Advertisement

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி. 

எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி.

இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாத்தில் கதை முடிந்துவிடும்.

நேசம் நிறம் மாறு(ம்)மோ

அத்தியாயம் – 24

அசோக் அவனிடம் கேட்டது……………. நீ நாயகிய விரும்புகிறாய்யா?????

என்று தான் அவன் அப்படி கேட்டதும் சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பின், எனக்கு தெரியலை அசோக் ஆனால் அவள் என் பக்கத்தில் இருந்தால் எனக்கு தனியாக இருக்க பீல் வரல.

உனக்கு வீட்டில் நடந்த பிரச்சனை எல்லாம் தெரியும், அதுக்கு அப்புறம் இன்னும் கூட வீட்டில் சூழல் சகஜம் ஆகலை, சின்ன வயதில் இருந்தே இந்த மாதிரி பிரச்சனைகளை நான் சந்தித்து இல்லை, எல்லாம் எப்போதும் நான் கேட்காமல் என் கைக்கு வந்து விடும். எல்லோரும் தீடீர் என்று விலகி போனது போல் இருக்கு.

என்னால் சட்டொன்று புதிய உறவுகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, பழையவற்றை உதறவும் முடியவில்லை. ஆனால் நாயகி கிட்ட எனக்கு அந்த கஷ்டம் இல்லை. அவளை வேறாகவே என்னால் பார்க்க முடியவில்லை. அவ என் கூட இருந்தா நான் நல்ல இருக்கேன், மனதுக்கு உடலுக்கு எல்லாத்துக்கும்………….. எனக்கு இதுக்கு மேல அதை பற்றி சொல்ல தெரியல, என்றவன் அன்று இரவு முழுவதும் அவனிடம் அவள் திருமணத்திற்க்கு சம்மதம் தெரிவித்து கூறித்து புலம்பி இருந்தான்.

எல்லாவற்றையும் கேட்டவனுக்கு அவன் மனநிலை புரிந்து. அவன் தன் அம்மாவே எவ்வளவு நேசித்தான் என்று கல்லூரி நாட்களில் பாத்து இருக்கிறான். அவரின் இந்த விலகலை அவனுக்கு கையல முடியவில்லை. அவன் நாயகியிடம் பார்ப்பது கலாவை தான், அதனால் தான் அவளை இழக்க அவன் விரும்பவில்லை என்று உணர்ந்து இருந்தான்.

ஆனால் அவனுக்கு நாயகியை பற்றியும் தெரியும் இத்தனை வருட நட்பு  அவனுக்கு அவளை கணிக்க முடிந்து இருந்து, தெரியும் நிச்சயம் அவள் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள். இன்னும் சொல்ல போனால் ராஜனின் இந்த எண்ணம் கூட அவள் அறிந்து இருக்கலாம். அதனால் தான் இந்த இந்த திருமணத்துக்கு சரி சொல்லி இருப்பாள் என்பது அவன் கணிப்பு.

ஆனாலும் அவனால் அப்படியே விட்டுவிட முடியவில்லை. ஒரு புறம் நன்பன் மறுபுறம் தோழி இருவர் நலனும் அவனுக்கு முக்கியம். அவனை கேட்டால் இவர் இருவரும் இனைந்தால் நன்றாக தான் இருக்கும் என்பது அவன் எண்ணமாகவும் இருந்து.

ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்வி கூறி தான்.

ஆனாலும் அடுத்த நாள் காலையில் அவன் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் அதோ ஹோட்டலில் அவளுக்கு முன் அமர்ந்து இருந்தான் அசோக். வந்தில் இருந்து இருவரும் பெரிதும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அவளும் ஏதோ யோசனையில் தான் இருந்தாள். அவளும் இன்னும் தன் திருமணம் பற்றி முடிவு செய்தை அவனிடம் சொல்லி இருக்கவில்லை. அதற்காகவே அவன் இன்று காலை அவளை அழைத்த போது மறுக்காமல் வந்து இருந்தாள்.

