Advertisement

அன்று மாலை வீட்டிற்க்கு வந்தனிடம் மீண்டும் வள்ளி பேசவந்தார். அவனும் அதை உணர்ந்தே இருந்தான், ஆனால் நிற்கவில்லை, இது இந்த மூன்று நாட்களாக நடக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் தான். ஏனோ இதை இன்னும் நீட்டிக்க அவன் விரும்பவில்லை. இன்று பார்கவியிடம் பேசியது அவனுக்கு மனபாரம் இறங்கியது போல் இருந்து. இது வரை அவள் தனக்காக செய்து வைத்து இருந்து எல்லாம் அவனுக்குள் ஒரு அழுத்தத்தை உருவாக்கி இருந்து. தனக்கு பிடிக்காத ஒன்றை அவனுள் தினிக்க அத்தனை பேரும் முயற்சிப்பது போல் இருந்து. இப்போது அதை முடித்துவிட்ட திருப்பி அவரிடம் சொல்லுங்க என்பது போல் நின்றான்.

தம்பி அது வந்து…………… என்று ஆரம்பித்தவர் பின் முடிவு எடுத்தவராக, நீ எப்போது கல்யாணம் செய்ய போகிறாய் என்றார். அவன் ஏதோ பேச வரும் போது அதை தடுத்தவர். இங்க பார் ராஜன் இது வரைக்கும் இந்த வீட்டில் நடந்து, நடந்துக்கொண்டு இருப்பது எல்லாம் தப்பாகவே இருக்கட்டும், நான் உனக்கு கெட்டவளாகவே இருந்து விட்டு போகிறேன். ஆனால் அது எல்லாம் நான் உனக்காக செய்து நீ ஒத்துக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், நீ நல்லா இருக்கனும் தான் நான் இத்தனையும் செய்தேன்.

நீ கவிகிட்ட பேசி வேண்டாம் சொல்லிட்ட, சரிவிடு, நீ இப்படியே கல்யாணம் பண்ணாமல் இருந்துவிட போகிறாய்யா? என்ன?

இல்லை தானே, உனக்குனு ஒரு வாழ்க்கை அமையனும், அதில் நீ சந்தோஷமா வாழனும். நான் வாழத இந்த வீட்டில் நீ எல்லா சந்தோஷமும் கிடைச்சி நல்லா இருக்கனும் அது தான் எனக்கு வேணும். உனக்கு வேற எப்படி பெண்ணு வேணும் சொல்லு அப்படி பாக்கலாம். என்றவர் தன் கையில் இருந்த சில கவர்களை அவரிடம் கொடுத்துவிட்டு இதில் சில வரன்கள் பத்தின விவரம் இருக்கு, உனக்கு இதில் யாரையாவது பிடித்து இருந்தால் சொல்லு முடித்துவிடலாம். இல்லை வேற பார்க்கலாம், ஆனால் நிச்சயமா உன் கல்யாணம் நடக்கும், எனக்கு இருக்க கடைசி ஆசை அது தான் என்றவர் தன் கையில் இருந்தவற்றை அவனிடம் கொடுத்துவிட்டு தன் அறைக்கு வந்துவிட்டார்.

தன் அறைக்கு வந்தவன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

பின் சிறிது நேரம் கழித்து தன்னிடம் கொடுக்க பட்ட வரன்களை ஆராய்ந்தான். 4 பேரின் குடும்பவிவரம் மற்றும் புகைப்படம் இருந்து.

எல்லோரும் வீட்டிற்க்கு ஒரே பெண், சொத்துக்கள் ஏராளம், பெண்கள் பட்ட படிப்பு முடித்து இருந்தார்கள், அவர்களின் ஊரின் சுற்றுவட்டாரத்தில் தான் அனைத்து வரன்களும் இருந்து.

பெண்கள் அழகாக இருந்தனர். நன்கு படித்து இருந்தனர், எல்லோருக்கும் குடும்ப தொழில் இருந்து. ஆனால் ஏதும் மனதிற்கு பிடிக்கவில்லை என்பதை விட, அந்த விவரங்களை ஒரு முன்றாம் மனிதனாக பார்த்து இருந்தானோ தவிர, ஒரு கல்யாண மாப்பிள்ளையாக அல்ல.

