவில்லையே என்பது தான் அவர் கவலை.

………………………………………..

ராஜன் இடையில் சில முறை சென்னை வந்து இருந்தான் தான். அவளையும் கூட பார்த்தான் அவளுக்கு தெரியாமல். தன் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவான். முன்பு எல்லாம் அவன் வந்தால் அந்த செய்தி அசோக் மூலம் அவளுக்கு சென்று விடும் ஆனால் இந்த முறை அசோக்கே அதை தவிர்த்துவிட்டான். அவள் முடிவு செய்த பின் மீண்டும் அவளை குழப்ப அவன் தயாரில்லை.

வள்ளிக்கோ அவன் என்ன நினைக்கிறான் என்றே கணிக்க முடியவில்லை. அவரின் வாரிசு அவரை போலவே இருந்தான், எப்படி இத்தனை நாள் மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்றை செய்தாரோ, இவன் அது போலவே இருந்தான். சரி எல்லாம் நாயகியின் திருமணம் முடியம் மட்டும் தானே பார்த்துக்கொள்ளாலாம் என்று நினைத்தார்.

மகன் இடையில் சென்னை சென்று வந்தாலும் அவன் அவளிடம் தொடர்புக்கொள்ள வில்லை என்பதே அவருக்கு ஆசுவாசமாக இருந்தது. அதனால் பொறுத்து இருக்க முடிவு செய்தார்.

………………………………

காலையில் இருந்து வீட்டில் இருக்கிறாள். இத்தனை வருட வாழ்க்கையின் ஒட்டத்தில் இப்படி ஆர அமர இப்படி இருந்து இல்லை. செந்திலின் மனைவி கண்டிப்பாக அவளிடம் சொல்லிவிட்டார், நாளை நிச்சயம் இன்னைக்கு வரைக்கும் வேலைக்கு போவேனு நிக்காதே. நிச்சயத்து முந்தின நாள் கண்டிப்பா லீவ் எடு நல்ல ரெஸ்ட் எடுத்தா தான் நிச்சயத்தப்ப பளிச்சினு இருப்ப. என்றவர் அவள் லீவ் அப்ளை செய்யும் வரை அவளை விடவில்லை. நேற்று தான் பார்லர் சென்று பேசியல் செய்து வந்து இருந்தாள், கைகளில் மெகந்தி வைத்து இருந்தார்கள். இன்று இப்படி ஒய்வாக இருக்கும் போது, செய்வதற்க்கு ஒன்றும் இல்லை என்னும் போது தான் பழைய நனைவுகள் மனதின் ஆழத்தில் இருந்து மேல் வந்தோ…………….

நேற்று இரவில் இருந்து மழை அடித்து உற்றிக்கொண்டு இருந்து. இத்தனை நாள் இல்லாமல் என்ன வந்து இந்த மழைக்கு என்று எண்ணியவள் ஜன்னல் வழியே மழையை பார்த்த படி காபி பருக்கிக்கொண்டு இருந்தால், இப்படி எல்லாம் நிதானமாக இரசிக்கும் மனநிலையில் அவள் இருந்து இல்லை. இன்று அதற்கான நேரமும் மனதும் இருந்து. ஆனால் அந்த இனிமை சிறிது நேரத்தில் மனதில் அப ஸ்வரமாக ஒலித்தது தான் அவளுக்கு வேதனையாக போனது. அவளை கடைசியாக அந்த பஞ்சாயத்தில் நிறுத்தியது இப்படி ஒரு மழை நாளில் தான், தான் யாரும் இல்லாமல், தனக்கு என்ன நடந்து என்று அறியும் வயது இல்லாமல், எங்கே செல்கிறோம், எதிர்காலம் என்ன என்று ஏதும் தெரியாமல் நின்ற நாள் அது, அதன் பின் எந்த மழை நாளையும் அவள் இப்படி நிதானித்து பார்ப்பது இல்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இல்லை.

அன்று தெடங்கி வாழ்க்கையின் ஒட்டம் இன்று தான் ஒரு இளைபாறுதல் கிடைத்து இருக்கிறது. அதனால் மனம் அவள் அனுமதி இல்லாமலே பழைய விஷயங்களை அவளுக்கு தூசி தட்டி காண்பித்தது.

அதில் அவன் நினைவுகளும், நாளை முதல் அவனை இப்படி நினைக்க முடியாது, என்ன தான் நவீனிடம் எல்லாம் பேசிவிட்டாலும், அசோக்கிடம் அத்தனை விளக்கி இருந்தாலும் மனதின் உள்ளே இருந்து கேட்கும் குரலுக்கு பதில் சொல்ல முடியவில்லை. எதை காட்டாமல் எல்லாவற்றையும் செய்தாலும் அவ்வபோது மனதில் ஏற்படும் தடுமாற்றத்தை மறைக்க முடியவல்லை அவளால், இன்று இந்த மழை பழைய நினைவுகளை வெகுவாக கிளறிவிட்டிருந்தது. கூடவே அவன் நினைவுகளையும். என்ன தான் எல்லாருக்கும் பதில் சொல்லவிட்டாலும், அவளுக்கு அவளால் சமாதானம் சொல்ல முடிந்ததா? என்றால் அது கேள்வி குறி தான். அதுவும் யாரும் இல்லாத இந்த தனிமை, செய்வதற்க்கு ஏதும் இல்லாமல் மனம் கட்டுக்குள் வர மறுத்து.