அவன் ஏதற்காக அழைத்து இருப்பான் என்ற ஊகம் இருந்தாலும் அவன் வாயில் இருந்தே வரட்டும் என்று அமைதியாக இருந்தாள். இருவரின் இந்த அமைதி சிறிது நேரம் நீடிக்க, நாயகியே அந்த அமைதியை கலைத்தாள். அசோக் நான் கல்யாணம் பன்னிக்கலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். என்று கூறியவள் மனமகன் பற்றி விவரங்களை கூறினாள். அவன் அவள் முகத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவள் சொல்லவது புரிந்தாலும் அது அவன் மனதில் பதிவில்லை. ஆனாலும் கேட்ட படி அமர்ந்து இருந்தான். எல்லாவற்றையும் சொல்லியவள். இன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வரேன், ஸார் கிட்டயும், மேடம் கிட்டயும் இதை பற்றி பேச வேண்டும் என்றவள்.

தன் வேலை முடிந்து என்பது போல் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள். சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் ஏன் நாயகி ராஜனை வேண்டாம் என்று நினைக்கிற? என்றான் எந்த முன் அறிவுப்பும் இல்லாமால். கேட்டவன் அவள் முகத்தை தான் பாத்து இருந்தான். அவள் முகத்தில் எந்த பிரதிபளிப்பும் இல்லை. இந்த கேள்ளவியை அவள் எதிர்பார்த்தே வந்து இருந்தாள்.

என்ன தான் இத்தனை நாட்களில் ராஜனும் அவளும் சந்தித்துக்கொண்டது பற்றி அவனிடம் சொல்லாமல் இருந்தாலும், அவனுக்கு அது எப்படியும் தெரியும் என்று அவளுக்கு தெரியும். அவனும் அவர்களை சில முறை கடந்த நாட்களில் ஒன்றாக பார்த்து  இருந்தான் தான் ஆனால் அவர்கள் இருவரும் அது பற்றி ஏதும் கூறாமல் அவன் அதை அவர்களிடம் கேட்கவிரும்பவில்லை.

அவன் பார்த்த பொழுதுகளில் அவர்கள் முகத்தில் இருந்த மகிழ்வும் சிரிப்பும் அவனுக்கு வேறு கதை சொல்லியது. ஆனால் இப்போது நடந்துக்கொண்டு இருப்பதை பார்பவனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவரும் திருமணம் செய்தால் நிச்சயம் மகிழ்வாக மனவாழ்க்கை அமையும் என்பதி இவனுக்கு சந்தேகம் இல்லை. ஆனால் மூலைக்கு ஒன்றாக இருப்பவர்களிடம் என்ன சொல்ல முடியும் என்று அவனுக்கும் தெரியவி்ல்லை. அவனால் தாங்க முடியாமல் தான் அந்த கேள்ளவியை அவளை பார்த்து கேட்டு இருந்தான்.

ஆனால் அவள் முகத்தில் அதற்கான பிரதிபளிப்பு இல்லை என்றதும் அவனுக்கு புரிந்து போனது, இவள் இதை எதிர் பார்த்தே வந்து இருக்கிறாள் என்று. ஆனாலும் அவள் சொல்ல போகும் பதிலுக்காய் அவளை பார்த்து இருந்தான்.

அவன் கேட்டதும் சிறிது அமைதியாக இருந்தவள். பின் அசோக்கை நேரக பார்த்து ஆரம்பித்தாள். இது ஒத்து வராது அசோக் என்று அவள் ஆரம்பிக்கும் போது ஏதோ பேச வந்தவனை தடுத்தவள்.

நான் பேசிவிடுகிறேன் என்பது போல் பார்த்து வைத்தாள் …………………….

உனக்கு இந்த 10 நாட்களில் நாங்கள் பேசியது பார்த்துக்கொண்டு எல்லாம் தெரிந்து இருக்கும். முதலில் ராஜன் எனக்கு மாப்பிளை பார்த்து கல்யாணம் முடித்த பிறகு தான் அவன் திருமணம் பற்றி யோசிப்பதாக சொன்னன். எனக்கு அப்போது ஒன்றும் தோன்றவில்லை தான். ஆனால் இந்த நாட்களில் அவனுடன் பழகியதில் எனக்கும் அவன் மேல் ஒரு ஈர்ப்பு வந்து உண்மை தான்.