தன் முந்தைய திருமணம் பற்றி சிந்தித்தான், பார்கவியை தான் பெண் என்று அவன் அண்ணை காட்டிய போது எப்படி இருந்து. அப்போது தனக்கு திருமணம், தான் வாழ்கையில் அடுத்த கட்டத்தை நெருங்குகிறோம் என்ற ஒரு பரபரப்பு இருந்து. பெண்ணை பிடித்து இருந்தா? என்றால் ஆம் என்று தான் சொல்லுவான். ஏன் என்றால் அவனிடத்தில் அப்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பார்கவியின் புகைபடத்தை காட்டிய போது ஒரு பரவசம் வந்து. அழகாக இருந்தாள், படித்து இருந்தாள் எல்லாவற்றையும் விட அவள் இந்த ஊர் பெண், அவளுக்கு எல்லாம் தெரியும், என்பதே அவன் திருமணத்தை சந்தோஷமாக வரவேற்க இருந்தான்.

ஆனால் இப்போது நிலை அப்படி இல்லை, இவர்களுக்கு எல்லாம் தன்னை பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் என்னவெல்லாம் தெரியும், அது எப்படி பட்ட எண்ணங்களை அவர்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கும். 

பின்னாளில் ஏதும் பிரச்சனைகள் வந்தாள் அவர்கள் அதை எப்படி எடுத்து கொள்வார்கள். என் மீதான அவர்களின் எண்ண ஒட்டம் என்னவாக இருக்கும்,  அப்படியே இதில் ஒருவரை நான் சரி என்று சொல்லி அவள் இடத்தில் என்னை பற்றி எல்லாவற்றையும் சொன்னால் அவள் என்னை எப்படி எண்ணுவாள் என்று பல சிந்தனைகள் அவன் மனதில்.

மொத்தில் அவனுக்கு திருமணம் என்ற விஷயமே அப்போது பயத்தை கொடுத்து. ஆண் பிள்ளை தனக்கே இத்தனை யோசனைகள்…………………

அப்படி என்றால் ரங்கநாயகியின் நிலை, அவளுக்கும் திருமணம் என்று ஒன்று நடந்த பின் அவளும் தான் இந்த மாதிரியான பிரச்சனைகளை கடக்க வேண்டும். அவள் அசோக்கையே திருமணம் செய்தாலும் இப்படியான பிரச்சனைகள் வராமல் இருக்குமா? என்ன?

என்று எண்ணங்களுடன் அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று இருந்தான் அவன். அந்த வீட்டை பற்றிய அவன் பழைய நினைவுகள் எல்லாம் வந்தது. சிறு வயதில் விளையாடியது, அவள் பற்றி எண்ணங்களில் இருந்தவன்………………

சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டவன், அவள் நினைவுகளை தொலைக்க தான் இங்கு வந்து இருக்கிறோம் என்பதை மீண்டும் மனதில் கொண்டு வந்தவன் நேரம் பார்த்தான். இரவு 9. அசோக்கு அழைத்தான். தங்கள் தொழில் பற்றிய விவரங்களை கேட்டுக்கொண்டவன். மேலும் அவனிடம் அவன் திருமணம் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தான் தான் ஆனால் முடியவில்லை.

ஆனால் அசோக்கே அதை ஆரம்பித்தான், தனக்கும், நாயகிக்கும் திருமணம் செய்வதை பற்றி தன் தந்தை அவனிடம் பேசியதாக கூறிவன், மேலும் அதில் நாயகியின் விருப்பம் இன்மையும் கூறினான்.

அவன் கூறி செய்தியில் அவன் மனம் அமைதி அடைந்தா?? என்றால் இல்லை மாறாக அவள் என்ன லூசா எதுக்கு உன்னை வேண்டாம் என்று சொல்கிறாள்????? என்று அவனிடம் காய்ந்தான்.

அவனின் இந்த கோவம் அசோக்கே எதிர்பார்காது, இன்னும் அவனுக்கு தங்களை பற்றி எல்லாம் தெரியும் என்று ராஜனுக்கு தெரியாது. அசோக் ஏது சொல்ல வர, அவளுக்கு உன்னைவிட யாரும் பெட்டரா கிடைக்க மாட்டாங்க……………………

அவ வாழ்க்கையில் நடந்த எல்லாத்தும் பின்னால் எந்த பிரச்சனையும் வர கூடாதுனா இதை விட சிறந்த வழி ஏதும் இல்லை. என்று பேசிக்கொண்டு போனவன், சட்டென்று தன் பேச்சை நிறுத்தினான்.

நான் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறேன்………………. என்று எண்ணியவன் மேலும் ஏதும் பேசாமல் அப்புறம் பேசுவதாக கூறி இணைப்பை துண்டித்து இருந்தான்.

மனநிலை இன்னும் குழம்பியது. அன்று இரவு முழுவதும் யோசனையில் இருந்தவன், ஒரு முடிவுடன் சென்னை கிளம்பி இருந்தான் ரங்கநாயகியை பார்க்க………………..