ச்சே என்ன இது என்று நினைத்தவள், எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு தன் லப்டாப்பை எடுத்தால், அதை உயிர்பித்தவள் அன்றை பங்கு சந்தை நிலவரத்தை பார்வையிட்டால் அடுத்த இரண்டு மணி நேரத்தை அது இழுத்துக்கொண்டது.

மணியை பார்த்தாள் 12 ஆகி இருந்து, பசித்தது, தன் அலைபேசியை எடுத்துவள், தனக்கு வேண்டிய உணவு ஆடர் செய்தவள், குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தபடுத்திக்கொண்டு வந்தாள்.

வீட்டின் அழைப்பு மணி அழைத்து, உணவு வந்து விட்டு போல் என்று நினைத்தவள், எழுந்து கதவை திறந்தவள் முன் நின்று இருந்தான் அவன். இவ்வளவு நேரம் அவள் எண்ணங்களில் இருந்தவன், இப்போது அவள் முன் நிற்கிறான். அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, இது நிஜமாகவே அவன் தானா? இல்லை தோற்ற பிழையா?

இன்னும் எவ்வளவு நேரம் இங்க நீக்கனும் என்ற அவன் கேள்வியில் தான் தன்னை சுதாரித்தவள், தன்னை நிதானபடுத்தி இருந்தாள் அவனை உள்ளே அழைத்து இருந்தாள்.

அவளின் இந்த வீட்டிற்க்கு இன்று வரை அவள் யாரையும் அழைத்து இல்லை, யாரும் வந்தும் இல்லை. அசோக் கூட, நவினும் அவன் அம்மாவும் ஒரு முறை வந்து சென்று இருக்கிறார்கள். மற்றபடி செந்தில் எப்போதோ ஒரு முறை என்று அவள் வீட்டிற்க்கு வந்தவர்களின் எண்ணிகை மிகவும் சொற்பம் தான். இன்று இவன் அதுவும் அழைக்காமல், வந்து இருக்கிறான் எதற்கு வந்து இருப்பான். சொத்து சம்பந்தமாக ஏதும் இருக்கும்மோ………. இல்லை என்னிடம் சண்டையிட வந்து இருக்கிறானா? என்ன?

என்று அவளின் எண்ணங்கள் பல திசைகளில் பயணித்துக்கொண்டு இருந்து. அவள் அழைத்தும் உள்ளே வந்தவன் பார்வையை வீட்டை சுற்றினான். சிறிய அழகாக வீடு, நவீனமானதும் கூட எல்லா வசதிகளுடன் கூட டியூபிளஸ் வகை வீடு அவள் வீட்டை ஒட்டி சிறிய டெரசும் இருந்து சில குரோட்டன் செடிகளுடன். வீடு சுத்தமாகவும் அழகாகவும் இருந்து. அவன் வீட்டை சுற்றிபார்க்க எடுத்துக்கொண்ட இந்த நேரத்தில் அவள் தன்னை தேற்றிக்கொண்டு அவனை எதிர் கொள்ள தயாராகி இருந்தாள்.

அவன் அமர்ந்து இருந்த ஷோபாவின் எதிர் திசையில் அமைந்தவள் அவனை தான் பார்த்து இருந்தால். பார்வை சுற்றி சூழலவிட்டவன் இறுதில் பார்வையை நிறுத்தியது அவளிடம் தான்….

வீடு நல்லா இருக்கு ஒரு 80 லட்சம் இருக்கும்மா? என்றான், அவள் பதில் சொல்லாமல் அவனை தான் பார்த்து இருந்தாள்…………

இந்த வீடு வாங்கி 4 வருஷம் ஆகுது தானே……………. என்ற அவன் கேள்விக்கும் அவள் மௌனமாக இருக்க,

வீட்டுக்கு முதல் முறை வந்து இருக்கேன் சாப்பிட ஏதும் இல்லையா…… என்று அவன் கேட்க மீண்டும் அழைப்பு மணி அழைத்து.

எழுந்து சென்றவள் திரும்பும் போது உணவு பார்சல் உடன் இருந்தாள், அது சரி நீயே வெளியில் வாங்கி தான் சாப்பிடற, எனக்கு ஒன்னும் கிடைக்காது போல என்றவன்………… என்ன வாங்கி இருக்க சாப்பிட என்று அவன் அந்த பார்சல்களை ஆராய தொடங்கி இருந்தான்.