ஆனால் அந்த ஈர்ப்பு மட்டும் எங்கள் எதிர்காலத்துக்கு போதாது அசோக். உனக்கு அவனை கல்லூரிகாலங்களில் தெரிந்து இருக்கலாம். ஆனால் எனக்கு அவனை சிறு வயது முதல் தெரியும். இது வரை அவன் இப்படி தனியாக இருந்து இல்லை. கலா அம்மா அவனை தனியாக விட்டதும் இல்லை. அவனின் எல்லா செயல்களும் அவங்க அம்மாவை சுற்றிய இருக்கும். எதையும் அவரை கேட்காமல் செய்ய நினைக்கமாட்டான். 

இன்று அவர் விலகல் அவனை மிகவும் பாதிக்கிறது. அதற்கு மாற்றாக அவன் என்னை நினைக்கிறான். ஒரு வேளை பார்கவியுடன் அவன் திருமணம் அன்று நடந்து இந்தால்…………………. இன்று …………………… இப்படி வாய்ப்பு இல்லை தானே……………..

அவனுக்கு உண்மையில் என்ன தேவை, என் மேல் காதல் என்று எல்லாம் நினைக்க நான் முட்டாள் இல்லை. ஏன் குறைந்த பட்சம் என் மேல் அத்தை மகள் என்ற அந்த நினைப்பு கூட அவனுக்கு வந்தது இல்லை அப்படி இருந்து இருதால், அவன் அந்த கல்யாணத்தை ஒத்துக்கொண்டு இருக்கமாட்டான். குறைந்த பட்சம் என்னை பார்த்த பின் அவனுக்கு ஒரு தடுமாற்றமாவது வந்து இருக்க வேண்டும் ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

காதலோ, அன்போ இல்லாமல் இந்த திருமணம் எப்படி சாத்தியம் ஆகும் என்றாள். இன்னிக்கு அவனுக்கு ஒரு ஆறுதல் தேவையாக இருக்கலாம், ஆனால் அதுக்கு எங்கள் திருமணம் சரிவராது……….

நாளைக்கு நிலைமை மாறலாம், யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ளலாம், அப்போ நான் யாருக்கும் தவறான முடிவாக இருக்கு விரும்பவில்லை.

 

அப்படி பார்த்தால் இப்போது நீ கல்யாணம் செய் ஒகே சொல்லி இருக்கிறாய்யே அவனை நீ காதலிகிறாய்யா என்ன? இல்லை அவனிடத்தில் அன்பு இருக்கிறதா? என்றவன் மேலும்

இப்போது நீ சொல்லும் எல்லா பிரச்சனைகளும் அந்த திருமணத்திலும் வரும் தானே. சொல் போனால் திருமணம் முடிந்த பின் அவன் உன் முதல் திருமணத்தை பற்றி ஏதும் பேசமாட்டான் என்று நினைக்கிறாய்யா நாயகி?

அப்படி எவனோ ஒருவனை திருமணம் செய்வதற்க்கு, எல்லாம் தெரிந்த ராஜனை மனந்தால் என்ன? நீ சொல்லவது போல் இப்போது காதலோ அன்போ இல்லை என்றாலும் உங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கு தானே பின் என்ன. தெரியாத ஒருவனுக்கு வழக்கும் வாய்ப்பை ஏன் நீ ராஜனக்கு கொடுக்க மாட்டாயா? என்றான்.

அது அப்படி இல்லை அசோக், நீ சொல்லவது போல் இவனை திருமணம் செய்தால் என் முதல் திருமணம் மட்டும் தான் பிரச்சனை. அவனுக்கு என் தாய், தந்தை, சொத்து, அவர்களின் துரோகம் இது எல்லாம் ஒரு செய்தி தான் இதை பற்றி பின்னாலில் பிரச்சணை வந்தாலும் அது அந்த அளவு என்னை பாதிக்காது.