 

……………………………………

அதே போல் அங்கு ஒருத்தியும் அமர்ந்து இருந்தாள், அவள் முன் சொந்தில் மற்றும் கீதா அமர்ந்து இருந்தனர். இத்தனை நேரம் அவள் திருமணம் பற்றி பேசி அவளை ஒரு வழி செய்து இருந்தனர். ஒன்று அவள் அசோக்கை திருமணம் செய்ய வேண்டும், இல்லை அவளுக்கு பிடித்த பையனை திருணம் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் வாதமாக இருந்து.

அவள் சொல்லும் எந்த சமாதானமும் அவர்களின் காதில் ஏறவி்ல்லை. பேசி முடித்தவர்கள் அங்கு இருந்து கிளம்பி இருக்க தலையில் கைவைத்து அமர்ந்து இருந்தாள். இதில் இருந்து அவளுக்கு எப்படி வெளி வருவது என்று தெரியவில்லை. அவளுக்கு ஒன்னும் கடைசி வரை தனியாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு எல்லாம் இல்லை. ஆனால் திருமணத்தை இத்தனை நெருக்கடியில் செய்ய அவளுக்கு விருப்பம் இல்லை. என்ன தான் அவள் பல சாதித்து இருந்தாலும். இன்னும் மனதில் பழைய நினைவுகளின் எச்சங்கள் இருக்க தான் செய்து, அது அவளின் திருமணத்தை பற்றி எந்த முடிவையும் எடுக்கவிடாமல் அவளை அலைகிழித்து.

தன்னை பற்றி எல்லாம் தெரிந்து, எல்லாவற்றிலும் தன்னை புரிந்துக்கொள்ளும் ஒருவன் அவளுக்கு துணையாக வர வேண்டும். அசோக் நல்ல தோழன், அவளுக்கு கிடைத்த முதல் தோழமை, அவனிடம் தோழமை கலந்து சகோதரத்தை மட்டுமே அவளாள் உணர முடிந்து, அதை தாண்டி அவனை நினைக்கமுடியவில்லை.

இது என்ன திடிர் சமையல் மாதிரி திடிர் கல்யாணம், என்று அவளுக்கு வெறுப்பாக இருந்து. அதுவும் அதை சொல்வது செந்தில் மற்றும் கீதா என்பது தான் அவளின் பிரச்சனை. அவர்களிடம் அவளால் மறுத்து ஏதும் பேச முடியவில்லை என்பதை விட அது அவளால் முடியாது. தன் தாய் தந்தை இடத்தில் அவர்களை வைத்து இருக்கிறாள்.

அதனால் செய்வது அறியாது தலை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்……………………

ராஜன் மறுநாள் சென்னை வந்து இறங்கி இருந்தான் தான் வந்தை பற்றி அவன் யாரிடமும் கூறவில்லை. அவனுக்கு நாயகியை சந்நிக்க வேண்டும், அவளிடம் திருமணம் பற்றி பேச வேண்டும், அவளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைந்துவிட்டால் தான், தன்னால் தன் திருமணத்தை பற்றி யோசிக்க முடியும் என்று நினைத்தான்.

அதனால் அன்று காலை 10 மணிக்கு அவளை சந்திப்பதற்காக அவன் தங்கி இருந்த அதே ஓட்டலில் இருக்கும் உணவு விடுதிக்கு அவளை வர சொல்லி இருந்தான்.

ஆனால் அதை பற்றி அவள் செந்தில் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டான்.

அதன் படி அவன் அவளை கான செல்ல அவளே அங்கு ஒருவருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

அதை தொலைவில் இருந்தே பார்த்தவன், அவள் அருகில் இருந்த மேஜையில் அமர்ந்துக்கொண்டான்.

அவன் விரும்பாவிட்டாலும் அவர்களின் பேச்சு அவன் காதில் விழ, அதை கேட்டவன் தான் கொதித்து போய் இருந்தான். 

சிறிது நேரம் பெறுத்து பார்தவன் எழுந்து அவர்களின் மேஜைக்கு அருகில் சென்றவன், அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், அந்த புதியவனை பார்த்து, ஹலோ மிஸ்டர். ஐயம் ரங்கராஜன், நாயகி ஹஸ்பன்டு என்ற அவனின் அறிமுகத்தில் இருவரும் அவனை அதிர்ந்து பார்த்து இருந்தனர்……………………..

       

நேசம் நிறம் மாறு(ம்)மோ

Advertisement