அதில் தோசையும், சப்பாத்தியும் இருந்து, இப்பவும் தோசை தானா, அது என்ன சப்பாத்தியும் தோசையும் என்ன காம்பிநேஷன் இது என்றான்…………………

அதற்கும் அவளிடம் மௌனம் தான், அவள் பார்வை அவனை ஆராய்ந்துக்கொண்டு தான் இருந்து. ஆனால் முகத்தில் ஏதும் பிரதிபலிக்கவில்லை.

சரி நீ எப்படியும் தோசை தான் சாப்பிடுவ………. எனக்கு ரொம்ப பசிக்குது நான் சப்பாத்தி எடுத்துகிறேன் என்றவன் அதை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்துவிட்டான், அவள் ஏதும் பேசாமல் எதிரில் அமர்ந்து இருந்தாள்.

நிதானமாக உண்டு முடித்தவன் அவளை பார்த்தான். நீ சாப்பிடலயா? என்றவன் அவள் பதிலுக்கு காத்து இருக்காமல் எழுந்து சென்று கைகளை சுத்தம் செய்துக்கொண்டு வந்து இருந்தான்.

அதன் பின் அவன் ஏதும் பேசுவான் என்று நினைத்தால், அமைதியாக தொலைகாட்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டான். இவளுக்கு தான் பொருமை போய் கொண்டு இருந்து. அவனை முறைத்தவாரே அவனிடம் பேச நினைத்து அவள் திரும்பவும், அவன் வாய் திறந்தான்.

இங்க பார் நீயும் பசியில் இருக்க முதலில் சாப்பிடு அப்புறம் பேசலாம். பசியோட நீ இருக்கும் போது நான் பேசும் எதுவும் உனக்கு மூளையி்ல் ஏறாது என்றான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் அந்த பாசலை பிரித்து உண்ண ஆரம்பி்த்தாள், அவள் சாப்பிட்ட வேகமே அவள் எவ்வளவு பசியில் இருக்கிறாள் என்று அவனுக்கு உணர்த்தியது. அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்தவன் அவள் முடிக்கும் வரை அமர்ந்து இருந்தான்.

என்ன தான் அவள் கவனம் உணவில் இருந்தாலும், அவன் இங்கு எதற்கு வந்து இருக்கிறான் என்று அதிலேயே சுழன்றுக்கொண்டு இருந்து.

அவள் முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், அவள் முடித்து கைகளை சுத்தம் செய்து வந்து அவன் எதிரில் அமர்ந்தவுடன். அவள் முன் ஒரு பையை வைத்து இருந்தான்.

அதை புரியாமல் அவனை பார்த்தாள்…………………

ம்மம்மம்மம்மம்மம………….. அது வந்து நாளைக்கு உனக்கு நிச்சயம் இல்ல அதனால, உன்னோட நிச்சயத்துக்கு நான்……..நம்ம பக்கத்துல இருந்து உனக்கு செய்ய வேண்டியது செய்யனும் இல்ல, அதான் இது எல்லாம்………

உனக்கு சேர வேண்டிய குடும்ப நகையும், பட்டு புடவையும் இருக்கு, பிரிச்சி பார் உனக்கு பிடிக்குதானு, இல்லைனா வேற பாக்கலாம் உனக்கு பிடிச்ச மாதிரி……….. இன்னிக்கு ப்ரி தானே, உனக்கு தேவையானதை வாங்கிக்கோ…………………..

அவன் வந்தில் இருந்து, பதட்டதில் இருந்தவள், இவன் என்ன பேசுவானோ, ஒரு வேளை கல்யாணத்தை நிறுத்தும் படி சொல்லுவானோ என்று பல எண்ணத்தில் இருந்தவள் அவனின் இந்த பரிமானத்தில் திகைத்து தான் போனாள். என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

இதுவரை அவன் எதற்கு வந்து இருப்பான், அன்று போல் இன்றும் இந்த திருமணத்தை பற்றி எதாவது பேசுவான், இல்லை கோவபடுவான் என்று இதுவரை மனதில் எதை எல்லாமோ நினைத்து இருந்தவள், அவன் இப்படி சொன்னதும் திகைத்து தான் போனாள்.

அப்போ நான் அவனுக்கு ஒன்றுமே இல்லையா? நான் அவனை பாதிக்கவே இல்லையா?

இருந்தும் முகத்தில் எதையும் அவள் காட்டவில்லை. முகத்தில் சிறு புண்ணகையை கொண்டு வந்தவள், ரொம்ப நன்றி, என்றவள் அவனிடம் நாளைக்கு நிச்சயம் வரைக்கும் இருந்து எல்லாத்தையும் நீதான் பார்த்துகனும் என்றாள் அவன் முகத்தை பார்த்துக்கொண்டே………

ஒகே ம்ம்மம்மம…….. நான் தங்கற பிளன்ல சென்னை வரல, அதனால் ரூம் ஏதும் புக் பன்னலை, சரி பரவாயில்லை, அசோக் வீட்டுல இருந்துகிறேன் என்றான்.

Advertisement