ஆனால் ராஜன் அப்படி இல்லை. அவன் நேரடியாக பாதிக்க பட்டு இருக்கிறான். சண்முகம் செய்தவை எல்லாம் இன்னும் அவன் மனதில் அழுத்திக்கொண்டு தான் இருக்கும். அந்த துரோகத்தை அவனால எப்போதும் மண்ணிக்க முடியாது. எங்கள் திருமணம் நடந்தால் திரும்பவும் அதோ வட்டத்தில்தான் நாங்கள் இருப்போம். அது இன்று இல்லை என்றாலும்   என்றாவது ஒரு நாள் எங்களுக்கு பிரச்சனையும் ஏற்படுத்தும். எல்லாவற்றக்கும் மேல் சண்முகம் அந்த சொத்துக்காக தான் எல்லாவற்றையும் செய்தார். இப்போது இந்த திருமணம் நடந்தால் அவன் நினைத்து எல்லாம் நடந்து போல் ஆகிவிடும். என்றாவது இந்த சொத்துக்காக தான் எல்லாம் என்பது என் மனதை அழுத்தும் அது எனக்கு வேண்டாம்.

என்றவள் இது சரிவாராது என்று கூறியவள். தான் கிளம்புவதாக கூறி கிளம்பிவிட. அதுவரை அது அனைத்தையும் அசோக்கின் அலைபேசி வழியாக கேட்டுக்கொண்டு இருந்த ராஜன் தன் இனைப்பை துண்டித்து இருந்தான்.

அதன் பின் அவனும் அவளை தொடர்ப்பு கொள்ளவில்லை. அவன் சென்னையில் இருந்து கிளம்பி விட்டதாக அசோக்கு மூலம் அவளுக்கு தகவல் வந்து 2 நாள்கள் கழித்து. மனதில் சுருக்கு என்று இருந்தாலும் எதை யும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை அவள்.

இத்தனை நாள் அவனுடன் இருந்த போது தெரியாத வெறுமை இன்று மீண்டும் அவளுள். ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. 

அவள் சொன்னது போலவே அன்று மாலை அசோக் வீட்டிற்க்கு வந்தவள் அந்த மனமகன் பற்றி கூறியவள் தனக்கு பிடித்து இருப்பாதக கூறிவிட, செந்திலும் எல்லாவற்றையும் விசாரித்தவர், திருப்பதியாக இருக்க அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினரா். இதற்கு இடையில் அவளும் அந்த மனமகன் நவீனிடம் சில முறை பேசி இருந்தாள். அப்போது எல்லாம் தன் கடந்தகால நிகழ்வுகளை தெளிவாக கூறியவள், தனக்கு அந்த சொத்தில் எந்த விருப்பமும் இல்லை என்றும், தனக்கு எல்லாவற்றையும் செந்திலும் அவர் மனைவியும் தான் முன் நின்று செய்வார்கள் என்றும் கூறியிருந்தாள்.

அவனுக்கும் எல்லாம் ஒகே என்று தான் கூறினான். அவனும் அவன் அம்மாவும் மட்டும் தான் அவன் வீட்டில், சிறு வயதில் தந்தை யில்லாமல் வளந்தவனால் அவளின் நிலையை புரிந்துக்கொள்ள முடிந்து. அவன் அம்மாவும் அவளுடன் நன்றாகவே பழகினார். நிச்சயத்திற்கான வேலைகள் நடந்துக்கொண்டு இருந்து. 

அசோக் ஒர் இரு முறை ராஜன்னை தெடர்புக்கொண்ட போதும் அவன் அதிகம் பேசவில்லை, அன்று அவன் அசோக்கிடம் பேசியதோடு சரி அதன் பின் அவன் திருமணத்தை பற்றி ஏதும் பேசவும் இல்லை,கேட்கவும் இல்லை. இங்கு என்ன வென்றால் இவள் நிச்சயத்துக்கு சரி என்றுவிட்டாள். தன் தந்தையிடம் இது பற்றி அவன் பேச உனக்கு அவளை பற்றி சிறு வயது முதலே தெரியும் தானே அவளுக்கு பிடிக்காமல் அவள் ஏதும் செய்வது இல்லை. இதை அப்படியே விடு என்றார் அவரும்.

அசோக்கு தான் தலையிடியாக இருந்து, இருவர் மனதிலும் விருப்பமும் இருந்தும் இருவரும் வீணாக பிடிவாதம் பிடிப்பதாக நினைத்தான். ஆனாலும் அவனால் ஏதும் செய்ய முடியவில்லை, நடப்பதை வேடிக்கை பார்பதை தவிர…………

இது இப்படியாக இருக்க. சண்முகத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, எதை நினைத்து எல்லாவற்றையும் செய்தாரோ, எல்லாம் அதற்கு நேர்மாறாக நடந்துக்கொண்டு இருந்து. அதை எல்லாம் விட மகள் தன்னை எல்லாவற்றிலும் தள்ளி நிறுத்தியது இன்னும் அவருக்கு கவலை அளித்து. மனைவி தன்னிடம் முற்றிலும் பேசியதை நிறுத்திவிட்டாள். மகளும் இப்படி என்று அவர் மனம் வருந்தினாலும். இப்படி இத்தனை நாள் பாதுகாத்த சொத்துக்கள் தன மகளுக்கு இல்லாமல் போய்விடுமோ என்று கவலையும் அவருக்கு சேர்ந்துக்கொண்டது.

மகளிடம் எப்படியாவது பேச முயன்றுக்கொண்டு இருந்தார். செந்தில் மூலமாகவும் முயன்றார் ஆனால் அவள் அசைந்தாள் இல்லை. 

மகன் ஊருக்கு வந்த நாள் முதல் மிகவும் இருக்கமாக இருப்பதை பார்த்துக்கொண்டு இருந்தார் வள்ளி. அவரும் நாயகியின் திருமண விஷயத்தை கேள்விபட்டு இருந்தார், ஒரு புறம் அவருக்கு மகிழ்ச்சி தான் மகன் எங்க அவளை திருமணம் செய்துக்கொண்டு விடுவானோ என்று அவருக்கு பயம், அதற்க அவர் அத்தனை பாடுபட்டார், அதுவும் மகன் சமீபமாக அடிக்கடி சென்னை சென்று வருவதை அறிந்தவர் பயந்து தான் போனார். நிச்சயமாக மகன் தான் சொல்வதை கேட்டமாட்டான். எங்கே நாயகியே அவருக்கு மருமளாக வந்துவிடுவாளோ என்று நினைத்து பயந்துகொள்ளாத நாள் இல்லை. 

அதனால் தான் அவர் அவனுக்கு அவசரமாய் பெண் பார்த்து. இப்போது நாயகியின் திருமண விஷயம் கேள்விபட்ட உடன் அவருக்கு பெருத்த நிம்மதி தான். ஆனால் அதே சமயம் மகன் இப்படி இருக்கமாய் இருப்பதும் அவருக்கு உறுத்தியது மகன் மனதில் அவளை பற்றி எண்ணம் இருக்குமோ ஆதானல் தான் இப்படி இருக்கிறான்னோ என்று. அவர்கள் திருமணம் முடிந்து அந்த நாளில் அவர் அவள் மீது அப்படி ஒரு பழி சுமத்தியதே மகன் மனதில் அவளை பற்றி எந்த எண்ணமும் வர கூடாது என்று தான் ஆனால் இன்று…………….

எப்படியாவது இந்த திருமணம் முடிந்து அவள் என் மகன் வாழ்க்கையை விட்டு போய்விடவேண்டும் என்று வள்ளியும்.

எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி தன் மகளை ராஜனுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று சண்முகம் நினைத்து இருந்தனர்….

இவர்களில் யார் எண்ணம் நிறைவேரும்………………………

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement